நீங்கள் மறுசந்திப்பு செய்யும்போதுசம்பாஷணையை ஆரம்பித்தல்
1 முதல் சந்திப்பில் அக்கறை காண்பித்திருக்கும் ஒருவரோடு சம்பாஷணையை ஆரம்பிப்பதில் திறம்பட்டவர்களாக இருக்க வேண்டுமென்றால், முதல் சந்திப்பின் போது நிலைநாட்டினவைகளின் பேரில் கூடுதலான விஷயங்களைச் சொல்ல முயற்சி செய்யுங்கள். முதல் சந்திப்பின் போது அவரிடம் விட்டுச் சென்ற கருத்துக்களின் மதிப்பையும், பிரசுரங்களின் மதிப்பையும் அந்த நபர் போற்றுவதற்கு உதவி செய்வது தான் அதன் குறிக்கோள் ஆகும்.
2 மறு சந்திப்பு செய்வதற்கு தயாரிக்க நேரம் எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சிறப்பித்துக் காட்டும் பிரசுரத்தில் உள்ள அக்கறை-தூண்டும் குறிப்புகளை தேர்ந்தெடுங்கள். எவ்வளவு விஷயங்களை சிந்திப்பது, எவ்வளவு நேரம் செலவிடுவது போன்றவற்றை தீர்மானிப்பதற்கு நல்யோசனையை பயன்படுத்துங்கள். அசாதாரணமான அக்கறை காண்பிக்கப்பட்டாலொழிய அநேக சந்தர்ப்பங்களில் ஒன்று அல்லது இரண்டு குறிப்புகளை சுருக்கமாக கலந்தாலோசிப்பது சிறந்ததாயிருக்கிறது. பின்வரும் பொருள்களை சிந்தியுங்கள்:
3 பூமி மனிதனுடைய நிரந்தரமான வீடாக இருக்க வேண்டுமென்றால், என்ன எதிர்கால நிலைமைகள் பூமியின் மீது கொண்டு வரப்படும் என்று நாம் எதிர்பார்க்கலாம்? இந்த வாழ்க்கை புத்தகம், பக்கங்கள் 142-3-ல் விளக்கப்பட்டிருப்பது போல இந்தக் கலந்தாலோசிப்பு ஏசாயா 11:6–9, வெளிப்படுத்துதல் 21:2-4-ஐ அடிப்படையாகக் கொண்டது.
இவ்வாறு சொல்வதன் மூலம் சம்பாஷணையை அறிமுகப்படுத்தலாம்:
▪ “நான் கடைசியாக சந்தித்தபோது, இந்தப் பூமி என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் என்று எவ்வாறு கடவுள் நோக்கம் கொண்டிருக்கிறார் என்பதைப் பற்றி நாம் கலந்தாலோசித்தோம். ஆனால் நீங்கள் சிந்தித்துப் பார்ப்பதற்கு ஒரு கேள்வியை விட்டுச்சென்றேன்: அப்போது என்ன நிலைமைகள் நிலவ வேண்டும்? பைபிளின் பதிலை உங்களோடு சுருக்கமாக பகிர்ந்து கொள்ள நான் மறுபடியும் வந்திருப்பதில் சந்தோஷப்படுகிறேன்.”
4 கடவுளுடைய ராஜ்யத்தின் கீழ் வாழ்க்கையை அனுபவிக்க வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டியவை. சத்தியம் புத்தகம், பக்கம் 10-ல் விளக்கிக் காட்டியிருக்கிறபடி, இந்தப் பொருளை யோவான் 17:3 மற்றும் 1 தீமோத்தேயு 2:4-ஐ உபயோகித்து கலந்தாலோசிக்கலாம். (இந்த வாழ்க்கை புத்தகம், பக்கம் 189)
ஆரம்பிப்பதற்கு, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
▪ “துன்மார்க்கத்தை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக கடவுள் கொடுத்திருக்கும் வாக்கைப் பற்றி உங்களோடு நான் கொண்டிருந்த சம்பாஷணையை நான் அனுபவித்தேன். [தன்னுடைய சத்தியம் புத்தகத்தை கொண்டுவரும்படி அந்த நபரை கேளுங்கள்.] நம்மில் ஒவ்வொருவருக்கும் அக்கறையாயிருக்க வேண்டிய ஒரு கேள்வி என்னவெனில், இந்த மாற்றத்திலிருந்து பயனடையத் தயாராயிருப்பதற்கு நாம் என்ன செய்யலாம்? யோவான் 17:3-ல் இயேசு என்ன சொன்னார் என்பதை கவனியுங்கள். உங்களுடைய புத்தகத்தில் பக்கம் 10-ல் அது குறிப்பிடப்பட்டிருக்கிறது.”
5 பரதீஸிய பூமியில் என்ன தேவைகள் பூர்த்தி செய்யப்படும்? நீங்கள் சங்கீதம் 72:16, 145:16-ஐ உபயோகிக்கலாம். அல்லது வெளிப்படுத்துதல் 21:4, 22:2, 3-ஐ உபயோகிக்கலாம். நற்செய்தி புத்தகம், பக்கங்கள் 8, 9-ல் பொருத்தமான குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
உங்களுடைய ஆரம்ப வார்த்தைகள் இவ்வாறாக இருக்கலாம்:
▪ “இங்கு நான் கடைசியாக வந்தபோது [நாளை குறிப்பிடுங்கள்], கடவுள் தம்முடைய குமாரன் மூலம் மரித்த அன்பார்ந்தவரை பரதீஸிய பூமிக்குள் உயிர்த்தெழுப்புவார் என்ற கடவுளின் வாக்கைப் பற்றி நாம் கவனித்தோம். அப்போது அனுபவிக்கப் போகும் ஆசீர்வாதங்களில் சில யாவை? இவைகளில் சில யாவை என்பதைப் பற்றி உங்களுடைய புத்தகம் வேதப்பூர்வமாக குறிப்பிட்டுக் காட்டுகிறது.” மேலே கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு, பைபிளிலிருந்து மேற்கோளாக கொடுக்கப்பட்டிருக்கும் ஒன்று அல்லது இரண்டு வசனங்களையும், பக்கங்கள் 8, 9-ல் இருக்கும் கொட்டை எழுத்து தலைப்புகளையும் வாசியுங்கள். முடியுமானால், நற்செய்தி புத்தகத்தில் பாரா 7-ஐயும் வாசியுங்கள்.
6 நாம் பிரசங்கிக்கும் ராஜ்ய செய்தியில் அநேக ஆட்கள் அக்கறை காண்பித்திருக்கின்றனர். அநேக வீடுகளில் நாம் பல்வேறு வகையான நம்முடைய பிரசுரங்களை விட்டு வந்திருக்கிறோம். இன்னும் சிலர் நம்முடைய முதல் வேதப்பூர்வ சம்பாஷணைக்கு போற்றுதல் தெரிவித்ததை நாம் கவனித்திருக்கிறோம். ஆகையால், அக்கறை காண்பித்த அனைவர் பேரிலும் மறுசந்திப்புகள் செய்து, அவர்களுக்கு சத்தியத்தைக் கற்பிக்க முயற்சி செய்யுங்கள்.—மத். 10:11; 28:19, 20; யோவான் 21:17; வெளி. 22:17.