மற்றவர்கள் பயன்பெற அக்கறை காண்பித்த அனைவரையும் மீண்டும் சந்தியுங்கள்
1 ஒருவரை நாம் மீண்டும் சந்திக்க வேண்டுமா வேண்டாமா என்பதைத் தீர்மானிக்க நமக்கு உதவும் முக்கிய காரணி எது? அக்கறை! ராஜ்ய செய்தியில் ஒருவர் எப்பொழுதாவது சிறிதளவு அக்கறை காண்பித்தாலும்கூட, அந்த நபர் பயனடைய நம்மால் முடிந்தவற்றை நாம் செய்ய விரும்புகிறோம். ஆகவே, அந்த நபருடைய அக்கறையை வளர்க்கும் நோக்கத்துடன் நாம் மறுசந்திப்புகள் செய்து, வீட்டு பைபிள் படிப்பு ஒன்றை ஆரம்பிக்கிறோம். நாம் பிரசுரங்களை விட்டுச்செல்லாவிட்டாலும்கூட இதுவே நம்முடைய இலக்காக இருக்கிறது. இது எவ்வாறு செய்யப்படலாம்?
2 உங்களுடைய முந்திய சம்பாஷணையில், இன்று பரவலாக காணப்படும் விவாகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசி “என்றும் வாழலாம்” புத்தகத்தை விட்டுவந்திருந்தால், நீங்கள் உங்களுடைய சம்பாஷணையை இவ்வாறு ஆரம்பிக்கலாம்:
◼ “என்னுடைய முந்திய சந்திப்பில், திருமணத்தைப் பற்றியும் அதிகமான மகிழ்ச்சியைக் கண்டடைவதற்கு நமக்கு உதவும் நடைமுறையான பைபிள் ஆலோசனையைப் பற்றியும் பேசினோம். மிகச் சிறந்த குடும்பங்களிலும்கூட, அவ்வப்பொழுது பிரச்சினைகள் எழும்புவது உண்மையல்லவா? [பதில்சொல்ல அனுமதியுங்கள்.] குடும்ப உறவுகளில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நமக்கு உதவும் மிகச் சிறந்த ஆலோசனையை பைபிள் கொடுக்கிறது. ஒரு குடும்பம் பைபிளை ஒன்றுசேர்ந்து படிப்பதன்மூலம் ஆசீர்வதிக்கப்படக்கூடும்.” 246-ம் பக்கத்திற்குத் திருப்பி 23-ம் பாராவை கலந்தாலோசியுங்கள். யோவான் 17:3-ஐ வாசித்து, வீட்டில் பைபிள் படிக்க ஆரம்பிப்பதற்கு நீங்கள் அந்தக் குடும்பத்திற்கு உதவுவதாக சொல்லுங்கள்.
3 பிள்ளைகளைப் பற்றியும் அவர்களுடைய பயிற்றுவிப்புக்கான அவசியத்தைப் பற்றியும் நீங்கள் பேசியிருந்தால், கலந்தாலோசிப்பை நீங்கள் இந்த விதத்தில் தொடரலாம்:
◼ “பிள்ளைகளுக்குத் தேவையான ஆவிக்குரிய பயிற்றுவிப்பைப் பற்றியும் பெற்றோர்கள் அவர்களுக்கு எவ்வாறு உதவி செய்யலாம் என்பதைப் பற்றியும் முன்பு நாம் பேசினோம். நான் பேசியிருக்கிற பெரும்பாலான பெற்றோர்கள், இன்றைய இளைஞர்கள் பலருடைய கெட்ட நடத்தையைப் பற்றி கலக்கமடைந்தவர்களாக இருக்கிறார்கள். இதைப் பற்றி . . . நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [உங்களுடைய சமுதாயத்தில் அடிக்கடி கவனிக்கப்படுகிற இளைஞர்களுடைய தவறான நடத்தையைப் பற்றிய ஓர் உதாரணத்தைக் குறிப்பிடுங்கள். பதில்சொல்ல அனுமதியுங்கள்.] பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள நடைமுறையான ஆலோசனைகள் சிலவற்றை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்.” என்றும் வாழலாம் புத்தகத்தில் பக்கம் 246-ல் உள்ள பாரா 22-க்குத் திருப்பி, முக்கியக் குறிப்பை கலந்தாலோசியுங்கள்; பின்பு எபேசியர் 6:4-ஐ வாசியுங்கள். பெரும்பாலான பிள்ளைகளுக்கு உண்மையில் சிட்சையும் வழிநடத்துதலும் தேவை என்பதை சுட்டிக்காட்டுங்கள். அதைத் தருவதில் பெற்றோர்கள் ஊக்கந்தளராதவர்களாக இருக்கும்போது, பிள்ளைகள் சந்தோஷமுள்ளவர்களாகவும் தங்களுடைய நடத்தையில் அதிக மரியாதையுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். நம்முடைய பிள்ளைகளுடன் பைபிளை எவ்வாறு நாம் படிக்கிறோம் என்பதை விளக்கிக் கூறுங்கள்.
4 உங்களுடைய சம்பாஷணைப் பொருள் பரதீஸான பூமியைப் பற்றி இருந்திருந்தால், அக்கறையைத் திரும்ப தூண்டுவதற்கு நீங்கள் இதைக் கூறலாம்:
◼ “கடவுள் இந்தப் பூமியை ஒரு பரதீஸாக மாற்றும்போது அது எவ்விதமாக இருக்கும் என்பதை நமக்கு எடுத்துக் காண்பித்த விளக்கப்படங்கள் சிலவற்றை நாம் இந்தப் புத்தகத்தில் பார்த்தோம். அதை நம்முடைய அன்பானவர்களுடன் அனுபவிக்க முடியவில்லையென்றால், அது நமக்கு அதிகத்தை அர்த்தப்படுத்தாது. நீங்கள் இதை ஒத்துக்கொள்வீர்கள் அல்லவா?” பதில்சொல்ல அனுமதியுங்கள். பின்பு, என்றும் வாழலாம் புத்தகத்தில் பக்கம் 162-க்குத் திருப்புங்கள். வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ வாசித்து, நம்முடைய அன்பானவர்கள் எப்படி நம்முடன் எப்பொழுதும் இருக்க முடியும் என்பதை விளக்கிக் கூறுங்கள். நல்ல பிரதிபலிப்பு இருந்தால், இறந்தவர்கள் உயிர்த்தெழுந்து வருவார்கள் என்பதைக் காண்பிப்பதற்கு யோவான் 5:28, 29-ஐ வாசியுங்கள். அந்தப் புத்தகத்திலுள்ள அட்டைப் படத்தைச் சுட்டிக்காட்டி, இவ்வாறு சொல்லுங்கள்: “அது நிஜமாகவே உண்மையாக இருக்கிறது—நாம் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்!” அது அருகாமையில் இருக்கிறதென்று நாம் ஏன் அறிந்திருக்கிறோம் என்பதைக் கலந்தாலோசிப்பதற்கு மற்றொரு சந்திப்புக்காக ஏற்பாடு செய்யுங்கள்.
5 மறுசந்திப்பின் முக்கிய நோக்கம் என்னவென்றால், அக்கறையுள்ள ஆட்கள் ராஜ்ய செய்தியிலிருந்து பயனடைய உதவிசெய்வதாகும். ஆவிக்குரிய காரியங்களுக்கான பசியார்வத்தைத் தூண்டிவிட பெரும்பாலானோருக்கு ஒரு புறத்தூண்டுதல் தேவை. பைபிளை நன்றாக புரிந்துகொள்ள அந்தப் பிரசுரம் அவர்களுக்கு எவ்வாறு உதவும் என்பதை வலியுறுத்திக் கூறி, அதிலுள்ள நடைமுறையான மதிப்பைப் பற்றிய திட்டவட்டமான குறிப்புகளுக்கு அவர்களுடைய கவனத்தைத் திருப்புங்கள். இந்த இலக்குகளை நிறைவேற்றுகிற மறுசந்திப்புகள், மற்றவர்கள் முடிந்தளவு மிக மேம்பட்ட வகையில் பயனடைய அவர்களுக்கு உதவிசெய்யும்.