நம்முடைய பிராந்தியத்தில் இருக்கும்இளைஞர்களுக்கு உதவி செய்தல்
1 இளைஞர்கள் எதிர்ப்படும் கேள்விகளும் பிரச்னைகளும் உண்மையிலேயே அவர்களை குழப்பமடையச் செய்கின்றன. “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம் பண்ணுவான்?” என்று சங்கீதக்காரன் கேட்டான். வேறு வார்த்தைகளில் சொன்னால், இளைஞர்களை குழப்பமடையச் செய்யும் பின்வரும் கேள்விகளுக்கு அவர்கள் எவ்வாறு நடைமுறையான பதில்களை பெற்றுக்கொள்ள உதவப்படலாம்? உதாரணமாக, ‘போதை மருந்துகளையும், மதுபானத்தையும் நான் ஒரு முறை சாப்பிட்டுப் பார்த்தால் என்ன?’, ‘விவாகத்திற்கு முன்பே இன சம்போகம் கொண்டால் என்ன?’, ‘எப்படிப்பட்ட வாழ்க்கைத் தொழிலை நான் தேர்ந்தெடுக்க வேண்டும்?’. “உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால் தானே,” என்று சங்கீதக்காரன் பதிலளிக்கிறான்.—சங்கீதம் 119:9.
2 ஆம், கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள் தானே இளைஞர்களுக்கு புத்திமதியின் மிகச் சிறந்த ஊற்றுமூலமாயிருக்கிறது. ஏன்? ஏனென்றால் “இளைஞர்களின் கொந்தளிப்பான ஆசைகளைக்” குறித்து அக்கறையோடு உணர்வுடையவராய் இருக்கும் யெகோவா தேவனால் அது ஏவப்பட்டிருக்கிறது. (2 தீமோ. 2:22, பிலிப்ஸ்) இன்று இளைஞர்களுக்கு கவலையை உண்டாக்கும் அநேக பிரச்னைகளின் மூலகாரணத்துக்கு அது சென்று, எதிர்காலத்துக்கான நம்பிக்கையை அவர்களுக்கு அளிக்கிறது. பைபிளின் புத்திமதியை இன்று பின்பற்றும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவ இளைஞர்களின் உண்மையான வாழ்க்கை அனுபவங்கள் அதனுடைய அறிவுரை பலன்தரக்கூடியவை என்பதை நிரூபிக்கின்றன. ஏப்ரல் மாதத்தின்போது நம்முடைய பிராந்தியத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு உதவி செய்வதற்கு, இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தை நாம் சிறப்பித்து அளிப்போம். இளைஞர்கள் கவலைகொள்ளும் அநேக காரியங்களை அது எடுத்துப் பேசுகிறது, மேலும் அதன் ஆலோசனை பைபிளை அடிப்படையாக கொண்டுள்ளது!
3 இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தைக் குறித்து இளைஞர்கள் எவ்வாறு உணருகின்றனர்? “பொருளடக்க அட்டவணையை நான் வாசித்தபோது, அது என் சொந்த வாழ்க்கையை காண்பது போன்றிருந்தது. அதிலிருந்த அநேக கேள்விகள் நான் என்னையே எப்போதாவது ஒரு சமயம் கேட்டுக்கொண்ட கேள்விகளாய் இருந்தன” என்று ஒரு பதினாறு வயது பெண் சொன்னாள். “வாசிப்பதை அவ்வளவு அதிகம் நான் விரும்புவதில்லை, ஆனால் இப்புத்தகம் அதிக விரும்பத்தக்கதாயிருப்பதால், அதை நான் வாசிக்க ஆரம்பித்தால், அதை என்னால் கீழே வைத்துவிட முடியவில்லை” என்று கவரப்பட்ட மற்றொரு பதினைந்து வயது இளைஞன் கூறுகிறான். பெரியவர்களும் கூட இந்தப் புத்தகத்துக்காக போற்றுதலை தெரிவித்திருக்கின்றனர். “எனக்கும் என் கணவருக்கும் பிள்ளைகள் இல்லை. ஆனால் விஷயங்கள் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விதம் எங்களுக்கும் மதிப்புள்ளதாக இருப்பதாக நான் கண்டேன். இப்புத்தகம் ‘ஜனங்கள் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள்’ என்று பெயரிடப்பட்டிருக்கலாம்” என்று ஒரு பயணக் கண்காணியின் மனைவி சொன்னார். இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தை வாசிக்கையில் அநேகர் தங்களுக்கே பயனுண்டாக மகிழ்ச்சியைக் கண்டடைகின்றனர் என்பது வெளிப்படையாக இருக்கிறது.
4 இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தை உண்மை மனதுடன் அனைவருக்கும் சிபாரிசு செய்யுங்கள்: ஏப்ரல் மாதத்தின்போது மற்றவர்களோடு வேதப்பூர்வ கலந்தாலோசிப்புகளில் நீங்கள் ஈடுபடுகையில், இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தை இளைஞர்களுக்கும் வயதானவர்களுக்கும் காண்பிக்க தயங்காதீர்கள். புத்தகத்தில் இருக்கும் புரிந்துகொள்ள முடியாத பாகங்களை குறித்து வைக்கலாம் என்றும், நீங்கள் மறுபடியும் செல்கையில், அந்தக் குறிப்புகளை நீங்கள் அவர்களோடு கலந்தாலோசிப்பீர்கள் என்றும் பிரதியை பெற்றுக்கொள்பவர்களிடம் சொல்லுங்கள். ஒரு மறுசந்திப்புக்கான கூடுதலான அடிப்படையை ஏற்படுத்துவதற்கு இது ஒரு வழியாக இருக்கக்கூடும்.
5 வீட்டுக்கு-வீடு சேவையோடு கூட, உறவினர்கள், அறிமுகமானவர்கள், வியாபாரத்தில் தொடர்பு கொள்பவர்கள் ஆகியோரிடம் சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போது, இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தை நீங்கள் அளிக்கலாம். பல வண்ணப்படங்களின் கண்ணைக் கவரும் வல்லமை, பொருளடக்க அட்டவணை, இளைஞர்களுக்கு அதிக அக்கறையாயிருக்கும் கேள்விகள் அல்லது ஒவ்வொரு அதிகாரத்தின் முடிவிலும் உள்ள “கலந்தாலோசிப்புக்கான கேள்விகள்” அல்லது கொட்டை எழுத்துக்களில் காண்பிக்கப்பட்டிருக்கும் விஷயங்கள் ஆகியவற்றிலிருந்து நீங்கள் எவ்வாறு தனிப்பட்ட விதமாய் பயனடைந்திருக்கிறீர்கள் என்பதை குறிப்பிட்டுக் காட்டுங்கள். இது மட்டுமல்லாமல், நம் ராஜ்ய ஊழியம் ஜனவரி 1991, பக்கம் 6-ல் கொடுக்கப்பட்டிருக்கும் பயனுள்ள ஆலோசனைகளை நீங்கள் விமர்சிக்க விரும்பலாம்.
6 இளைஞர்களுக்கும், பைபிளில் அடங்கியுள்ள நடைமுறையான ஞானத்தின் பேரில் மரியாதை உள்ளவர்களுக்கும் இன்று கடவுள் ஏற்படுத்தியிருக்கும் வழியின் மூலம் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு பிரசுரத்தை கொண்டிருக்க நாம் எவ்வளவு சிலாக்கியம் பெற்றவர்களாய் இருக்கிறோம். இளைஞர் கேட்கும் கேள்விகள் என்ற அதிக மதிப்புள்ள புத்தகம் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால், நாம் அனைவருக்கும் இதை நம்பிக்கையோடு அளிப்போமாக. நாம் இவ்வாறு செய்கையில், அநேக இளைஞர்களும், மற்றவர்களும் நித்திய ஜீவன் என்ற நம்பிக்கையை தழுவிக்கொள்ள உதவி செய்யப்படுவர் என்றும் நம்முடைய சிருஷ்டிகரின் சித்தத்தை செய்வதில் நம்மோடு சேர்ந்துகொள்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.—வெளி. 4:11.