தாமதமின்றி அக்கறையைப் பின்தொடருங்கள்
1 “இன்றைக்கு நீங்கள் செய்ய முடிவதை நாளை வரை ஒருபோதும் தள்ளிப்போடாதீர்கள்.” அவசியமான காரியங்களை உடனடியாக செய்ய வேண்டும் என்று ஊக்கமூட்டும் இந்த முதுமொழியை அநேகர் அறிந்திருக்கின்றனர். இந்த நியமத்தை நம்முடைய ஊழியத்தில் நாம் பொருத்தலாம் என்பதை பின்வரும் அனுபவம் காண்பிக்கிறது.
2 ஒரு சகோதரி ஓர் ஆளிடம் ஒரு புத்தகத்தை அளித்துவிட்டு திரும்பிவருவதாக சொல்லியிருந்தாள். தவறுதலாக மற்றொரு சகோதரி ஒரு மணிநேரம் கழித்து அதே வீட்டுக்குச் சென்றாள். அந்த மனிதன் கையில் புத்தகத்தோடு கதவண்டைக்கு வந்து அவளிடம் இவ்வாறு சொன்னார்: “திரும்பி வருவேன் என்று நீங்கள் சொன்னபோது, இவ்வளவு சீக்கிரம் வருவீர்களென்று நான் நினைக்கவில்லை, என்றாலும் உள்ளே வாருங்கள், என்னுடைய படிப்புக்காக நான் ஆயத்தமாய் இருக்கிறேன்.”
3 பொதுவாக நாம் இவ்வளவு சீக்கிரமாக மறுசந்திப்பு செய்யாவிட்டாலும், நம்முடைய ஊழியத்தில் நாம் கண்டுபிடிக்கும் அக்கறையை அதிக தாமதமின்றி தொடர வேண்டிய தேவைக்கு விழிப்புள்ளவர்களாயிருக்க வேண்டும் என்று இந்த அனுபவம் சிறப்பித்துக் காட்டுகிறது. ஏப்ரல் மாதத்தின்போது இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தை நாம் அளிப்போம். இன்று உலகத்தின் இளைஞர்கள் மத்தியில் இருக்கும் தரங்கெட்ட மதிப்பீடுகள், அவர்களுடைய பிரச்னைகளை எதிர்ப்படுவதற்கு பைபிளிலிருந்து நடைமுறையான ஆலோசனை தேவை என்பதை உறுதிப்படுத்துகிறது. (2 தீமோ. 3:16, 17) உண்மையிலேயே பலன்தரக்கூடிய பைபிளை அடிப்படையாகக் கொண்ட பதில்களோடு இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம் வருகிறது!
4 ஜனங்களுக்கு கூடுதலான உதவி தேவைப்படுகிறது: இப்பிரசுரத்தில் இருக்கும் தகவலை புரிந்துகொள்வதற்கு ஜனங்களுக்கு உதவி செய்வதற்கும், இது அவர்களுடைய வாழ்க்கைக்கும் எதிர்காலத்துக்கும் பொருத்தமானது என்பதை அவர்கள் போற்றுவதற்கும், நாம் ஒரு மறுசந்திப்புக்காக ஏற்பாடு செய்ய வேண்டும், முதல் சந்திப்புக்குப் பிறகு சில நாட்களுக்குள்ளேயே அது இருந்தால் நன்றாக இருக்கும். இதை நாம் எவ்வாறு செய்வோம்? நீங்கள் திரும்பவும் வருவீர்கள் என்பதை அந்த நபருக்கு தெரியப்படுத்துவது, அவருடைய அக்கறையின் அளவை நிர்ணயிக்க உதவும்.
5 மறுசந்திப்பு செய்வதற்கு முன்னேற்பாடு செய்யுங்கள்: இன்றுள்ள உலகில் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு ஒப்புதல் பெற்றுக்கொள்வது எப்போதும் சுலபமானதாக இல்லை, மேலும் வீட்டுக்காரர் சந்திப்பதற்கான நேரத்தை ஒருவேளை மறந்துவிடலாம். இருந்தபோதிலும், அப்படிப்பட்ட மறுசந்திப்புக்கான நேரத்தை நீங்கள் கவனமாக குறிப்பிட்டு வைத்து நிச்சயமாகவே மறுசந்திப்பு செய்தால்—கூடுமானால் ஒரு சில நாட்களுக்குள்ளேயே மறுசந்திப்பு செய்தால்—சந்திப்புத் திட்டத்தை கருத்தார்ந்த விதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற உங்களுடைய உத்தரவாதத்தை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். அந்த நபர் வீட்டில் இல்லாவிடில், அவரை சந்திப்பதற்கு தொடர்ந்து முயற்சி செய்ய நிச்சயமாயிருங்கள். அவரை வீட்டில் காண்பதில் உங்களுக்கு இருக்கும் உறுதியை அவர் காண்கையில், உங்களுடைய சந்திப்பை கருத்தார்ந்த விதத்தில் எடுத்துக்கொள்ள அவர் உற்சாகப்படுத்தப்படலாம்.
6 முதல் சந்திப்பில் அந்த நபர் காண்பிக்கும் அக்கறையைக் குறித்து நாம் ஒருபோதும் முழுவதுமாக நிச்சயமாயிருக்க முடியாததன் காரணமாக, குறைந்தபட்ச அக்கறை மட்டுமே இருப்பதாக தோன்றினாலும் கூட, மறுசந்திப்பு செய்வதற்கு குறித்துக்கொள்ளுங்கள். அப்படிப்பட்ட அக்கறையை தாமதமின்றி பின்தொடருவது பயனுள்ளது. இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தில் நீங்கள் அந்த நபரின் அக்கறையை தூண்டியிருக்கலாம், திரும்பிச் செல்கையில் நீங்கள் பெற்றுக்கொள்ளும் நல்வரவைக் குறித்து நீங்கள் ஒருவேளை ஆச்சரியப்படலாம். ஆகையால் தாமதமின்றி அக்கறையை பின்தொடருவதற்கு நிச்சயமாயிருங்கள்!