ஏப்ரல் மாத ஊழியக் கூட்டங்கள்
ஏப்ரல் 6-ல் துவங்கும் வாரம்
பாட்டு 139 (74)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். தற்போதைய பத்திரிகைகளில் உள்ள திட்டவட்டமான கட்டுரைகளை சனிக்கிழமை பத்திரிகை ஊழியத்தில் எவ்வாறு உபயோகிக்கலாம் என்பதை உதாரணம் காட்டி விளக்குங்கள். ஞாபகார்த்த சமயத்தின்போது விசேஷ வெளி ஊழிய முயற்சியை அழுத்திக் காட்டுங்கள்.
20 நிமி: “யெகோவாவின் செயல்தொடர்புகளை தெரியப்படுத்துங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. சுறுசுறுப்பான வேலைகள் நிறைந்த விசேஷ மாதமாக ஏப்ரல் மாதத்தை ஆக்குவதற்கு அனைவரும் ஒத்துழைக்கும்படி உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்து கொண்டிருங்கள்.” சபையார் பங்கெடுத்தலோடு நடத்தும் கண்காணியால் கொடுக்கப்படும் பேச்சு. பெட்டியில் கொடுக்கப்பட்டிருக்கும் பொருளை சேர்த்துக் கொள்ளுங்கள். ஞாபகார்த்த அழைப்பிதழ்களை நல்ல விதத்தில் உபயோகித்து அக்கறை காண்பிக்கும் ஆட்களை ஞாபகார்த்த தினத்துக்கு அழைக்க எல்லா முயற்சியும் எடுக்குமாறு சகோதரர்களை உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 15 (98), முடிவு ஜெபம்.
ஏப்ரல் 13-ல் துவங்கும் வாரம்
பாட்டு 101 (23)
10 நிமி: சபை அறிவிப்புகள். மே மாதத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்ய திட்டமிட்டிருப்பவர்கள், விண்ணப்ப நமூனாவை பெற்றுக்கொண்டு அதை விரைவில் பூர்த்தி செய்து கொடுக்கும்படி உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “நம்முடைய பிராந்தியத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு உதவி செய்தல்.” கட்டுரையை கேள்வி-பதில் மூலம் சிந்தியுங்கள். இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தை அளிக்கும்போது, பிராந்தியத்துக்கு நடைமுறையானதாயிருக்கும் ஓர் அளிப்பை சிறப்பித்துக் காட்டுங்கள். வழக்கமான எதிர்ப்புகளை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதைக் காண்பிக்கும் சுருக்கமான நடிப்புகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ‘எங்களுக்கு எங்கள் சொந்த மதம் இருக்கிறது’ என்று வீட்டுக்காரர் சொன்னால், ‘இன்று இளைஞர்கள் எதிர்ப்படும் பிரச்னைகளைக் குறித்து சமீபத்தில் சர்ச்சில் ஏதாவது கலந்தாலோசிப்புகளை நீங்கள் கொண்டிருந்தீர்களா?’ என்று சாதுரியமாக கேளுங்கள். எரேமியா 10:23-ஐ வாசிப்பதற்கு கலந்தாலோசிப்பை வழிநடத்துங்கள். கேட்கப்படக்கூடிய மற்றொரு கேள்வி: ‘போதை மருந்து துர்ப்பிரயோகத்தைப் பற்றியும் கிறிஸ்தவ இளைஞர்களின் மீது அதன் பாதிப்பைப் பற்றியும் உங்களுடைய சர்ச் என்ன சொல்கிறது?’
15 நிமி: “பிரதிபலிப்பை வரவழைக்கும் பிரசங்கங்கள்.” அனுபவமிக்க மூப்பர் இரண்டு அல்லது மூன்று பயனியர்களோடும்/அல்லது பிரஸ்தாபிகளோடும் நடத்தும் கலந்தாலோசிப்பு. சபை பிராந்தியத்தில் நடைமுறையானதாயிருக்கும் வித்தியாசமான அணுகுமுறைகளை சிந்தியுங்கள்.
பாட்டு 19 (29), முடிவு ஜெபம்.
ஏப்ரல் 20-ல் துவங்கும் வாரம்
பாட்டு 197 (22)
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. நன்கொடைகளை சங்கம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கும் கடிதங்களை சேர்த்துக் கொள்ளுங்கள். உபாகமம் 16:17-லுள்ள நியமத்தை பின்பற்றுவதற்காக சகோதரர்களை பாராட்டுங்கள்.
15 நிமி: “தாமதமின்றி அக்கறையைப் பின்தொடருங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
20 நிமி: மே மாதத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்யப் போகும் மூன்று அல்லது நான்கு பிரஸ்தாபிகளோடு அல்லது கடந்த மாதங்களில் செய்து முடித்திருக்கும் பிரஸ்தாபிகளோடு மூப்பர் கலந்தாலோசிப்பை நடத்துகிறார். பயனியர் செய்வதற்கு எது அவர்களை உந்துவித்திருக்கிறது, மே மாதத்துக்கு அவர்கள் என்ன திட்டங்கள் போட்டிருக்கின்றனர், முன்பு துணைப் பயனியர் ஊழியம் செய்யும்போது அவர்கள் கொண்டிருந்த அனுபவங்கள் ஆகியவற்றைப் பற்றி அவர்களிடம் கேளுங்கள். அப்போது வரை மே மாதத்துக்கு துணைப் பயனியர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பவர்களின் பெயர்களை அறிவியுங்கள்.
பாட்டு 123 (63), முடிவு ஜெபம்.
ஏப்ரல் 27-ல் துவங்கும் வாரம்
பாட்டு 193 (103)
10 நிமி: சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள். மே மாதத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்கு சிந்திக்கும்படி உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “மேலும் ஆர்வத்தைத் தூண்ட நான் என்ன சொல்லக்கூடும்?” இரண்டு அல்லது மூன்று நன்கு-தயாரிக்கப்பட்ட நடிப்புகளை அளியுங்கள். ஒவ்வொரு நடிப்புக்குப் பிறகும், வீட்டுக்காரரின் அக்கறையை அதிகரிப்பதற்கு அந்த அளிப்பு ஏன் திறம்பட்டதாயிருக்கும் என்று அவர்கள் உணருகின்றனர் என்பதை சபையாரிடமிருந்து கேளுங்கள்.
15 நிமி: சபை தேவைகள் அல்லது செப்டம்பர் 15, 1991, காவற்கோபுரம் பத்திரிகையில் “உவமைகள்—இருதயங்களை சென்றெட்டுவதற்கு ஒரு திறவுகோல்” என்ற கட்டுரையில் உள்ள தகவலை அடிப்படையாகக் கொண்ட உற்சாகமான பேச்சு. சபை பிராந்தியத்தில் தற்போதைய அளிப்புகளுக்கு பொருத்தமாயிருக்கும் உவமைகளைக் குறிப்பிடுங்கள். (இந்திய மொழிகளில்: “‘உண்மையுள்ள அடிமையும்’ அதன் ஆளும் குழுவும்.” காவற்கோபுரம், அக்டோபர் 1, 1990.)
பாட்டு 213 (85), முடிவு ஜெபம்.
மே 4-ல் துவங்கும் வாரம்
பாட்டு 209 (84)
8 நிமி: சபை அறிவிப்புகள். மே, ஜூன் மாதங்களின்போது காவற்கோபுரம் சந்தா அளிப்பை அனைவருக்கும் நினைப்பூட்டுங்கள். சந்தாவை பெற்றுக்கொள்ளாமல் உண்மையான அக்கறையைக் காண்பித்தால் இரண்டு பத்திரிகைகளையும் ஏதாவது ஒரு புரோஷுரையும் (பள்ளி புரோஷுரை தவிர) அளிக்கலாம்.
15 நிமி: “யெகோவாவின் பூமிக்குரிய அமைப்பை நீங்கள் போற்றுகிறீர்களா?” காவற்கோபுரம், நவம்பர் 1, 1991-ல் உள்ள கட்டுரையை அடிப்படையாகக் கொண்ட பேச்சு. அமைப்பின் பேரில் சபையின் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்புங்கள். (இந்திய மொழிகளில்: “இன்று ஆளும் குழுவுடன் ஒத்துழைத்தல்.” காவற்கோபுரம், அக்டோபர் 1, 1990.)
12 நிமி: நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 29-32 வரை உள்ள “முன்னோர் வழிபாடு” என்பதைப் பற்றிய கலந்தாலோசிப்பு. மேற்கத்திய உலகில் இருக்கும் பெரும்பான்மையான ஜனங்கள் முன்னோர்களை வழிபடுவதில்லையென்று அநேகர் வாதிட்டாலும், நவீன கால சமுதாயத்தில் மரித்தவர்களுக்கு மரியாதை கொடுப்பதற்கு அதிகம் செய்யப்படுகிறது. சில ஆட்கள் உயிரோடிருப்பது போல் இன்னும் ஜனங்கள் பெருமதிப்பு கொடுத்து அவர்களை வழிபடுகின்றனர். சிலைகள், ஓவியங்கள், வாழ்க்கை வரலாறுகள் போன்றவை புகழ்மிக்கவர்களை நினைவுபடுத்துகின்றன. பருவ வயது பிள்ளையோடு தகப்பன் பேசுவதைப் போன்ற ஒரு சூழமைவை அறிமுகப்படுத்துங்கள். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கம் 30-ல் உள்ள தகவலை தகப்பன் உபயோகிக்கிறார். ஆவிக் கொள்கையையோ அல்லது மரித்தவர்கள் பேயாக திரும்பவும் வந்து உயிரோடிருப்பவர்களை சந்திப்பது போன்றவற்றை முன்னேற்றுவிக்கும் பேரச்சம் தரும் திரைப்படங்களை பார்ப்பதில் ஏன் அபாயம் இருக்கிறது என்பதை பிள்ளைக்கு காண்பிக்க, முதல் இரண்டு உப தலைப்புகளில் உள்ள பொருளை சிறப்பித்துக் காட்டுங்கள். மரித்தவர்களின் நிலைமையை பற்றியும், உயிர்த்தெழுதலின் நம்பிக்கையை பற்றியும் விளக்குங்கள். மரித்தவர்களைப் பற்றிய நம்முடைய எண்ணத்தை இது எவ்வாறு பாதிக்க வேண்டும் என்பதைக் காட்டுங்கள். ஆவிக் கொள்கையை முன்னேற்றுவிக்கும் பொழுதுபோக்குகளை தவிர்க்க போவதாக பிள்ளை தன் விருப்பத்தை சொல்கிறது.
10 நிமி: ஏப்ரல் மாதத்தின்போது இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தை உபயோகித்ததில் பெற்ற அனுபவங்கள். தேர்ந்தெடுத்த உடன்பாடான அனுபவங்களை சொல்லும்படி பிரஸ்தாபிகளை அழையுங்கள்.
பாட்டு 72 (58), முடிவு ஜெபம்.