தேவராஜ்ய செய்திகள்
கிரீன்லாந்து: அக்டோபர் மாதத்தின்போது அநேக சிறிய தொலைவுக் குடியிருப்புகளுக்குச் சென்று அதிகமான பிரசுரங்களை அளித்தனர். அந்த மாதத்தில் தேசத்தின் வட தொலைவிலுள்ள இரண்டு சபைகளின் பிரஸ்தாபிகள் ஊழியத்தில் சராசரியாக 22 மணிநேரங்களுக்கு மேல் அறிக்கை செய்தனர்.
டுவாலு: அக்டோபர் மாதத்தில் பிரஸ்தாபிகளில் 27 சதவீத அதிகரிப்பு இருந்தது. வெளி ஊழியத்தில் 62 பேர் அறிக்கை செய்தனர்.
எத்தியோப்பியா: ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பாக யெகோவாவின் சாட்சிகளுக்கு எத்தியோப்பிய அரசாங்கம் அரசு அங்கீகாரம் அளித்திருக்கிறது. அரசு அங்கீகாரத்தை பெற்றிருப்பதில் சகோதரர்கள் மகிழ்ச்சியடைகின்றனர், ராஜ்ய வேலையில் முன்னேறிச் செல்கின்றனர். பிரசுரங்கள் அவர்களுக்கு கிடைக்கின்றன, மாநாடுகளும் நடத்தப்படுகின்றன.