உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/92 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1992
நம் ராஜ்ய ஊழியம்—1992
km 9/92 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள்: செப்டம்பர்: என்றும் வாழலாம் புத்தகம், ரூ40-க்கு. (சிறியது ரூ20.)

அக்டோபர்: சிருஷ்டிப்பு ஆங்கில புத்தகம், ரூ40-க்கு. (சிறியது ரூ20.) கிடைக்காவிடில், என்றும் வாழலாம் புத்தகத்தையோ பைபிள் கதை புத்தகத்தையோ பயன்படுத்துங்கள். நவம்பர்: விழித்தெழு! மற்றும்/அல்லது காவற்கோபுரம் சந்தாக்கள். மாதத்துக்கு இருமுறை வரும் வெளியீடுகளுக்கு முழு ஆண்டின் சந்தா ரூ60 மற்றும் ஆறு மாத சந்தா ரூ30. மாதாந்தர வெளியீடுகளுக்கு முழு ஆண்டின் சந்தா ரூ30. மாதாந்தர வெளியீடுகளுக்கு ஆறு-மாத சந்தா கிடையாது. டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு ஆங்கில பைபிளும், பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? என்ற ஆங்கில புத்தகமும் ரூ60-க்கு. (இந்திய மொழியில் அளிப்பு: விசேஷ அளிப்பு விலையில் பழைய பிரசுரங்கள்.) ஜனவரி 1993: மிகப் பெரிய மனிதர் ஆங்கில புத்தகம் ரூ40-க்கு. கிடைக்காவிடில், பைபிள் கதை புத்தகத்தையோ என்றும் வாழலாம் புத்தகத்தையோ பயன்படுத்துங்கள்.

◼ சபையோடு கூட்டுறவுகொண்டிருக்கிற யாவரும் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! சந்தா புதுப்பித்தல்களை எங்களிடம் நேரடியாக அனுப்பாமல் சபை மூலம் புதுப்பிக்க வேண்டும்.

◼ புத்தக ஆர்டர்களையுங்கூட நீங்கள் கூட்டுறவுகொண்டிருக்கும் சபையின் மூலம் அனுப்ப வேண்டும். கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது பிரசுரம் வேண்டுமென்று விரும்புகிறவர்கள், புத்தக ஊழியரிடம் தெரிவிக்கலாம். அவர் அதை அடுத்த புத்தக ஆர்டர் ஃபாரத்தில் சேர்த்தனுப்புவார்.

◼ ஒவ்வொரு சபைக்கும் மூன்று புத்தக இன்வென்ட்ரி ஃபாரங்கள் (S-18) அனுப்பப்பட்டுள்ளன. செப்டம்பர் 1, 1992-ல் அல்லது அதற்கு பின் கூடிய சீக்கிரத்தில் கையிருப்பில் உள்ள பிரசுரங்களை எண்ணி சரிபார்க்க வேண்டும். தயவுசெய்து அந்தப் ஃபாரங்களை முழுமையாகப் பூர்த்திச்செய்யுங்கள். எல்லாம் சரியாய் திருத்தமாக பூர்த்திச்செய்யப்பட்டிருக்கிறதா என்று இரண்டுமுறை சரிபாருங்கள். ஒரிஜனல் பிரதியை செப்டம்பர் 6-ற்குள் எங்களிடம் அனுப்பி வையுங்கள். உங்கள் கோவையில் கார்பன் பிரதியை வைத்துக்கொள்ளுங்கள். மூன்றாவது பிரதியை கணக்குவிவரம் குறிப்பதற்குப் பயன்படுத்தும் தாளாக அனுப்பிவைக்கிறோம்.

◼ ஆகஸ்ட் சபை ஊழிய அறிக்கைகள் கிடைத்தவுடன், சபையின் அனேலிஸிஸ் அறிக்கை ஃபாரத்தைப் (S–10) பூர்த்திச்செய்து செப்டம்பர் 6-ற்குள்ளாக சங்கத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும். இந்த ஃபாரத்தின் பின் பக்கத்தில் செயலாளர் ஆகஸ்ட் ஊழிய அறிக்கைகளைப் பயனியர்களிடமிருந்து பெற்றவுடனே ஒழுங்கான பயனியர்களின் தகவல் அறிக்கையைப் பூர்த்திச்செய்ய வேண்டும். ஒவ்வொரு சபைக்கும் இரண்டு ஃபாரங்கள் அனுப்பப்பட்டிருக்கின்றன. ஒரிஜனல்-ஐ எங்களிடம் தயவுசெய்து அனுப்பிவையுங்கள். உங்களுடைய கோவையில் கார்பன் பிரதியை வைத்துக்கொள்ளுங்கள்.

◼ செப்டம்பர் 1-ல் அல்லது அதற்குப் பின் கூடிய சீக்கிரத்தில் நடத்தும் கண்காணியோ அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ சபையின் கணக்கைத் தணிக்கை செய்யவேண்டும்.

◼ நம் ராஜ்ய ஊழியத்தில் அவ்வப்போது பழைய 192-பக்க புத்தகங்களை நாங்கள் பட்டியலிட்டு கொடுத்திருக்கிறோம், இவை விசேஷ அளிப்பு விலையில் அளிக்கப்பட வேண்டிய பிரசுரங்கள். ஒரு சில மாதங்களில், இந்தப் புத்தகங்களையே அளிப்பாக கொடுக்குமாறு கூறப்படுகிறது, அப்போது இவை மக்கள் கைகளில் கிடைப்பதற்கு நாம் கவனம் செலுத்துகிறோம். சில சமயங்களில், வேறொரு பிரசுர அளிப்பு கொடுக்கப்பட்டுள்ள மாதங்களிலுங்கூட, வீட்டுக்காரர் குறிப்பிட்ட ஒரு பொருளின்பேரில் கேள்வி எழுப்பினதால் அதன் சம்பந்தமாக உள்ள பழைய பிரசுரங்களை அளிப்பதைச் சகோதரர் பொருத்தமாகக் கண்டிருக்கின்றனர். அத்தகைய சந்தர்ப்பங்களிலுங்கூட, பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள புத்தகங்களை விசேஷ அளிப்பு விலையில் கொடுக்க வேண்டும். புத்தக இலாகாக்கள் இந்தப் பழைய புத்தகங்களை கொடுப்பார்கள். பிரஸ்தாபிகளும் பயனியர்களும் இவற்றை ஆண்டு முழுவதும் விசேஷ அளிப்பு விலைவீத நன்கொடைக்கு அளிக்கலாம். சபைகள் இந்த விசேஷ அளிப்பு விலைவீதத்துக்குரிய சரிசெய்யும் தொகையை எந்த மாதத்திலாவது எழுதிக் கேட்கலாம்.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

உருது: யெகோவாவின் சாட்சிகள் நம்புவதென்ன? (T–14)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்