தெளிந்த புத்தியும் நீதியும் உள்ளவர்களாய் ஜீவிப்பது
1 தேவபக்தியற்ற விதத்தில் வாழ்வதற்கு ஒரு பலமான உந்துவிப்பை செலுத்தும் உலகில் நாம் வாழ்ந்துவருகிறோம். இந்த ஒழுங்குமுறையின் தராதரங்கள் சீரழிந்துகொண்டே செல்கிறது. (2 தீமோ. 3:3) கிறிஸ்தவர்களாக, நாம் சரியான காரியங்களுக்கு நம்முடைய நிலைநிற்கையை எடுக்க வேண்டும். நாம் ஏன் தொடர்ந்து அப்படி செய்யவேண்டும் என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும். ஆனால் என்ன வழிநடத்துதலும், வழிகாட்டுதலும் கிடைக்கக்கூடியவை? நாம் எந்தத் தராதரங்களைப் பின்பற்ற வேண்டும்? “தெளிந்த புத்தியும் நீதியும் உள்ளவர்களாய் ஜீவிப்பது” என்பதே 1993 ஊழிய ஆண்டினுடைய விசேஷ அசெம்பளி தினத்தின் நிகழ்ச்சிக்கு தெரிந்துகொள்ளப்பட்ட ஊக்கமூட்டும் தலைப்பாக இருக்கிறது.—தீத்து 2:12.
2 அவபக்தியை எதிர்த்து, லெளகிக இச்சைகளை வெறுப்பதற்கு நாம் நம்மை எப்படி பலப்படுத்திக்கொள்ளலாம் என்று பேச்சுக்கள், நடிப்புகள், அனுபவங்கள் ஆகியவற்றின் மூலம் நாம் அறிந்துகொள்வோம். இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் மத்தியில் நாம் எப்படி தெளிந்த புத்தியும் நீதியும் உள்ளவர்களாய் வாழ முடியும் என்பதையும் கற்றறிவோம். நம்முடைய மனோ சக்திகளைக் காத்துக்கொள்ள நமக்கு உதவிசெய்வதற்கான ஏற்பாடுகளும் குறிப்பிட்டுக் காட்டப்படும். (1 பேதுரு 4:7) பிற்பகல் நிகழ்ச்சிநிரலிலுள்ள பேச்சுக்களுக்கும் பேட்டிகளுக்கும் விசேஷமாக பெற்றோரும் இளைஞரும் கவனம் செலுத்த விரும்புவர். இவை, தெய்வீக ஞானத்தையும் அனுபவத்தையும் பெறுவதற்கான அவசியத்தையும், சந்தோஷமான தேவாட்சிக்கடுத்த ஓர் எதிர்காலத்தைக் கட்டியமைப்பதற்கு ஒன்றுசேர்ந்து உழைப்பதையும் வலியுறுத்திக் காட்டும்.
3 தேவபக்தியற்ற உலகினால் சூழப்பட்டிருந்தாலுங்கூட, நாம் பின்பற்ற வேண்டிய சிறந்த வழியைக் கடவுளுடைய வார்த்தை நமக்குப் போதித்து அறிவுறுத்துகிறது. “மகிழ்ச்சியற்ற உலகின் மத்தியில் உங்களுடைய ஆசீர்வாதங்களைப் போற்றிக் காத்துக்கொள்ளுங்கள்” என்ற பேச்சில் பைபிள் ஆலோசனையை பின்பற்றுவதன் பயன்கள் உயர்த்திக் காட்டப்படும். இதற்கு ஆஜராயிருக்க நாம் தயார்செய்யும்போது, நிகழ்ச்சிநிரலைக் கூர்ந்து கவனித்து, கொடுக்கப்படும் ஆலோசனையை வாழ்க்கையில் பொருத்திப் பிரயோகிப்பது, யெகோவாவுடைய சேவையில் அதிக திறம்பட்டவர்களாயிருப்பதற்கு இது நம்மை செய்விக்கக்கூடும் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.—பிலிப். 3:15, 16.