தேவராஜ்ய ஊழியப் பள்ளி விமர்சனம்
ஜூன் 29 துவங்கி அக்டோபர் 19, 1992 வரை உள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின் பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் விமர்சனம். கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனித் தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: விமர்சனத்தின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக, கேள்விகளின் முடிவில் விடைகள் எந்தப் பிரசுரத்தில் காணலாமென்று குறிப்பிடப்படுகிறது. காவற்கோபுரத்திலிருந்து எடுக்கப்படுகையில் எல்லாச் சமயங்களிலும் பக்கங்களும் பாராக்களும் கொடுக்கப்படுவதில்லை.]
பின்வரும் வாக்கியங்களைச் சரி அல்லது தவறு என்பதாக பதிலளிக்கவும்:
1. வாசிப்பில், சரியான இடங்களில் நிறுத்தம் கொடுப்பது விஷயங்களை வலியுறுத்துவதற்கு இன்றியமையாததாய் இருக்கிறது. [sg பக். 30 பா. 6]
2. நாம், படிக்கும் காரியங்களை நினைவில் வைத்து பின்னர் நம் சொந்த வாழ்க்கையிலோ வெளி ஊழியத்திலோ பொருத்திப் பிரயோகிக்கும் நோக்கத்தோடு படிக்கவேண்டும். [sg பக். 36 பா. 10]
3. அநேக வார்த்தைகளைக் கொண்ட சொற்றொகுதியை வைத்திருப்பதன் நோக்கம் யெகோவாவின் சாட்சிகள் முற்றமுழுக்க கற்றுத்தேர்ந்தவர்களாயும் திறம்பட்டவர்களாயும் இருக்கின்றனர் என்பதை உலக ஆட்களுடைய மனதில் பதியச் செய்வதற்கே ஆகும். [sg பக். 55 பா. 7]
4. உபாகமம் நம்பத்தக்க புத்தகம் என்பதை ஆதரிக்கும் பலமான சான்றாக தொல்பொருள் ஆராய்ச்சி இருக்கிறது. [sg பக். 37 பா. 8 (1893 பதிப்பு, பக். 37 பா. 8)]
5. “ஒருவன் இருப்பு ஆயுதத்தினால் ஒருவனை வெட்டினதினால்” என்று எண்ணாகமம் 35:16 சொல்லும்போது, அது அந்தக் கருவி தெரிந்த வேண்டுமென்றே ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டது என்பதை குறிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; g78 12/22 பக். 27-ஐ பாருங்கள்.]
6. “பெரியவன்” என்று உபாகமம் 1:7-ல் சொல்லப்பட்டிருப்பவன் ஒருவேளை தன்னுடைய பொருளாதார ஆதாயங்களினாலோ, படிப்பறிவு சூழலாலோ, அல்லது அவன் செய்ய காரியங்களினாலோ பெரியவனாக இருக்கலாம். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w77 பக். 148-ஐ பாருங்கள்.]
7. உபாகமம் 19:21-லிருந்து, வேண்டுமென்றே கொலை செய்வதற்கு மரண தண்டனை விதிப்பது தெய்வீக சட்டத்தின் பாகமாயிருந்தது என்ற முடிவுக்கு நாம் வரவேண்டும். [வாராந்தர பைபிள் வாசிப்பு; g74 7/22 பக். 28-ஐ பாருங்கள்.]
8. “வெளிப்படுத்தப்பட்டவைகள்” என்று உபாகமம் 29:29-ல் சொல்லப்பட்டிருப்பது பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள எல்லா விஷயங்களையும் உள்ளடக்கியது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w87 5/15 பக். 31-ஐ பாருங்கள்.]
9. யூத கோத்திர ‘யாக்கோபுக்கு கடவுளுடைய நியாயங்களையும், இஸ்ரவேலுக்கு கடவுளுடைய பிரமாணத்தையும் போதிக்க’ யெகோவா ஏற்பாடு செய்தார். (உபா. 33:10) [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL89 11/1 பக். 10 பா. 7-ஐ பாருங்கள்.]
10. கிபியோனியர்கள் மீதியானவர்களுக்கு முன்நிழலாக இருந்தனர். (யோசுவா 10:1-11) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w87 1/1 பக். 21 பா. 8-ஐ பாருங்கள்.]
பின்வரும் கேள்விகளுக்கு விடை கொடுங்கள்:
11. வாசிப்புமுறை பேச்சை கொடுக்கும்போது மேற்கொள்ள வேண்டிய முக்கியமான இடர்ப்பாடு என்ன? [sg பக். 31 பா. 9]
12. ஒரு பேச்சின் பொருளை எப்படி தீர்மானிக்கலாம்? [sg பக். 44 பா. 2]
13. உபாகமம் என்ற பெயரின் பொருள் என்ன, எதைச் செய்யும்படி அந்தப் புத்தகம் அறிவுறுத்தினது? [si பக். 36 பா. 4 (பக். 36 பா. 4)]
14. உபாகமம் 33:8-ல் உள்ள ஊரீம் தும்மீம்-ன் நோக்கம் என்ன? [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL86 2/1 பக். 26-ஐ பாருங்கள்.]
15. கடவுளுடைய சட்டம் “உன் கண்களுக்கு நடுவே ஞாபக்குறியாய்” இஸ்ரவேலருக்கு எப்படி இருக்க வேண்டும்? (உபா. 6:8) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w73 பக். 292-ஐ பாருங்கள்.]
16. யெகோவாவுடைய வார்த்தைகள் எப்படி நம்மை போஷிக்கிறது? (உபா. 8:2, 3) [வாராந்தர பைபிள் வாசிப்பு; WTL86 1/1 பக். 14 பா. 15-ஐ பாருங்கள்.]
17. விவாகத்துக்கு நிச்சயிக்கப்படாத ஒரு கன்னிகையுடன் ஓர் இஸ்ரவேலன் பாலுறவு கொண்ட பின் அவன் அவளை விவாகம் செய்யவே வேண்டு, அவளை ஒருபோதும் விவாகரத்து செய்யலாகாது என்று கடவுளுடைய சட்டம் உபாகமம் 22:28, 29-ல் ஏன் சொல்லியது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w89 11/15 பக். 31-ஐ பாருங்கள்.]
18. இஸ்ரவேலை தாக்குவதற்கு ஏகமாய் கூடியதைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்கும்போது, என்ன ஒத்த சூழ்நிலையை நாம் இன்று பார்க்கிறோம்? (யோசு. 9:1, 2) [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL86 12/15 பக். 22 பா. 5-ஐ பாருங்கள்.]
19. யோசுவா 10:13-ல் கோளின் இயங்குநிலையை குறித்த ஒரு விஞ்ஞானப்பூர்வ கூற்றுக்கு மாறாக, யோசுவா என்ன காட்சியை கொடுக்க உத்தேசித்தான்? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w81 10/1 பக். 5-ஐ பாருங்கள்.]
20. ஒரு பேச்சின் அறிமுக வாக்கியங்களை எந்த இரண்டு நோக்கங்களை நிறைவேற்ற வேண்டும். [sg பக். 46 பா. 9]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றையும் நிறைவாக்குவதற்குத் தேவைப்படும் சொல்லை அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
21. பைபிளை படித்து முடித்தப் பிறகு, விளங்காத குறிப்புகளை---------செய்ய கொஞ்சம் நேரம் எடுப்பது பொருத்தமானதாய் இருக்கிறது. [sg பக். 35 பா. 7]
22. பேச்சை தயாரிக்கையில் உங்களுடைய-------------உண்மையில் சம்பந்தமிராத குறிப்புகளை நீங்கள் ஒதுக்கிவிட வேண்டும். [sg பக். 41 பா. 10]
23. தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு நியமிப்புக்கும் நன்றாக தயாரிப்பதன் மூலம் யெகோவா ஏற்பாடு இந்தக் கல்வித் திட்டத்தினால் நாம் நம்மை----------அனுமதிக்கிறோம். [sg பக். 43 பா. 18]
24. “ஜீவனை அடகு வாங்குவது” என்பது ஒருவருடைய-------------அடகுவாங்குவதற்கு சமமாகும். (உபா. 24:6) [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL 84 9/1 பக். 8-ஐ பாருங்கள்.]
25. எண்ணாகமம் 35:20, 21-ல் பைபிள் -----------விளக்கத்தைக் கொடுக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; g74 5/8 பக். 27-ஐ பாருங்கள்.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் திருத்தமான விடையைத் தேர்ந்தெடுங்கள்:
26. வீட்டுக்காரரிடம் கேள்விகள் கேட்பது நல்லது ஏனென்றால் இது (அவர்கள் இன்னுமதிகமாக செவிகொடுத்துக் கேட்கும்படி செய்கிறது; அதற்கான பதில் அவர்களுக்கு தெரியவில்லை என்பதை அவர்கள் உணரும்படி செய்கிறது; பொய் மதம் அவர்களுக்கு சரியாய் கற்பிக்கவில்லை என்பதை மதித்துணர உதவிசெய்கிறது). [sg பக். 52 பா. 12]
27. வெண்கல சர்ப்பம் (சாத்தான்; தாவீது; அரசனை; இயேசுவை) முன்குறித்தது. (எண். 21:8, 9) [si பக். 35 பா. 34 (பக். 35 பா. 34)]
28. இயேசுவே கிறிஸ்து என்றும் மோசேயிலும் பெரிய தீர்க்கதரிசி அவரே என்ற தன்னுடைய வாதத்திற்கு தீர்வான முடிவுகொடுக்க பேதுரு (லேவியராகமத்திலிருந்து; எண்ணாகமத்திலிருந்து, உபாகமத்திலிருந்து) மேற்கோள் எடுத்துக்காட்டுகிறான். [si பக். 40 பா. 31] (பக். 40 பா. 31)]
29. யோசுவா புத்தகம் எழுதப்பட்ட காலப்பகுதி பொ.ச.மு. (1513-1473; 1473-c, 1450; 1473-c, 1100) வரையாகும். [si பக். 42 பா. 5] (பக். 43 பா. 5)]
30. “புத்திமானாய் நடந்துகொள்வது” என்பது (எகிப்தில் சேகரிக்கப்பட்ட எல்லா அறிவோடும்; உட்பார்வையோடு கவனமான முறையில்) நடந்துகொள்ளுவதை அர்த்தப்படுத்தும். (யோசு. 1:8) [வாராந்தர பைபிள் வாசிப்பு; WTL90 7/1 பக். 24-ஐ பாருங்கள்.]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கொடுத்துள்ள கூற்றுகளோடு பொருந்த இணையுங்கள்:
எண். 21:5, 6; 23:23; 32:23; உபா. 12:24; மத். 28:19, 20
31. இந்தக் கட்டளைகளை கருத்தில் கொண்டு ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னுடைய போதனா திறமையில் முன்னேற்றம் செய்வது அவசியமாயிருக்கிறது. [sg பக். 49 பா. 2]
32. முறுமுறுப்புக்கு எதிராக எச்சரிக்கையில், பவுல் இந்த வேதவசனத்தை குறிப்பிட்டுக் காட்டினார். [si பக். 35 பா. 36 (பக். 35 பா. 36)]
33. இந்தத் தடையின் காரணமாக, யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய சொந்த இரத்தம் சேமித்து வைக்கப்பட்டு பிற்பாடு திரும்பவும் தங்களுக்குள்ளாக ஏற்றுக்கொள்ளும் முறையை அனுமதிப்பது கிடையாது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; W89 3/1 பக். 30-ஐ பாருங்கள்.]
34. இங்கு கொடுக்கப்பட்டிருக்கிற நியமம் கலாத்தியர் 6:7-ல் சொல்லப்பட்டிருப்பதற்கு ஒத்திருக்கிறது. “மனுஷன் எதை விதைக்கிறானோ அதையோ அறுப்பான்” [வாராந்தர பைபிள் வாசிப்பு; W72 பக். 392-ஐ பாருங்கள்.]
35. யெகோவாவின் சாட்சிகள் மந்திரத்தால் வசப்படுத்தும் காரியங்களையும் அல்லது மந்திரக்காரன் தயாரிக்கும் “மருந்”தையும் உள்ளடக்கக்கூடிய மந்திரம் சம்பந்தப்பட்ட எதையும் ஏற்றுக்கொள்ளாமல் இருந்தால் அவர்களுக்கு பில்லிசூனியத்தைக் குறித்தோ அல்லது மாயவித்தையைக் குறித்தோ பயமேதுமில்லை. [வாராந்தர பைபிள் வாசிப்பு; g70 8/22 பக். 7-ஐ பாருங்கள்.]