அயலவரிடத்தில் ஒளி கொண்டுச் செல்வோர்
1 சமீபத்தில் நடந்த மாவட்ட மாநாட்டிற்கு ஆஜரான பிறகு, நம்முடைய அயலாருக்கு ஒளி கொண்டுச் செல்வோராயிருப்பதன் அவசியத்தைக் குறித்து நாம் மிகத் தெளிவாக அறிந்திருக்கிறோம். (மத். 5:15) நாம் நிகழ்ச்சியில் அளிக்கப்பட்ட அனைத்துத் தகவல்பேரிலும் சிந்தித்து, நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அதைப் பொருத்திப் பிரயோகிக்க பிரயாசை எடுத்தால், யெகோவாவிடம் மெய் வணக்கத்தில் நெருங்கி வருவதற்கும் யெகோவாவுடைய வாக்குறுதிகளைக் குறித்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள உதவி செய்வதற்கும் நாம் உதவப்படுகிறோம்.
2 வெள்ளிக்கிழமை காலை நிகழ்ச்சிநிரலின் முடிவில் இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? என்ற தலைப்பைக்கொண்ட ஒரு புதிய துண்டுப்பிரதி வெளியிடப்பட்டபோது, ஒளி கொண்டுச் செல்வதற்கு நம்முடைய வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டன. இந்தத் துண்டுப்பிரதி எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பதை எடுத்துக்காட்ட சனிக்கிழமை காலையில் இருந்த நடிப்புகள் மிகவும் உதவின. இதோடுகூட, வேறு மூன்று துண்டுப்பிரதிகள் சீக்கிரத்தில் கிடைக்கும் என்ற ஓர் அறிவிப்பும் செய்யப்பட்டது. அவை சோர்வுற்றோருக்கு ஆறுதல், குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்தனுபவியுங்கள், யார் உண்மையில் உலகை ஆளுகிறார்? என்கிற தலைப்புக்கொண்டவை. சந்தர்ப்பங்கள் எழும்பும்போது பயன்படுத்த நம்மோடு இந்தக் கையடக்கமுள்ள கருவிகளை எடுத்துச்செல்லும்படி உற்சாகமளிக்கப்பட்டது. இந்த நம் ராஜ்ய ஊழியம் வெளியீட்டின் ‘அறிவிப்புகள்’ பகுதியில் இந்த எல்லா நான்கு துண்டுப்பிரதிகளும் இப்போது ஆங்கிலத்தில் கிடைக்கின்றன, அவற்றை எங்களிடமிருந்து சபைகள் தருவித்துக்கொள்ளலாம் என்பதைப் பார்ப்பதில் நீங்கள் சந்தோஷப்படுவீர்கள். சீக்கிரத்தில் வெவ்வேறுபட்ட மற்ற மொழிகளில் அவற்றைக் கிடைக்கும்படி செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.
3 சனிக்கிழமை பிற்பகல், “இயேசு கிறிஸ்துவின் வெளிப்படுத்தலின்போது விடுதலை,” என்ற பேச்சின் முடிவில் கடவுள் உண்மையில் நம்மீது அக்கறைகொள்கிறாரா? என்ற தலைப்பைக்கொண்ட மிகச் சிறந்த புதிய சிற்றேடு ஒன்று வெளியிடப்பட்டது. இந்த முழு-வண்ண, அழகான விளக்கப் படங்களைக் கொண்ட சிற்றேடு மக்கள் கேட்கும் அநேக கேள்விகளுக்குப் பதிலளிக்கும். அவையாவன: கடவுள் ஏன் துன்பத்தை அனுமதித்திருக்கிறார்? துன்பம் என்றாவது முடிவுக்கு வருமா? நாம் கடைசி நாட்களில் இருக்கிறோம் என்று நமக்கு எப்படி தெரியும்? பூமி பரதீஸாக எப்படி மாற்றப்படும்? கடவுளுடைய புதிய உலகில் நித்திய ஜீவனை நாம் எப்படி அடையமுடியும்? இந்தச் சிற்றேடு புதிய படிப்புகளைத் துவங்குவதற்கு மிகச் சிறந்த கருவியாக இருக்கும். இதுவுங்கூட இப்போது விநியோகம் செய்ய ஆங்கிலத்தில் கிடைக்கிறது, காலப்போக்கில் மற்ற மொழிகளில் இதைக் கொண்டிருப்பதற்கு நாங்கள் எதிர்நோக்கி இருக்கிறோம்.
4 “ஒளி கொண்டுச் செல்வோர்” மாவட்ட மாநாட்டில் பெற்ற அபரிமிதமான ஆவிக்குரிய உணவுக்கு நாம் எத்தகைய நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்! கடவுளுடைய ஆவிக்குரிய ஒளியைக் கொண்டுச் செல்வோராக, நாம் கற்றுக்கொண்ட காரியங்களை மனச்சாட்சிப்பூர்வமாக பொருத்திப் பிரயோகிப்பதன் மூலமும், எங்குமிருக்கிற மக்கள் யெகோவாவை அறிந்து சேவிக்க உதவுவதற்கு இந்த மிகச் சிறந்த புதிய வெளியீடுகளை ஊக்கமாகப் பயன்படுத்துவதன் மூலமும் நம்முடைய இருதயப்பூர்வமான போற்றுதலை மெய்ப்பித்துக் காட்ட உறுதிகொண்டிருப்போமாக.