1992 “ஒளி கொண்டுசெல்வோர்”மாவட்ட மாநாடு
1 இயேசு தம்மைப் பின்பற்றுகிறவர்கள் ‘உலகத்துக்கு வெளிச்சமாயிருப்பார்கள்’ என்று சொன்னார். (மத். 5:14) இதற்கு எதிர்மாறாக , கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் இந்த உலகத்தின் ஆவிக்குரிய மற்றும் ஒழுக்க சம்பந்தமான இருள் அதிகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. (ஏசா. 60:2; ரோ. 1:21) இந்த ஒழுங்குமுறையின் முடிவை நெருங்குகையில் ஒளி ஏந்துகிறவர்களாக நம்முடைய பொறுப்பு அதிக அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. நாம் வகிக்கும் மிக முக்கியமான பாகத்தை உணர்ந்தவர்களாக ஆர்வமிக்க எதிர்பார்ப்போடு 1992 “ஒளி கொண்டுசெல்வோர்” மாவட்ட மாநாட்டில் பங்குகொள்ள எதிர்நோக்குகிறோம். இந்தத் தொடரின் முதல் மாநாடு செப்டம்பர் 11, வெள்ளி அன்று ஆரம்பமாகிறது.
2 மூன்று நாள் மாநாடு: இந்த வருடம் இந்தியாவில் மொத்தமாக 31 மாநாடுகளை நாங்கள் திட்டமிட்டிருக்கிறோம். நிகழ்ச்சிநிரல் வெள்ளிக்கிழமை காலை 10:20-மணிக்கு ஆரம்பித்து ஞாயிற்றுக்கிழமை மாலை பாட்டு ஜெபத்தோடு ஏறக்குறைய 4:15-மணிக்கு முடிவடையும். காலை 7:30-மணிக்கு கதவுகள் திறக்கப்படும், வேலை நியமிப்பு பெற்றவர்கள் தவிர ஒருவரும் அந்த நேரத்திற்கு முன் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். யெகோவாவின் ஜனங்கள் அனைவரும் முழு நிகழ்ச்சிநிரலிலும் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்களாக இருப்பர். எல்லா மூன்று நாட்களுக்கும் அங்கிருக்க நீங்கள் தனிப்பட்ட தீர்மானம் எடுத்துவிட்டீர்களா? உங்கள் முயற்சிகளில் யெகோவாவின் ஆசீர்வாதம் இருக்க ஜெபம் செய்ய நிச்சயமாயிருங்கள்.
3 வெள்ளி காலை நிகழ்ச்சிநிரல் ஆரம்பம் முதல் ஞாயிறு பிற்பகல் முடிவான குறிப்புகள் வரை முழு நிகழ்ச்சிநிரலும் நம்முடைய முழுகவனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். தூண்டி இயங்கச் செய்யும் தகவல், பேச்சுகள், நடிப்புகள், பேட்டிகள் மேலும் ஒரு நாடகத்தின் மூலம் விரிவுபடுத்தப்பட்டு அளிக்கப்படும். வெள்ளி அன்று நிகழ்ச்சிநிரல் ஆரம்பிப்பதற்கு வெகு முன்பாகவே உங்கள் இருக்கையில் அமர திட்டமிடுங்கள். பொதுவாக, முதல் நாளில் வாகனங்களை நிறுத்துவது, இருக்கைகளை கண்டிபிடிப்பது போன்ற காரியங்களுக்கு அதிக நேரம் தேவையாயிருக்கிறது. எனவே இதற்கு போதுமான நேரத்தைக் கொண்டிருங்கள். எல்லா நிகழ்ச்சிநிரலின் காரியங்களையும் பெற்றுகொண்டு முடிவான பாட்டு மற்றும் ஜெபம் வரை அங்கிருப்பதன் மூலம், நிகழ்ச்சிநிரலின் முழு பலனையும் பெற்றுக்கொண்டு ஒளி ஏந்துகிறவர்களாக நம்முடைய சிலாக்கியத்துக்கு போற்றுதலை காண்பிக்கிறோம்.
4 நீங்கள் செவிகொடுக்க கவனமாயிருங்கள்: “நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம்,” என சங்கீதக்காரன் அறிவித்தான். (சங். 119: 95பி, 97) யெகோவாவால் போதிக்கப்படுவதற்கு நாம் கூடிவரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நம் காதுகளின்மூலம் மட்டுமல்லாமல் நம்முடைய இருதயத்தின் மூலமும் செவிசாய்க்க கவனமாயிருக்கவேண்டிய தேவையிருக்கிறது. என்றபோதிலும், மாவட்ட மாநாடுகள் போன்ற பெரிய கூட்டங்களில் கூடிவரும்போது அதற்கான தேவை அதிக முக்கியமானதாக இருக்கிறது. கண்களினால் காண்பதற்கும் காதுகளினால் கேட்பதற்கும் அதிகம் இருக்கிறது. நாம் மாநாட்டில் கலந்து கொள்ள நேரத்தையும் பணத்தையும் செலவழித்து ஒளி கொண்டுசெல்வோராக நாம் எவ்வாறு முன்னேற்றமடையலாம் என்பதற்கான சிறந்த குறிப்புகளில் குறைந்தவற்றை மட்டுமே நினைவில் கொண்டவர்களாக வீடு திரும்புகிறோம் என்றால் அது தனிப்பட்டவிதமாக எப்படிப்பட்ட இழப்பாக இருக்கும்! நாம் நிகழ்ச்சிநிரலிலிருந்து முழுமையாக பயன்அடைய விரும்பினால் எந்த ஒரு கவனத்தைத் திருப்பும் காரியத்திற்கெதிராக நம்மால் முடிந்தவரை எதிர்த்துச் செயல்பட வேண்டும். மாநாட்டு நிகழ்ச்சிநிரலின் இறுதியில் தகவல்கள் நம்முடைய மனதிலும் இருதயத்திலும் ஆழமாக பதிந்திருக்கிறதா என்பதை நாம் எவ்வாறு உறுதிசெய்து கொள்ளலாம்?
5 செவிசாய்ப்பது என்பது வளர்க்கவேண்டிய, பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டிய ஒரு கலை. செவிசாய்த்தல் என்ற வார்த்தை “சிந்தனையோடு கவனமாக கேட்பதை” அர்த்தப்படுத்துகிறது. பின்வரும் சில ஆலோசனைகளை கவனியுங்கள்: (1) நன்றாக ஓய்வெடுத்து ஒவ்வொரு நாள் காலையிலும் மாநாட்டின் இடத்திற்கு வந்துசேர எல்லா முயற்சியையும் எடுங்கள். இது திட்டமிடுதலையும் குடும்பத்தின் ஒத்துழைப்பையும் தேவைப்படுத்துகிறது. குறைந்த தூக்கத்தால் நீங்கள் முழுவதும் சோர்வடைந்தவர்களாயிருந்தால் அல்லது காலைச் சிற்றுண்டி உண்ணாததால் பசியடைந்தவர்களாயிருந்தால், அல்லது வேகமாக வந்ததன் காரணமாக உங்கள் நரம்புகள் இறுகிப்போயிருந்தால் நீங்கள் வெகு குறைந்ததையே நிகழ்ச்சிநிரலிலிருந்து பெற்றுக்கொள்வீர்கள். (2) பொருள் எவ்வாறு விரிவுபடுத்தப்படப்போகிறது என்பதற்கான ஆவலை உண்டுபண்ணிக்கொள்ளுங்கள். மாநாட்டிற்கு சில வாரங்களுக்கு முன், ஒளி கொண்டுசெல்வோர் என்பது ஒருவருக்கு எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை உங்கள் குடும்பப்படிப்பின் பாகமாக ஒவ்வொரு அங்கத்தினரும் பதிலளிக்க ஏன் அழைக்கக்கூடாது. மாநாட்டின்போது அந்த நாளின் ஒவ்வொரு பகுதியையும் நிகழ்ச்சிநிரல் ஆரம்பிப்பதற்கு முன் முற்கண்ணோட்டம் செலுத்துங்கள். (3) பொருத்தமாக உடை உடுத்துங்கள், புசிப்பதையும் குடிப்பதையும் கூட்டம் நடக்கும்போது தவிருங்கள். நிகழ்ச்சிநிரல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அரங்கத்தின் இருக்கைப்பகுதிகளில் சிலர் புசித்துக்கொண்டும் குடித்துக்கொண்டுமிருந்தது கவனிக்கப்பட்டிருக்கிறது. இது அவமரியாதையையும், மற்றவர்களின் கவனத்தை திசைதிருப்புவதாயும், தன்னடக்கமில்லாத தன்மையையும் காட்டுகிறது.—நவம்பர் 15, 1991 ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 8-18-ஐ பார்க்கவும்.
6 நாம் குறிப்புகள் எடுக்கும் காரியத்திற்கு விசேஷமான கவனத்தைச் செலுத்தவேண்டும். நீங்கள் இதைச் சரியாகச் செய்தால், பேச்சாளர் சொல்வதை அதிக கவனமாக பின்பற்றவும் நீங்கள் கேட்பதை மறவாது கவனத்தில் வைத்திருக்கவும் உங்களுக்கு உதவும். நாம் பேசுவதைக் காட்டிலும் நான்கு மடங்கு வேகமாக சிந்திக்கிறவர்களாக இருப்பதால், நம் மனதின் சுற்றித்திரியும் விருப்பத்தை தடுப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாக இருக்கிறது. ஓர் எழுத்தாளர் சொன்னார்: “ஒரு பேச்சைக் கொடுப்பதைக் காட்டிலும் ஒரு பேச்சைக் கேட்பது அடிக்கடி அதிக கடினமாக இருக்கிறது.” பூர்வ கிறிஸ்தவர்கள் கூட்டங்களுக்கு உடைந்த மட்கலத்தின் பாகங்களை எடுத்துச்சென்று மையினால் அதில் வசனங்களை எழுதுவதற்கு அறியப்பட்டவர்களாயிருந்தார்கள் என்பதை நீங்கள் நினைவுகூரக்கூடும். நாம் நல்லவிதத்தில் ஒரு சாதாரண அளவு நோட்டுப்புத்தகத்தையும் பேனா அல்லது பென்சிலை உபயோகிப்பதற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். குறிப்பெடுப்பதில் சிறந்து விளங்குதல் என்பது தொடர்ந்து அதிகத்தை எழுதிக்கொண்டிருப்பதை அல்ல, ஆனால் முக்கியக் குறிப்பைக் கண்டுபிடித்து போதுமானதை எழுதிக்கொள்வதை அர்த்தப்படுத்துகிறது. தொடர்ந்து எழுதுவது பேச்சாளரின் குறிப்பிட்ட முக்கியக் குறிப்புகளையும் நம்முடைய நோக்கத்தையும் தவறவிடுவதில் விளைவடையும். முக்கிய வார்த்தைகளை எழுதிக் கொள்ளுங்கள், சுருக்கமான வார்த்தைகளை உபயோகியுங்கள். அந்த நாள் மாலையிலோ ஊழியக்கூட்டத்தில் சபையாக நிகழ்ச்சிநிரலின் முக்கியக் குறிப்புகளை கலந்தாலோசிப்பதற்கு முன்பாகவோ திரும்ப நீங்கள் அவைகளை விமர்சனம் செய்தால் உங்கள் குறிப்பெடுத்தல் அதிக பயனுறுதியுள்ளதாக சேவிக்கும்.
7 இருதயப்பூர்வமான பாட்டும் ஜெபமும்: யெகோவாவிற்கு துதியைப் பாடுவதும் பக்தியுடன் அவரை ஜெபத்தில் அணுகுவதும் நம்முடைய வணக்கத்தின் இன்றியமையாத பாகங்களாக இருக்கின்றன. (2 நாளா. 30:21, 27) நாம் அனைவரும் கலந்துகொள்ள கூடிய மாநாட்டின் முக்கிய அம்சங்களாக இவை இருக்கின்றன. நம்முடைய மூன்று நாட்கள் “ஒளி கொண்டுசெல்வோர்” மாவட்ட மாநாட்டில், நாம் யெகோவாவிற்கு துதியை உண்டாக்கும் 18 பாடல்களைப் பாடுவோம் மற்றும் நம்முடைய பரலோகத் தகப்பனுக்கு எட்டு ஜெபங்களை ஏறெடுப்பதில் ஐக்கியப்பட்டிருப்போம். இவை உண்மையிலேயே விலைமதிக்கமுடியாத சிலாக்கியங்கள். யெகோவா நமக்கு 12 மணிநேரங்களுக்கும் அதிகமான ஆவிக்குரிய கற்பித்தலையும் பயிற்றுவித்தலையும் கொடுக்கிறார். பாட்டுக்காகவும் ஜெபத்திற்காகவும் ஒதுக்கப்பட்ட அந்தச் சில நிமிடங்களில், யெகோவாவின் தாராளமான ஈவுகளுக்காக நன்றிசெலுத்துகிறோம் மற்றும் அவரைத் துதிக்கிறோம். ஒரு சபையாக ஜெபத்தில் யெகோவாவிற்கு முன்பாக நாம் கூடிவருவதனால், போதுமானதாக இல்லாத நம்முடைய திட்டத்தின் காரணமாக மட்டுமே பாட்டிலும் ஜெபத்திலும் கலந்துகொள்ள தவறுவதன்மூலம் நாம் தன்னலமானவர் மற்றும் தனிப்பட்டவராக நன்றியற்றவர் என்பதாக அவர் நம்மை நோக்க நாம் விரும்புகிறோமா? அன்றியும், ஒவ்வொரு மாநாட்டிலும் இந்த வருடம் பிரசுரங்கள் தேவையை நிறைவுசெய்யும் அளவுக்கும் அதிகமாக இருக்கும். சரியாகவே கூட்டம் முடியும் வரை தங்கள் இருக்கைகளில் இருப்பவர்கள் தங்கள் பிரதியை இழந்துவிடமாட்டார்கள். அதேவிதமாகவே மற்றவர்களுக்கு முன்பாக உணவு வரிசையில் நிற்பதற்கு ஒருவரும் கூட்டம் முடியும் முன் எழுந்து செல்லக்கூடாது.—மத். 7:12; ரோ. 12:10; பிலிப். 2:1-4.
8 எல்லா காரியங்களையும் தேவனுடைய மகிமைக்கென்றே செய்யுங்கள்: மாநாடுகளில் நல்ல நடைபாங்கு மற்றும் சரியான நடத்தையின் முக்கியத்துவத்தைக் குறித்து ஒவ்வொரு வருடமும் அன்பான நினைப்பூட்டுதல்கள் நமக்குக் கொடுக்கப்படுகிறது. இந்த நினைப்பூட்டுதல்களை மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு பின்பற்றும் பெரும்பான்மையோர் அதற்கான பாராட்டிற்குரியவர்கள். இந்த ஒழுங்குமுறை அதன் முடிவை நெருங்குவதால் 2 தீமோத்தேயு 3:1-5-ல் முன்னறிவிக்கப்பட்ட நடத்தையை உடைய ஆட்களுடன் பள்ளியிலோ அல்லது வேலைசெய்யும் இடங்களிலோ நாம் கூட்டுறவுகொள்ளும்படி அதிகமாக வற்புறுத்தப்படுகிறோம். நாம் விழிப்பாயில்லையென்றால் இந்தக் கூட்டுறவு மோசமான செல்வாக்கை நம்மீது செலுத்தும். யாரும் ‘நம்மை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசு’வதற்கு நாம் ஒருபோதும் காரணமாக இருக்க விரும்புவதில்லை. (1 பேதுரு 2:12) இது நம்முடைய கிறிஸ்தவ பண்பியல்புக்கு வழக்கத்திற்கும் அதிகமாக கவனம் செலுத்துவதைத் தேவைப்படுத்துகிறது. மாநாட்டிலும் மற்றும் தங்கும்விடுதி, உணவுவிடுதி போன்ற எந்தப் பொது இடங்களிலும் எல்லாரும் அவர்களுடைய நடத்தையைக் குறித்து கவனமாயிருக்கவேண்டியது அவசியம். மூப்பர்கள் அவர்களுடைய எல்லா சகோதரர்களிலும் அக்கறையுடையவர்களாக இருக்கின்றனர். (பிலிப். 2:4) அவர்கள் மற்றவர்களுக்கு உதவிசெய்பவர்களாகவும் மற்றவர்களின் நல்நடத்தையைப் பாராட்டுகிறவர்களாகவும் இருக்கவேண்டும். ஒரு சகோதரரோடோ அல்லது ஒரு சகோதரியோடோ தனிப்பட்டவிதமாக அறிமுகமாகாதவராக இருந்தாலும் தேவை ஏற்பட்டால் அன்பான சிட்சையைக் கொடுக்க மூப்பர்கள் தடையின்றி உணரவேண்டும். வினைமையான பிரச்னைகள் ஏதேனும் கவனிக்கப்பட்டால் மாநாடு நடக்கும் இடத்திலுள்ள நிர்வாக அலுவலகத்தில் அறிக்கைசெய்யப்பட வேண்டும்.
9 நாம் எதை மனதில் வைக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது? தங்கும்விடுதி ஊழியர்கள் கண்ணியமாகவும் மரியாதையுடனும் நடத்தப்படவேண்டும். அறைவசதி இலாக்கா வழக்கமான வாடகையைக் காட்டிலும் குறைந்தவற்றிக்கு அறைகளை கடினமாக உழைத்து பெற்றிருக்கிறது. நாம் அதிகமாக எதிர்பார்ப்பவர்களாகவும் அறையை அலங்கோலமான நிலையில் விட்டுவருபவர்களாகவும் இருந்தால் எதிர்கால மாநாடுகளின் சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளை தங்கும்விடுதி நிர்வாகம் ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். நம்மில் சிலருக்கு இது இன்னும் நினைப்பூட்டப்படவேண்டியிருக்கிறது. பெரும்பான்மையோரின் நற்பெயரை அழிக்க வெகு சிலரே போதுமானவர்களாக இருக்கிறார்கள்.
10 அளிக்கப்பட்ட சேவைக்கு இனாம் கொடுக்கும் காரியத்தைக் குறித்து ஜூலை 1991-ல் நம் ராஜ்ய ஊழியத்துடன் வெளியிடப்பட்ட உட்சேர்க்கையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. சில முக்கிய குறிப்புகளை தயவுசெய்து விமரிசனம் செய்யுங்கள்.
11 எபேசியர் 4:24-ல் குறிப்பிடப்பட்டுள்ள புதிய ஆள்த்தன்மை, பழைய ஆள்த்தன்மையைக் களைந்த பின் ஒருவர் உடுத்திக்கொள்ளும் ஓர் ஆடையைப் போன்றிருக்கிறது. இந்த ஆள்த்தன்மையின் மாற்றம் நம்முடைய சொல்லர்த்தமான ஆடையிலும்கூட பிரதிபலிக்கவேண்டும். சில சகோதர சகோதரிகள் முக்கியமாக இளம் வயதினர் தகுதியற்ற, சில சமயங்களில் அடக்கமற்றவிதமாகவும்கூட உடையுடுத்தி வருவதாக கவனிக்கப்பட்டிருக்கிறது. மற்றவர்கள் தங்கள் கால்களிலுள்ள காலணிகளை கழற்றிவிட்டு தங்களுக்கு முன்னிருக்கும் இருக்கையின் பின்புறத்தில் கால்களை முட்டுக்கொடுத்து உட்காருகின்றனர். நாம் ராஜ்ய மன்றத்தில் இவ்வாறு நடந்துகொள்கிறோமா? மேலும், உலகப்பிரகாரமான கவர்ச்சிவாசகங்களையும் சொற்களையும் உடைய அல்லது பல்வேறு பொருட்களுக்கான விளம்பரங்கள் அச்சிடப்பட்ட T-ஷர்ட்டுகளை முழுக்காட்டுதல் பெறவிருக்கும் சிலர் அணிந்திருந்திருக்கின்றனர். அந்தச் சமயத்திற்கேற்ற உடை எது என்பதை முழுக்காட்டப்படவிருப்பவர் புரிந்துகொண்டிருக்கிறார் என்பதை முழுக்காட்டுதலுக்கான கேள்விகளை கலந்தாராய்ச்சி செய்யும் மூப்பர் உறுதிசெய்துகொள்ளவேண்டும்.—ஆங்கில காவற்கோபுரம், ஜூன் 1, 1985 பக்கம் 30 மற்றும் ஏப்ரல் 15, 1973 பக்கங்கள் 254-5 பார்க்கவும்.
12 ஒலிப்பதிவுக்கருவிகள்: வீடியோ காமராக்கள் அனுமதிக்கப்பட்டபோதிலும்கூட, தாங்கள் பதிவு செய்பவற்றை தேர்ந்தெடுப்பவர்களாகவும், சாப்பிடும்போது, நிகழ்ச்சிநிரலை கவனித்துக்கொண்டிருக்கும்போது அல்லது ஜெபம் செய்யும்போது புகைப்படமெடுக்கப்பட விரும்பாதவர்களின் விருப்பத்தை மதிப்பதன்மூலம் அவற்றை உபயோகிப்பவர்கள் மற்றவர்களுக்கு கரிசனை காட்டும்படியாகவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். வீடியோவில் பதிவுசெய்பவர்களோ அல்லது காசாட்டில் பதிவுசெய்பவர்களோ பார்வையாளர்களின் கவனத்தை சிதறடிப்பதை அல்லது இடையூறு ஏற்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். உங்களுடைய இருக்கையிலிருந்தே சில நிகழ்ச்சிநிரல்களை பதிவு செய்வதற்கு எந்த ஓர் ஆட்சேபணையும் கிடையாது. ஆனால் கூட்டங்கள் நடந்துகொண்டிருக்கையில் யாரேனுமொருவர் அரங்கத்தின் நடைப் பாதையிலும் பார்வையாளர்களுக்கு முன்பாகவும் அலைந்து திரிந்துகொண்டு ஒலிப்பதிவு செய்துகொண்டிருப்பது பொருத்தமானதாக இருக்காது. தேவையேற்பட்டால், இந்த விஷயத்தில் சகோதர அன்பைக் காட்டத் தவறிய எவருடனும் அட்டென்டென்டுகள் பேசவேண்டும். மாநாட்டின் மின் ஆற்றலுக்குரிய அமைப்புகளுடனோ அல்லது ஒலி அமைப்புகளுடனோ அல்லது நடைபாதையிலோ போக்குவரத்து பகுதிகளிலோ எந்தக் கருவிகளும் வைக்கப்படக்கூடாது என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள்.
13 பெற்றோர்களுக்கு: மாநாட்டு அரங்கத்தினுள் அல்லது தங்கும்விடுதியில், எல்லா சமயங்களிலும் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை கவனித்துக்கொள்ளவேண்டியதன் அவசியத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். (நீதி. 29:15பி; லூக். 2:48) நிகழ்ச்சிநிரல் நடந்துகொண்டிருக்கையில், உங்கள் பிள்ளைகள் கவனமாக செவிசாய்க்கிறார்கள் மற்றும் குறிப்பெடுக்கிறார்கள் என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். இடைவேளையின்போது மற்ற சபைகளிலிருந்து வந்திருக்கும் நண்பர்களை சந்திப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
14 உங்கள் பிள்ளைகள் எல்லா சமயங்களிலும் எங்கிருக்கிறார்கள் என்றறிவதன் முக்கியத்துவத்தை பின்வரும் உதாரணம் காட்டுகிறது, ஒரு மாநாட்டு நகரத்தின் டாக்சி ஓட்டுநர் ஒருவர் மாநாடு நடக்குமிடத்திலிருந்து இரண்டு இளம் பெண்களை ஏற்றிச் சென்றதாக சகோதரர் ஒருவரிடம் சொன்னார். அவர்கள் பிற்பகல் முழுவதும் வெளியே இருக்க தீர்மானித்திருந்தனர், மாலை 5 மணிவரை தங்கள் தாய் தேடமாட்டார்கள் என்றும் ஓட்டுநரிடம் சொல்லியிருந்தனர். இந்த டாக்சி ஓட்டுநர் அவர்களின் நலத்தில் அக்கறையுடையவராக இருந்தார், ஆனால் அவர்களுடைய தாயாரைப் பற்றி என்ன? ஏதேனும் இடுக்கண் அவர்களுக்குச் சம்பவித்திருந்தால் என்னே ஒரு துன்பநிகழ்ச்சி ஏற்பட்டிருக்கும், கடவுளுடைய நாமத்திற்கும் அவருடைய ஜனங்களுக்கும் ஏற்படும் அவதூற்றைக் குறித்து சொல்லவே வேண்டாம்!
15 உங்கள் முழு ஒத்துழைப்பு போற்றத்தக்கது: மாநாட்டில் கலந்து கொள்வது சம்பந்தமாக சங்கத்தின் வழிநடத்துதலுக்கு நாம் ஒவ்வொருவரும் ஒத்துழைக்கும் வண்ணம் நம்முடைய சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள இடத்திற்குச் செல்வது எத்தனை அவசியமானதாக இருக்கிறது? ஒவ்வொரு மாநாட்டு நகரத்திலுமுள்ள பொறுப்புள்ள சகோதர்களின் மற்றும் சங்கத்தின் கவனமான திட்டங்கள் ஒவ்வொரு மாநாட்டின் தயாரிப்புகளிலும் உட்பட்டிருக்கிறது. இது போதுமான இருக்கைகள், உணவு, பிரசுரங்கள் போன்றவற்றைக் கொண்டிருப்பதை உட்படுத்துகிறது. தங்களுக்கு நியமிக்கப்படாத மாநாடுகளில் போதுமான சகோதரர்கள் கலந்துகொள்வது இடையூறுகளில் விளைவடையலாம். பெரும்பாலும் சிலருக்கு அவர்கள் மற்ற மாநாட்டிற்குச் செல்ல சூழ்நிலைமைகள் தேவைப்படுத்தலாம். அநேக காரணங்களால் மற்ற மாநாட்டு இடங்கள் அதிக கவர்ச்சியானதாக தோன்றலாம், ஆனால் தங்களுடைய தெரிவின்படி அதிக சதவிகித சகோதரர்கள் அந்த இடத்திற்குச் சென்றால் விளைவு ஒழுங்கை மிகவும் குலைப்பதாக இருக்கும்.
16 இருக்கைகளை பிடித்து வைக்கும் விஷயத்தில் உங்களுடைய முழு ஒத்துழைப்பு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உங்களுடைய நெருங்கிய குடும்ப அங்கத்தினர்களுக்கும், உங்களோடு வாகனத்தில் பிரயாணம் செய்பவர்களுக்கும் மட்டுமே இருக்கைகள் பிடித்து வைக்கப்படலாம் என்பதை தயவுசெய்து மனதில் வையுங்கள். எல்லா மாநாடுகளிலும் வயதானவர்களுக்கும் உடலூனமுற்றோருக்கும் விசேஷ பகுதிகள் இருக்கும். அட்டென்டென்டுகளின் வழிநடத்தல்களையும் அடையாள அறிவிப்புகளையும் எல்லாரும் தயவுசெய்து பின்பற்ற நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இளைஞர்கள் வயதானவர்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதியில் உள்ள இருக்கைகளில் உட்கார்ந்ததால் சில வயதானவர்கள் தாங்கள் அணுகமுடியாத இடங்களில் இருக்கைக்காக தேடவேண்டியவர்களாக இருக்கிறார்கள். தயவுசெய்து வயதானவர்களுக்கு கரிசனை காட்டுங்கள். உடலில் அயற்பொருள் நுழைவின் எதிர்விளைவால் பாதிக்கப்படுதல் போன்ற காரணத்திற்காக தனிப்பட்ட பகுதிகளுக்காக அல்லது அறைகளுக்காக வேண்டுகோள் செய்பவர்களுக்கு அவ்வாறு அளிக்கமுடியாத நிலைக்காக நாங்கள் வருந்துகிறோம்.
17 நீங்கள் மாநாட்டிற்கு கொண்டுவரும் எந்தத் தனிப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையும் குறைந்த அளவாக இருக்க ஆலோசனை கூறப்படுகிறது. உங்களுடைய இருக்கைக்கு அடியில் வைக்கமுடியாத எந்த ஒரு பொருளையும் வீட்டிலேயே விட்டுவருவது நல்லது. பாதுகாப்புக் காரணமாக பெரிய குளிர்சாதனங்கள் அரங்கத்தின் நடைபாதைகளில் அனுமதிக்கப்படுவதில்லை, மற்றும் உங்களுக்கு அடுத்துள்ள இருக்கையில் அது வைக்கப்பட்டால் யாரேனுமொருவருக்கு இருக்கை இல்லாமல் போகக்கூடும்.
18 ஒவ்வொரு மாநாட்டிலும் எதிர்பார்க்கப்படும் பார்வையாளர்களின் தேவைக்கேற்ப போதுமான உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. இளையவர்கள் உட்பட ஒவ்வொருவரும் தேவையானவற்றை மட்டுமே ஒவ்வொரு சாப்பாட்டின் போதும் பெற்றுக்கொண்டால் எல்லாரும் திருப்தியடையலாம். உடனடியான உபயோகத்திற்கு உங்களுக்கும் உங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கும் போதுமான உணவைமாத்திரம் கொண்டுசெல்ல தயவுசெய்து பார்த்துக்கொள்ளுங்கள். வேறு எங்கேனும் பின்உபயோகத்திற்காக மாநாடு நடக்குமிடத்திலிருந்து உணவு எடுத்துச்செல்லப்படக்கூடாது என்பதை மனதில் வையுங்கள். ஒவ்வொருநாள் இறுதியிலும் உணவுப்பகுதியில் உணவு பரிமாறப்பட்டு மிகுதியான உணவு மாலையில் மீதமானாலோ அல்லது ஞாயிறு மாலை மாநாட்டின் முடிவில் தேவைக்கு மேற்பட்டவைகள் இருந்தாலோ அவை மட்டுமே இதற்கு விதிவிலக்காக இருக்கும்.
19 உபயோகிக்கப்படாத உணவு, குப்பைகளைக் கொட்டும் உருள் தொட்டிகளில் தேவைக்கு மேல் வாங்கியவர்களால் போடப்பட்டிருப்பது கவனிக்கப்பட்டிருக்கிறது. முதலில் மட்டான அளவிற்கு எடுத்துக்கொள்வது நல்லது, பிறகு நீங்கள் கூடுதலாக பெற்றுக்கொள்ளவிரும்பினால் மற்ற எல்லாருக்கும் பரிமாறப்பட்ட பிறகு திரும்பப்போய் பெற்றுக்கொள்ளுங்கள். அடிப்படை உணவுத்தேவையை கூடுமான வரை வசதியான ஒன்றாக ஆக்குவதற்கு மாநாடு மகிழ்ச்சி கொள்கிறது.—ஆங்கில காவற்கோபுரம், நவம்பர் 15, 1991, பக்கம் 11, பாராக்கள் 13மற்றும்14-ஐ பார்க்கவும்.
20 தயார் செய்யப்பட்ட ஆவிக்குரிய நிகழ்ச்சிநிரலிலிருந்து பலனடைய சிறந்த வசதிவாய்ப்புகளுள்ள இடங்களில் கூடிவருவதற்கு யெகோவாவின் மக்கள் போற்றுதலுள்ளவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட கூட்டங்களில் கிடைக்கின்ற அநேக சேவைகளுக்காகவும் வசதிகளுக்காகவும் நாமும்கூட போற்றுதல் தெரிவிக்கிறோம். மாநாட்டில் கலந்து கொள்கிறவர்கள் அனுபவித்து களிப்பதற்கும் ஆவிக்குரிய விதமாக புத்துயிரளிக்கப்படுவதற்கும் போதுமான இருக்கைகள், விலையுயர்ந்த ஒலி அமைப்புகளை பொருத்துதல், திறம்பட்ட உணவு வழங்கும் இலாகாவை செயல்படுத்துதல் மற்றும் அநேக சேவைகளை அதிக கவனத்தோடும் சங்கத்திற்கு மிகுதியான செலவையும் உட்படுத்தியும் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
21 “ஒளி கொண்டுசெல்வோர்” மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ளுங்கள்: ஒளி கொண்டுசெல்வோராக இருப்பது ஏன் அதிக கனமும் சிலாக்கியமுமானது என்பதை “ஒளி கொண்டுசெல்வோர்” மாவட்ட மாநாட்டில் கலந்து கொள்வதன்மூலம் கேட்க கிளர்ச்சியுள்ளவர்களாக இருப்போம். இது முக்கியமான பொறுப்பும்கூட என்று நாம் நினைப்பூட்டப்படுவோம். மாநாட்டில் கேட்கும் காரியங்களுக்கு வழக்கத்திற்கு அதிகமான கவனம் செலுத்துவதன் மூலம் நாம் நம்முடைய திறமையை முன்னேற்றிவிக்கவும் ஒளி கொண்டுசெல்வோராக நாம் வகிக்கும் பாகத்தை போற்றவும் செய்வோம். வெள்ளிக்கிழமை துவக்கப் பாட்டு முதல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முடிவான ஜெபம் வரை கூட்டத்தின் எல்லா நிகழ்ச்சியிலும் முன்பே வந்து கலந்து கொள்ள இப்போதே நீங்கள் திட்டமிடுங்கள்.
[பக்கம் 5-ன் பெட்டி]
மாவட்ட மாநாடு நினைப்பூட்டுதல்கள்
அறைவசதி: மாநாட்டின் மூலம் அளிக்கப்பட்டுள்ள தங்கும் வசதியைப் பயன்படுத்துவதில் உங்கள் ஒத்துழைப்பு மிகவும் போற்றப்படுகிறது. உங்கள் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டிய தேவை ஏற்பட்டால், நீங்கள் தங்கும் விடுதிக்கு நேரடியாக தொலைபேசி மூலம் தெரிவிக்கவோ அல்லது எழுதவோ வேண்டும். எவ்வளவு முன்னதாக அதைச் செய்யக்கூடுமோ அவ்வளவு விரைவாகச் செய்வதன் மூலம் நீங்கள் அந்த அறை பிறருக்கு கிடைக்கும்படிச் செய்யக்கூடும்.
முழுக்காட்டுதல்: முழுக்காட்டுதல் பெறும் நபர்கள் சனிக்கிழமை காலையில் நிகழ்ச்சிநிரல் ஆரம்பிப்பதற்கு முன்பே அவர்களுக்காக குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில் தங்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்க வேண்டும். முழுக்காட்டுதல் பெற திட்டமிடும் ஒவ்வொருவரும் அடக்கமான குளியல் ஆடையும் ஒரு துவாலையும் கொண்டுவர வேண்டும். பேச்சாளரின் முழுக்காட்டுதல் பேச்சும் ஜெபமும் முடிந்த பின்பு அக்கூட்டத்தின் அக்கிராசினர் முழுக்காட்டுதல் பெறும் அங்கத்தினர்களுக்குச் சுருக்கமான ஆலோசனைகளைக் கொடுப்பார். பிறகு பாட்டு பாடும்படி அறிவிப்பார். கடைசி அடிக்குப் பிறகு அட்டென்டென்டுகள் முழுக்காட்டப்பட இருப்பவர்களை முழுக்காட்டுதல் நடைபெறும் இடத்துக்கு அல்லது அவ்விடத்திற்கு அவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு வழிநடத்துவார்கள். முழுக்காட்டுதல் ஒருவரது ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக, மிக நெருங்கிய மற்றும் தனிப்பட்ட விஷயமாக யெகோவாவுக்கும் தனிப்பட்ட ஒருவருக்கும் இடையே இருப்பதால், கூட்டாளி முழுக்காட்டுதல் என்றழைக்கப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முழுக்காட்டுதல் பெறும் நபர்கள் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு அல்லது கைகளைப் பிடித்துக்கொண்டு எடுக்கப்படும் ஓர் ஏற்பாடு கிடையாது.
வாலண்டியர் சேவை: ஒரு மாவட்ட மாநாடு சுமுகமாக செயல்படுவதற்கு வாலண்டியர் உதவி தேவைப்படுகிறது. மாநாடு நாட்களில் ஒரு குறிப்பிட்ட சமயம் மட்டுமே நீங்கள் வேலை செய்யக்கூடுமென்றாலும் உங்கள் சேவை போற்றப்படும். நீங்கள் உதவி செய்யக்கூடுமானால், நீங்கள் மாநாட்டை அடைந்தவுடன் தயவுசெய்து வாலண்டியர் சேவை இலாகாவில் அறிக்கை செய்யுங்கள். 16 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகளும்கூட மாநாட்டின் வெற்றியில் பங்குகொண்டு உதவலாம். ஆனால் அவர்கள் பெற்றோருடனோ அல்லது மற்ற பொறுப்புள்ள வயதுவந்த ஒருவருடனோ சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.
அடையாள அட்டைகள்: தயவுசெய்து மாநாட்டின் போதும் மாநாடு நடக்குமிடத்திற்கு வரும்போதும் விட்டுச்செல்லும் போதும் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட அடையாள அட்டையை அணியுங்கள். இது பிரயாணம் செய்கையில் எப்போதுமே ஒரு நல்ல சாட்சி கொடுத்தலை நமக்கு கூடியகாரியமாக்குகிறது. தெளிவாக எழுதப்பட்ட அடையாள அட்டைகளில் மூலம் மாநாட்டு பிரதிநிதி என்பதை அடையாளப்படுத்துவது எளிமையான உணவு வழங்கும் ஏற்பாட்டை எளிதாக்கும். அடையாள அட்டைகள் மாநாடுகளில் கிடைக்காததால் உங்கள் சபையின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும்.
எச்சரிக்கை: நீங்கள் எங்கு நிறுத்தினாலும் உங்கள் வாகனத்தை எல்லா சமயங்களிலும் பூட்டி வைக்கவேண்டும். மேலும் ஒருபோதும் பார்க்கக்கூடிய விதத்தில் பொருட்களை உள்ளே விட்டுவராதீர்கள். உங்கள் உடைமைகளைக் கூடுமானால் பெட்டிக்குள் பூட்டி வையுங்கள். மேலும் மிகுந்த கூட்டத்தால் கவரப்படும் திருடர்களுக்கும் பிக்பாக்கெட் செய்பவர்களுக்கும் எதிராக உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். இது மதிப்புள்ள பொருட்களை மாநாட்டின்போது இருக்கைகள் மீது கவனியாமல் விட்டுச் செல்லக்கூடாது என்பதையும் குறிக்கும். பழிபாவங்களுக்கு அஞ்சாத தனிப்பட்ட ஆட்கள் மாநாட்டு இடத்திலிருந்து இளம்பிள்ளைகளை ஏமாற்றிக் கொண்டு செல்வதற்கு முயன்றதாக சில அறிக்கைகள் இருந்தன. தயவுசெய்து கவனமாயிருங்கள்.
சில தங்கும் விடுதிகள் ஆபாசமான மற்றும் ஒழுக்கயீனமுள்ள தொலைக்காட்சித் திரைப்படங்களை காண எளிதான வாய்ப்பளிப்பதாக அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது. இது இத்தகைய இடங்களில் தங்கியிருக்கும் பிள்ளைகள் மேற்பார்வையில்லாமல் டிவி பார்ப்பதைத் தவிர்ப்பதன் அவசியத்தை அறிவுறுத்துகிறது.
மாநாட்டுக்கு அளிக்கும் மன்றத்தையுடையோரின் குழுவை சில சகோதரர்களும் அக்கறைகாட்டும் ஆட்களும் அழைத்து நிகழ்ச்சிநிரல் துவங்கும் நேரம் மற்றும் அதன் சம்பந்தமான விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கின்றனர். தயவுசெய்து இதைச் செய்யாதிருங்கள். உங்களுக்குத் தேவையான தகவலை நீங்கள் காவற்கோபுரத்திலோ அல்லது நம் ராஜ்ய ஊழியத்திலோ கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் ஒவ்வொரு சபை காரியதரிசியினுடைய கோப்பிலுமுள்ள மாநாட்டு விலாசத்திற்கு நீங்கள் எழுதவேண்டும்.
1992-93 மாவட்ட மாநாடு பாட்டு எண்கள்
காலை பிற்பகல்
வெள்ளி 33(13) 38(65)
91(61) 221(73)
111(20) 217(24)
சனி 43(103) 177(52)
128(10) 207(112)
152(82) 201(102)
ஞாயிறு 35(15) 168(84)
89(49) 42(18)
50(23) 45(107)