1991 “சுயாதீனப் பிரியர்” மாவட்ட மாநாட்டில் ஆஜராவதற்கு இப்பொழுதே ஏற்பாடு செய்யுங்கள்
1 இன்றுள்ள உலக நிலைமைகளின் காரணமாக, அநேக தேசங்களிலுள்ள ஜனங்கள் அவர்களுக்கிருப்பதை விட அதிகமான சுயாதீனத்தை வாஞ்சிக்கின்றனர் என்பது ஆச்சரியமாயில்லை. ஆனால் உண்மையான சுயாதீனத்தை எங்கே கண்டடையலாம்? இயேசு கிறிஸ்து சொன்னார்: “நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோ. 8:31, 32) இந்தச் சுயாதீனம், மனிதர் ஓர் அரசியல் ஆட்சியாளரை அல்லது அரசாங்க முறையை புறக்கணித்து மற்றொன்றை ஆதரிக்கையில் நம்பிக்கையாயிருக்கும் வரையறுக்கப்பட்ட சுயாதீனம் அல்ல. அதற்கு பதிலாக, அது மானிட பிரச்னைகளின் மையப் பகுதிக்கு நேராகச் செல்கிறது. பாவத்துக்கு அடிமைகளாக கட்டுப்படுத்தப்படுவதிலிருந்து சுயாதீனத்தை இயேசு கலந்தாலோசித்திருக்கிறார். (யோ. 8:24, 34–36-ஐ பார்க்கவும்.) ஆக, ஒரு நபர் இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீஷனாக ஆகும் போது, அது அவனுடைய வாழ்க்கையில் ஒரு கவனிக்கப்படத்தக்க மாற்றத்தை, ஒரு விடுதலையை, விளைவிக்கிறது.
2 மூன்று நாள் மாநாடு: செப்டம்பர் 13–15 துவங்கி, 1991 “சுயாதீனப் பிரியர்” மாவட்ட மாநாடுகள் தொடர்ச்சியாக ஒன்றன் பின் ஒன்றாக இந்தியாவில் ஆரம்பமாகும். ஆரம்பப் பகுதி வெள்ளிக் கிழமை காலை 10:20-க்கு ஆரம்பமாகும், ஞாயிறு பிற்பகல் 4 மணி அளவில் மாநாடு முடிவடையும். நம்முடைய ஆவிக்குரிய ஆரோக்கியத்துக்கு முக்கியமான, கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் ஒவ்வொரு பகுதியிலும் அளிக்கப்படும். ரோமர் 8:21-ல் குறிப்பிடப்பட்டுள்ள சுயாதீனம் எவ்வாறு நம்முடையதாகும் என்பதை பல்வேறு பொருள்கள் சிறப்பித்துக் காட்டும். தூண்டி இயங்கச் செய்யும் தகவல் விரிவுபடுத்தப்பட்டு, பேச்சுகள், நடிப்புகள், பேட்டிகள் மேலும் ஒரு நாடகத்தின் மூலம் அளிக்கப்படும்.
3 ஒரு பகுதியைக்கூட தவறவிடக்கூடாது என்று உறுதியாக தீர்மானித்துக் கொள்ளுங்கள். இது உங்கள் அட்டவணையில் தனிப்பட்ட தியாகங்களையும், மாற்றங்களையும் ஒருவேளை தேவைப்படுத்தலாம். நீங்கள் வேலை செய்யுமிடத்தில் அதிகாரியுடன் விசேஷ ஏற்பாடுகள் செய்வது அவசியமாயிருக்கலாம். எல்லா நிகழ்ச்சிநிரல்களுக்கும் ஆஜராவதற்கு அநேகர் பணம் சம்பந்தப்பட்ட அனுகூலங்களையும்கூட விட்டுக்கொடுக்கின்றனர். இவ்விஷயத்தை உள்ளார்ந்த ஜெபத்தின் பொருளாக ஆக்கி, அங்கிருப்பதற்கு இருதயப்பூர்வ முயற்சிகளை எடுப்பவர்களை யெகோவா நிச்சயமாக ஆசீர்வதிப்பார்.—லூக். 13:24.
4 சீக்கிரமாக வந்து சேருங்கள்: நம்பத்தகுந்தவர்களாகவும், காலந்தவறாமல் வருபவர்களாகவும் இருக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு யெகோவாவின் சாட்சிகள் நன்கு அறியப்பட்டவர்களாய் இருக்கின்றனர். (லூக். 16:10) மாவட்ட மாநாட்டுக்கு ஆஜராகும் போதும் இது முக்கியமாயிருக்கிறது. ஒவ்வொரு நாளும் முன்னதாகவே வந்துசேருங்கள், நிகழ்ச்சிநிரல் ஆரம்பிப்பதற்கு முன்பே அமர்ந்திருங்கள். உங்கள் வாகனத்தை நிறுத்துவது, உங்கள் குடும்பத்துக்கு இருக்கைகளை கண்டுபிடிப்பது போன்ற கவனத்தை தேவைப்படுத்தும் விஷயங்களை கவனிக்க போதுமான நேரம் அனுமதிப்பதை இது தேவைப்படுத்தும்.
5 மாவட்ட மாநாட்டுக்கு ஆஜராவது மகிழ்வளிக்கும் கூட்டுறவை அனுபவிக்க நமக்கு ஒரு சிறந்த சந்தர்ப்பத்தைக் கொடுக்கிறது. ஆனால் நண்பர்களோடு இரவில் அதிக நேரம் இருப்பது, அடுத்த நாள் நேரத்துக்குப் போகவேண்டும் என்ற நம்முடைய முயற்சியை தடுக்கும். காலையில் புறப்படுவதற்கு காலத் தாமதமாகி அவசரமாகச் செல்கையில் அதிக கவலையும், செயல்குலைவும் ஏற்படும். இதைத் தவிர்ப்பதற்கு, படுப்பதற்கு ஒரு நியாயமான நேரத்தை வைப்பது பயனுள்ளதாயிருக்கும். அட்டவணையை கண்டிப்பாக கடைப்பிடிப்பதன் மூலம், எல்லாரும் ஒரு நல்ல இரவு தூக்கத்தைப் பெற்று, மறுநாள் முன்னதாகவே புறப்படுவதற்கு தயாராக இருக்கலாம். நிகழ்ச்சிநிரல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் வந்துசேரும் சாத்தியத்தை இது தவிர்க்கும், இது ஏற்கெனவே அமர்ந்திருப்பவர்களின் கவனத்தைத் திருப்பி தொல்லை கொடுப்பதாயிருக்கும். ஒவ்வொரு நாளும் முன்கூட்டியே வந்து சேருவது நீங்கள் உங்கள் சகோதர, சகோதரிகளோடு கூட்டுறவுக் கொள்ள அனுமதிக்கும். கிறிஸ்தவ அன்பும், பிறர் நலத்தை எண்ணிப் பார்க்கும் தன்மையும் அதோடு யெகோவாவுக்கும், அவர் ஏற்பாடு செய்யும் ஆவிக்குரிய காரியங்களுக்கு மரியாதையும், நேரத்துக்கு வந்துசேருவதில் நம்மால் ஆனதை எல்லாம் செய்வதற்கு நம்மை உந்துவிக்க வேண்டும்.
6 ஊக்கமாகச் செவிகொடுங்கள்: செவி கொடுப்பது என்பது, நம்முடைய மனம் மற்றும் நம்முடைய இருதயத்தோடு கவனிப்பது, நம்முடைய செவிகள் மற்றும் நம்முடைய புரிந்துகொள்ளுதலின் சக்திகளோடு கவனித்துக் கேட்பது என்று அர்த்தப்படுத்துகிறது. நாம் செவி கொடுத்து “யெகோவாவின் வார்த்தையைக் கேட்க வேண்டும்.” (எரே. 2:4) ஏசாயா 55:2-ல் யெகோவா இஸ்ரவேலுக்கு கட்டளையிட்டார்: “எனக்கு கவனமாய்ச் செவி கொடுங்கள்.” இந்த “கவனமாய்” அல்லது “உன்னிப்பாய்” என்ற வார்த்தையின் பொருள் “கூர்ந்த அல்லது ஆழ்ந்த கவனத்தை திருப்புதல்” என்று விளக்கப்படுகிறது. மாநாட்டின் போது நாம் கவனித்தோமானால், நாம் ஆர்வத்தோடு “செவிகொடுத்து அதிகமான போதனைகளை” எடுத்துக்கொள்வோம். (நீதி. 1:5, NW) ராஜ்ய மன்றத்தில் செவி கொடுத்துக் கேட்டு, கற்றுக்கொள்வதை விட, பொதுவாக ஒரு மாவட்ட மாநாட்டில் அதிகமான முயற்சியும் ஒருமுகப்படுத்துதலும் தேவைப்படுகிறது. ஏன்? நாம் நீண்ட நேரப் பகுதிகள் உட்கார்ந்திருக்கிறோம், மேலும் பெரும் எண்ணிக்கையான ஜனங்கள் ஆஜராயிருப்பதால், அதிகமான கவனத்தைத் திருப்பும் காரியங்கள் இருக்கின்றன. நாம் கவனத்தோடு இல்லையென்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள செழுமையான ஆவிக்குரிய போஷக்கிலிருந்து நாம் முழுமையான பயனை பெற்றுக்கொள்ளாமல் இழந்து போவாம். (1 பேதுரு 2:2) என்ன செய்யப்படலாம்? அநேக மாநாட்டு பிரதிநிதிகள், நிகழ்ச்சி நிரலின் போது குறிப்புகளை எடுக்கும் பிரயோஜனமான பழக்கத்தை வளர்த்துக் கொண்டிருப்பதை கவனிப்பது அதிக மகிழ்ச்சி தரக்கூடியதாய் இருக்கிறது. மாவட்ட மாநாட்டின் பேச்சுகளில் சில காலப்போக்கில் பிரசுரங்களில் தோன்றும் என்றாலும் மற்றவை பிரசுரிக்கப்படாது. மாவட்ட மாநாட்டின் போது, சுருக்கமான குறிப்புகளை எடுப்பதை ஓர் இலக்காக வைத்துக்கொள்ள அனைவரும் உற்சாகப்படுத்தப்படுகின்றனர், ஏனென்றால் சொல்லப்படும் காரியங்களின் பேரில் உங்கள் கவனத்தை உறுதியாக ஊன்ற வைப்பதற்கு அது ஒரு நல்ல வழியாகும்.
7 குறிப்புகள் அதிக விரிவாக அல்லது மிகுதியாக இருக்கத் தேவையில்லை. ஒரு முக்கிய குறிப்புக்கு பொதுவாக ஒன்று அல்லது இரண்டு சொற்றொடர் போதுமானது. இளம் பிள்ளைகளும்கூட பேச்சுகளிலிருந்து அதிகத்தைப் பெற்றுக்கொள்ளவும், கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கும் உதவப்படலாம். அவர்களுக்கு ஒரு நோட்டுப் புத்தகம், பேனா அல்லது பென்சில் கொடுத்தால், அவர்கள் பேச்சாளர் அளிக்கும் முக்கிய குறிப்புகளையும், முக்கிய வசனங்களையும் அல்லது புதிய கருத்துக்களையும் எழுதலாம். மாவட்ட மாநாட்டைத் தொடர்ந்து வரும் ஊழியக்கூட்டத்தில், மாநாட்டு நிகழ்ச்சிநிரலின் ஆர்வமிக்க விமர்சனம் நடத்துவதற்கு, ஒழுங்காக அமைக்கப்பட்ட குறிப்புகளை எடுப்பது அனுகூலமாயிருப்பதாக மூப்பர்கள் காணலாம். மேலும், மாநாட்டில் அளிக்கப்பட்ட அநேக குறிப்புகளை அவர்கள் தங்கள் கற்பிக்கும் மற்றும் மேய்க்கும் வேலையில் சேர்த்துக் கொள்ள விரும்பலாம்.
8 பாட்டிலும், ஜெபத்திலும் ஐக்கியமாயிருங்கள்: இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் செய்தது போல், நம்முடைய வணக்கத்தின் ஒரு பாகம், யெகோவாவுக்கு துதிகளைப் பாடி அவரை கனப்படுத்துவதை உட்படுத்துகிறது. (மாற்கு 14:26) பாடுவதைப் பற்றி 1 கொரிந்தியர் 14:15-ல் பவுலின் கூற்று, அது கிறிஸ்தவ வணக்கத்தின் ஒழுங்கான அம்சமாயிருத்தது என்று குறிப்பிடுகிறது. (நம் ராஜ்ய ஊழியம் மார்ச் 1991, பக்கம் 3-ஐயும் பார்க்கவும்.) பாடலிலும் ஜெபத்திலும் யெகோவாவைத் துதிப்பதில் ஆயிரக்கணக்கான நம்முடைய சகோதர, சகோதரிகளோடு ஐக்கியமாக இருக்கும் ஒரு தனிச்சிறப்பான சந்தர்ப்பத்தை மாவட்ட மாநாடுகள் நமக்கு அளிக்கின்றன. என்றபோதிலும், சிலர் நம்முடைய வணக்கத்தின் முக்கிய பாகங்களாகிய இவைகளுக்கு மரியாதை கொடுக்க தவறுகின்றனர். எவ்வாறு? ஆரம்ப பாடல் மற்றும் ஜெபத்தின் போது அல்லது அவசியமின்றி அதற்குப் பிறகு, மாநாட்டுக்கு வந்து சேருவதன் மூலம். நிகழ்ச்சி நிரலின் முடிவில், சிலர் பாடலின் போதும் அல்லது ஜெபத்துக்கு முன்னும் தங்கள் இருக்கைகளை விட்டுச் செல்கின்றனர். எப்பொழுதாவது சில சமயங்களில் இதைச் செய்வதற்கு நல்ல காரணம் ஒருவேளை இருக்கலாம். என்றபோதிலும், சாப்பிடுவதற்காகவோ அல்லது சீக்கிரமாக தங்கள் வாகனங்களில் செல்வதற்காகவோ, ஐக்கியமாக பாடி ஜெபிக்கும் சந்தர்ப்பத்தை விட்டுக் கொடுப்பது, யெகோவாவின் மேஜைக்கு சரியான மரியாதையும், போற்றுதலும் காட்டப்படுவதாய் இருக்குமா?—மத். 6:33.
9 தனிப்பட்ட வசதியை நாடுவதில் கவனம் பிரயோகிக்கப்பட வேண்டியதாயிருக்கிறது, உலகப்பிரகாரமான ‘நான்–முதல்’ மனநிலை அல்லது பேராசை மற்றும் சுயநலம் போன்ற தேவபக்தியற்ற பண்புகள், நம்முடைய ஆவிக்குரிய வளர்ச்சியை தடை செய்வதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. சமீப வருடங்களில், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் நம்முடைய அநேக சகோதர சகோதரிகள் பாடுவதிலும் ஜெபிப்பதிலும் சுயாதீனத்தை வெகு காலத்துக்குப் பின் அனுபவிக்க முடிந்தது. பெரும் எண்ணிக்கையில் பாடவும், ஜெபிக்கவும் முடிந்ததில் அவர்கள் கிளர்ச்சியடைந்தது போல் நாமும் இப்பொழுது பரிசுத்த காரியங்களுக்கான போற்றுதலின் அதே ஆவியை காண்பித்து, ஒன்றாக பாடவும் மற்றும் ஜெபிக்கவும் நமக்குள்ள சந்தர்ப்பங்களை ஒருபோதும் இலேசாக நோக்க வேண்டாம்.
10 நம்முடைய கிறிஸ்தவ பழக்கவழக்கங்கள்: மாவட்ட மாநாடுகளில் நம்முடைய கிறிஸ்தவ பழக்கவழக்கங்களும், தோற்றமும் யெகோவாவின் சாட்சிகளாக ஒரு நற்பெயரை தொடர்ந்து வாங்கித் தந்திருக்கின்றன. இது ஏனென்றால் நாம் யெகோவாவை வணங்குவதில் உள்ளார்ந்த அக்கறையுடையவர்களாய் இருக்கிறோம், மேலும் ஒரு மாநாட்டுக்கு ஆஜராவதை வெறுமென ஒரு சமூக உல்லாசப் பயணமாக நாம் நோக்குவதில்லை. அப்பேர்ப்பட்ட விசேஷித்த சமயங்களுக்காக கூடிவரும் போது, எல்லாச் சமயங்களிலும் ஊழியர்களாக நாம் நடந்து கொள்வதன் மூலம், நாம் நம்முடைய கிறிஸ்தவ கண்ணியத்தையும் ஆவிக்குரிய மனநிலையையும் காத்துக் கொள்ள வேண்டும்.—1 கொரி. 10:31–33.
11 நாம் இதைச் செய்வதற்கு தவறினால், நாம் மற்றவர்களுடைய சந்தோஷத்தை பாதிக்கிறோம், புதியவர்களை இடறலடையவும் செய்வோம். நம்மிடமாக காட்டப்படும் சிறிய தயவுகளையும்கூட ஒப்புக்கொண்டு நாம் போற்றுதல் தெரிவிக்கிறோமா? நம்மைச் சுற்றியிருக்கும் மற்றவர்களைக் குறித்து நாம் உணர்வுடையவர்களாக இருந்து மரியாதையும் கரிசனையும் காண்பிக்க வேண்டும். நிகழ்ச்சிநிரல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அது செவிகொடுத்து கேட்பதற்கான நேரம், ஆனால் சுற்றி நடந்துகொண்டும், பேசிக்கொண்டும் இருப்பதற்கல்ல என்பதை ஒவ்வொருவரும் மதித்துணர வேண்டும்.—உபா. 31:12.
12 நம்முடைய கிறிஸ்தவ பழக்கவழக்கங்களில் யெகோவா தேவனை மகிமைப்படுத்தும் மற்றொரு அம்சம், நமக்குத் தங்கும் இடங்களை ஏற்பாடு செய்பவர்களோடு உள்ள தொடர்புகளில் ஆகும். நல்ல தங்கும் விடுதி அறைகளை குறிப்பிடத்தக்க குறைவான விலையில் நாங்கள் முயன்று பெறுகிறோம். விடுதி பணியாளர்களுக்கு நாம் போற்றுதலும் கரிசனையும் காண்பிக்க வேண்டும், இணங்கிப் போகிறவர்களாகவும், அதிகப்படியாக அதிகாரத்துடன் கேட்பவர்களாயும் இருக்கக்கூடாது. (கலா. 6:10) விடுதிகளில் சரியான நடத்தையைக் குறித்து நல்ல ஆலோசனைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலோர் சாதகமாகப் பிரதிபலித்து, விடுதி பணியாளர்களுடன் முழுமையாக ஒத்துழைக்க ஊக்கமாக முயற்சிசெய்த போதிலும், சில இடங்களில் யெகோவாவின் சாட்சிகளைக் குறித்து ஓர் எதிர்மறையான எண்ணம் தொடர்ந்து இருப்பதைக் கவனிப்பது உற்சாகமிழக்கச் செய்வதாயிருக்கிறது. ஏன்?
13 பணம் சேமிப்பதில் நாம் ஒருவேளை கவனமாய் இருந்தாலும், செய்யப்பட்ட சேவைகளுக்காக இனாம் எதிர்பார்ப்பவர்களை அறிந்தும் புறக்கணிக்கக்கூடாது. விழித்தெழு! 1986, ஜூன் 22, இதழின் பக்கங்கள் 24–7-ல் உள்ள “இனாம் கொடுப்பதா—வேண்டாமா?” மற்றும் “இனாம் கொடுப்பதைப் பற்றிய சிறு குறிப்புகள்” கட்டுரைகள் இன்னும் நம்முடைய கவனத்துக்குத் தகுதி வாய்ந்ததாயிருக்கிறது. பக்கம் 24-ல் அது குறிப்பிட்டது: “கூடுதலான சேவை செய்ததற்காக ‘உனக்கு நன்றி’ என்பதைவிட இனாம் கொடுப்பது அதிகத்தைக் குறிக்கிறது. அது ஒரு நபரின் வருவாயில் முக்கிய பாகம்.” விழித்தெழு! மேலுமாக குறிப்பிட்டது: “ஒரு மாநாட்டுக்கு ஆஜராகும் போது, நீங்கள் தனிப்பட்டவிதமாக என்ன செய்கிறீர்களோ, அது முழு தொகுதியையும் பிரதிபலிக்கிறது. ஜனங்கள் உங்கள் நடத்தையால் தொகுதியை நியாயந்தீர்ப்பர்.” இனாம் கொடுப்பதைப் பற்றி உங்கள் தனிப்பட்ட எண்ணங்கள் என்னவாயிருந்தாலும், யெகோவாவின் சாட்சிகளின் மாநாட்டு பிரதிநிதியாக ஒரு நகரத்துக்கு நீங்கள் விஜயம் செய்கையில், நல்ல தீர்மானிக்கும் திறமையையும், பகுத்துணர்வையும் உபயோகியுங்கள், “சுவிசேஷத்தினிமித்தமாக எல்லா காரியங்களையும் செய்ய” தயாராயிருங்கள்.—1 கொரி. 9:19–23.
14 சில சாட்சிகள் விடுதி அறைகளை அலங்கோலமான நிலையில் விட்டுச் சென்றிருக்கின்றனர் என்பது விடுதி மேலாளர்களின் கவலைக்குரிய காரியமாக இருக்கிறது. நம்முடைய உடை மற்றும் நடத்தையில் மட்டும் சுத்தத்தையும் கரிசனையும் காண்பிக்காமல், மற்றவர்களுடைய சொத்துக்களை நாம் உபயோகிக்கும் விதத்திலும் காண்பிக்க வேண்டும். வாடகைக்கு எடுத்த ஓர் அறையை சுத்தமாகவும் ஒழுங்காகவும் விடக்கூடாது என்பதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா? கரிசனையற்ற நடத்தை நம்முடைய நற்பெயரை கெடுத்துவிடுகிறது. வரப்போகும் மாவட்ட மாநாடுகளில் “நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை அலங்கரிக்கத்தக்கதாக” நாம் நடந்துகொள்ள வேண்டும் என்று நாம் அனைவரும் நம்முடைய தீர்மானமாக்கிக் கொள்ள வேண்டும்.—தீத்து 2:9.
15 பெற்றோர்களுக்கு: இளம் பிள்ளைகளும், பருவ வயதினரும் “சுயாதீனப் பிரியர்” மாவட்ட மாநாட்டுக்கு ஆஜராகும்படி வரவேற்கப்படுகின்றனர், எதிர்பார்க்கப்படுகின்றனர். ஆரம்பத்தில் மனிதவர்க்கத்துக்கு கொடுக்கப்பட்ட சுயாதீனத்தை ஆதாம் இழந்தது போல, உலகம் அளிக்கும் சுயாதீனம் அவர்களை ஆவிக்குரிய மரணத்துக்கு வழிநடத்தக்கூடும். இந்த விஷயத்தில் சரியான சிந்தனையை யெகோவாவின் அன்பான அமைப்பு நம் அனைவருக்கும் கொடுத்திருக்கிறது. எல்லா கிறிஸ்தவக் கூட்டங்களிலும் கூர்ந்து கவனம் செலுத்தக் கற்றுக்கொண்டு, மாநாட்டு நிகழ்ச்சி நிரலில் ஆவலோடு அக்கறையாயிருக்கும் இளைஞர்களைக் காண்பதில் நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம். (சங். 148:12, 13) ஆனால் பெற்றோர்களின் முன்மாதிரி மற்றும் மேற்பார்வையின் பேரில் அதிகம் சார்ந்திருக்கிறது. அநேக இளைஞர்கள் குறிப்புகளை எடுக்க நன்கு பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்புகள் எவ்வாறு எடுப்பது என்பதை உங்கள் பிள்ளைகளுக்கு இன்னும் கற்றுக்கொடுக்கவில்லையென்றால், உங்கள் மாநாட்டுக்கு முன்பு இருக்கும் இப்போதுள்ள நேரத்தை ஏன் உபயோகப்படுத்தக்கூடாது? சிறு பிள்ளைகளும்கூட, அவர்கள் கேட்கும் வேதவசனங்களையும், பேச்சாளர்களால் சொல்லப்படும் சம்பந்தப்பட்ட முக்கிய வார்த்தைகளையும் எழுதுமாறு உற்சாகப்படுத்தலாம். அவர்கள் தங்கியிருக்கும் இடத்துக்கு திரும்பிய பிறகோ அல்லது வீட்டுக்கு பயணம் செய்யும் போதா, அந்த நாளின் நிகழ்ச்சி நிரலிலிருந்து முக்கிய குறிப்புகளை விமர்சிக்க சில பெற்றோர்கள் ஏற்பாடு செய்கின்றனர்.
16 விளையாட்டுத்தனமாக இருப்பது பிள்ளைகளின் இயல்பான மனச்சாய்வு என்பதை அநேக பெற்றோர்கள் புரிந்துகொள்கின்றனர். அவர்கள் வாழ்க்கையில் அனுபவமின்றியும், முதிர்ச்சியற்றவர்களாயும் இருக்கின்றனர். ஆகையால், எப்பொழுது கவனித்துக் கேட்க வேண்டும், கூட்டங்களில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது கற்றுக்கொள்ளப்பட வேண்டும். இது அவர்களுடைய பெற்றோர்களின் நல்ல மேற்பார்வையை தேவைப்படுத்துகிறது. இவ்விஷயத்தில் சில பெற்றோர்கள் கண்டிப்பில்லாமல் இருந்திருக்கின்றனர். சில சமயங்களில் பெற்றோர்கள் ஜெபத்தின் போது யெகோவாவுக்கு சரியான பயபக்தியைக் காண்பித்துக் கொண்டிருக்கையில், அவர்கள் பிள்ளைகள் விளையாடிக்கொண்டும், மற்றவர்களின் கவனத்தைத் திருப்பிக் கொண்டுமிருக்கக்கூடும். ஜெபங்களின் போதும் தங்கள் பிள்ளைகள் என்ன செய்துகொண்டிருக்கின்றனர் என்பதை பெற்றோர்கள் அறிந்திருக்க வேண்டும். நிகழ்ச்சி நிரலின் போது தங்கள் இருக்கைகளைவிட்டுச் செல்கையிலும் அவர்கள் என்ன செய்கின்றனர்? மாநாட்டு நிகழ்ச்சிநிரலின் போது அல்லது அதற்குப் பிறகு பிள்ளைகள் மேற்பார்வையின்றி விடப்படுகின்றனரா?
17 சில சந்தர்ப்பங்களில், பெற்றோர்கள் அறையிலோ, சாப்பிடுவதற்கு வெளியேச் சென்றோ அல்லது வேறு ஏதாவது வேலையில் ஈடுபட்டோ இருக்கையில், பிள்ளைகள் விடுதிகளில் மேற்பார்வையின்றி விடப்பட்டிருக்கின்றனர். இது சரி அல்ல. சில பிள்ளைகள் சிட்சையற்ற விதத்திலும், கட்டுப்பாடற்ற முறையிலும் நடந்துகொண்டிருக்கின்றனர். வயதான சகோதர, சகோதரிகள் அவர்களை தயவான விதத்தில் திருத்த முயற்சி செய்த போது மரியாதையற்றவர்களாய்கூட இருந்திருக்கின்றனர். கிறிஸ்தவர்களுக்கு பொருத்தமல்லாத இப்பேர்ப்பட்ட கட்டுப்பாடற்றத் தன்மையும், நடத்தையும் வீட்டில் சிட்சிப்பும் கண்டிப்பும் இல்லாததன் விளைவாகும். இது கட்டாயமாக திருத்தப்பட வேண்டும். எல்லா கிறிஸ்தவ பெற்றோர்களும் “யெகோவாவுக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும்” பிள்ளைகளை வளர்த்து வருகையில் எல்லாச் சமயங்களிலும் தங்களுடைய பிள்ளைகளுக்கு நெருங்கிய மேற்பார்வையை கொடுக்க வேண்டும்.—எபே. 6:4.
18 உங்களுடைய முழு ஒத்துழைப்பு போற்றப்படுகிறது: மாநாட்டுக்கு ஆஜராகும் ஒவ்வொருவருக்கும் போதுமான இருக்கைகள், பிரசுரங்கள், உணவு மேலும் மற்ற ஏற்பாடுகள் கிடைக்கக்கூடியதாயிருக்க பார்த்துக் கொள்வதற்கு கணிசமான அளவுக்கு திட்டமும் வேலையும் செய்யப்படுகின்றன. இந்த ஏற்பாடுகளின் திறம்பட்டத் தன்மையை உறுதிசெய்து கொள்ள, சில சபைகள் ஒரு குறிப்பிட்ட மாநாட்டுக்கு திட்டவட்டமாக நியமிக்கப்பட்டிருக்கின்றன. ஜனநெரிசலை தவிர்ப்பதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பும் முக்கியமானதாயிருக்கிறது. சிலருக்கு மற்றொரு இடத்திலுள்ள மாநாட்டுக்கு ஆஜராவதற்கு சூழ்நிலைமைகள் தேவைப்படுத்தலாம். என்றபோதிலும், பெரும்பாலோர் தங்களுக்கு நியமிக்கப்பட்ட இடத்தில் உள்ள மாநாட்டுக்கு ஆஜராக வேண்டும்.—1 கொரி. 13:5; பிலி. 2:4.
19 இருக்கைகளைப் பிடித்து வைக்கும் விஷயத்தில் உங்களுடைய முழு ஒத்துழைப்பு கேட்டுக்கொள்ளப்படுகிறது. உங்களுடைய நெருங்கிய குடும்ப அங்கத்தினர்களுக்கும், உங்களோடு வாகனத்தில் பிரயாணம் செய்பவர்களுக்கும் மட்டுமே இருக்கைகள் பிடித்து வைக்கப்படலாம் என்பதை தயவுசெய்து மனதில் வையுங்கள். தயவுசெய்து மற்றவர்களுக்காக இருக்கைகளை ஒதுக்கீடு செய்யாதீர்கள். குறிப்பாக எவருக்கு என்றில்லாமல் சில சமயங்களில் மிகைப்படியான இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இது அன்பற்றதாகவும், காலியான இருக்கைகளுக்காகப் பார்த்துக்கொண்டிருக்கும் அட்டென்டென்டுகளையும் மற்றவர்களையும் தவறாக வழிநடத்துவதாயும் இருக்கிறது. பைபிளின் புத்திமதிக்கு இசைவாக சகோதர அன்பை வெளிக்காட்ட முயற்சி செய்ய வேண்டும். இருக்கைகளைப் பிடித்து வைத்துக்கொள்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட ஏற்பாட்டோடு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும். இருக்கைகள் இலவசமாக இருப்பதன் காரணமாக தங்களுடைய நெருங்கிய குடும்பத்தாருக்கு அல்லது வாகன தொகுதிக்கு மேல் கூடுதலான இருக்கைகள் பிடித்து வைக்க உரிமை அளிக்கப்பட்டில்லை.—2 பேதுரு 1:7.
20 முன்னிரவு இருக்கை பிடித்து வைத்துக் கொள்ளுதல் அனுமதிக்கப்படாது. காலை 7 மணிக்கு முன் வேலையில் இருக்க வேண்டிய வாலண்டியர் வேலை செய்பவர்களுக்கு மட்டுமன்றி வேறு எவருக்கும் எந்த மாநாட்டு நலங்களும் திறந்து வைக்கப்படாது. காலை 7 மணிக்கு முன் இந்த வேலையாட்கள் எவரும் இருக்கைகள் பிடித்து வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள். காலை 7 மணிக்கு பின்னர் கட்டிடத்திற்குள் நுழைய மற்றவர்கள் அனுமதிக்கப்படும்போது அதை அவர்கள் செய்ய அனுமதிக்கப்படுவர். சங்கத்தின் இருக்கை–பிடித்து வைத்தல் வழிகாட்டிக் குறிப்புகளை தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க, அட்டென்டென்டுகள் தங்களுக்கு நியமிக்கப்பட்ட இடங்களில், என்ன செய்யப்படுகிறது என்பதை கவனிக்க அந்நேரத்துக்கு முன்பே இருப்பர். ஆஜராயிருக்கும் எல்லாரின் நன்மைக்காகவும் தங்கள் நியமிப்புகளை நிறைவேற்றும் அட்டென்டென்டுகளோடு தயவுசெய்து முழுவதுமாக ஒத்துழையுங்கள்.
21 மாநாட்டு இடத்துக்கு தனிப்பட்ட பொருட்களைக் கொண்டு வருவதில் நல்யோசனை உபயோகிக்கப்பட வேண்டும் என்று ஆலோசனை கொடுக்கப்படுகிறது. கடந்தக் காலங்களில் சிலர் தங்களுடைய இருக்கைகளுக்கு அடியில் வைக்கமுடியாத பெரிய கூலர்கள் அல்லது பெரிய பொருட்களை கொண்டுவந்திருக்கின்றனர். இவைகள் இருக்கைகளிலோ அல்லது இடைவழிகளிலோ வைக்கப்பட்டிருக்கின்றன. இது மற்றவர்களுக்கு இருக்கை கிடைக்கப்பெறாமல் செய்வதிலும், சில சமயங்களில் தீ மற்றும் பாதுகாப்பு விதிகளை மீறுவதிலும் விளைவடைந்திருக்கின்றன. அத்தகைய விஷயங்களில் நாம் கரிசனை காட்டுபவர்களாக இருக்க வேண்டும்.
22 உணவு அல்லது மற்ற மாநாட்டு ஏற்பாடுகளை வீணாக்காமல் இருப்பதற்கு தயவுசெய்து கவனமாயிருங்கள். சென்ற வருட மாநாடுகளில், தயாரிக்கப்பட்ட சில சிற்றுண்டிகள் குப்பைத் தொட்டிகளில் காணப்பட்டன. இது காண்பிக்கப்பட்ட தாராள குணத்தை தவறாக பயன்படுத்துவதாகும், மேலும் வேதாகம நியமங்களை மீறுவதாகும்.—யோ. 6:12.
23 நிச்சயமாகவே, தயாரிக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய நிகழ்ச்சிநிரலிலிருந்து பயனடைவதற்காக, சிறந்த மன்றங்களில் ஒன்றுகூடிவதற்கான வாய்ப்புக்காக யெகோவாவின் ஜனங்கள் போற்றுதலை தெரிவிக்கின்றனர். இப்படிப்பட்ட கூட்டங்களில் கொடுக்கப்படும் சேவைகளுக்காகவும் வசதிகளுக்காகவும்கூட நாம் போற்றுதலை தெரிவிக்கிறோம். போதிய இருக்கைகள், அதிக விலையுயர்ந்த ஒலிபெருக்கி சாதனங்கள், திறம்பட்ட உணவு வழங்கீடு ஏற்பாடுகள் போன்றவற்றையும் மற்றும் இன்னும் அநேக ஏற்பாடுகளும் சேவைகளும் அதிக கவனத்தோடும் மற்றும் சங்கத்தின் கணிசமான பணச்செலவுகளைக் கொண்டும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவை நாம் மாநாட்டுக்கு ஆஜராவதை மகிழ்ச்சியுள்ளதாகவும், ஆவிக்குரிய புத்துணர்ச்சி அளிப்பதாயும் ஆக்குகின்றன.
24 சங்கத்தின் உலகளாவிய வேலைக்கு ஆதரவாக கொடுக்கப்படும் உங்களுடைய மனமுவந்த நன்கொடைகளால் இந்தச் செலவுகள் ஈடுசெய்யப்படுகின்றன. உங்களுடைய வசதிக்காக தெளிவாக குறிக்கப்பட்ட நன்கொடை பெட்டிகள் மாநாடு மன்றம் முழுவதிலும் வைக்கப்படும். எல்லா நன்கொடைகளும் வெகுவாகப் போற்றப்படுகின்றன, ராஜ்ய அக்கறைக்காக இந்த முறையில் காண்பிக்கப்படும் உங்களுடைய தாராளமான, ஒற்றுமைப்பட்ட ஆதரவுக்காக முன்னதாகவே உங்களுக்கு சங்கம் நன்றிகூற விரும்புகிறது. நன்கொடையின் தொக குறிப்பிடப்படவில்லை என்று ஒரு நபர் போற்றுதல் தெரிவித்தார்: ‘இது நம்முடைய சொந்த போற்றுதலின் ஆழத்துக்கு விடப்படுகிறது என்பதை அறிவது அதிக கவர்ச்சியூட்டுவதாய் இருக்கிறது. ஆகையால் நன்றியுடன் சாதாரணமாக கொடுப்பதைவிட அதிகமாக அளிக்க நாங்கள் உந்தப்படுகிறோம்.’ இந்தச் செலவுகளைக் குறித்து எல்லாரும் தங்கள் தனிப்பட்ட உத்தரவாதத்தை உணர்ந்து தங்களுடைய சூழ்நிலைமைகள் அனுமதிக்கும் அளவுக்கு முழுமையாக ஒத்துழைத்து பகிர்ந்துகொள்ள உந்தப்படுவார்கள் என்று நாங்கள் நம்பிக்கையாயிருக்கிறோம்.—லூக். 6:38.
25 “சுயாதீனப் பிரியர்” மாவட்ட மாநாட்டில் ஆஜராயிருங்கள்! “சுயாதீனப் பிரியர்” மாவட்ட மாநாட்டுக்கு ஆஜராவதன் மூலமும், நிகழ்ச்சி நிரலுக்குக் கூர்ந்த கவனம் செலுத்துவதன் மூலமும், கிறிஸ்துவின் மூலம் வரும் சுயாதீனத்திற்காக நம்முடைய போற்றுதலையும் கிறிஸ்தவ சுயாதீனத்தை சரியாக உபயோகிப்பதன் பேரில் நம் போற்றுதலையும் அதிகரிப்போம். ஆரம்ப பாட்டுக்கு அங்கிருக்கவும், ஞாயிறு பிற்பகல் முடிவு ஜெபம் வரையிலுமாக எல்லா நிகழ்ச்சி நிரலுக்கு ஆஜராகவும் இப்பொழுதே திட்டமிடுங்கள்.
[பக்கம் 5-ன் பெட்டி]
மாவட்ட மாநாடு நினைப்பூட்டுதல்கள்
அறைவசதி: மாநாட்டின் மூலம் அளிக்கப்பட்டுள்ள தங்கும் வசதியைப் பயன்படுத்துவதில் உங்கள் ஒத்துழைப்பு மிகவும் போற்றப்படுகிறது. உங்கள் இடஒதுக்கீட்டை ரத்து செய்யவேண்டிய தேவை ஏற்பட்டால், நீங்கள் தங்கும் விடுதிக்கு நேரடியாக தொலைபேசி மூலம் தெரிவிக்கவோ அல்லது எழுதவோ வேண்டும். எவ்வளவு முன்னதாக அதைச் செய்யக்கூடுமோ அவ்வளவு விரைவாகச் செய்வதன் மூலம் நீங்கள் அந்த அறை பிறருக்குக் கிடைக்கும்படிச் செய்யக்கூடும்.
முழுக்காட்டுதல்: முழுக்காட்டுதல் பெறும் நபர்கள் சனிக்கிழமை காலையில் நிகழ்ச்சிநிரல் ஆரம்பிப்பதற்கு முன்பே அவர்களுக்காக குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில் தங்கள் இருக்கைகளில் அமர்ந்திருக்கும்படி முயற்சி செய்ய வேண்டும். முழுக்காட்டுதல் பெற திட்டமிடும் ஒவ்வொருவரும் அடக்கமான குளியல் ஆடையும் ஒரு துவாலையும் கொண்டுவர வேண்டும். பேச்சாளரின் முழுக்காட்டுதல் பேச்சும் ஜெபமும் முடிந்த பின்பு அக்கூட்டத்தின் அக்கிராசினர் முழுக்காட்டுதல் பெறும் அங்கத்தினர்களுக்குச் சுருக்கமான ஆலோசனைகளைக் கொடுப்பார். பிறகு பாட்டு பாடும்படி அறிவிப்பார். கடைசி அடியின் ஆரம்பத்துடன் அட்டென்டென்டுகள் முழுக்காட்டப்பட இருப்பவர்களை முழுக்காட்டுதல் நடைபெறும் இடத்துக்கு அல்லது அவ்விடத்திற்கு அவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு வழிநடத்துவார்கள். மற்றவர்கள் பாட்டுப் பாடுவதை முடிக்கின்றனர். முழுக்காட்டுதல் ஒருவரது ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக, மிக நெருங்கிய மற்றும் தனிப்பட்ட விஷயமாக யெகோவாவுக்கும் தனிப்பட்ட ஒருவருக்கும் இடையே இருப்பதால், கூட்டாளி முழுக்காட்டுதல் என்றழைக்கப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட முழுக்காட்டுதல் பெறும் நபர்கள் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு அல்லது கைகளைப் பிடித்துக்கொண்டு எடுக்கப்படும் ஓர் ஏற்பாடு கிடையாது.
பயனியர் அடையாள அட்டை: எல்லா ஒழுங்கான மற்றும் விசேஷித்த பயனியர்களும் பிரயாண கண்காணிகளும் தங்களுடைய உவாட்ச்டவர் அடையாளம் மற்றும் நியமிப்பு அட்டையை (S–202) மாநாட்டிற்கு கொண்டுவர வேண்டும். தாங்கள் ஆஜராயிருக்கும் மாவட்ட மாநாட்டின் போது குறைந்தபட்சம் ஆறுமாதங்களாக பயனியர் செய்துவந்திருப்பவர்கள் ஒரே ஒரு மாநாட்டில் மட்டுமே தங்களுடைய உவாட்ச்டவர் அடையாள அட்டையைக் காட்டி ரூ60/- மதிப்புள்ள உணவு டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். ஆகவே அட்டையை பணம்போல கவனமாக கையாளுங்கள். மாநாட்டில் அவற்றிற்குப் பதிலாக வேறு கொடுக்கப்படமாட்டாது. புத்தக இலாக்காவில் பயனியர் விலையில் புத்தகங்கள், அவர்களது உவாட்ச்டவர் அடையாள அட்டையைக் காண்பித்த பிறகு மட்டுமே பயனியர்களுக்கு கிடைக்கப்பெறும். பெத்தேல் சேவை செய்பவர்கள் தங்களுடைய பெத்தேல் அடையாள அட்டையைக் காட்டுவதன் மூலம் அவற்றைப் பெறலாம்.
வாலண்டியர் சேவை: ஒரு மாவட்ட மாநாடு சுமுகமாக செயல்படுவதற்கு வாலண்டியர் உதவி தேவைப்படுகிறது. மாநாடு நாட்களில் ஒரு குறிப்பிட்ட சமயம் மட்டுமே நீங்கள் வேலை செய்யக்கூடுமென்றாலும் உங்கள் சேவை போற்றப்படும். நீங்கள் உதவி செய்யக்கூடுமானால், நீங்கள் மாநாட்டை அடைந்தவுடன் தயவுசெய்து வாலண்டியர் சேவை இலாக்காவில் அறிக்கை செய்யுங்கள். 16 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகளும்கூட மாநாட்டின் வெற்றியில் பங்குகொண்டு உதவலாம். ஆனால் அவர்கள் பெற்றோருடனோ அல்லது மற்ற பொறுப்புள்ள வயதுவந்த ஒருவருடனோ சேர்ந்து வேலை செய்ய வேண்டும்.
லெப்பெல் அட்டைகள்: தயவுசெய்து மாநாட்டின் போதும் மாநாடு நடக்குமிடத்திற்கு வரும்போதும் விட்டுச்செல்லும் போதும் விசேஷ லெப்பெல் அட்டையை அணியுங்கள். இது பிரயாணம் செய்கையில் எப்போதுமே ஒரு நல்ல சாட்சி கொடுத்தலை நமக்கு கூடியகாரியமாக்குகிறது. லெப்பெல் அட்டைகள் மாநாடுகளில் கிடைக்காததால் உங்கள் சபையின் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டும். லெப்பெல் அட்டைகளை ஒவ்வொரு சபைக்கும் சங்கம் அனுப்புகிறது. ஆனால் அதற்குரிய பிளாஸ்டிக் உறைகளை சபை ஆர்டர் செய்ய வேண்டும். உறையின் விலை ரூ1.00. லெப்பெல் அட்டை விலை 20 காசு.
எச்சரிக்கை: நீங்கள் எங்கு நிறுத்தினாலும் உங்கள் வாகனத்தை எல்லாச் சமயங்களிலும் பூட்டி வைக்கவேண்டும். மேலும் ஒருபோதும் பார்க்கக்கூடிய விதத்தில் பொருட்களை உள்ளே விட்டுவராதீர்கள். உங்கள் உடைமைகளைக் கூடுமானால் பெட்டிக்குள் பூட்டி வையுங்கள். மேலும் மிகுந்த கூட்டத்தால் கவரப்படும் திருடர்களுக்கும் பிக்பாக்கெட் செய்பவர்களுக்கும் எதிராக உங்களைக் காத்துக்கொள்ளுங்கள். இது மதிப்புள்ள பொருட்களை மாநாட்டின்போது இருக்கைகள் மீது கவனியாமல் விட்டுச்செல்லக்கூடாது என்பதையும் குறிக்கும். தயவுசெய்து கவனமாயிருங்கள்.
சில தங்கும் விடுதிகள் ஆபாசமான மற்றும் ஒழுக்கயீனமுள்ள தொலைக்காட்சித் திரைப்படங்களை காண எளிதான வாய்ப்பளிப்பதாக அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது. இது இத்தகைய இடங்களில் தங்கியிருக்கும் பிள்ளைகள் மேற்பார்வையில்லாமல் டி.வி. பார்ப்பதைத் தவிர்ப்பதன் அவசியத்தை அறிவுறுத்துகிறது.
1991–92 மாவட்ட மாநாடு பாட்டு எண்கள்
காலை பிற்பகல்
வெள்ளி 19 (90)a 172 (92)
34 (8) 85 (44)
136 (23)
சனி 117 (65) 155 (49)
121 (68) 113 (62)
13 (82) 105 (46)
ஞாயிறு 215 (117) 53 (27)
174 (78) 191 (9)
10 (80) 212 (110)
a அடைப்பு குறியில் காட்டப்பட்டிருக்கும் பாட்டு எண்கள் 1966 பாட்டு புத்தகம் பயன்படுத்தப்படக்கூடிய கேரளா மாநாடுகளுக்கு மட்டுமே. மற்ற மாநாடுகளில் 1984 பாட்டு புத்தகம் பயன்படுத்தபப்படும்.