பிப்ரவரி மாத ஊழியக் கூட்டங்கள்
பிப்ரவரி 1-ல் துவங்கும் வாரம்
பாட்டு 171 (59)
10 நிமி:சபை அறிவிப்புகளும், புத்தக விலை உயர்வை உட்பட நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும். சமீப வெளியீடுகளின்பேரில் பத்திரிகை அளிப்பை முக்கியப்படுத்திக் காட்டுங்கள்.
20 நிமி:“நம்முடைய சபை புத்தகப் படிப்பு நடத்துபவரோடு ஒத்துழைத்தல்.” கேள்விகளும் பதில்களும்.
15 நிமி:“எளிமையான, பலன்தரும் பிரசங்கங்கள்.” சபையாரோடு கலந்தாலோசிப்பு. பத்தி 3 சிந்திக்கையில், ஒரு பிரஸ்தாபி எவ்வாறு வீட்டுக்காரரை என்றும் வாழலாம் புத்தகத்தினிடமாக ஆர்வத்தைத் தூண்டுகிறார் என்பதை எடுத்துக்காட்ட ஒரு நடிப்பைக் கொண்டிருங்கள். வீட்டுக்காரர் ஆர்வத்தை வெளிப்படையாக காட்டவேண்டும். பத்தி 5 கலந்தாலோசிக்கையில், வீட்டுக்காரர் ஒருவாறு ஆர்வமுள்ளவராயிருந்தாலும், பிரஸ்தாபி எப்படி ஒரு துண்டுப்பிரதியை உபயோகித்துத் தன்னுடைய சம்பாஷணையைத் தொடருகிறார் என்பதை நடித்துக் காட்டுங்கள்.
பாட்டு 215 (117), முடிவு ஜெபம்.
பிப்ரவரி 8-ல் துவங்கும் வாரம்
பாட்டு 126 (10)
10 நிமி:சபை அறிவிப்புகள். சமீப பத்திரிகைகளிலிருந்து பேச்சுக் குறிப்புகளைக் கலந்து பேசுங்கள். இந்த வார இறுதியில் அனைவரும் வெளி ஊழியத்தில் பங்குகொள்ளுமாறு உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி:“என்றும் வாழலாம் புத்தகத்தில் பைபிள் படிப்புகளை நடத்துங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பத்தி 6 சிந்தித்தப் பிறகு, இளைஞர் ஒருவர் என்றும் வாழலாம் புத்தகத்தை அளித்து எவ்வாறு ஒரு பைபிள் படிப்பைத் துவங்கலாம் என்பதை நடித்துக் காட்டுங்கள். இளைஞர் படிப்புகளைத் துவங்கியிருக்கும் உள்ளூர் அனுபவங்கள் ஏதாவது இருந்தால், அதை எடுத்துச் சொல்லுங்கள்.
15 நிமி:“தேவ வசனத்தைக் கலப்பாய்ப் பேசுகிறவர்களல்லர்.” டிசம்பர் 1, 1992 ஆங்கில பதிப்பு காவற்கோபுரத்தில் 26-9 பக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, நடத்தும் கண்காணியோ வேறொரு மூப்பரோ கொடுக்கும் பேச்சு. சங்கத்துடைய உலகளாவிய வேலையையும் உள்ளூர் சபையையும் ஆதரிப்பதில் சகோதரர்களின் பங்கிற்காக அவர்களுக்கு அனலான பாராட்டுதலைத் தெரிவியுங்கள். இந்திய மொழிகளில் கூட்டங்களை உடைய சபைகள் காவற்கோபுரத்தின் மாதத்திற்கு இருமுறை வரும் பதிப்புகளில் நவம்பர் 15, 1992 வெளியீட்டின் 30-ம் பக்கத்திலும், மாதாந்தர பதிப்புகளில் டிசம்பர் 1, 1992 வெளியீட்டின் 31-ம் பக்கத்திலும் வெளிவந்திருக்கிற “உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்ற பொருளைச் சிந்திக்கலாம்.
பாட்டு 53 (27), முடிவு ஜெபம்.
பிப்ரவரி 15-ல் துவங்கும் வாரம்
பாட்டு 143 (76)
10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. சங்கத்திற்கு அனுப்பிய நன்கொடைகளுக்கு அவர்கள் எழுதியிருக்கும் போற்றுதல் வார்த்தைகளை எடுத்துக் கூறி, உள்ளூர் சபையின் தேவைகளைச் சபை உண்மையோடு ஆதரித்துவருவதற்காக பாராட்டுதல் தெரிவியுங்கள். வார இறுதி வெளி ஊழியத்தில் ஈடுபடும்படி உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி:“‘நான் உங்களுக்குக் கட்டளையிட்ட காரியங்களை உபதேசம்பண்ணுங்கள்.’” சபையாரோடு கேள்வி-பதில் சிந்திப்பு. பத்தி 4-ம் 5-ம் கலந்து பேசுகையில், உள்ளூர் சூழ்நிலைமைகளுக்குப் பொருத்தமாயிருக்கும் மற்ற வசனங்கள் மற்றும் பிரசுரங்களின் உதாரணங்களை எடுத்துக் காட்டுங்கள். உங்களுடைய அறிமுக சம்பாஷணையிலிருந்து எவ்வாறு ஒரு துண்டுப்பிரதியிடம் கவனத்தைத் திருப்பலாம் என்பதை எடுத்துக்காட்ட ஒரு நன்கு தயாரிக்கப்பட்ட நடிப்பைக் கொண்டிருங்கள்.. நேரம் அனுமதித்தால், அந்தத் துண்டுப்பிரதியிலுள்ள ஓரிரண்டு பத்திகளைச் சிந்தியுங்கள். புதிய பைபிள் படிப்புகளைத் துவங்குவதில் தொடர்ந்து பிரயாசை எடுக்க எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி:“இரத்தம்,” நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், 72-4 பக்கங்கள். மறுசந்திப்பில், கொடுக்கப்பட்ட பொருளில் தடித்த எழுத்திலுள்ள கேள்விகளை வீட்டுக்காரர் கேட்பதுபோன்ற மேடை அமைப்பைக் கொண்டிருங்கள். பிரஸ்தாபியின் பிரதிபலிப்புகள் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் இருக்கிற குறிப்புகளைச் சார்ந்திருக்கவேண்டும்.
பாட்டு 181 (105), முடிவு ஜெபம்.
பிப்ரவரி 22-ல் துவங்கும் வாரம்
பாட்டு 150 (83)
10 நிமி:சபை அறிவிப்புகள். “அயலவரிடத்தில் ஒளி கொண்டுச் செல்வோர்” என்ற கட்டுரையைக் கலந்துபேசி, உள்ளூர் பிராந்தியத்தில் புதிய வெளியீடுகளை உபயோகிப்பதன் வழிமுறைகளைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.
20 நிமி:“மீட்கும்பொருளுக்கு மதித்துணர்வைக் காட்டுதல்.” மூப்பர் கொடுக்கும் பேச்சு.
15 நிமி:சபையின் தேவைகள் அல்லது காவற்கோபுரத்தின் ஆங்கில பதிப்பில் அக்டோபர் 1, 1992-லும் இந்திய மொழி காவற்கோபுரத்தின் மாதத்திற்கு இருமுறை வரும் பதிப்புகளில் ஜனவரி 1, 1993-லும் வெளிவந்திருக்கிற “சிட்சையை ஏற்றுக்கொள்வதன் மூலம் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொள்ளுங்கள்” என்ற கட்டுரையிலுள்ள பொருளின் அடிப்படையில் ஓர் உற்சாகமான பேச்சு. யெகோவாவின் ஊழியர்கள் அனைவரும்—இளைஞரும் முதியோரும்—எவ்வாறு சிட்சையைப் பெறுகிறோம் என்பதையும் கீழ்ப்படிதலை உடன்பாடான மனநிலையோடு கருதுவதன் மூலம் வரக்கூடிய நன்மைகளைக் கலந்துபேசுங்கள். மாதாந்தரம் அச்சிடப்படக்கூடிய மொழியில் வரும் காவற்கோபுரத்தை உபயோகிக்கும் சபைகள் நவம்பர் 1, 1992 வெளியீட்டில், “என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன்” என்ற கட்டுரையை உபயோகிக்கலாம்.
பாட்டு 211 (66), முடிவு ஜெபம்.