மீட்கும்பொருளுக்கு மதித்துணர்வைக் காட்டுதல்
1 இறந்துபோன ஒரு நண்பருக்கோ உறவினருக்கோ மதித்துணர்வைக் காட்டும் விருப்பம் சாதாரணமாக எல்லாருடைய பண்பாட்டிலும் இருக்கிறது. மற்றவர்களுடைய உயிரைக் காக்க அன்பார்ந்த ஒருவர் இறந்தாரேயானால், இந்த விருப்பம் விசேஷமாக பலமுள்ளதாயிருக்கும். நித்திய ஜீவன் என்ற நம்பிக்கையில் பங்குகொள்ளும் யாவரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற இருக்கும் கிறிஸ்துவுடைய இறப்பின் நினைவு ஆசரிப்புக்கு ஆஜராவதன் மூலம் மீட்கும்பொருளுக்கு மதித்துணர்வைக் காட்டுவதற்கு மிகச் சிறந்த காரணங்கள் இருக்கின்றன.—2 கொரி. 5:14; 1 யோ. 2:2.
2 யெகோவாவுடைய அன்பை மதித்துணருங்கள்: மீட்கும்பொருளைக் கொடுத்த நம்முடைய மிகப் பெரிய கொடையாளராகிய யெகோவா தேவனுக்கு நம்முடைய அதிஆழமான மதித்துணருதலைக் காட்டுவது எத்தகைய பொருத்தமாயிருக்கிறது! (1 யோ. 4:9, 10) யெகோவாவுடைய அன்பின் ஆழம் நமக்கு மீட்கும்பொருளாகத் தந்த அவருடைய விசேஷித்த பரிசில் வெளியரங்கமாயிருக்கிறது, அவர் வெறுமனே கோடிக்கணக்கான நீதியுள்ள தேவதூதர்களில் ஒருவரை நமக்குத் தராமல், அவருடைய ஒரேபேறான, அதிநேச குமாரனைத் தந்தார். (நீதி. 8:22, 30) யெகோவாவை மிக அதிகமாக தெரிந்துவைத்திருக்கும் இந்தக் குமாரன், இயேசு கிறிஸ்து நமக்கு நினைப்பூட்டினார்: “தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.”—யோ. 3:16.
3 இயேசு கிறிஸ்துவுடைய அன்பை மதித்துணருங்கள்: அதேவிதமாக, அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுத்த இயேசு கிறிஸ்துவிடமும் நாம் ஆழ்ந்த மதித்துணருதலைக் காட்டுவது பொருத்தமாயிருக்கிறது. (மத். 20:28) மீட்கும்பொருள் சம்பந்தப்பட்டதில் அவருக்கான யெகோவாவுடைய சித்தத்திற்கு மனமுவந்து கீழ்ப்பட்டதில்தானே அவருடைய அன்பு வெளிப்படுகிறது. அவர் நமக்கு மீட்கும்பொருளாக இருக்கும்படியாக, தம்முடைய பிதாவோடும் பதினாயிரக்கணக்கான நீதியுள்ள தேவதூதர்களோடும் கொண்டிருந்த செளகரியமான சூழ்நிலைமைகளை எவ்வாறு துறந்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். பாவமுள்ள மனிதர்களின் மத்தியில் வாழ்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்பட்டிருக்கவேண்டிய சவாலோ மீட்கும்பொருளைக் கொடுப்பது தாம் இறப்பதைக் கேட்கும் என்பதைப்பற்றிய அறிவோ அவரைத் தடுத்துநிறுத்தவில்லை. மாறாக, அவர் “அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் . . . மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.”—பிலிப். 2:5-8.
4 மீட்கும்பொருளுக்கு நாம் எப்படி மதித்துணர்வைக் காட்டுகிறோம்?: மீட்கும்பொருளுக்கு நம்முடைய மதித்துணருதல், வெறுமனே உமக்கு நன்றி என்று சொல்வதற்கு அப்பால் செல்லவேண்டும். இயேசு கிறிஸ்துவின் மூலம் இரட்சிப்பிற்குக் கடவுள் செய்திருக்கும் ஏற்பாட்டைக் குறித்து நாம் கற்றறியவேண்டும். (யோ. 17:3) பிறகு நாம் மீட்கும்பொருளின்மீது விசுவாசத்தை வைக்கவேண்டும். (அப். 3:19) அடுத்து, யெகோவா தேவனுக்கு நம்மையே அளிப்பதற்கு ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டுதல்பெற நாம் தூண்டப்படவேண்டும். (மத். 16:24) நம்முடைய ஒப்புக்கொடுத்தலுக்கு இசைய வாழ்ந்துவருகையில், இரட்சிப்பிற்கான மகத்தான மீட்கும்பொருளின் ஏற்பாட்டைக் குறித்து மற்றவர்களிடத்தில் சொல்வதில் நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.—ரோ. 10:10.
5 இந்தத் தேவைகளைப் பூர்த்திசெய்வது நம்மில் எவருடைய திறமைக்கும் அப்பாற்பட்டதல்ல. “நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார்”? என்று மீகா 6:8 நமக்கு உறுதியளிக்கிறது. இதேவிதமாக, தாவீது யெகோவாவிடம், “எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம்,” என்று சொன்னார்.—1 நாளா. 29:14.
6 யெகோவாவுடைய மகத்தான ஏற்பாட்டின்மீது நம்முடைய மதித்துணருதலை அதிகப்படுத்துவதற்கு, நினைவு ஆசரிப்புத் தினத்துக்கு முன்பாக குடும்பமாகச் சேர்ந்து ஏன் மிகப் பெரிய மனிதர் புத்தகம் அதிகாரங்கள் 112 முதல் 126 வாசித்துக் கலந்தாலோசிக்கக்கூடாது? இப்படியாக, ஏப்ரல் 6, 1993 அன்று நடைபெற இருக்கும் நினைவு ஆசரிப்பில் நாம் அனைவரும் மீட்கும்பொருளுக்கு மதித்துணர்வைக் காட்ட நம்மைநாமே மனப்பிரகாரமாக ஆயத்தம் செய்யலாம்.