யெகோவாவைக் கனப்படுத்துவதில் உங்களால் அதிகத்தைச் செய்யமுடியுமா?
1 அது நாம் அனைவரும் சிந்திக்கவேண்டிய ஒரு முக்கியமான கேள்வியாக இருக்கிறது. நம்முடைய போதகர், இயேசு கிறிஸ்துவை உண்மையாய்ப் பின்பற்றுபவர்களாய், இன்று நாம் கடவுளுடைய நாமத்தைக்குறித்து வெளியரங்கமாய் பிரஸ்தாபிப்பதன் மூலம் நம்முடைய கடவுளைக் கனப்படுத்துகிறோம். கடவுளுடைய தயவைப் பெறவேண்டுமானால் இந்த ஒரு பொறுப்பை நாம் தாங்கவேண்டும். (மாற். 13:10; லூக். 4:18; அப். 4:20; எபி. 13:15) இனி யெகோவாவின் முழு தொழுவத்தின் பாகமாக ஆகப்போகும் மீந்திருக்கும் சிதறடிக்கப்பட்ட “செம்மறியாடு”களிடம் இந்த நற்செய்தியை எடுத்துச்செல்வது என்னே ஒரு சொல்லொணாச் சிலாக்கியம்—ஆம் கனம்!—யோவா. 10:16.
2 நீங்களும் உங்களுடைய பிள்ளைகளும் ஊழியத்தில் உங்களுடைய நடவடிக்கையை அதிகரிப்பதன் மூலம் யெகோவாவைக் கனப்படுத்துவதில் அதிகத்தைச் செய்யமுடியுமா? உலகமுழுவதும் உங்களுடைய சகோதரர்களும் சகோதரிகளும் எப்போதும் அதிகரித்துக்கொண்டேயிருக்கும் எண்ணிக்கைகளில் பயனியர் சேவையில் ஈடுபடுகின்றனர். ஏப்ரல் 1992 மாதத்தின்போது இந்தியாவில் 2,106 ஆட்கள் விசேஷ, ஒழுங்கான, துணை பயனியர் சேவையில் ஈடுபட்டிருந்தனர். அது அம்மாதம் அறிக்கைசெய்த மொத்த பிரஸ்தாபிகளில் கிட்டத்தட்ட பதினெட்டு சதவீதமாகும்! பயனியர் சேவையைக் குறித்து தனிப்பட்டவர்களாக நீங்கள் ஆழ்ந்து யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? உங்களுடைய பிள்ளைகள் முழுநேர ஊழியத்தில் ஒரு வாழ்க்கைப் போக்கை மேற்கொள்ளுமாறு நீங்கள் உற்சாகப்படுத்துகிறீர்களா?
3 பயனியர் சேவையிடம் உங்களுடைய தனிப்பட்ட உணர்ச்சிகளை ஏன் ஆராய்ந்து பார்க்கக்கூடாது? அதைப்பற்றி சொல்லும்போதெல்லாம், ஒரு பயனியர் ஊழியராக சேவிக்க உங்களுடைய சூழ்நிலைமைகள் அனுமதிப்பதில்லை என்று வெறுமனே உடனடியாக நீங்கள் முடிவு செய்கிறீர்களா? பயனியர் சேவை செய்வது எல்லாருக்கும் முடியாது என்பது உண்மைதான். அநேகரை, முழுநேரமாக சேவிப்பதிலிருந்து வேதப்பூர்வ உத்தரவாதங்களும் மற்ற கட்டுப்பாடுகளும் தடைசெய்கின்றன. (1 தீ. 5:8) ஆனால் சமீபத்தில் நீங்கள் இந்த விஷயத்தைக் குறித்து ஜெப சிந்தையோடு யோசித்திருக்கிறீர்களா? ஓர் அங்கத்தினராவது ஓர் ஒழுங்கான பயனியராக ஆவதற்கு இவ்விஷயத்தைக் குறித்து நீங்கள் குடும்பமாகக் கலந்து பேசியிருக்கிறீர்களா? பக்கம் 23-ல் நவம்பர் 15, 1982 உவாட்ச்டவர் இதழ் இந்தச் சிந்தனை-தூண்டும் கூற்றை அளித்தது: “உண்மையில், ஒவ்வொரு கிறிஸ்தவனும் பயனியர் சேவை செய்யமுடியுமா முடியாதா என்று ஜெபசிந்தையோடு யோசித்துப்பார்க்கவேண்டும். பதினைந்து வருடங்கள் பயனியர் சேவை செய்த ஒரு தென்னாப்பிரிக்க தம்பதியினர் கூறினர்: ‘நாங்கள் ஏன் பயனியர் சேவை செய்கிறோம்? நாங்கள் செய்யவில்லையெனில், யெகோவாவுக்கு முன்பாக அதை நியாயமென எங்களால் உண்மையிலேயே நிரூபிக்கமுடியுமா?’ பயனியர்களாக இல்லாத அநேகர் இதன் சம்பந்தமாக இக்கேள்வியைக் கேட்டுக்கொள்வது நல்லது: ‘நான் ஒரு பயனியராக இல்லை என்ற விஷயத்தை யெகோவாவுக்கு முன்பாக என்னால் உண்மையிலேயே நியாயமென நிரூபிக்கமுடியுமா?’”
4 இந்த விஷயத்தின்பேரில் மற்றொரு உவாட்ச்டவர் கட்டுரை இந்தத் தெளிவான குறிப்பை அளித்தது: “ஒவ்வொருவரும் அவரவருக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கவேண்டும். ‘ஆவி உற்சாகமுள்ளது, மாம்சமோ பலவீனமுள்ளது’ என்று நீங்கள் சொல்கிறீர்களா? ஆனால், ஆவி உண்மையிலேயே உற்சாகமுள்ளதாயிருக்கிறதா? மாம்ச பலவீனத்தை ஆவி உற்சாகமில்லாது இருப்பதற்கு சாக்காக உபயோகிக்காமலிருப்போமாக.”—w78 8/15 பக். 23.
5 தங்களுடைய பிள்ளைகள் வெற்றிகாணவேண்டும் என்பதை விரும்பும் பெற்றோர்: நீதிமொழிகள் 15:20 நமக்கு உறுதியளிக்கிறது: “ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்.” தேவபயமுள்ள பெற்றோர் தங்களுடைய மகன்களும் மகள்களும் யெகோவாவுக்கென்று ஒப்புக்கொடுக்கப்பட்ட சேவையிலீடுபடும் ஒரு வாழ்க்கையை மேற்கொள்ளும்போது, பெருமகிழ்ச்சியடைகின்றனர் என்பதில் சந்தேகமேயில்லை. ஆனால் உங்களுடைய பிள்ளைகள் தாங்களாகவே ஒரு ஞானமான போக்கைத் தெரிந்துகொள்ளமாட்டார்கள். இவ்வுலகத்தின் கவர்ச்சி மிகவும் சக்திவாய்ந்ததாக உள்ளது. பெற்றோரே, உங்களுடைய பிள்ளைகளின் வாஞ்சைகள் நீங்கள் நெறிப்படுத்தி வளர்ப்பதிலேயே பெரிதும் சார்ந்திருக்கிறது. முழுநேர ஊழியத்தினால் வரும் நன்மைகளைப் பற்றி நீங்கள் எப்போதுமே உடன்பாடாகப் பேசிக்கொண்டும், பயனியர்களாக ஒப்புக்கொடுத்திருப்பவர்களுடைய தோழமையை நாடித்தேட உங்களுடைய இளம் பிள்ளைகளை நீங்கள் உற்சாகப்படுத்திக்கொண்டும், உங்களுடைய பிள்ளைகள் முழுநேர ஊழியத்தை மேற்கொள்வதே அதிக கனம்பொருந்திய வாழ்க்கைத்தொழில் என்று நீங்கள் உண்மையிலேயே நம்பினீர்களேயானால், சந்தேகமில்லாமல் இப்பேர்ப்பட்ட உடன்பாடான மனநிலை உங்களுடைய பிள்ளைகளின்மீது பெரும் பாதிப்பைக் கொண்டிருக்கும். மனிதரோடு ஒரு நல்ல பெயரைக் கொண்டிருப்பதைக் காட்டிலும் யெகோவாவோடு கொண்டிருப்பதன் மதிப்பை அவர்கள் மதித்துணர உதவிசெய்யுங்கள்.
6 இளைஞரே, நீதிமொழிகள் 22:1 நீங்கள் செய்யவேண்டிய தெரிவைச் சிறப்பித்துக் காட்டுகிறது: “திரளான ஐசுவரியத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம்.” நீங்களே உங்களுக்கு எப்பேர்ப்பட்ட பெயரை உண்டாக்கிக்கொள்வீர்கள்? பைபிளில் நாம் வாசிக்கிற பிரகாரம், அற்பணிக்கப்பட்ட சேவையில் ஈடுபடுவதன் மூலம் கடவுளோடு ஒரு நற்பெயரை உண்டாக்கிய ஆண்களையும் பெண்களையும் குறித்து நினைத்துப்பாருங்கள். பிரியமான மருத்துவன், லூக்கா இருந்தார், ஏனோக்கு மெய்க் கடவுளோடு சஞ்சரிப்பவராய் இருந்தார். சாமுவேலுக்கு மிகச்சிறந்த கல்வி கிடைத்தது, பாலிய வயதிலேயே அவர் யெகோவாவுடைய ஆலயத்தில் சேவைசெய்ய துவங்கினார். இத்தகைய உண்மையுள்ள ஊழியர்கள் எப்போதாவது, செய்த தெரிவுகளினிமித்தம் வருத்தப்பட்டனர் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவர்கள் ஏன் வருத்தப்படவேண்டும்? அவர்களெல்லாரும் சந்தோஷமான, பலன்தரக்கூடிய, கிளர்ச்சித்தரும் வாழ்க்கையை நடத்திவந்தனர். மேலும் அவர்கள் யெகோவாவோடு நீடித்த நட்புறவைக் கண்டடைந்தனர்!—சங். 110:3; 148:12, 13; நீதி. 20:29அ; 1 தீ. 4:8ஆ.
7 பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றிபெற்றால், அவர்களுடைய பெற்றோர் ஒருவித பெருமித உணர்ச்சியடைகின்றனர். இந்தக் “கர்த்தரால் வரும் சுதந்தரத்”தை பயிற்றுவிப்பதிலும் சிட்சிப்பதிலும் படிக்க வைப்பதிலும் அவர்கள் செய்த எல்லாமே அநேக விசைகள் அதிகமாகத் திரும்ப கொடுக்கப்படுகிறது. (சங். 127:3) ஒரு மகனோ மகளோ தன்னால் கூடுமானதையெல்லாம் யெகோவாவைக் கனப்படுத்துவதற்குச் செய்வதைக்காட்டிலும் வேறு எது எந்தவொரு பெற்றோரையும் பெருமிதங்கொள்ளச் செய்யும்? நவீன காலங்களில், லூக்கா, ஏனோக்கு, சாமுவேல் ஆகியோருடைய அடிச்சுவடுகளை அநேக இளம் பிள்ளைகள் பின்பற்றி வருகின்றனர், ஒரு கடிதம் இதை விளக்கிக் காட்டுகிறது: “எனக்கு வயது 16. நான் ஒழுங்கான பயனியர் சேவையைத் துவங்கினேன், . . . முழுக்காட்டுதல் பெற்று ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, மேலும் அதுமுதல் யெகோவாவிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்று வருகிறேன். . . . பயனியர் சேவை செய்வது பள்ளியிலும் உங்களுக்கு உதவுகிறது. முன்பு என்னுடைய வகுப்பு-தோழர்கள் நான் ஒரு சாட்சியாக இருப்பதைக் குறித்து ஏளனம் செய்வார்கள். இப்போது, எனக்கு மிகவும் அதிகமாகத் தனிப்பட்ட படிப்பு செய்யவேண்டியிருப்பதால், ‘என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவுகொடுக்க’ முடிகிறது.”
8 ஒருவரை ஊழியத்தில் தகுதியடையச் செய்ய கல்வி: இந்தத் தருணத்தில் நாம் உலகப்பிரகாரமான படிப்புச் சம்பந்தப்பட்ட கல்வியைக் குறித்து சிந்திக்கலாம். இது ஒரு சமநிலையான நோக்கு விசேஷமாக தேவைப்படக்கூடிய ஒரு பகுதியாக இருக்கிறது. பிப்ரவரி 1, 1993 காவற்கோபுரம் “ஒரு நோக்கமுடைய கல்வி” என்ற கட்டுரையைச் சிந்தித்தது. “போதுமான கல்வி” என்ற உபதலைப்பின்கீழ் இந்தக் குறிப்பு சொல்லப்பட்டது: “கிறிஸ்தவர்கள், அவர்கள் முழு-நேர பயனியர் ஊழியர்களாக இருந்தாலும்கூட தங்களைத்தாங்களே கவனித்துக்கொள்ள முடிகிறவர்களாக இருக்கவேண்டும். (2 தெசலோனிக்கேயர் 3:10-12) . . . இந்தப் பைபிள் நியமங்களை மதிக்கவும் தன்னுடைய கிறிஸ்தவ பொறுப்புகளை நிறைவேற்றவும் ஓர் இளம் கிறிஸ்தவனுக்கு எந்தளவு கல்வி தேவையாக இருக்கிறது? . . . நற்செய்தியின் பயனியர் ஊழியர்களாக ஆக விரும்புகிறவர்களுக்கு எது [ஊதியம்] ‘போதியதாக’ கருதப்படலாம்? இப்படிப்பட்டவர்கள் பொதுவாக தங்கள் சகோதரர்களுக்கு அல்லது தங்கள் குடும்பத்தாருக்கு “பாரமாயிராதபடிக்கு” ஒரு பகுதிநேர வேலை தேவையாயிருக்கிறது.—1 தெசலோனிக்கேயர் 2:9.”
9 முழுநேர ஊழியத்தை மேற்கொள்ள ஒழுங்கான பயனியராக ஆகப்போகும் ஒருவருக்கு துணை கல்வி கற்பது அவசியமாயிருந்தால், பிப்ரவரி 1, 1993 காவற்கோபுரம் பரிந்துரைக்கிறது: “ஓர் இளம் சாட்சி முடிந்தவரை, வீட்டில் தங்கிக்கொண்டு, இவ்விதமாய்ச் செய்வது உகந்ததாக இருக்கும். அப்பொழுது வழக்கமான கிறிஸ்தவ படிப்புப் பழக்கங்கள், கூட்டங்களுக்கு ஆஜராதல், மற்றும் பிரசங்க வேலை ஆகியவற்றைக் காத்துக்கொள்ள முடியும்.”
10 பயனியர் சேவை செய்யவேண்டுமென்று எண்ணியிருந்தபோதிலும் தொழிற்பள்ளி செல்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்ட 22 வயது இளைஞனுடைய அனுபவம் ஆப்பிரிக்காவிலிருந்து வருகிறது. தொழிற்பள்ளியிலிருக்கையில், அவன் துணை பயனியராகச் சேவை செய்தான். அவனுடைய சகாக்கள், தன் பரீட்சைகளில் அவன் நிச்சயமாக தோல்வியடைவான் என்று பரிகாசம் செய்தனர். அவர்களிடம், “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்,” என்றுதானே அவன் பதிலளிப்பான். தற்கட்டுப்பாட்டை பிரயோகித்து, அவன் ஒவ்வொரு நாளும் வெள்ளென எழுந்து, வகுப்புகளுக்கு இரண்டு மணிநேரம் தயாரித்துவிட்டு வகுப்புகள் முடிந்த பிறகு, மத்தியான வேளையில் வெளி ஊழியத்தில் பங்குகொள்வான். விசேஷ பரீட்சையில், ஒரு விசேஷ நல்லாதரவுப் பரிசு வழங்க தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச்சிறந்த மூன்று மாணவருள் இந்த இளைஞன் மூன்றாவதாக வந்தபோது முழு பள்ளியும் பிரமிப்படைந்தது. பள்ளியில் நம்முடைய பயனியர் சகோதரரிடம் படித்துவந்த ஆர்வமான நபரே இரண்டாவது மாணவனாக வந்தான். முதல் வந்த மாணவன், பள்ளியிலுள்ள மற்றொரு வைராக்கியமான சாட்சி வாலிபனே.
11 மூப்பர்கள் தங்கள் பங்கைச் செய்கின்றனர்: பயனியர்கள் செய்யும் வேலையைக் குறித்து பெருமிதங்கொள்ளும் சபை மூப்பர்கள் இத்தகைய வைராக்கியமுள்ள ஊழியர்களுக்கு அதிக உற்சாகத்தைக் கொடுக்கின்றனர். கடினமாக வேலைசெய்யும், பலன்தரும் பயனியர்கள் எந்தவொரு சபைக்கும் ஓர் ஆசீர்வாதமாக இருப்பதால் மூப்பர்கள் இதைச் செய்ய விருப்பப்படுகின்றனர். ஒழுங்கான பயனியர் சேவையில் ஏறத்தாழ ஒரு வருடத்தைச் செலவழித்தப் பிறகு, இப்படிப்பட்டவர்கள் பயனியர் ஊழியப் பள்ளியில் கூடுதலான பயிற்சியைப்பெற தகுதியுள்ளவர்களாகிறார்கள். பயனியர்களின் திறமையை முன்னேற்றுவிப்பதில் இந்தக் கல்வி மதிப்புவாய்ந்த கருவியாக இருந்திருக்கிறது. பயனியர்கள் இவ்வேலையில் முன்னணியிலிருந்தபோதிலும், அவர்களுக்கும் அன்பான உற்சாகம் தேவைப்படுகிறது, மூப்பர்கள் இந்தத் தேவையைப் பூர்த்திசெய்ய கவனமுள்ளவர்களாயிருக்கவேண்டும்.—1 பே. 5:1-3.
12 ஒழுங்கான பயனியர் வேலைக்கு மூப்பர்கள் எவ்வாறு ஊக்குவித்தலை அளிக்கலாம்? இந்தச் சிலாக்கியத்தையடைய யார் தகுதியாயிருக்கின்றனர் என்பதை அவ்வப்போது எண்ணிப்பார்ப்பது ஒரு நல்ல துவக்கமாகும். ஒழுங்காக துணை பயனியர் செய்கிற அநேக ஆட்கள், வேலையினின்று ஓய்வுபெற்ற ஆட்கள், வீட்டிலுள்ள மனைவிகள், மாணாக்கர்கள் ஆகியோரை உட்பட பயனியர் செய்வதற்கு சாதகமான நிலையிலிருப்பதாக தோன்றக்கூடிய ஆட்களை மூப்பர்கள் அணுகி கேட்கலாம். கடமைக்காக செய்யவேண்டும் என்று எவரும் உணராது, விருப்பமிருந்து ஆனால் தயங்கக்கூடிய ஆட்கள், ஒருவேளை ஒருவித நடைமுறையான உற்சாகத்தோடு பயனியர் சேவையை அவர்களால் செய்யமுடியும் என்று உணருவர்.
13 விண்ணப்பிக்க விருப்பமாயுள்ளவர்களுக்கு உற்சாகமளிக்கையில், ஓர் ஒழுங்கான பயனியராக ஆவதற்கு முன், விண்ணப்பிக்கும் நபர் அநேக மாதங்கள் துணை பயனியர் வேலையில் செலவழிக்கவேண்டிய அவசியமில்லை என்பதை மூப்பர்கள் நினைவில் வைக்கவேண்டும். (km 10/86 இடைச்சேர்க்கை பத்திகள் 24-26, ஆங்கிலம்) விண்ணப்பிக்கும் நபர் மணிநேரங்களைப் பூர்த்திசெய்யும் நிலையில் உள்ளாரா என்பதைக் குறித்து மூப்பர்கள் ஒருவாறு நிச்சயமாயிருக்கவேண்டியது உண்மைதான்.
14 சபை ஊழியக் குழு அந்த விண்ணப்பப் படிவத்தை விமர்சித்து, கொடுக்கப்பட்டிருக்கிற எல்லா கேள்விகளுக்கும் பதில் இருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள செயலர் கவனமாகச் சரிபார்த்தப் பிறகு அதைச் சங்கத்துக்கு உடனடியாக அனுப்பவேண்டும்.
15 ஒழுங்கான பயனியர்கள் எந்தவொரு பிரச்னைகளை எதிர்ப்பட்டாலும், அதைக் குறித்து செயலர் மூப்பர்களுக்குத் தெரிவிக்கவேண்டும். விசேஷமாக அநேக பயனியர்கள் இருக்கும் சபைகளில் இது முக்கியமாயிருக்கிறது. காங்கிரிகேஷன் அனாலிஸிஸ் ரிப்போர்ட்-ல் (S-10) கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிற பிரகாரம், ஊழிய வருட முடிவில் ஒழுங்கான பயனியர்களுடைய நடவடிக்கையை விமர்சிப்பதோடுகூட, மணிநேரத்தை ஒருவேளை யார் பூர்த்திசெய்யமாட்டார்கள் என்பதைப் பார்க்க மார்ச் துவக்கத்தில் செயலர் தன்னை ஊழியக் கண்காணி சந்திக்குமாறு அவரை அழைக்கவேண்டும். (பிப்ரவரி 1993 நம் ராஜ்ய ஊழியம், அறிவிப்புகள் பாருங்கள்.) உடனடியாக உதவி கொடுக்கப்பட்டால், அந்தப் பயனியர், ஊழிய வருஷத்தை வெற்றிகரமாக முடிக்க இயலும்.
16 புதிய ஒழுங்கான பயனியர்களில் பெரும்பான்மையர் இளைய வயதிலும் சத்தியத்தில் ஓரளவு புதியவர்களாயும் இருக்கிறார்கள். அவர்களிடத்தில் இருக்கும் மனமுவந்த தன்மை நம்மை உண்மையிலேயே களிகூரச்செய்கிறது! வீட்டுக்கு-வீடு ஊழியத்தில் திறமையை வளர்த்துக்கொள்ளவும், பலன்தரும் மறுசந்திப்புகளைச் செய்யவும், பைபிள் படிப்புகளில் போதிக்கவும் இத்தகைய புதியவர்களுக்கு இன்னும் பயிற்சி அவசியமாயிருக்கிறது. இந்தப் பயிற்சி கொடுக்கப்படவில்லையென்றால், சுமார் ஒரு வருஷத்துக்குப் பிறகு இந்தப் புதிய நபர் உற்சாகமிழந்து ஊழியத்தில் நல்ல பலன்கள் கிடைக்காததால் பயனியர் சேவையை இறுதியில் நிறுத்திவிடவுங்கூடும். கவனமுள்ள மூப்பர்கள் சிறிய பிரச்னைகளையோ நடவடிக்கையில் தாமதத்தையோ கண்டுபிடிக்கக்கூடும். உடனடியாக கவனம் செலுத்தி, அவருடைய பிரச்னையோடு அந்தப் பயனியருக்கு உதவி கொடுக்கப்பட்டால் பல வருடங்கள் பலன்தரும் ஊழியத்தை அவர் அனுபவிப்பார்.
17 தொலைவிலுள்ள தண்ணீர்களில் உங்களால் மீன்பிடிக்க முடியுமா? இயேசுவின் சீஷர்களில் சிலர் மீனவர்களாக இருந்தனர். சிலசமயங்களில், மீன்பிடிக்கும் வேலையில் இராமுழுவதும் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடைய வலைகள் காலியாக இருந்திருக்கின்றன. (யோவா. 21:3) வருடக்கணக்காக ‘மனுஷரைப் பிடிக்கும் வேலை’ நடந்துவந்திருக்கிற இந்நாட்டின் சில நகரங்களில், ‘மீன் பிடிக்கும்’ வேலையைக் கவனித்துவருகிற அநேக வைராக்கியமுள்ள சாட்சிகளைக்கொண்ட பெரிய சபைகள் இருக்கின்றன. சிலர் தங்கள் சபையின் “தண்ணீர்களில்” சில “மீன்கள்” மீந்திருப்பதாகவுங்கூட முடிவுசெய்யலாம். (மத். 4:19) மாறாக, மற்ற நகரங்களிலிருந்து வரும் அறிக்கைகள் பிரஸ்தாபிகளும் பயனியர்களும் அநேக பைபிள் படிப்புகளை நடத்திவருகிறார்கள் என்பதைக் கேட்பதில் நாம் கிளர்ச்சியடைவதில்லையா? இந்த ஊர்களில் உள்ள பயனியர்கள் அனுபவித்து மகிழும் சந்தோஷம் தெளிவாகத் தெரிகிறது. (w92 9/1 பக். 20 பத்தி 15, ஆங்கிலம்) இவ்வாறு, அதிக தேவையாயிருக்கும் நகரத்துக்கு மனமுவந்து செல்லும் நிலையிலுள்ள சில கடினமாய் உழைக்கும் பயனியர்கள் அவ்வாறு செல்ல யோசித்துக்கொண்டிருந்தால், அப்படிச் செல்வதற்கு முன் கிளை அலுவலகத்தோடு இதைக் குறித்துக் கேட்டுப்பார்க்கவேண்டும்.
18 முதலில் சிலர், பயனியர் செய்வது ஒரு நல்ல காரியமாக இருப்பதால் பயனியர் செய்யத் துவங்கியிருக்கலாம், ஆனால் அதை வெற்றிகரமாகச் செய்துமுடிக்க முடியுமா என்று யோசித்திருக்கலாம். அவர்கள் சில சந்தேகங்களோடும் ஒதுக்கீடுகளோடும் விண்ணப்பித்திருக்கலாம். துவக்கத்தில், வெளி ஊழியத்தில் அவர்களுக்குப் பலன்கள் குறைவாக இருந்திருக்கலாம். என்றாலும், காலப்போக்கில், அவர்களுடைய திறமை அதிகரித்தது. அவர்களுடைய வேலையில் யெகோவாவின் ஆசீர்வாதம் தெளிவாக இருந்தது. இதன் விளைவாக, அவர்களுடைய மகிழ்ச்சியும் நம்பிக்கையும் வளர்ந்தது. சிலருடைய விஷயத்தில், பெத்தேல் சேவைக்கும் மேலும் பிரயாண சேவைக்குங்கூட பயனியர் சேவையே ஓர் அடிக்கல்லாக இருந்திருக்கிறது.
19 ஓர் ஒழுங்கான பயனியராக ஒருவேளை உங்களால் தொலைவிலுள்ள ஓர் ஊருக்குச் செல்லமுடியாமல் இருக்கலாம், ஆனால் தற்போது உங்களுடைய பிராந்தியம் விசேஷமாக பலன்தருவதாக இல்லையெனில், உங்களுடைய மாநிலத்திலேயே ஒருவேளை உங்களுக்கு மற்ற தண்ணீர்களில் மீன்பிடிக்க வாய்ப்புகள் இருக்கலாம். அப்படி இடம்பெயர்ந்து செல்வது உங்களுடைய வாழ்க்கை பாணியில் ஒரு மாற்றத்தைத் தேவைப்படுத்தலாம், ஆனால் நிச்சயமாகவே ஆவிக்குரிய பலன்கள் வெகு அதிகமாயிருக்கும்.—மத். 6:19-21.
20 அல்லது உங்களுடைய சூழ்நிலைமைகள் அனுமதித்தால், உங்களுடைய சொந்த வட்டாரத்திலேயே அருகாமையிலிருக்கும் சபைக்கு ஒருவேளை நீங்கள் உதவிசெய்யலாம். நீங்கள் தகுதிபெற்றால், வட்டாரத்தில் மற்றொரு பயனியர் இருப்பதன் மூலம் பயனடையக்கூடிய சபைகள் சம்பந்தமாக உங்களுடைய வட்டார ஊழியர் ஆலோசனைகள் கொடுக்கப் பிரியப்படுவார்.
21 சில பயனியர்களும் பிரஸ்தாபிகளும் வீட்டில் இருந்துகொண்டே, வசிக்கும் பகுதியிலேயே உள்ள தேவைகளைச் சேவிக்க முடிந்திருக்கிறது. அவர்களுக்கு ஒருவேளை இன்னொரு மொழி தெரிந்திருக்கலாம். உங்களுடைய பிராந்தியத்திலேயே ஒரு பகுதியிலுள்ள மக்கள் மற்றொரு மொழி பேசுகிறதை நீங்கள் காண்கிறீர்களா? ஒருவர் அவர்களுடைய சொந்த மொழியை உபயோகித்து ராஜ்ய செய்தியைப் பெறவேண்டிய தேவையிலிருக்கும் மக்கள் இருக்கின்றனரா? இன்னொரு மொழி தெரிந்திருப்பவர்கள், ராஜ்ய செய்தியைக்கொண்டு எல்லா வித்தியாசப்பட்ட மக்களையும் சென்றெட்டுவதில் பெரிதும் உதவலாம். இது உண்மையிலேயே ஒரு சவாலாக இருந்தபோதிலும், அதிக பயன்மிகுந்ததாகவும் இது இருக்கக்கூடும்.—1 தீ. 2:4; தீத். 2:11.
22 யெகோவாவைக் கனப்படுத்த உங்களால் ஆனதையெல்லாம் தற்போது நீங்கள் செய்கிறீர்களென்றால், உங்களுக்கு இப்போது கிடைத்திருக்கும் ஊழிய சிலாக்கியங்களில் களிகூருங்கள். அதிகமாக செய்யமுடியும் என்று நீங்கள் நினைத்தால், அந்தக் காரியத்தை யெகோவாவிடம் ஜெபத்தில் வையுங்கள். உங்களுடைய சூழ்நிலைமைகள் என்னென்ன மாற்றங்களைச் செய்ய உங்களை அனுமதிக்கும் என்பதை உண்மைநிலையில் ஆராய்ந்துபாருங்கள். பயனியர் ஆவிகொண்ட ஒரு மூப்பரிடமோ வட்டார ஊழியரிடமோ உங்களுடைய திட்டங்களைக் குறித்து பேசுங்கள். நீங்கள் ஜெபத்தோடுகூடிய நடைமுறையான தீர்மானத்தைச் செய்த பிறகு, யெகோவா தம்மைக் கனம்பண்ணுபவர்களைக் கனம்பண்ணுவார் என்ற அவருடைய வாக்குறுதியில் நம்பிக்கை வைத்து உடனடியாக அதைப் பின்பற்றுங்கள்.—எபி. 13:5, 6; 1 சா. 2:30.