உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 3/93 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1993
நம் ராஜ்ய ஊழியம்—1993
km 3/93 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள்: மார்ச்: இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம் ரூ. 20 என்ற நன்கொடைக்கு. இது கிடைக்கப்பெறாத மொழிகளில் என்றும் வாழலாம் புத்தகம் ரூ. 40-க்கு. (சிறியது ரூ. 20.) ஏப்ரல், மே: காவற்கோபுரம் சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பிரதிகளுக்கு ஒரு வருஷ சந்தா ரூ. 60. மாதம் இருமுறை வரும் பிரதிகளுக்கு ஆறு-மாத சந்தாக்களும் மாதாந்தர பிரதிகளுக்கு ஒரு வருஷ சந்தாக்களும் ரூ. 30. (மாதாந்தர பிரதிகளுக்கு ஆறு-மாத சந்தா கிடையாது.) ஜூன்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் ரூ. 40 என்ற நன்கொடைக்கு. குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஊழிய நடவடிக்கைக்கான எந்தவொரு பிரசுரத்தையும் இதுவரை தருவித்துக்கொள்ளாத சபைகள் தங்களுடைய அடுத்தப் புத்தக அனுப்பாணை படிவத்தில் (S-14) அவற்றைக் குறிப்பிடவேண்டும்.

◼ நடத்தும் கண்காணியோ அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ மார்ச் 1 அல்லது அதற்கு பின் கூடிய சீக்கிரத்தில் சபையின் கணக்கைத் தணிக்கைசெய்யவேண்டும். தணிக்கைசெய்தப் பிறகு, சபைக்கு அறிவியுங்கள்.

◼ பிப்ரவரி 14, 1992 தேதியிட்டு எல்லா சபைகளுக்கும் சங்கத்திலிருந்து அனுப்பப்பட்ட ஒரு கடிதம் 1993 மாநாட்டு நிதிப்பற்றி அறிவிப்புச் செய்திருந்தது. தங்கள் தாயகத்தை விஜயம் செய்யவும் இந்த வருஷத்தில் நடைபெறவிருக்கும் ஒரு மாவட்ட மாநாட்டுக்கு ஆஜராகவும் மிஷனரிகளுக்கு உதவுவதற்காக இது இருக்கிறது. இந்த 1993 மாநாட்டு நிதிக்காக சங்கத்துக்கு நன்கொடைகளை அனுப்புவதற்கு மார்ச் கடைசி மாதமாயிருக்கும். இந்த ஏற்பாட்டுக்கு நீங்கள் தாராள குணத்தோடு ஆதரிப்பது மிகவும் போற்றப்படுகிறது.

◼ மே 10, 1993 வாரம் முதல், சபை புத்தகப் படிப்பில் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகம் சிந்திக்கப்படும், ஆகவே சரியான நேரத்திற்கு புத்தகங்களைக் கையிருப்பில் வைத்திருக்க சபைகள் தங்கள் அனுப்பாணைகளை இப்போதே தரவேண்டும். அந்தப் புத்தகம் தற்போது ஆங்கிலத்திலும் குஜராத்தியிலும் மலையாளத்திலும் இருக்கிறது.

◼ இந்தியாவில் நடந்த 30 “ஒளி கொண்டுச்செல்வோர்” மாவட்ட மாநாடுகளுக்கு 20,697 ஆட்கள் ஆஜராயிருந்தனர். இந்த மாநாடுகளில் மொத்தம் 719 ஆட்கள் முழுக்காட்டப்பட்டனர்.

◼ ‘மெடிக்கல் டாகுமென்ட்’-க்கான (md) பிளாஸ்டிக் ஹோல்டர்கள் இப்போது சங்கத்திலிருந்து தருவிக்கப்படலாம். பயனியர்கள், பிரஸ்தாபிகள் ஆகிய இருவருக்கும் ஒரே நன்கொடைக்கு, ஒன்று ரூ. 1.50-க்குக் கிடைக்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்