தேவராஜ்ய செய்திகள்
போஸ்னியா, ஹெர்ஸிஜொவினா: ஆஸ்திரியா, குரோவேஷியா ஆகிய நாடுகளிலிருக்கிற சகோதரர்களிடமிருந்து ஒருசில இடருதவி சரக்குகள் பெறப்பட்டுள்ளன. என்றாலும், போரினால் பிளவுற்றிருக்கிற இந்தப் பகுதியை விட்டுப் பெரும்பான்மையான பிரஸ்தாபிகள் தப்பி ஓடிவிட்டிருக்கின்றனர்.
பிஜி: விசேஷ அசெம்பிளி தின நிகழ்ச்சிகளில் 3,890 பேர் ஆஜராயினர், இது செப்டம்பர் மாதம் அறிக்கைசெய்த 1,404 பிரஸ்தாபிகளைவிட இரு மடங்குக்கும் அதிகமாக இருக்கிறது.
பிரஞ்சு கயானா: அக்டோபர் அறிக்கை 15-வது தொடர்ச்சியான பிரஸ்தாபி உச்சநிலையை காட்டுகிறது, 948 பேர் அறிக்கைசெய்தனர். சபை பிரஸ்தாபிகள் வெளி ஊழியத்தில் சராசரி 15.1 மணிநேரங்கள் செலவிட்டனர்.
ஹாங் காங்: அக்டோபரில் 2,704 பிரஸ்தாபிகள் என்ற ஒரு புதிய உச்சநிலையை அடைந்தது. அவர்கள் 4,043 பைபிள் படிப்புகள் நடத்தியதைப் பார்ப்பது நன்றாயிருக்கிறது.
ஜமைகா: ஜமைக்காவில் உள்ள முதல் அசெம்பிளி மன்றம் நவம்பர் 7, 1992 அன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது, ஆஜராயிருந்தவர்கள் 4,469.
ஜப்பான்: செப்டம்பரில் பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலை 1,72,512.
மடகாஸ்கர்: ஐந்து “ஒளி கொண்டுச்செல்வோர்” மாவட்ட மாநாடுகளில் 10,694 பேர் ஆஜராயினர், 241 பேர் முழுக்காட்டப்பட்டனர். ஆஜர் எண்ணிக்கை 4,542 பிரஸ்தாபிகள் என்ற அவர்களுடைய உச்சநிலைக்கு இரு மடங்குக்கும் அதிகமாக இருந்தது.
நைஜர்: புதிய ஊழிய வருஷத்தை 169 பிரஸ்தாபிகள், 3,252 மறுசந்திப்புகள் என்ற புதிய உச்சநிலைகளோடுத் துவங்குவதில் சகோதரர்கள் சந்தோஷப்பட்டனர்.
ரீயூனியன்: செப்டம்பரில் 2,113 பிரஸ்தாபிகள் என்ற புதிய உச்சநிலை, மறுசந்திப்புகளிலும் பைபிள் படிப்புகளிலுங்கூட புதிய உச்சநிலைகளை அறிக்கை செய்தது.
ஸ்வாஸிலாந்து: செப்டம்பரில் 1,543 பிரஸ்தாபிகள் என்ற ஒரு புதிய உச்சநிலையை அடைந்தது, வெளி ஊழியத்தில் சபை பிரஸ்தாபிகள் சராசரி 13.8 மணிநேரங்கள் செலவிட்டனர்.