வெளி ஊழியத்தில் ஒழுங்காகப் பங்குகொள்ளுங்கள்
1 ஓர் ஒழுங்கான அடிப்படையில் வெளி ஊழியத்தில் பங்குகொள்வதற்கு நாம் திட்டவட்டமான படிகளை எடுக்கிறோமா? ஒவ்வொரு மாதமும் ராஜ்ய மன்றத்தில் வெளி ஊழிய அறிக்கையைப் போடுவதில் நாம் ஊக்கந்தளராமல் இருக்கிறோமா? நாம் அனைவரும் முயற்சிசெய்யவேண்டிய ஒன்றாக இது இருக்கிறது, ஏதாவது முறையில் வெளியரங்கமாக நம்முடைய விசுவாசத்தைத் தெரியப்படுத்தாமல் ஒரு மாதத்தையும் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.—ரோ. 10:9, 10.
2 நாம் ஒழுங்காக இருப்பதோடுகூட, வெளி ஊழியத்தில் ஒழுங்காகப் பங்குகொள்வதற்கு மற்றவர்களுக்கு உதவிசெய்ய நாம் விழிப்புடனிருக்க வேண்டும். (பிலி. 2:4) இதை நாம் எவ்வாறு செய்யமுடியும்? நம்மோடு வேலைசெய்வதற்கு இப்பொழுதுதானே ஊழியத்தைத் தொடங்கியிருக்கிற முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளை நாம் அழைக்கக்கூடியவர்களாய் இருக்கலாம். ஒரு நிலையான ஊழிய அட்டவணையானது, அவர்களுடைய இருதயங்களில் சத்தியத்தை உறுதியாகப் பதிக்கவைக்க உதவிசெய்யும்.
3 மூப்பர்களை அணுகி, சபையிலுள்ள முதியவர்கள் அல்லது பலவீனமானவர்களுக்குத் துணைபுரியத் தானாக முன்வருவதன்மூலமும் மற்றவர்களுக்கு உதவிசெய்வதற்கான நம்முடைய மனவிருப்பத்தைக் காட்டலாம். (கலா. 6:2) பயனியர்களும் மற்ற வைராக்கியமான பிரஸ்தாபிகளும் பலவீனமானவர்களோடு ஊழியத்தில் பங்குகொள்வதற்காக, ஒருவேளை அவர்களுடைய வீட்டிற்கு அருகிலுள்ள பிராந்தியத்தைச் செய்துமுடிப்பதற்காக மூப்பர்கள் தனிப்பட்ட ஏற்பாடுகளைச் செய்யலாம், இதன்மூலம் ஊழியத்தில் ஒழுங்காக இருப்பதற்கு அவர்களுக்கு உதவிசெய்யலாம். அல்லது இப்படிப்பட்டவர்களுக்கு நாம் போக்குவரத்து வசதியளித்து தொகுதியாக சாட்சிகொடுக்கச் செல்வதற்கு அவர்களுக்கு உதவிசெய்யக்கூடியவர்களாய் இருக்கலாம்.
4 ஊழியத்தில் ஒழுங்காகப் பங்குகொள்ளுங்கள். உண்மையுடன் ஒவ்வொரு மாதமும் உங்களுடைய வெளி ஊழிய அறிக்கையைப் போடுங்கள். மற்றவர்கள் ஊழியத்தில் ஒழுங்காகப் பங்குகொள்ள உதவிசெய்யுங்கள். “சகோதரர்களின் முழு கூட்டுறவிற்காக அன்பு” காட்டுங்கள்.—1 பே. 2:17, NW.