ஜனவரி ஊழியக் கூட்டங்கள்
ஜனவரி 3-ல் துவங்கும் வாரம்
பாட்டு 101 (45)
5 நிமி:சபை அறிவிப்புகள். உள்ளூர் பிராந்தியத்திலுள்ள மக்களைக் கவருகிற தற்போதைய பத்திரிகைகளில் உள்ள திட்டவட்டமான குறிப்புகளைச் சுருக்கமாக சிறப்பித்துக் காட்டுங்கள்.
25 நிமி:“தைரியமாக, என்றாலும் சாதுரியமாகப் பிரசங்கித்தல்,” ஊழியக் கண்காணி அல்லது தகுதிவாய்ந்த மூப்பர் வேறொருவரால் கொடுக்கப்படும் உட்சேர்க்கையின் கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. பாராக்கள் 3, 5, மற்றும் 6-ஐ கலந்தாலோசிக்கும்போது, அதில் குறிப்பிடப்பட்ட மிகப் பெரிய மனிதர் புத்தகத்தில் உள்ள அதிகாரங்களை எடுத்துப்பார்க்க சபையாரை உற்சாகப்படுத்துங்கள். அந்தப் புத்தகத்திலுள்ள அதிகாரங்கள் 69 மற்றும் 81-ல் உள்ள படங்களுக்கு கவனத்தைத் திருப்புங்கள். பாராக்கள் 7-11-ஐ சிந்திக்கையில் சபைக்குப் பொருத்திக்கூறுங்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்திருக்கக்கூடிய உள்ளூர் பிராந்தியங்களையும் இடங்களையும், அவை எவ்வளவு மிகச் சிறந்த விதத்தில் கையாளப்படலாம் என்பதையும் குறிப்பிடுங்கள். நாம் மனிதருக்குப் பயப்படுவதில்லை, ஆனால் ஊழியத்தில் வலியத்தாக்கும் நிலைநிற்கை எடுப்பதன்மூலம் ஒன்றும் சாதிக்கப்படுவதில்லை என்பதைக் காட்டுங்கள். (மத். 10:28; 1 பே. 3:15) மாறாக, நம்முடைய ஊழியத்தை அமைதலுடனும் குறைந்தபட்ச குறுக்கிடுதலுடனும் செய்யும்படிக்கு, சாதுரியமாகவும் எச்சரிப்பாகவும் இருப்பதன்மூலம் நேருக்குநேர் எதிர்ப்படுவதை எவ்வாறு தவிர்ப்பது என்பதைக் காண்பியுங்கள்.
15 நிமி:“நம்முடைய பிரசுரங்களின் மதிப்பைப் போற்றுவதற்கு மற்றவர்களுக்கு உதவிசெய்தல்.” சபையாரோடு கட்டுரையைச் சிந்தியுங்கள். பாரா 3-ன் கலந்தாலோசிப்பைத் தொடர்ந்து கடவுள் அக்கறை உள்ளவராக இருக்கிறாரா சிற்றேட்டை பயன்படுத்துவதை நடித்துக்காட்டுங்கள். இந்தச் சிற்றேட்டை சபை வைத்திருக்கவில்லையென்றால், விசேஷ விலையில் அளிப்பதற்காக சபை கையிருப்பில் வைத்திருக்கிற பழைய 192-பக்க பிரசுரங்களைப் பிரஸ்தாபிகளுக்குத் தெரியப்படுத்துங்கள். பாரா 5-ஐ பின்பற்றி இவற்றில் ஒன்றை அளிப்பதை சுருக்கமாக நடித்துக்காட்டுங்கள்.
பாட்டு 116 (37), முடிவு ஜெபம்.
ஜனவரி 10-ல் துவங்கும் வாரம்
பாட்டு 147 (44)
10 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும்.
15 நிமி:விசுவாசத்தை சவால்விடுகிற மருத்துவ சூழ்நிலைமையை எதிர்ப்பட நீங்கள் ஆயத்தமாய் இருக்கிறீர்களா? மருத்துவ முன் கோரிக்கை/விடுவிப்பு (Advance Medical Directive/Release) அட்டையின் பாதுகாக்கும் மதிப்பை சகோதரர்கள் மதித்துணர உதவிசெய்ய, நம் ராஜ்ய ஊழியம், டிசம்பர் 1990, உட்சேர்க்கையிலுள்ள பாராக்கள் 1-3-லிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளைப் பயன்படுத்தி திறமைவாய்ந்த மூப்பரால் கொடுக்கப்படும் கிளர்ச்சியூட்டும் பேச்சு. சரிபார்க்கப்பட்ட 50 சதவீதத்திற்கும் மேலான அட்டைகள் கையொப்பமிடப்படாமல், சாட்சி கையொப்பமிடப்படாமல் அல்லது காலங்கடந்ததாக இருந்தன என்பது சமீபத்திய விசாரிப்பில் கண்டுபிடிக்கப்பட்டது. புதிய அட்டைகளை முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகளுக்கு மட்டுமே வினியோகியுங்கள், பின்பு அட்டைகளை பூர்த்திசெய்வதன்பேரில் அக்டோபர் 15, 1991 வழிநடத்துதலுக்கான கடிதத்தைச் சிந்தியுங்கள். அட்டைகளை சகோதரர்கள் அன்றிரவே பூர்த்திசெய்ய வேண்டாம், ஆனால் அவற்றை வீட்டிற்குக் கொண்டுசென்று அவற்றின் அவசியத்தை ஜெபத்தோடு சிந்தித்து அவற்றை பூர்த்திசெய்யும்படி ஆலோசனை கூறுங்கள். ஆனால் அப்பொழுது அட்டையில் கையொப்பமிடாதிருங்கள். பூர்த்திசெய்யப்பட்ட அட்டைகளை அடுத்த சபை புத்தகப் படிப்பிற்கு கொண்டுவாருங்கள், அட்டைகள் கையொப்பமிடப்பட்டு, சாட்சி கையொப்பமிடப்பட்டு, தேதியிடப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்ப்பதில் அங்கு மூப்பர்கள் உதவிசெய்வார்கள். சபை புத்தகப் படிப்பு நடத்துனர் தன்னுடைய தொகுதியிலுள்ள அனைவரும் பூர்த்திசெய்துவிட்டனரா என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள புதிய பட்டியலைப் பயன்படுத்துவார். (முழுக்காட்டப்பட்ட பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளுக்கான அடையாள அட்டைகளைப் பூர்த்திசெய்வதில் உதவிசெய்யலாம்.) அந்தப் புத்தகப் படிப்பைத் தவறிய எவரும், முழுக்காட்டுதல் பெற்ற அனைத்து பிரஸ்தாபிகளும் தங்களுடைய அட்டைகளைச் சரியாகப் பூர்த்திசெய்து கையெழுத்திடும் வரையாக அடுத்த ஊழியக் கூட்டத்தில் நடத்துனர்கள்/மூப்பர்கள் இன்னும் உதவிசெய்யலாம். மீதியுள்ளவர்களின் பட்டியலை மூப்பர்கள் வைத்திருந்து, முடிந்தளவுக்கு விரைவிலேயே எல்லா அட்டைகளைப் பூர்த்திசெய்வதற்கு முயற்சிசெய்யவேண்டும்.
20 நிமி:“போற்றுதலை வளர்ப்பதற்குத் திரும்பிச்செல்லுதல்.” சபையாரோடு கலந்தாலோசித்தல். பிரஸ்தாபிகள் கடவுள் அக்கறை உள்ளவராக இருக்கிறாரா சிற்றேட்டை பயன்படுத்திவருகிறார்கள் என்றால், ஒரு சிற்றேட்டை ஏற்றுக்கொண்ட நபரை எவ்வாறு மறுசந்திப்புச் செய்யலாம் என்பதை பாரா 3-ல் உள்ள ஆலோசனையைப் பயன்படுத்தி நடித்துக்காட்டுங்கள். விசேஷித்த அளிப்பின்பேரில் 192-பக்க புத்தகங்களில் ஒன்றை ஏற்றுக்கொண்ட ஒருவரை மறுசந்திப்புச் செய்வதையும் நடித்துக்காட்டுங்கள்
பாட்டு 154 (72), முடிவு ஜெபம்.
ஜனவரி 17-ல் துவங்கும் வாரம்
பாட்டு 167 (110)
10 நிமி:சபை அறிவிப்புகளும் கணக்கு அறிக்கையும். நன்கொடை ஒப்புகைகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். சங்கம் மற்றும் சபையின் நடவடிக்கைகளுக்காக பிரஸ்தாபிகள் அளித்த பொருளாதார ஆதரவுக்காகப் பாராட்டுங்கள். மருத்துவ முன் கோரிக்கை/விடுவிப்பு-வை இன்னும் பூர்த்திசெய்யாத எவரும் தங்களுடைய சபை புத்தகப் படிப்பு நடத்துனர் அல்லது மற்ற மூப்பர்களில் ஒருவரை அணுகுவதன்மூலம் அன்றிரவே அதைச் செய்வதற்கு நினைப்பூட்டுங்கள்.
20 நிமி:“அடிக்கடி செய்துமுடிக்கப்பட்ட பிராந்தியத்தில் வேலைசெய்தல்.” தகுதிவாய்ந்த மூப்பரால் நடத்தப்படும் கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. அடிக்கடி செய்துமுடிக்கப்பட்ட பிராந்தியத்தையுடைய சபைகள், நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பாரா 4-ல் குறிப்பிடப்பட்ட அறிமுகங்கள் ஒன்றின் நடிப்பையும் அதோடு பாரா 6 மற்றும் 7-லிருந்து எடுக்கப்பட்ட மற்றொரு பொருத்தமான அறிமுகத்தை அல்லது உள்ளூர் பிராந்தியத்திற்காக விசேஷமாகத் தயார்செய்யப்பட்டதைச் சிறப்பித்துக் காட்டுங்கள். தங்களுடைய பிராந்தியத்தை அடிக்கடி செய்துமுடிக்காத சபைகள், நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட மற்ற பொருத்தமான அறிமுகங்களை நடிப்புகளில் சிறப்பித்துக் காட்டவேண்டும். நடிப்புகள் நன்கு ஒத்திகைப் பார்க்கப்பட்டவையாய் இருக்கவேண்டும்.
15 நிமி:பூமியின் எதிர்காலம் என்ன? நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பக்கங்கள் 112-17-ன் அடிப்படையில். (5 நிமி.) பக்கங்கள் 112 மற்றும் 113-ல் தொடங்குகிற உபதலைப்புகளின்கீழுள்ள குறிப்புகளை உட்படுத்திப் பேசுங்கள்; பக்கம் 114-ன் மத்திபம் வரையாக உள்ள கட்டுரையை முடியுங்கள். (7 நிமி.) ஒரு புதிய பிரஸ்தாபியும் ஒரு முதிர்ச்சியான, அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபியும் பக்கங்கள் 114-16-ல் உள்ள தகவலைக் கலந்தாலோசிக்கிறார்கள். பூமி அழிக்கப்படும் என்பதை பைபிள் குறிப்பிடுகிறது என்று புதிய பிரஸ்தாபியின் உலகப்பிரகாரமான உறவினர்கள் வாக்குவாதம் செய்திருக்கின்றனர். பூமியைப் பற்றிய பைபிள் வசனங்களைப் புரிந்துகொள்வதற்கு புதிய பிரஸ்தாபி அதிக அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபியிடம் உதவி கேட்கிறார். (3 நிமி.) முடிவாக, பக்கம் 117-ல் உள்ள “என்ன வகையான ஆட்களுக்குப் பூமியில் முடிவற்ற வாழ்க்கையைக் கடவுள் தயவுகூருவார்?” என்ற கேள்வியின்பேரில் கலந்தாலோசியுங்கள். இப்படிப்பட்ட ஆசீர்வதிக்கப்பட்ட சிலாக்கியத்திற்காக தங்களைத் தகுதியுள்ளவர்களாக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 176 (16), முடிவு ஜெபம்.
ஜனவரி 24-ல் துவங்கும் வாரம்
பாட்டு 178 (67)
15 நிமி:சபை அறிவிப்புகள். “புதிய விசேஷ அசெம்பிளி தின நிகழ்ச்சிநிரல்” என்ற கட்டுரையைக் கலந்தாலோசித்தல். 1994-ல் நடக்கவிருக்கிற விசேஷ அசெம்பிளி தின நிகழ்ச்சிநிரலில் ஆஜராயிருப்பதற்காக முன் திட்டங்கள் செய்யும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். தெரிந்திருந்தால் தேதியையும் இடத்தையும் அறிவிப்புசெய்யுங்கள். தேவராஜ்ய செய்திகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த வார இறுதி நாட்களில் வெளி ஊழியத்தில் பங்குபெறுவதற்காகவும் அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். சபையின் வெளி ஊழிய ஏற்பாடுகளைக் குறிப்பிடுங்கள்.
15 நிமி:கேள்விப் பெட்டி. பேச்சு, ஓரளவிற்கு சபையார் பங்கெடுத்தலோடு. முதல் மூன்று பாராக்களில் முக்கியப்படுத்திக் காட்டப்பட்டிருக்கிறபடி ஏன் காரியங்களைக் கையாளவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள அனைவருக்கும் உதவிசெய்யுங்கள். தங்களுடைய வீடுகளைச் சந்திக்கவேண்டாம் என்று அநேக சந்தர்ப்பங்களில் யெகோவாவின் சாட்சிகளுக்கு தாங்கள் அறிவுறுத்தியிருந்தபோதிலும், அவர்கள் தொடர்ந்து சந்திக்கிறார்கள் என்று வாதாடுகிற கோபமான வீட்டுக்காரர்களிடமிருந்து அவ்வப்போது சங்கம் தொலைபேசி அழைப்புகளையும் கடிதங்களையும் பெறுகிறது. ஆகவே, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பங்குகொள்கையில், பிராந்திய உறையை சரிபார்ப்பதைப் பற்றியும் நாம் சந்திக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிற வீடுகளைக் குறித்துக்கொள்வதைப் பற்றியும் நாம் நிச்சயமாய் இருக்கவேண்டும். “தைரியமாக, என்றாலும் சாதுரியமாகப் பிரசங்கித்தல்” என்ற உட்சேர்க்கை கட்டுரையிலிருந்து பொருத்தமான குறிப்புகளை சுருக்கமாக மறுபார்வைசெய்து, உள்ளூருக்கு ஏற்ப பொருத்திக்காட்டுங்கள்.
15 நிமி:சபையின் வெளி ஊழிய நடவடிக்கை. கடந்த நான்கு மாதங்களுக்கான சபையின் நடிவடிக்கையை ஊழியக் கண்காணியும் மற்றொரு மூப்பரும் மறுபார்வைசெய்கிறார்கள். ஊழிய ஆண்டின் மூன்றில் ஒருபாகம் கடந்துவிட்டது (செப்டம்பர்-டிசம்பர்). சபை எவ்விதமாக இருக்கிறது? சபை நன்கு செய்துவருகிற அம்சங்களுக்கு உண்மையான போற்றுதல் அளியுங்கள். சபை முன்னேறக்கூடிய அம்சங்களையும் குறிப்பிட்டு, நடைமுறையான ஆலோசனைகளைக் கொடுங்கள். ஊழிய ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலிருந்து எடுக்கப்பட்ட உற்சாகமளிக்கும் ஊழிய அனுபவங்கள் ஒன்றிரண்டைச் சேர்த்துக்கொள்ளுங்கள். நம்பிக்கையான, கட்டியெழுப்புகிற குறிப்போடு முடியுங்கள். இயேசுவின் சந்தோஷம் தம்முடைய ஊழியத்தை செய்துமுடிப்பதிலிருந்து வந்தது. யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிற வேலையில் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதன்மூலம் நாமும்கூட மிகுந்த சந்தோஷத்தைக் காண்போம்.—யோவா. 4:34; 1 கொ. 15:58.
பாட்டு 179 (29), முடிவு ஜெபம்.
ஜனவரி 31-ல் துவங்கும் வாரம்
பாட்டு 186 (111)
5 நிமி:சபை அறிவிப்புகள். இந்த வார இறுதி நாட்களில் பங்குகொள்வதன்மூலம் வெளி ஊழியத்தைச் சீக்கிரத்தில் ஆரம்பிக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். தற்போதைய பத்திரிகைகளை அளிப்பதற்காக பயனுள்ள ஆலோசனைகளைக் கொடுக்கலாம்.
15 நிமி:நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை வீட்டுக்கு வீடு அளியுங்கள். மக்கள் யெகோவாவை அறிந்துகொள்வதற்கும் வணங்குவதற்கும் உதவிசெய்வதில் புத்தகத்தின் மெய்ப்பிக்கப்பட்ட மதிப்பின்பேரில் சுருக்கமான ஊக்கமூட்டுகிற பேச்சு. வெளி ஊழியத்தில் இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்துவதற்காக தயார்செய்ய, இந்த நம் ராஜ்ய ஊழியம் வெளியீட்டில் உள்ள ஆலோசனைகளை எவ்வாறு பிரஸ்தாபி பயன்படுத்தலாம் என்பதை நடித்துக்காட்டுங்கள்.
15 நிமி:“கூட்டங்களுக்கு ஆஜராதல்—ஒரு பொறுப்புள்ள உத்தரவாதம்.” கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. பாரா 2-ன் சம்பந்தமாக, ஓர் ஒழுங்கான அடிப்படையில் கூட்டங்களுக்கு ஆஜராவதற்காக தடைகளை மேற்கொண்டிருக்கிற பிரஸ்தாபிகளைப் பேட்டிகாணுங்கள்.
10 நிமி:சபையின் தேவைகள். அல்லது காவற்கோபுரம் அக்டோபர் 1, 1993, பக்கங்கள் 22-25-ல் மாதம் இருமுறை வரும் அனைத்துப் பதிப்புகளிலும் தோன்றுகிற “கடவுளுடைய இரக்கம்—இதைப்பற்றி ஒரு சரியான நோக்கைக் கொண்டிருங்கள்” கட்டுரையின் அடிப்படையிலான மூப்பரின் பேச்சு. மாதம் ஒருமுறை அச்சடிக்கப்படுகிற மொழியுடைய காவற்கோபுரத்தைப் பயன்படுத்துகிற சபைகள், அக்டோபர் 1, 1993 இதழில், பக்கங்கள் 8-11-ல் உள்ள “காத்திருக்கக் கற்றுக்கொள்வதன் பிரச்னை” என்ற கட்டுரையின்பேரில் பேச்சை அமைக்கலாம். இந்தக் கட்டுரை, அக்டோபர் 15, 1993 ஆங்கில மற்றும் மாதம் இருமுறை வரும் மற்ற பதிப்புகளில் காணப்படுகிறது.
பாட்டு 188 (81), முடிவு ஜெபம்.