தேவராஜ்ய ஊழியப் பள்ளி விமர்சனம்
ஜூன் 27 துவங்கி அக்டோபர் 17, 1994 வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டும் உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுரம் மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றுக்கும் சரி அல்லது தவறு என விடையளியுங்கள்:
1. சங்கீதப் புத்தகத்தில் 71 தடவைகள் காணப்படும் “சேலா” வார்த்தை, வாசிக்கையில் உச்சரிக்கப்பட வேண்டியதில்லை. [si பக். 101 பா. 5]
2. சங்கீதம் 15:4-ன்படி, ஒரு கிறிஸ்தவன் வாக்குறுதிசெய்த ஏதோவொன்று வேதப்பூர்வமற்றது என்பதாக அறிய வந்தாலும், அதைச் செய்தே ஆக வேண்டும். [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL91 8/1 பக். 30-1-ஐப் பார்க்கவும்]
3. மனிதகுலத்தின் துன்பம், நோய், மரணம் ஆகியவற்றிற்குக் கடவுள் காரணர் அல்ல என்பதை யோபு புத்தகம் நிரூபிக்கிறது. [si பக். 100 பா. 42]
4. ஆதாம் தான் விரும்பியிருந்தால் பரிபூரண உத்தமத்தைக் காத்துக்கொண்டிருந்திருக்க முடியும் என்றும் கடவுளுடைய படைப்பு வேலையில் குறை ஏதும் இல்லை என்றும் இயேசுவின் வாழ்க்கைப் நிரூபித்தது. [uw பக். 52 பா. 11]
5. ஒரு இராத்தலைப் பெற்று, அதைத் துணியில் சுற்றிவைத்த லூக்கா 19:20-21-ல் விவரிக்கப்பட்ட அடிமை, ஒன்றைச் செய்யாமல் விட்டுவிட்ட பாவத்திற்குக் குற்றமுள்ளவனாய் இருந்தான். [gt அதி. 100]
6. கடின உழைப்பினாலும் கடவுளுக்கான முழு பக்தியினாலும், ஒரு உண்மையான கிறிஸ்தவன் நித்திய ஜீவனுக்கான உரிமையைச் சம்பாதித்துக் கொள்ளலாம். [uw பக் 36 பா. 13]
7. ஒன்று கொரிந்தியர் 2:9 எதிர்கால பூமிக்குரிய பரதீஸைக் குறிக்கிறது [uw பக் 26 பா. 12(3); WTL85 9/1 பக். 28-ஐப் பார்க்கவும்.]
8. உண்மையற்ற நடத்தை இந்த உலகத்தில் சாதாரணமாக இருந்தாலும்கூட, அதை முக்கியமில்லாததாக நாம் பாவித்து நடத்த முடியாது. [uw பக் 53 பா. 13]
9. சங்கீதம் 49:15, உயிர்த்தெழுதல் நம்பிக்கைக்கான விசுவாசத்தின் ஒரு வெளிகாட்டாக இருக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w89 3/1 பக். 22 பா. 13-ஐப் பார்க்கவும்.]
10. சில சமயங்களில், உலகப்பிரகாரமான நடத்தையில் மனம்போன போக்கில் ஈடுபடும்படி கவர்ச்சியூட்டுவது, யெகோவாவைச் சேவிப்பதாக உரிமைபாராட்டும் மற்றொருவரிடமிருந்து வருகிறது. [uw பக். 43 பா. 11]
பின்வரும் கேள்விகளுக்கு விடையளியுங்கள்:
11. சங்கீதம் என்றால் என்ன? [si பக். 101 பா. 2]
12. சங்கீதம் 27:10 நமக்கு என்ன அருமையான உறுதியளிப்பைக் கொடுக்கிறது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL92 6/15 பக். 22 பா 17-ஐப் பார்க்கவும்.]
13. தவறுசெய்து மனந்திரும்பாதவர்கள் கொண்டிருக்கும் என்ன தவறான நோக்குநிலையை சங்கீதம் 10:13 எடுத்துக்காட்டுகிறது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL92 2/1 பக். 6-ஐப் பார்க்கவும்]
14. யாத்திராகமம் 9:15, 16-ன்படி, யெகோவா பார்வோனோடு செயல்தொடர்பு கொண்ட விதத்தால் என்ன நிறைவேற்றப்பட்டது? [uw பக். 57 பா. 6, 7]
15. நாம் பைபிளில் வாசிப்பவற்றை பயனுள்ளவிதத்தில் பகுத்தாராயக்கூடிய இரண்டு நோக்குநிலைகளைக் குறிப்பிடுங்கள். uw பக். 27]
16. சங்கீதம் 2:12-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ‘குமாரனை முத்தஞ்செய்யுங்கள்’ என்ற கட்டளை எதை அர்த்தப்படுத்துகிறது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL86 9/1 பக். 28-ஐப் பார்க்கவும்.]
17. யோவான் 8:32-ல் என்ன வகையான விடுதலையைப்பற்றி இயேசு கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார்? [uw பக். 40 பா. 6]
18. ஆதியாகமம் 3:15-ல் குறிப்பிடப்பட்டுள்ள “ஸ்திரீ” யார்? [uw பக். 30 பா. 3]
19. தாவீது தன்னுடைய பாவமுள்ள செயல்கள் சக மனிதர்களுக்கு எதிரான குற்றங்கள் என்று அறிந்திருக்கையில், யெகோவாவிடம் சங்கீதம் 51;4-ல், ‘தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்தேன்,’ என்று அவரால் ஏன் சொல்லமுடிந்தது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; wTL93 3/15 பக்.11. பா. 13-ஐப் பார்க்கவும்]
20. முதல் நூற்றாண்டில், ‘பாழாக்குகிற அருவருப்பு’ எது, அது இன்று என்னவாக இருக்கிறது? (மத்தேயு 24:15) gt அதி. 111]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் சொல் அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
21. யோபு 40:15-ல், அத்தாட்சிகளின்படி “பிகெமோத்”...........................குறிக்கிறது, யோபு 41:1-ல் ‘லிவியாதான்’....................சரியாகப் பொருந்துகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு: it-1 பக். 280 மற்றும் it-2 பக். 240-ஐப் பார்க்கவும்.]
22. யெகோவாவின் சொந்த குரல், இயேசு........................சமயத்திலும், அவர்.........................................சமயத்திலும், பொ.ச. 33-ல், நிசான் 10 அன்று, எருசலேமிலுள்ள..........................தம்முடைய பிதாவிடம் ஜெபித்தபோதும் கேட்கப்பட்டது. [gt அதி. 104]
23. சடங்காச்சாரப்படி அசுத்தமாயிருப்பதன் காரணமாக, பரிசேயர்கள் தங்கள் திராட்சரசத்திலிருந்து...........................வடிகட்டுவார்கள்; ஆயினும் நீதி, இரக்கம், விசுவாசம் ஆகியவற்றைப் புறக்கணிப்பது, சடங்காச்சாரப்படி அசுத்தமான மிருகமாகவும் இருக்கும்..........................................விழுங்குவதற்கு ஒப்பாயிருக்கும். [gt அதி 109.]
24. நம்முடைய முதல் பெற்றோரைப் பாவத்திற்கு வழிநடத்துவதற்காக சாத்தான் ஒரு பொய்யைப் பயன்படுத்தியதால், இயேசு அவனை......................................என்று அழைத்தார். [uw பக். 53 பா 13 (1)]
25. இயேசு, யெகோவாதாமே தனியாகப் படைத்த ஒரே ஒருவராக இருப்பதால், அவர் கடவுளுடைய...............................குமாரனாக இருந்தார். [uw பக் 29 பா. 1]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:
26. யோபு 42:5-ல் பதிவுசெய்யப்பட்டபடி, யோபு யெகோவாவைக் கண்டது எவ்வாறென்றால், அவர் (கடவுளைப் பற்றிய ஒரு தரிசனத்தை புயல் காற்றில் கண்டிருந்தார்; யெகோவாவை மிக நெருக்கமாக அறிய வந்தார்) [வாராந்தர பைபிள் வாசிப்பு: wTL89 11/1 பக். 12 பா. 11-ஐப் பார்க்கவும்]
27. மத்தேயு 26:13-ல் இயேசு குறிப்பிட்ட பெண் (லாசருவின் சகோதரி மரியாள்; கிலெயோப்பாவின் மனைவி மரியாள்; மகதலேனா மரியாள்). [gt அதி. 101]
28. சங்கீதம் 11:3-ல் பதிவுசெய்யப்பட்டபடி, நிர்மூலமாகிற அஸ்திவாரங்கள், (எருசலேமிலுள்ள ஆலய அஸ்திவாரங்களை; அஸ்திவாரத்தின் மூலைக்கல்லாக இயேசு கிறிஸ்துவை; சமுதாயம் ஊன்றி நிற்கும் நீதி, சட்டம், மற்றும், ஒழுங்கு போன்ற அஸ்திவாரங்களை) குறிக்கும். [வாராந்தர பைபிள் வாசிப்பு: wTL86 9/1 பக். 28 11-ஐப் பார்க்கவும்]
29. அப்போஸ்தலராகிய (பேதுரு மற்றும் பற்தொலொமேயுவை; யாக்கோபு மற்றும் யோவானை) அவர்களுடைய சீறியெழும் மனப்பான்மை காரணமாக ‘இடிமுழக்க மக்கள்’ என்று இயேசு அழைத்தார். [gt அதி. 98]
30. ஆட்சிசெய்வதற்கான கடவுளுடைய உரிமையையும் அவருடைய ஆளும் முறையையும் குறித்து சாத்தான் சவால்விட்டபோது எழும்பிய பெரிய பிரச்சினை உண்மையில் (மனித உரிமைகளை; மிக வல்லமையாக இருந்தது யார் என்ற கேள்வியை; கடவுளுடைய சர்வதேச பேரரசுரிமையை) உட்படுத்தியது [uw பக் 46 பா. 1]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்:
ஆதி. 3:1-5; சங். 24:1; அப். 8:32-38; எபி. 10:26, 27; 1 பே. 4:3, 4
31. மனிதனும் பூமியும் கடவுளுடைய சிருஷ்டிப்புகள் என்றும், எல்லாம் கடவுளுக்கு உரியது என்றும் உணருவது நம்மை மனத்தாழ்மை உள்ளவர்களாகவும் கீழ்ப்படிதலுள்ளவர்களாகவும் இருக்க உதவி செய்ய வேண்டும். [uw பக் 39 பா. 4]
32. யெகோவாவுக்கு பிரியமற்றதாக இருக்கும் என்று நாம் அறிந்திருக்கிற எதையும் செய்துவிடும் பழக்கத்தை தவிர்ப்பதில் நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். [uw பக் 33 பா. 8 (3) மற்றும் 8 (14)]
33. பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவும் அதன் செய்திக்கான போற்றுதலுணர்வும் செம்மறியாடுகளைப் போன்ற மக்கள் முழுக்காட்டுதல் பெறும்படி தூண்டுகிறது. [uw பக் 32 பா. 7]
34. நீங்கள் அவிசுவாசிகளுடன் வேலை செய்பவர்களாக அல்லது அவர்களுடன் பள்ளிக்குச் செல்பவர்களாக இருக்கக்கூடும் என்றாலும், அவர்களோடு தேவையற்ற எல்லா கூட்டுறவையும் தவிர்ப்பதன்மூலம் அவர்களை உங்களுடைய கூட்டாளிகளாக நீங்கள் தெரிந்துகொள்ளவில்லை என்று காண்பிக்கிறீர்கள். [uw பக் 44 பா. 13]
35. வாழ்க்கையில் தங்கள் சொந்த தராதரங்களை அமைத்துக்கொள்ள முடியாவிட்டால், மக்கள் எதையோ இழந்துவிடுகிறார்கள் என்று அவர்களை நம்பும்படி செல்வாக்குச் செலுத்தும் உலகப்பிரகாரமான சிந்தனையை நாம் தவிர்ப்பது அத்தியாவசியமாகும். [uw பக் 46 பா. 1]