செப்டம்பர் ஊழியக் கூட்டங்கள்
செப்டம்பர் 5-ல் துவங்கும் வாரம்
பாட்டு 5 (28)
10 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும்.
20 நிமி:“உங்களுடைய ராஜ்ய சேவை பொக்கிஷத்தை அதிகரியுங்கள்.” கட்டுரையிலுள்ள முக்கிய குறிப்புகளை ஊழியக் கண்காணியும் மற்றொரு மூப்பரும் கலந்தாலோசிக்கின்றனர். போற்றுதலோடு முன்னேறுவதற்கான ஆலோசனைகளை அளித்து, கடந்த வருடத்திற்கான சபையின் நடவடிக்கையை மறுபார்வை செய்யுங்கள். ஊழியத்தில் நம்முடைய தனிப்பட்ட பங்கை அதிகரிப்பதன் இலக்கை வலியுறுத்திக் கூறுங்கள்.
15 நிமி:“என்றும் வாழலாம் புத்தகத்தில் அக்கறையை வளர்த்தல்.” ஓர் இளைஞர் உட்பட, மூன்று அல்லது நான்கு பிரஸ்தாபிகள் கட்டுரையை கலந்தாலோசித்து, பின்பு பயிற்சி நேரத்தை (practice session) கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இரண்டோ மூன்றோ பிரசங்கங்களை நடித்துக் காண்பிக்கிறார்கள், பின்பு அவற்றை மறுபார்வை செய்து, ஒருவருக்கொருவர் நடைமுறையான ஆலோசனைகளையும் போற்றுதலையும் அளிக்கிறார்கள்.
பாட்டு 32 (10), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 12-ல் துவங்கும் வாரம்
பாட்டு 54 (18)
7 நிமி:சபை அறிவிப்புகள்.
20 நிமி:“என்றும் வாழலாம் புத்தகத்தைக்கொண்டு பைபிள் படிப்புகளை ஆரம்பித்தல்.” சபையாரோடு கலந்தாலோசியுங்கள். கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்களைப் பயன்படுத்தி இரண்டு நடிப்புகளுக்காக ஏற்பாடு செய்யுங்கள்.
18 நிமி:“சாட்சிகொடுப்பதிலிருந்து அவர்கள் விலகியிருக்கவில்லை.” கேள்விகளும் பதில்களும். ஊழியத்தில் ஒரே அளவான மணிநேரத்தை நாம் அனைவரும் செலவழிக்க முடியாதபோதிலும்கூட, சந்தோஷத்தை கண்டடையவும் மனப்பூர்வமாய் உழைக்கவும் வேண்டும் என்பதை சிறப்பித்துக் காட்டுங்கள்.
பாட்டு 60 (86), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 19-ல் துவங்கும் வாரம்
பாட்டு 36 (14)
7 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் எந்த நன்கொடை ஒப்புகைகளையும் வாசியுங்கள்.
13 நிமி:“பள்ளியில் ஆயத்தமாயிருங்கள்.” கேள்விகளும் பதில்களும். இளைஞர் எதிர்ப்படுகிற பிரச்சினைகளையும் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு எவ்வாறு உதவிசெய்யலாம் என்பதையும் சிறப்பித்துக் காண்பியுங்கள்.
25 நிமி:“1994 ‘தேவ பயம்’ மாவட்ட மாநாடு.” உட்சேர்க்கை. மூப்பரால் கையாளப்படுகிற, 1-11 பாராக்களின்பேரில் கேள்வி பதில்கள். “மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்,” என்பதற்கு முக்கியமாக கவனத்தைத் திருப்புங்கள்.
பாட்டு 67 (38), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 26-ல் துவங்கும் வாரம்
பாட்டு 44 (41)
10 நிமி:சபை அறிவிப்புகள். “புதிய வட்டார மாநாட்டு நிகழ்ச்சிநிரல்” என்ற கட்டுரையின் சிறப்பம்சங்களை மறுபார்வை செய்யுங்கள்.
20 நிமி:“1994 ‘தேவ பயம்’ மாவட்ட மாநாடு.” உட்சேர்க்கை. பாராக்கள் 12-25-ன் பேரில் சபை காரியதரிசியால் கையாளப்படுகிற பேச்சு.
15 நிமி:அக்டோபர் மாதத்தின்போது காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தாக்களை அளியுங்கள். நம்முடைய பத்திரிகைகள் உலகளாவிய பிரசங்க வேலையில் ஒரு பெரிய பங்கை வகிக்கின்றன; முதல் முறையாக சத்தியத்தைக் குறித்து கேள்விப்பட்டிருக்கிற லட்சக்கணக்கானோருக்கு இதுவே கருவியாக இருந்திருக்கிறது. மற்ற பிரசுரங்களை முக்கியப்படுத்தி காண்பிக்கிற சமயங்களிலும்கூட, தொடர்ந்து அவற்றை பயன்படுத்தி வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அவற்றை அளிப்பதனுடைய முக்கியத்துவத்தை வலியுறுத்திக் காண்பியுங்கள். வாராந்தர பத்திரிகை தினத்தின் நன்மைகளைக் குறிப்பிடுங்கள். தெரு ஊழியமும் கடைக்குக் கடை சாட்சிகொடுத்தலும் எவ்வாறு அளிப்புகளுக்கு அநேக வாய்ப்புகளைத் திறந்திருக்கின்றன என்பதை கலந்தாலோசியுங்கள். பத்திரிகை மார்க்கத்தை ஆரம்பிக்கின்ற இலக்குடன் அளிப்புகளின் பதிவை வைத்துக்கொள்ளும்படி சகோதரர்களுக்கு நினைப்பூட்டுங்கள். சந்தாக்களை அளிப்பதைக் குறித்து நம்பிக்கையான மனநிலையுள்ளவர்களாய் இருக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்துங்கள். ஊழியத்துக்கு செல்வதற்கு முன்பாக நன்கு தயாரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறுங்கள். மூன்று பிரஸ்தாபிகள், அவர்களில் ஒருவர் இளைஞர், சுருக்கமான இரு பத்திரிகை அளிப்புகளையும் சந்தா அளிப்பையும் நடித்துக்காட்டும்படி செய்யுங்கள்.
பாட்டு 76 (72), முடிவு ஜெபம்.