உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 11/94 பக். 3
  • நவம்பர் ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நவம்பர் ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1994
  • துணை தலைப்புகள்
  • நவம்பர் 7-ல் துவங்கும் வாரம்
  • நவம்பர் 14-ல் துவங்கும் வாரம்
  • நவம்பர் 21-ல் துவங்கும் வாரம்
  • நவம்பர் 28-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1994
km 11/94 பக். 3

நவம்பர் ஊழியக் கூட்டங்கள்

நவம்பர் 7-ல் துவங்கும் வாரம்

பாட்டு 4 (119)

10 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும். சமீபத்திய பத்திரிகைகளை அளிப்பதில் பயன்படுத்தக்கூடிய ஓரிரண்டு பேச்சுக் குறிப்புகளை அவற்றில் ஒவ்வொன்றிலிருந்தும் குறிப்பிடுங்கள்.

18 நிமி:“கடவுளுடைய வார்த்தை வல்லமை வாய்ந்தது.” கேள்விகளும் பதில்களும். தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல்—1994 என்பதிலுள்ள முன்னுரையின் அடிப்படையில் ஒழுங்கான பைபிள் வாசிப்பினுடைய முக்கியத்துவத்தின்பேரிலுள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

17 நிமி:“பைபிள்—துன்பம் நிறைந்த இவ்வுலகில் ஆறுதல் மற்றும் நம்பிக்கையின் மூலம்.” சபையாரோடு கலந்தாலோசியுங்கள். ஆலோசனையாகக் கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் காட்டுகிற இரண்டு நடிப்புகளுக்காக ஏற்பாடுசெய்யுங்கள்.

பாட்டு 24 (70), முடிவு ஜெபம்.

நவம்பர் 14-ல் துவங்கும் வாரம்

பாட்டு 25 (30)

10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கைகள் மற்றும் நன்கொடை ஒப்புகைகள் ஏதாவது இருக்குமானால் வாசியுங்கள். வார இறுதிநாட்களில் வெளி ஊழிய நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை மறுபார்வை செய்யுங்கள்.

17 நிமி:“எவ்வகையான மனப்பான்மையை நீங்கள் காட்டுகிறீர்கள்?” பேச்சு. ஜூன் 15, 1977 ஆங்கில காவற்கோபுர வெளியீடு பக்கம் 369, பாராக்கள் 4 மற்றும் 5-லிருந்து எடுக்கப்பட்ட குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

18 நிமி:“நம் ராஜ்ய பிரசங்க வேலையை முன்னேற்றுவிக்க வழிகள்.” கேள்விகளும் பதில்களும். நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் எவ்வாறு நல்ல பலன்களோடு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதைக் காண்பிக்கிற அனுபவங்களைக் கூறும்படி சபையாரை அழையுங்கள்.

பாட்டு 37 (24), முடிவு ஜெபம்.

நவம்பர் 21-ல் துவங்கும் வாரம்

பாட்டு 40 (18)

12 நிமி:சபை அறிவிப்புகள். கேள்விப் பெட்டி. பேச்சு. பொருளை சபைக்குப் பொருத்திக்காட்டுங்கள்.

15 நிமி:சபையின் தேவைகள். அல்லது செப்டம்பர் 1, 1994 காவற்கோபுர வெளியீட்டில் (மாதம் இருமுறை வரும் பதிப்புகள்) பக்கம் 29-ல் உள்ள “உங்களுடைய பரிசுத்த சேவையை உயர்வாய் மதியுங்கள்,” என்பதன் அடிப்படையில் மூப்பர் கொடுக்கும் பேச்சு.

18 நிமி:“‘இன்னொருவேளை’ கேட்க அவர்களுக்கு உதவுங்கள்.” சபையாரோடு கலந்தாலோசியுங்கள். ஒரு படிப்பை ஆரம்பிக்கையில் பைபிளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் காண்பிக்கிற நன்கு-தயாரிக்கப்பட்ட இரண்டு நடிப்புகளைக் கொண்டிருங்கள்.

பாட்டு 52 (59), முடிவு ஜெபம்.

நவம்பர் 28-ல் துவங்கும் வாரம்

பாட்டு 58 (61)

10 நிமி:சபை அறிவிப்புகள். தற்போதைய பத்திரிகைகளை அளிப்பதற்கான வழிகளை நடித்துக்காட்டுங்கள்.

17 நிமி:“மற்றவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்வதால் வரும் ஆசீர்வாதங்கள்.” கேள்விகளும் பதில்களும். எப்பொழுதும் தாங்களாகவே வெளி ஊழியத்திற்குச் செல்ல தனிப்பட்ட ஏற்பாடுகள் செய்வதற்குப் பதிலாக, சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட வெளி ஊழியத்திற்கான கூட்டங்களை ஆதரிக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். தொகுதியோடு ஊழியம் செய்வது கூடுதலான ஆசீர்வாதங்கள், அதிக பலன்தரத்தக்க ஊழியம், பரஸ்பர உற்சாகம் ஆகியவற்றில் விளைவடைகிறது.

18 நிமி:டிசம்பர் மாதத்தில் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளித்தல். இந்தப் புத்தகத்திற்கு அதிக தேவை இருக்கிறது. இயேசுவைப் பின்பற்றுவதாக சொல்லிக்கொண்டு அவர் போதித்ததை நம்புவதாக அநேக ஆட்கள் உரிமைபாராட்டுகின்றனர், ஆனால் மற்றெல்லா மனிதரிலுமிருந்து அவரை எது வேறுபடுத்திக் காட்டுகிறது என்பதை அனைவரும் அறியவேண்டும்—அவர்களுடைய இரட்சிப்பு அதன்பேரில் சார்ந்திருக்கிறது. மிகப் பெரிய மனிதர் புத்தகம் அதிகாரம் 133 இவ்வாறு குறிப்பிடுகிறது: “அவருடைய விழுமிய தைரியமும் ஆண்மையும், அவருடைய ஈடு இணையற்ற ஞானமும், ஒரு போதகராக அவருடைய மேம்பட்ட திறமையும், அவருடைய தைரியமான தலைமையேற்று நடத்தும் ஆற்றலும், அவருடைய மென்மையான இரக்கமும், பிறரிடத்தில் தம்மை வைத்துப் பார்க்கும் தன்மையும் நம் இருதயங்களைத் தொடுகின்றன.” தெளிவாகவே பைபிள் அவரை (1) ஒரு சாட்சியாக (யோவா. 18:37), (2) ஒரு இரட்சகராக (அப். 4:12), (3) ஒரு ராஜாவாக (வெளி. 11:15) அடையாளங்காட்டுகிறது. இந்தக் குறிப்புகள் சிலவற்றை பயன்படுத்தி ஒரு திறமைவாய்ந்த பிரஸ்தாபி ஒரு பிரசங்கத்தை நடித்துக்காட்டும்படி செய்யுங்கள். டிசம்பர் மாதத்தில் இந்தப் புத்தகத்தை அளிப்பதில் பங்குகொள்ளும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.

பாட்டு 61 (13), முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்