அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் நவம்பர்: பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளோடு, பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? புத்தகத்தை 75.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். ஆங்கிலத்தைத் தவிர மற்ற மொழிகளில், பள்ளி (School) சிற்றேடில்லாமல் வேறு எந்தச் சிற்றேட்டையாகிலும் 5.00 ரூபாய் நன்கொடைக்கு அல்லது ஏதாவது 192-பக்க புத்தகத்தை 15.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை 45.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்தப் பிரசுரம் உங்களுடைய கையிருப்பில் இல்லையென்றால் அல்லது வித்தியாசமான அளிப்புக்கு சூழ்நிலைமை பொருத்தமாக இருந்தால், என்னுடைய பைபிள் கதை புத்தகம் அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகத்தை அதே நன்கொடைக்கு அளிக்கலாம் (சிறிய அளவுள்ள என்றும் வாழலாம் புத்தகம் 25.00 ரூபாய்). ஜனவரி: 192-பக்க பழைய புத்தகங்களின் விசேஷ அளிப்பு ஒவ்வொன்றும் 8.00 ரூபாய் நன்கொடைக்கு. இந்த வகையைச் சேர்ந்த பின்வரும் புத்தகங்கள் எங்களிடம் உள்ளன: ஆங்கிலம்: மனிதன் இங்கு வந்தது பரிணாமத்தினாலா படைப்பினாலா? (Did Man Get Here by Evolution or by Creation?) மற்றும் இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? கன்னடம்: “உம்முடைய ராஜ்யம் வருவதாக” மற்றும் “கடவுள் பொய் சொல்லக்கூடாததாயுள்ள காரியங்கள்;” குஜராத்தி: நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு (Good News—To Make You Happy), “உம்முடைய ராஜ்யம் வருவதாக” மற்றும் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம்; தமிழ்: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? மற்றும் “உம்முடைய ராஜ்யம் வருவதாக;” தெலுங்கு: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? மற்றும் உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல். மராத்தி: “உம்முடைய ராஜ்யம் வருவதாக” மற்றும் பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல்; ஹிந்தி: நற்செய்தி—உங்களை மகிழ்விப்பதற்கு மற்றும் “உம்முடைய ராஜ்யம் வருவதாக.” பெங்காலி, நேப்பாளி அல்லது பஞ்சாபி தெரிந்த ஆட்களுக்கு நம்முடைய பிரச்னைகள் அல்லது மற்றொரு சிற்றேட்டை அளிக்கலாம். மலையாளத்தில் உன் இளமை—அதை மிக நன்றாய் பயன்படுத்துதல்! புத்தகத்தை 15.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இந்தப் புத்தகம் விசேஷ விலையில் அளிப்பதற்கல்ல என்பதை கவனியுங்கள். பிப்ரவரி: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை 45.00 ரூபாய் (சிறிய அளவு 25.00 ரூபாய்) நன்கொடைக்கு அளிக்கலாம். இந்தப் புத்தகத்தை அளித்த பிறகு மறுசந்திப்புகள் செய்யப்படவேண்டும்; பைபிள் படிப்புகள் ஆரம்பிப்பதற்கும் முயற்சிகள் எடுக்கவேண்டும்.