மிகப் பெரிய மனிதரைப் பின்பற்ற மற்றவர்களை அழையுங்கள்
1 மத்தேயு 5:14-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளபடி, இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னார்: “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்.” இயேசுவைப் பின்பற்றுபவர்கள் யெகோவாவின் ராஜ்யத்தைப் பற்றியும் இயேசுவின் மூலம் வருகிற இரட்சிப்புக்கான அவருடைய அன்பான ஏற்பாட்டைப் பற்றியும் எல்லா இடங்களிலுமுள்ள மக்களுக்குச் சொல்ல வேண்டியவர்களாய் இருந்தனர். அந்தப் பொறுப்பான வேலையை மனதிற்கொண்டு, டிசம்பர் மாதத்தில் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தை அளிப்பதற்கு எதிர்நோக்கியவர்களாய் இருக்கிறோம். நீங்கள் பயன்படுத்த விரும்புகிற ஆலோசனைகள் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
2 உங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு, பின்வருபனவற்றை உங்களுடைய சொந்த வார்த்தைகளில் நீங்கள் சொல்லலாம்:
◼ “இயேசு ஓர் மனிதராக இந்தப் பூமியில் வாழ்ந்தபோது அவர் எப்படிப்பட்டவராக இருந்தார் என்பதைக் குறித்து அநேகர் ஆச்சரியமடைந்திருக்கிறார்கள். மற்றவர்களிலிருந்து அவர் என்ன விதங்களில் வேறுபட்டவராக இருந்தார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதில்சொல்ல அனுமதியுங்கள்.] எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற இந்தக் கவர்ச்சியான புத்தகம், அவருடைய வாழ்க்கையையும் ஊழியத்தையும் பற்றிய சிறப்பம்சங்களை விவரிக்கிறது. மேலும் அவர் எப்படிப்பட்ட மனிதராக இருந்தார் என்பதன்பேரில் உட்பார்வையையும் அளிக்கிறது. இதை வாசித்தப் பிறகு, அவரோடு தனிப்பட்ட விதமாக கூட்டுறவுகொள்வதற்கும் அவருடைய பாடுகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் நேரடியாக அவருடைய ஊழியத்தை அறிந்துகொள்வதற்கும் தங்களுக்கு வாய்ப்புக் கிடைத்ததைப்போல சிலர் உணருகிறார்கள்.” அந்தப் புத்தகத்திலுள்ள முதல் படத்தைச் சுட்டிக்காட்டுங்கள். அது தலைப்பை முக்கியப்படுத்திக் காட்டுகிறது. பின்பு அறிமுகத்திற்குத் திருப்பி, “அவரைப் பற்றி கற்றறிவதன் மூலம் பயனடையுங்கள்” என்ற உபதலைப்பின்கீழுள்ள இரண்டாவது பாராவை வாசியுங்கள். பிறகு அந்தப் புத்தகத்தை 45.00 ரூபாய் நன்கொடைக்கு அளியுங்கள்.
3 அல்லது இதுபோன்ற ஒன்றை நீங்கள் சொல்லலாம்:
◼ “கிறிஸ்மஸ் சமயத்தின்போது, இயேசுவைப் பற்றி நாம் அடிக்கடி நிறைய கேள்விப்படுகிறோம். இருந்தாலும், உலகம்பூராவும் மோசமான காரியங்கள் அதிகளவாக நடந்துவருவதால், இயேசு உண்மையிலேயே நம்மைப் பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா அல்லது நமக்காக ஏதாவது செய்ய முடியுமா என்று சிலர் யோசிக்கலாம். அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” பதில்சொல்ல அனுமதியுங்கள். மிகப் பெரிய மனிதர் புத்தகத்தில் அதிகாரம் 24-க்குத் திருப்பி, இயேசு ஏன் பூமிக்கு வந்தார் என்பதைப் பற்றி சுருக்கமாக கலந்துபேசுங்கள். பின்பு யோவான் 15:13-ஐ வாசித்து, மற்றவர்களுக்கான இயேசுவினுடைய இருதயப்பூர்வமான அன்பை வலியுறுத்திக் கூறுங்கள். புத்தகத்தை ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் அளிப்பதற்கு கிடைக்கக்கூடிய தற்போதைய பத்திரிகைகள், சிற்றேடு, அல்லது பொருத்தமான துண்டுப்பிரதி ஆகியவற்றை வைத்திருக்க மறவாதிருங்கள்.
4 இங்கே மற்றொரு ஆலோசனை:
◼ “பெரும்பாலான இளைஞர் பின்பற்றுவதற்கான இலட்சிய மாதிரிகளுக்காக தேடிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் நல்ல இலட்சிய மாதிரிகளைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. இயேசு கிறிஸ்து அனைவருக்கும் பரிபூரண முன்மாதிரியை வைத்திருக்கிறார். [1 பேதுரு 2:21-ஐ வாசியுங்கள்.] அவருடைய முழு வாழ்க்கையும் தம்முடைய பரலோக தகப்பனை வணங்குவதன்மீதே ஒருமுகப்படுத்தப்பட்டிருந்தது. அநேக மக்கள் அவரைப் பின்பற்ற முயற்சிசெய்தால் எவ்வாறு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” பதிலுக்காக அனுமதியுங்கள். அந்தப் புத்தகத்தின் கடைசி பக்கத்திற்கு முந்திய பக்கத்தில் உள்ள மூன்றாவது பாராவை குறிப்பிடுங்கள், அது அவருடைய விசேஷ குணங்களை வர்ணிக்கிறது. மேம்பட்ட ஆட்களாவதற்கு மிகப் பெரிய மனிதர் புத்தகம் நம் அனைவருக்கும் எவ்வாறு உதவிசெய்யக்கூடும் என்பதை விளக்குங்கள்.
5 இதுபோன்ற ஒன்றை பயன்படுத்த நீங்கள் விரும்பலாம்:
◼ “யாராவது இயேசு கிறிஸ்துவை குறிப்பிடும்போது, அநேக மக்கள் அவரை ஒரு குழந்தையாகவோ மரிக்கும் தறுவாயிலிருக்கிற பாடனுபவிக்கும் ஒரு மனிதராகவோ நினைக்கிறார்கள். இயேசுவைப் பற்றிய அவர்களுடைய கருத்தானது அவருடைய பிறப்பையும் அவருடைய மரணத்தையும் மாத்திரமே உட்படுத்துகிறது. அவருடைய வாழ்நாட்காலத்தின்போது அவர் சொன்ன, செய்த மகத்தான காரியங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமலேயே போய்விடுகின்றன. அவர் நிறைவேற்றியது இந்தப் பூமியில் எக்காலத்திலும் வாழ்ந்திருக்கிற எல்லா நபரையும் பாதிக்கிறது. அதனால்தான், நம் சார்பாக அவர் செய்த அற்புதமான காரியங்களைப் பற்றி நம்மால் முடிந்தளவு கற்றுக்கொள்வது முக்கியமானதாய் இருக்கிறது.” யோவான் 17:3-ஐ வாசியுங்கள். மிகப் பெரிய மனிதர் புத்தகத்தில் அறிமுகத்தின் முதற்பக்கத்திற்குத் திருப்பி, நான்காவது பாராவை வாசியுங்கள். அந்தப் புத்தகத்தை அளித்து, தனிப்பட்ட படிப்புக்கு அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை விளக்குங்கள்.
6 மறுசந்திப்புகள் செய்வதன்மூலம் தொடருவதற்கு, அக்கறை காண்பித்தவர்களையும் அளிப்புகளையும் பற்றிய பதிவை வைத்துக்கொள்வதற்கு நிச்சயமாயிருங்கள். இன்னும் சமயமிருக்கையில், நேர்மை இருதயமுள்ள மக்களை வைராக்கியமாக தேடிக் கண்டுபிடித்து, நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகும்படி அவர்களுக்கு உதவிசெய்வோமாக.—மத். 16:24.