ஜனவரி ஊழியக் கூட்டங்கள்
ஜனவரி 2-ல் துவங்கும் வாரம்
பாட்டு 83 (86)
10 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும்.
17 நிமி:“செய்வதற்கு எப்போதும் அதிகமுள்ளது.” கேள்விகளும் பதில்களும். மூப்பர், குடும்பத்தலைவி அல்லது ஒரு பயனியர் போன்ற அதிக வேலையாயிருக்கிறவர்களுடன் சுருக்கமான இரண்டு அல்லது மூன்று பேட்டிகளுக்காக ஏற்பாடுசெய்யுங்கள்; அதிக வேலைநிறைந்த அட்டவணையைக் காத்துக்கொண்டு, இன்னும் எவ்வாறு சந்தோஷமாயிருக்க முடிகிறது என்பதை விளக்கிக்கூறும்படி அவர்களைக் கேளுங்கள்.
18 நிமி:“நமது பழைய பதிப்புகளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுதல்.” சபையாரோடு கலந்தாலோசியுங்கள். என்ன பழைய பதிப்புகள் இருக்கின்றன என்பதை சபையாருக்குத் தெரியப்படுத்துங்கள்; ஊழியத்தில் பயன்படுத்துவதற்காக பிரதிகளைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களை உற்சாகப்படுத்துங்கள். கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்களின் சுருக்கமான ஓரிரண்டு நடிப்புகளுக்காக ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 188 (81), முடிவு ஜெபம்.
ஜனவரி 9-ல் துவங்கும் வாரம்
பாட்டு 183 (73)
15 நிமி:சபை அறிவிப்புகள். “புதிய விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரல்.” பேச்சு. வார இறுதி நாட்களுக்கான வெளி ஊழிய ஏற்பாடுகளை அறிவிப்பு செய்யுங்கள். தற்போதைய பத்திரிகை பிரதிகளைக் கொண்டுசெல்லும்படியும் பொருத்தமான சமயத்தில் அவற்றை அளிக்கும்படியும் அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி:“பக்திவிருத்திக்கேதுவாக இருக்கிற மேய்த்தல்.” செப்டம்பர் 15, 1993, காவற்கோபுரம் பக்கங்கள் 21-3-ல் உள்ள உபதலைப்பின் கீழிருக்கிற தகவலின் அடிப்படையில் மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு. பிரச்சினைகளைச் சமாளிக்க உதவுவதற்கு வேதப்பூர்வமான ஆலோசனையை சிறப்பித்துக் காட்டுங்கள்.
15 நிமி:விசுவாசத்திற்கு சவாலாயிருக்கும் ஒரு மருத்துவ நிலையை எதிர்ப்பட நீங்கள் தயாராயிருக்கிறீர்களா? நம்முடைய மருத்துவ முன் கோரிக்கை/விடுவிப்பு (Advance Medical Directive/Release), அடையாள அட்டை (Identity Card) ஆகியவற்றின் பாதுகாக்கும் மதிப்பை சகோதரர்கள் மதித்துணர உதவிசெய்வதற்கு, திறமையான மூப்பரால் கொடுக்கப்படுகிற கருத்தாழமிக்க ஆனால் உந்துவிக்கிற பேச்சு. அந்த அட்டைகளைப் பூர்த்திசெய்வதன்மூலம், தகுதியுள்ளவர்களாயிருக்கிற, இந்தப் பாதுகாப்பைப் பெற விரும்புகிற அனைவரும் அதை வைத்திருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்ள 1994 ஜனவரி மாதத்தில் செய்ததுபோல மறுபடியும் செய்யுங்கள். விவரங்களுக்கு, நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 2, “ஜனவரி 10-ல் துவங்கும் வாரம்” என்பதன்கீழ் பாருங்கள்.
பாட்டு 198 (50), முடிவு ஜெபம்.
ஜனவரி 16-ல் துவங்கும் வாரம்
பாட்டு 182 (97)
10 நிமி:சபை அறிவிப்புகள். தற்போதைய பத்திரிகைகளிலிருந்து பேச்சுக் குறிப்புகளைக் கலந்தாலோசியுங்கள். இந்த வார இறுதி நாட்களில் வெளி ஊழியத்தில் பங்குபெறும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
18 நிமி:“மற்றவர்களுக்கு அக்கறை காட்டுங்கள்—பாகம் 1.” கேள்விகளும் பதில்களும். ராஜ்ய மன்ற கூரை, குழாய் வசதி, மின்சார இணைப்புகள், பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் ஆகியவை நன்கு பழுதுபார்க்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருப்பதைப் பரிசோதித்துப் பார்ப்பதில் மூப்பர்கள் ஒன்றாக சேர்ந்து நெருங்க வேலைசெய்வதற்கான தேவையைப் பற்றிய நினைப்பூட்டுதல்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.—டிசம்பர் 1984 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 4-ஐப் பாருங்கள்.
17 நிமி:“மறுசந்திப்புகள் செய்வதன்மூலம் உங்கள் கரிசனையைக் காட்டுங்கள்.” மூன்று அல்லது நான்கு பிரஸ்தாபிகள் மறுசந்திப்புகள் செய்வதன் நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் கலந்தாலோசிக்கிறார்கள். படிப்புகள் ஆரம்பிக்கும் இலக்கை வலியுறுத்திக் கூறுங்கள். கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்களை மறுபார்வை செய்யுங்கள். முன்னேற்றத்திற்காக போற்றுதலையும் ஆலோசனைகளையும் கொடுக்கிற தொகுதியோடு ஓரிரண்டு நடிப்புகளைக் கொண்டிருங்கள்.
பாட்டு 196 (64), முடிவு ஜெபம்.
ஜனவரி 23-ல் துவங்கும் வாரம்
பாட்டு 161 (110)
10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
10 நிமி:நம்முடைய பிராந்தியத்தை முழுமையாக செய்துமுடித்தல். ஊழியக் கண்காணியால் கொடுக்கப்படும் பேச்சு. ஜூலை 15, 1988 ஆங்கில காவற்கோபுர படிப்புக் கட்டுரைகளில் உள்ள சிறப்புக்குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். சபைக்குப் பொருத்திக்காட்டுங்கள். சபையின் பிராந்திய பகுதிகள் ஒழுங்காக செய்து முடிக்கப்படவில்லையென்றால், இதை எவ்வாறு செய்யலாம் என்பதன்பேரில் ஆலோசனை கொடுங்கள்.
10 நிமி:சபையின் தேவைகள். அல்லது நவம்பர் 1, 1994, காவற்கோபுரம், (மாதம் இருமுறை வெளிவரும் பதிப்புகள்) பக்கங்கள் 28-31-ன் அடிப்படையில், “தேவராஜ்ய நூலகம் ஒன்றை ஒழுங்கமைப்பது எவ்வாறு,” என்பதன்பேரில் பேச்சுக்கொடுங்கள்.
15 நிமி:“தனிப்பட்ட படிப்பு—அக்கறைக்குரிய ஒரு விஷயம்.” கேள்விகளும் பதில்களும். ஜனவரி 1, 1986, காவற்கோபுரம், பக்கங்கள் 9-14-ன் அடிப்படையில் தெரிந்தெடுக்கப்பட்ட குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 116 (37), முடிவு ஜெபம்.
ஜனவரி 30-ல் துவங்கும் வாரம்
பாட்டு 141 (64)
10 நிமி:சபை அறிவிப்புகள்.
20 நிமி:செப்டம்பர் 1, 1994, காவற்கோபுரம், பக்கங்கள் 27-8, மாதம் இருமுறை வெளிவரும் பதிப்புகளிலுள்ள “கட்டுப்பாடுகள் உங்களைச் சோர்வடையச் செய்கின்றனவா?” என்ற கட்டுரையின்பேரில் மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு.
15 நிமி:என்றும் வாழலாம் புத்தகத்தை பிப்ரவரியில் அளியுங்கள். இந்தப் புத்தகத்தில் அடங்கியுள்ள தகவலை மக்கள் பெற்றுக்கொள்வதற்கான அவசியம் ஏன் இருக்கிறது என்பதை விளக்கிக்கூறுங்கள். (ஜூன் 1, 1988, காவற்கோபுரம், பக்கங்கள் 14-5, பாராக்கள் 17, 18-ஐப் பாருங்கள்.) அதை வாசித்திருக்கிற உண்மையான இருதயமுள்ளவர்களால் காட்டப்படுகிற போற்றுதலைக் காண்பிக்கிற அனுபவங்களைச் சுருக்கமாக விவரியுங்கள். (செப்டம்பர் 1, 1989, ஆங்கில காவற்கோபுரம், பக்கம் 32, மற்றும் டிசம்பர் 1, 1991, ஆங்கில காவற்கோபுரம், பக்கம் 32-ஐப் பாருங்கள்.) என்றும் வாழலாம் புத்தகத்தைப் பெற்றுக்கொண்ட அக்கறை காண்பிப்பவர்களோடு எவ்வாறு பைபிள் படிப்புகளை நாம் ஆரம்பிக்கலாம் என்பதைக் காட்டுகிற ஆலோசனைகள் சிலவற்றை அளியுங்கள். நியாயங்காட்டிப்பேசுதல் புத்தகம், பக்கம் 13-ல் உள்ள “உயிர்/மகிழ்ச்சி” என்ற தலைப்பைப் பயன்படுத்தி திறமையுள்ள பிரஸ்தாபி பிரசங்கத்தை நடித்துக்காட்டும்படி செய்யுங்கள். அல்லது உள்ளூர் பிராந்தியத்திற்குப் பொருத்தமாகவுள்ள வேறொரு பிரசங்கத்தைப் பயன்படுத்துங்கள். இந்த வார ஊழியத்தில் பயன்படுத்துவதற்காக பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ளும்படி சபையாருக்கு நினைப்பூட்டுங்கள்.
பாட்டு 199 (105), முடிவு ஜெபம்.