பிப்ரவரி ஊழியக் கூட்டங்கள்
பிப்ரவரி 6-ல் துவங்கும் வாரம்
பாட்டு 73 (71)
10 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் தற்போதைய பத்திரிகைகளில் உள்ள கட்டுரைகளைச் சிறப்பித்துக் காட்டுவது எவ்வாறு என்பதை நடித்துக்காட்ட செய்யுங்கள்.
17 நிமி:“பிரசங்கித்தல்—கனம்பொருந்திய ஒரு சிலாக்கியம்.” கேள்வி பதில்கள். ஜூலை 15, 1990 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுரம், பக்கம் 19, பாராக்கள் 13-16-ன் அடிப்படையிலான கூடுதல் குறிப்புகளைச் சொல்லுங்கள்.
18 நிமி:“என்றும் வாழலாம் புத்தகத்தைத் திறம்பட்டவகையில் அறிமுகப்படுத்துதல்.” முக்கியக் குறிப்புகளை சபையாரோடு சேர்ந்து மறுபார்வை செய்யுங்கள். பள்ளி துணைநூல் (ஆங்கிலம்) பக்கங்கள் 46-7, பாராக்கள் 9-12-ல் உள்ள குறிப்புகளையும் அதில் சேர்த்துக்கொள்ளுங்கள். உங்களுடைய பிராந்தியத்தில் எவ்வகையான அறிமுகம் பலன்தரத்தக்கதாக இருக்கும் என்பதை கலந்தாலோசியுங்கள். ஓரிரு பிரசங்கங்களை நடித்துக் காட்டச் செய்யுங்கள்.
பாட்டு 82 (26), முடிவு ஜெபம்.
பிப்ரவரி 13-ல் துவங்கும் வாரம்
பாட்டு 103 (87)
5 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. சங்கத்திலிருந்து பெறப்பட்ட நன்கொடை ஒப்புகைகள் ஏதாகிலும் இருந்தால் அவற்றையும் தெரிவியுங்கள்.
10 நிமி:சபையின் தேவைகள். அல்லது செப்டம்பர் 22, 1994 தேதியிட்ட விழித்தெழு! பத்திரிகையில் பக்கங்கள் 13-15-ல் உள்ள “கடவுளைப்பற்றி ஏன் பேசவேண்டும்?” என்ற கட்டுரையின் அடிப்படையில் கொடுக்கப்படும் பேச்சு.
15 நிமி:“இராஜ்யத்தைப்பற்றிய வசனம்—அதன் உட்கருத்தை உணர்ந்துகொள்ளுதல்.” கேள்வி பதில்கள். தங்களுடைய தனிப்பட்ட படிப்பையோ தினவசனம் ஆலோசிப்பதையோ எப்படி மற்றும் எவ்வாறு ஏற்பாடு செய்திருக்கின்றனர் என்று இரண்டு அல்லது மூன்று பேரை சொல்லவையுங்கள்.
15 நிமி:“மற்றவர்களுக்கு அக்கறை காட்டுங்கள்—பாகம் 2.” ஒரு மூப்பரால் நடத்தப்படவேண்டிய பேச்சும் கலந்தாலோசிப்பும். சபையில் பிரச்சினைகள் ஏதேனும் கவனிக்கப்பட்டிருந்தால் அவற்றைக் குறிப்பிட்டுக் காட்டி, பொருத்தமான அறிவுரைகளை வழங்குங்கள்.
பாட்டு 109 (119), முடிவு ஜெபம்.
பிப்ரவரி 20-ல் துவங்கும் வாரம்
பாட்டு 134 (33)
12 நிமி:சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்தி. தற்போதைய பத்திரிகைகளிலிருந்து உள்ளூர் பிராந்தியத்திற்குப் பொருத்தமான கட்டுரைகளைக் குறிப்பிட்டுச் சொல்லுங்கள். அளிப்புகளை நடித்துக் காட்டச் செய்யுங்கள்.
15 நிமி:காவற்கோபுரம், அக்டோபர் 1, 1994, (மாதம் இருமுறை பதிப்புகள்) பக்கங்கள் 26-30-ல் உள்ள “யெகோவாவைத் தெரிந்தெடுக்க உங்கள் பிள்ளைக்கு உதவிசெய்கிறீர்களா?” என்ற கட்டுரையின் அடிப்படையிலான பேச்சு. மூப்பரால் கொடுக்கப்பட வேண்டியது. நல்ல முன்மாதிரியாக உள்ள பிள்ளைகளைக் கொண்ட ஒரு மூப்பரால் கொடுக்கப்படுவது விரும்பத்தக்கது.
18 நிமி:“நீங்கள் சந்தித்த ஆட்களின் அக்கறையைத் தொடர்ந்து அதிகரித்தல்.” சபையாரோடு கலந்தாலோசியுங்கள். என்றும் வாழலாம் புத்தகத்தைப் பெற்றதற்காகப் போற்றுதலைத் தெரிவித்துச் சொன்ன குறிப்புகளைச் சொல்லுங்கள். (ஜூலை 15, 1991, டிசம்பர் 1, 1991 ஆங்கில காவற்கோபுர பத்திரிகைகளில் பக்கம் 32-ஐக் காண்க.) ஆலோசனையாகக் கொடுக்கப்பட்டிருக்கும் பிரசங்கங்கள் எப்படி உபயோகிக்கப்படலாம் என்பதை ஓரிரு சுருக்கமான நடிப்புகள் மூலம் காண்பியுங்கள். ஆர்வம் காட்டுபவர்களோடு படிப்புகளைத் தொடங்க முயற்சிக்கும்படி உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 147 (82), முடிவு ஜெபம்.
பிப்ரவரி 27-ல் துவங்கும் வாரம்
பாட்டு 184 (36)
15 நிமி:சபை அறிவிப்புகள். “புதுப்பிக்கப்பட்ட பொதுப் பேச்சுகளிலிருந்து பயனடைதல்,” கலந்தாலோசிப்பு.
15 நிமி:காவற்கோபுரம், பிப்ரவரி 1, 1995, பக்கங்கள் 26-29-ல் உள்ள “அது யாருடைய தவறு?” என்ற கட்டுரையின் அடிப்படையிலான பேச்சு. மூப்பரால் கொடுக்கப்பட வேண்டியது. நடைமுறைப் பொருத்தத்தைக் காண்பியுங்கள்.
15 நிமி:மார்ச் மாதத்தின்போது இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தை அளித்தல். அதை ஊக்கத்துடன் அளிக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள். பக்கங்கள் 5-7-ல் உள்ள அதன் முன்னுரையில் விவரிக்கப்பட்டிருப்பதுபோல, அதைப் பிரசுரித்ததன் நோக்கத்தை மறுபார்வை செய்யுங்கள். அந்தப் புத்தகத்திற்காகத் தெரிவித்த போற்றுதல்களைச் சொல்லுங்கள். (பிப்ரவரி 1, 1991, மார்ச் 1, 1991, நவம்பர் 15, 1991 ஆகிய ஆங்கில காவற்கோபுர பத்திரிகைகளில் உள்ள பக்கம் 32-ஐக் காண்க.) “இளைஞர் இன்றைய பிரச்சினைகளை வெற்றிகரமாக சமாளிப்பதில் உதவ ஏதாவது செய்யப்படமுடியும் என்று நினைக்கிறீர்களா?” என்ற கேள்வியோடு தொடங்கும் அளிப்பை மறுபார்வை செய்து, சுருக்கமாக நடித்துக்காட்ட செய்யுங்கள். (இந்தக் கேள்விக்குப் பதிலளித்து புத்தகத்தை அளிப்பதற்கான ஆலோசனைகளுக்கு 1994, மார்ச் மாத நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 4-ஐக் காண்க.) வார இறுதி நாட்களில் ஊழியத்தில் உபயோகிக்க பிரதிகளை வாங்கிச் செல்லுமாறு அனைவருக்கும் நினைப்பூட்டுங்கள்.
பாட்டு 207 (112), முடிவு ஜெபம்.