உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 3/95 பக். 2
  • மார்ச் ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மார்ச் ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1995
  • துணை தலைப்புகள்
  • மார்ச் 6-ல் துவங்கும் வாரம்
  • மார்ச் 13-ல் துவங்கும் வாரம்
  • மார்ச் 20-ல் துவங்கும் வாரம்
  • மார்ச் 27-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1995
km 3/95 பக். 2

மார்ச் ஊழியக் கூட்டங்கள்

மார்ச் 6-ல் துவங்கும் வாரம்

பாட்டு 25 (30)

13 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். கேள்விப் பெட்டியைக் கலந்தாலோசியுங்கள்.

15 நிமி:“அதிகம் கொடுக்கப்படுகிறது—அதிகம் கேட்கப்படுகிறது.” கேள்விகளும் பதில்களும். ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் துணைப் பயனியராக சேர்ந்துகொள்ள தகுதிபெறுகிறவர்களை உற்சாகப்படுத்துங்கள்.

17 நிமி:“எவ்வாறு ‘சந்தோஷப்படலாம்’ என்பதை இளைஞருக்குச் சொல்லுதல்.” முக்கியக் குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தைப் பயன்படுத்தியதன்மூலம் அல்லது அளித்ததன்மூலம் அனுபவித்து மகிழ்ந்த அனுபவங்களைக் கூறும்படி சபையாரை அழையுங்கள். அந்தப் புத்தகத்தை அளிப்பதில் நம்பிக்கையான மனநிலையுள்ளவர்களாக இருக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள், ஏனென்றால் ஒவ்வொருவரையும் அக்கறைகொள்ளச் செய்கிற சூழ்நிலைமைகளை அது கலந்தாலோசிக்கிறது. ஓரிரண்டு பிரசங்கங்களை நடித்துக்காட்டும்படி செய்யுங்கள்.

பாட்டு 31 (51), முடிவு ஜெபம்.

மார்ச் 13-ல் துவங்கும் வாரம்

பாட்டு 24 (70)

10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.

15 நிமி:“காலத்திற்கேற்ற ராஜ்ய செய்தி உலகளாவ விநியோகிக்கப்பட வேண்டும்.” மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வரவிருக்கிற இந்த விசேஷ நடவடிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறுங்கள். முழுப் பங்கைக் கொண்டிருக்கும்படி, புதியவர்கள் உட்பட அனைவரையும் உந்துவியுங்கள்.

20 நிமி:“புதிய சிற்றேட்டை திறம்பட பயன்படுத்துதல்.” கட்டுரையை சபையாரோடு கலந்தாலோசியுங்கள். அந்தச் சிற்றேட்டின் அம்சங்களைச் சுட்டிக் காண்பித்து, மரணத்தில் அன்பானவரை இழந்தோரை ஆறுதல்படுத்துவதில் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைக் காண்பிக்கிற ஆலோசனைகளை வழங்குங்கள். சபையில் எந்த மொழிகளில் அது கிடைக்கிறது என்பதைக் குறிப்பிட்டு, கூட்டம் முடிந்தபிறகு பிரதிகளை வாங்கிச் செல்லும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.

பாட்டு 36 (14), முடிவு ஜெபம்.

மார்ச் 20-ல் துவங்கும் வாரம்

பாட்டு 40 (31)

15 நிமி:சபை அறிவிப்புகள். 1995 வருடாந்தரப் புத்தகத்தைக் குடும்பத்தினர் பயன்படுத்துவதை நடித்துக்காட்டுங்கள். குடும்பத் தொகுதியினர் அந்தப் புத்தகத்திற்காக போற்றுதலைத் தெரிவிக்கின்றனர்; 3-11 பக்கங்களிலுள்ள அறிமுக விஷயத்தின் முக்கிய குறிப்புகளை தகப்பன் சுருக்கமாக மறுபார்வை செய்கிறார். ஒவ்வொரு வாரமும் ஒன்றாக சேர்ந்து வருடாந்தரப் புத்தகத்தின் ஒருசில பக்கங்களை வாசிப்பதற்கு எவ்வாறு அவர்கள் முயற்சிசெய்வார்கள் என்பதைக் கலந்தாலோசிக்கலாம். தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தலில் கொடுக்கப்பட்டுள்ள பைபிள் வசனத்திற்கு ஒவ்வொரு நாளும் அவர்கள் கவனம் செலுத்துவதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.

15 நிமி:சபையின் தேவைகள். அல்லது காவற்கோபுரம் நவம்பர் 15, 1994, பக்கங்கள் 26-8-ல் உள்ள பின்வரும் கட்டுரையின்பேரில் பேச்சு: “நீங்கள் வரியைச் செலுத்தவேண்டியிருந்தால், வரியைச் செலுத்துங்கள்.”

15 நிமி:“‘இப்பொழுதே மகத்தான சிருஷ்டிகரை நினைக்க’ இளைஞருக்கு உதவுதல்.” முக்கியக் குறிப்புகளை மறுபார்வை செய்து, ஓரிரண்டு மறுசந்திப்புகளை நடித்துக்காட்டுங்கள்.

பாட்டு 52 (59), முடிவு ஜெபம்.

மார்ச் 27-ல் துவங்கும் வாரம்

பாட்டு 205 (118)

5 நிமி:சபை அறிவிப்புகள்.

15 நிமி:“மனித சரித்திரத்திலேயே மிக முக்கியமான சம்பவம்.” சபையாரோடு கலந்தாலோசியுங்கள். நினைவு ஆசரிப்புக்கான சபை ஏற்பாடுகளை மறுபார்வை செய்யுங்கள். அக்கறையுள்ளோரை நாம் சந்தித்து, ஆஜராக அவர்களுக்கு உதவிசெய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கிக்கூறுங்கள்.

15 நிமி:“பிரச்சினைகளை எவ்வாறு கையாளுவது என்பதில் ஒரு பாடம்.” பிப்ரவரி 15, 1995 காவற்கோபுரம், பக்கம் 26-ல் உள்ள கட்டுரையின்பேரில் மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு. நடைமுறையாக பொருத்திக் காண்பித்து, ஓர் அன்பான முறையில் பேச்சைக் கொடுக்கவேண்டும்; ஆனால் சபையில் இருக்கிற அல்லது இருந்திருக்கிற பிரச்சினைகளைச் சிக்கலாக்காதவாறு அளிப்பதில் கவனமாயிருங்கள்.

10 நிமி:ஏப்ரலில் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்குச் சந்தாக்களை அளித்தல். வீடுகளிலும் சந்தர்ப்ப சாட்சிகொடுக்கையிலும் சந்தாக்களை அளிப்பதைக் குறித்து நம்பிக்கையான மனநிலையுள்ளவர்களாக இருக்கும்படி சபையாரை உற்சாகப்படுத்துங்கள். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் சந்தாக்களை அளிப்பதற்கான பின்வரும் ஆலோசனைகளை மறுபார்வை செய்யுங்கள்: சிநேகப்பான்மையான புன்முறுவலுடன் இருங்கள். உற்சாகத்துடனிருங்கள். மெதுவாகப் பேசுங்கள். ஒரு பத்திரிகையில் ஒரேவொரு கட்டுரையை கலந்தாலோசியுங்கள், ஆனால் பத்திரிகையைத் தவறாமல் பெறுவதன் நன்மைகளை விளக்கிக்கூறுங்கள். வீட்டுக்காரரிடம் பத்திரிகைகளைக் கொடுத்துவிடுங்கள். சந்தா மறுக்கப்பட்டால், காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள் ஒவ்வொன்றிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரதிகளைக் கொடுப்பதற்கு நிச்சயமாயிருங்கள். பத்திரிகைகள் மறுக்கப்பட்டால் நம்பிக்கையான மனநிலையைக் கொண்டிருங்கள். தனிப்பட்ட பிரதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அடுத்த பிரதிகளுடன் மீண்டும் நீங்கள் வருவதைத் தெரியப்படுத்துங்கள். அக்கறைகாட்டுபவர்கள் மற்றும் அளிப்புகள் அனைத்தையும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். மறுசந்திப்பில் மீண்டும் சந்தாவை அளியுங்கள். முடிவாக, சந்தாக்களை அளிப்பதற்கு தற்போதைய பத்திரிகை பிரதிகளைப் பயன்படுத்தி சுருக்கமான ஓரிரண்டு பிரசங்கங்களை நடித்துக்காட்டுங்கள்.

பாட்டு 176 (16), முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்