அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் செப்டம்பர்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை 25.00 ரூபாய் நன்கொடைக்கு (பெரிய அளவு 45.00 ரூபாய்க்கு). வீட்டு பைபிள் படிப்புகளைத் தொடங்க முயற்சி எடுக்கவேண்டும். அக்டோபர்: விழித்தெழு! அல்லது காவற்கோபுரத்துக்கு சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஓராண்டு சந்தா 70.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஓராண்டு சந்தாக்களும் மாதம் இருமறை வரும் பதிப்புகளுக்கு ஆறு-மாத சந்தாக்களும் 35.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு-மாத சந்தாக்கள் கிடையா. நவம்பர்: கூடியபோதெல்லாம், ஆங்கில பரிசுத்த வேதாகமங்களின் புதிய உலக மொழிபெயர்ப்பை பைபிள்—கடவுளுடைய வார்த்தையா மனிதனுடையதா? என்ற ஆங்கில புத்தகத்தோடு சேர்த்து 75.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கவேண்டும். அல்லது கடவுளுக்காக மனிதவர்க்கம் தேடுதல் என்ற ஆங்கில புத்தகத்தை 45.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். ஆங்கிலம் தெரியாத வீட்டுக்காரர்களிடம் விசேஷ அளிப்பு புத்தகங்களாக நம் ராஜ்ய ஊழியத்தில் முன்பு பட்டியலிடப்பட்ட 192-பக்க புத்தகங்களில் ஏதாவதொன்றை 8.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். இன்னும் எங்களிடமுள்ள இந்த வகையான புத்தகங்களின் பட்டியலுக்காக, ஆகஸ்ட் 1995, நம் ராஜ்ய ஊழியத்திலுள்ள அறிவிப்புகள் பத்தியைப் பாருங்கள். குறிப்பிட்ட சில மொழிகளில் இந்த வகையான புத்தகங்கள் எதுவும் எங்களுடைய கையிருப்பில் இல்லாததால், பஞ்சாபி அல்லது பெங்காலி தெரிந்த ஆட்களிடம் நம்முடைய பிரச்னைகள் அல்லது “இதோ!” சிற்றேட்டை அளிக்கலாம், வாழ்க்கையை அனுபவியுங்கள் சிற்றேட்டை நேப்பாளி தெரிந்த ஆட்களிடம் அளிக்கலாம். மலையாளம் விருப்பப்படும் ஆட்களுக்கு, உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் புத்தகத்தை 15.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். விசேஷ விலைக்கு இந்தப் புத்தகத்தை அளிக்கக்கூடாது என்பதை தயவுசெய்து கவனியுங்கள். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை 45.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். அல்லது என்னுடைய பைபிள் கதை புத்தகம் அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை அதே நன்கொடைக்கு அளிக்கலாம். (என்றும் வாழலாம் புத்தகம் சிறிய அளவு 25.00 ரூபாய்). கவனிக்கவும்: மேற்குறிப்பிடப்பட்ட அளிப்புத் திட்டப் பிரசுரங்களை இதுவரை தருவித்திராத சபைகள் தங்களுடைய அடுத்த பிரசுர ஆர்டர் நமூனாவில் (S-AB-14) ஆர்டர் செய்யவேண்டும்.
◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் செப்டம்பர் 1 அல்லது அதற்குப் பிறகு கூடுமானவரை சீக்கிரத்திலேயே சபையின் கணக்கைத் தணிக்கை செய்ய வேண்டும். இது செய்யப்பட்டதும் சபைக்கு அறிவிப்பு செய்யுங்கள்.
◼ அக்டோபர் மாதத்தில் துணைப் பயனியர்களாக சேவிக்க திட்டமிடும் பிரஸ்தாபிகள், தங்களுடைய விண்ணப்பத்தை முன்னதாகவே சமர்ப்பிக்க வேண்டும். இது, பிரசுரங்கள் மற்றும் பிராந்தியத்திற்காக தேவையான ஏற்பாடுகளை மூப்பர்கள் செய்வதற்கு அனுமதிக்கும்.
◼ மீண்டும் நிலைநாட்டப்பட மனச்சாய்வுள்ள சபைநீக்கம் செய்யப்பட்ட அல்லது தொடர்பறுத்துக்கொண்ட எந்தவொரு நபரின் சம்பந்தமாக, ஏப்ரல் 15, 1991, ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 21-3-ல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளைப் பின்பற்றும்படி மூப்பர்களுக்கு நினைப்பூட்டப்படுகிறது.
◼ பூனாவில் நடைபெறும் “சந்தோஷமாய் துதிப்போர்” மாவட்ட மாநாட்டிற்கான தலைமையலுவலக விலாசம், Mr. P. Suryavanshi, Flat F-28, Pimple Apartments, Near Post Office, Kasarwadi, Pune, MAH 411034 என்பதாக மாற்றப்பட்டுள்ளது.