எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்காக செய்யுங்கள்
1 நம்முடைய அன்பான சகோதர சகோதரிகளுடன் கூட்டுறவுகொள்வது எவ்வளவு புத்துணர்ச்சியளிப்பதாய் இருக்கிறது! (1 கொ. 16:17, 18) இதை நாம் கூட்டங்களில், மாநாடுகளில், மற்றும் வெளி ஊழியத்தில் செய்கிறோம். நம்முடைய வீட்டிற்கு விருந்தினர்கள் சந்திக்க வரும்போது செய்வதுபோல, சந்தர்ப்பவசமான சமயங்களிலும்கூட நாம் தோழமைகொள்கிறோம். அவ்விதமாக செய்வதன்மூலம், உபசரிப்புத்தன்மையைக் காட்டுகிறோம், ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிறோம். (ரோ. 12:13; 1 பே. 4:9) திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யும்போது, காவற்கோபுரம், ஏப்ரல் 1, 1985 இதழில் உள்ள சிறந்த ஆலோசனையை நினைவில் வைத்திருங்கள். விசேஷமாக, கூடிவருவோரின் அளவைத் தீர்மானிப்பதன்பேரிலும், எல்லா காரியங்களும் கடவுளுடைய மகிமைக்காக நடக்கும்படி கூட்டத்தை எவ்வாறு கட்டுப்படுத்த வேண்டும் என்பதன்பேரிலும் பக்கம் 19, 20-ல் உள்ள அறிவுரையை கவனியுங்கள்.
2 ஒழுங்கமைக்கப்பட்ட சமூக நடவடிக்கைகள்: நாம் ‘புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்ய’ வேண்டும். (1 கொ. 10:31-33) இந்த ஆலோசனையை சிலர் கடைப்பிடிப்பதில்லை, சரியாக மேற்பார்வை செய்ய முடியாதளவுக்கு சமூகக் கூட்டங்கள் மிகப் பெரியவையாக இருப்பதால் பிரச்சினைகள் தொடர்ந்து வளருகின்றன. சில சந்தர்ப்பங்களில், உலகப்பிரகாரமான பொழுதுபோக்கை சிறப்பித்துக் காட்டுகிற ஆடம்பரமான நிகழ்ச்சிநிரல்களுக்கு நூற்றுக்கணக்கானவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஆஜராகுபவர்கள், அனுமதிக் கட்டணத்தை அல்லது மற்ற கட்டணங்களை செலுத்தும்படி சிலசமயங்களில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்படிப்பட்ட கூட்டங்கள் உலகப்பிரகாரமான நடவடிக்கைகளுடன் நெருங்கியவிதமாக தொடர்புடையவையாய் இருக்கின்றன; இத்தகைய மனப்பான்மை நல்லொழுக்கம் மற்றும் பைபிள் நியமங்களுக்கு முரணாக இருக்கிறது.—ரோ. 13:13, 14; எபே. 5:15-20.
3 பெரும் எண்ணிக்கையான சாட்சிகள், வாடகைக்கு அமர்த்தப்பட்ட மன்றங்களில் கூடிவந்திருக்கிறார்கள்; அங்கு நடைபெறும் பொழுதுபோக்கு, ஆரோக்கியமற்றதாகவும் உலகப்பிரகாரமானதாகவும் சரியான மேற்பார்வையில்லாததாகவும் இருக்கிறது என்பதாக அறிக்கை செய்யப்பட்டிருக்கிறது. ஒரு “யெகோவாவின் சாட்சி” வாரயிறுதியாக விளம்பரப்படுத்தப்படும் இதுபோன்ற நடவடிக்கைகள், ஹோட்டல்களில் அல்லது கூடுமிடங்களில் நடத்தப்பட்டிருக்கின்றன. இத்தகைய பெரிய தொகுதிகளை சரியான விதத்தில் மேற்பார்வை செய்வதில் உள்ள கஷ்டத்தின் காரணமாக பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன. ரௌடித்தனம், மதுபானங்களில் மிதமிஞ்சிய சுகபோகம், சிலசமயங்களில் ஒழுக்கயீனம்கூட நடந்திருக்கின்றன. (எபே. 5:3, 4) இப்படிப்பட்ட நடத்தை சம்பவிக்கிற சமூகக் கூட்டுறவுகள் யெகோவாவை கனப்படுத்துவதில்லை. அதற்கு மாறாக, சபையின் நற்பெயருக்கு இழுக்கைக் கொண்டுவந்து மற்றவர்களுக்கு இடறலுண்டாக்குகின்றன.—1 கொ. 10:23, 24, 29.
4 உபசரிப்புத்தன்மையைக் காட்டும்படி கிறிஸ்தவர்கள் உற்சாகப்படுத்தப்படுகிறார்கள், ஆனால் முக்கியத்துவம் ஆவிக்குரிய பரிமாற்றத்தின்பேரில் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும். (ரோ. 1:10, 11) பொதுவாக சிறியளவிலான தோழமை கூட்டங்கள் மிகச் சிறந்தவையாக இருக்கின்றன. நம் ஊழியம் புத்தகம், பக்கங்கள் 135-6 இவ்வாறு சொல்கிறது: “சில சமயங்களில் கிறிஸ்தவ கூட்டுறவுக்காகப் பல குடும்பங்கள் ஒரு வீட்டுக்கு வரவழைக்கப்படலாம். . . . நியாயமாகவே, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் உபசரிக்கிறவர்கள் அங்கு நடக்கும் காரியங்களுக்குத் தாங்கள்தாமே பொறுப்பாளிகளாக உணரவேண்டும். இதை மனதில்கொண்டு, தெளிந்துணர்வுள்ள கிறிஸ்தவர்கள் இவ்விதக் கூட்டங்களின் அளவையும் நீடிப்பையும் மட்டுப்படுத்துவதை ஞானமாகக் கண்டிருக்கிறார்கள்.” நம்முடைய நண்பர்களை ஆவிக்குரிய விதமாக உற்சாகப்படுத்துவது நம் இலக்காக இருக்கும்போது, ஆடம்பரமானது ஒன்றும் அவசியமில்லை என்பதை இயேசு சுட்டிக்காட்டினார்.—லூக். 10:40-42.
5 உடன் கிறிஸ்தவர்களுக்கு உபசரிப்புத்தன்மையைக் காட்டுவது ஒரு நல்ல காரியம். என்றபோதிலும், நம்முடைய வீட்டில் கூடிவருகிற அடக்கமான கூட்டுறவிற்கும், வாடகைக்கு அமர்த்தப்பட்ட மன்றத்தில் உலகப்பிரகாரமான ஆவியை வெளிப்படுத்துகிற ஆடம்பரமான நடவடிக்கைக்கும் இடையே பெருத்த வித்தியாசம் இருக்கிறது. உங்களுடைய விருந்தினராக இருக்கும்படி நீங்கள் மற்றவர்களை அழைக்கையில், அங்கு நடக்கும் காரியங்களுக்கான முழுப் பொறுப்பையும் நீங்கள் எடுத்துக்கொள்ள முடியும் என்பதைக் குறித்து நிச்சயமாயிருக்க வேண்டும்.—நவம்பர் 15, 1992 காவற்கோபுரம், பக்கங்கள் 17-20-ஐக் காண்க.
6 உண்மையிலேயே, சகோதரத்துவத்தினால் யெகோவா நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்; நற்காரியங்களில் தொடர்ந்து வளருவதற்கு நம்மை உந்துவிக்கிற புத்துணர்ச்சியளிக்கும் உற்சாகத்தை அதிலிருந்து நாம் பெற்றுக்கொள்கிறோம். (மத். 5:16; 1 பே. 2:12) சமூக நடவடிக்கைகளில் அடக்கத்தையும் நியாயமான தன்மையையும் காண்பிப்பதன் மூலம், எப்பொழுதும் நம்முடைய தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருகிறவர்களாகவும் மற்றவர்களைக் கட்டியெழுப்புகிறவர்களாகவும் இருப்போம்.—ரோ. 15:2.