செப்டம்பர் ஊழியக் கூட்டங்கள்
செப்டம்பர் 4-ல் துவங்கும் வாரம்
பாட்டு 224 (106)
10 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும்.
20 நிமி:“யெகோவாவால் பரிசோதிக்கப்படுதல்—ஏன் பயனுள்ளது?” மூப்பரால் கொடுக்கப்படும் உற்சாகமான பேச்சு.
15 நிமி:“மற்றவர்கள்தாமே பயன்பெற அவர்களுக்கு உதவுங்கள்.” ஆலோசனையாகக் கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்களை மறுபார்வை செய்யுங்கள், பின்பு சுருக்கமான இரு நடிப்புகளைக் கொண்டிருங்கள்.
பாட்டு 204 (109), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 11-ல் துவங்கும் வாரம்
பாட்டு 216 (49)
10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
20 நிமி:“1995 ‘சந்தோஷமாய் துதிப்போர்’ மாவட்ட மாநாடு.” 1-16 பாராக்களை கேள்வி பதில் மூலம் கலந்தாலோசித்தல்.
15 நிமி:“உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் என்ன இலக்குகளை வைத்திருக்கிறீர்கள்?” கேள்விகளும் பதில்களும். தங்களுடைய இளமைப் பருவத்திலிருந்து யெகோவாவை சேவித்திருக்கிற முன்மாதிரியாக உள்ள ஓரிரண்டு இளைஞர்கள் அல்லது முதியவர்கள், ராஜ்ய அக்கறைகளை மையமாக வைத்து பயனுள்ள இலக்குகளைத் தெரிவுசெய்வதற்கு தங்களுடைய பெற்றோர்கள் எவ்வாறு உதவினார்கள் என்பதை சுருக்கமாக விவரிக்கும்படி செய்யுங்கள்.
பாட்டு 187 (93), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 18-ல் துவங்கும் வாரம்
பாட்டு 168 (84)
10 நிமி:சபை அறிவிப்புகள்.
15 நிமி:“எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்காக செய்யுங்கள்.” மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சும் சபையாருடன் நடத்தப்படும் கலந்தாலோசிப்பும். நேரம் அனுமதிக்கிறபடி, ஆகஸ்ட் 15, 1992, ஆங்கில காவற்கோபுரம், பக்கங்கள் 15-20-ஐ சார்ந்து கூடுதலான குறிப்புகள் சொல்லுங்கள்.
20 நிமி:“1995 ‘சந்தோஷமாய் துதிப்போர்’ மாவட்ட மாநாடு.” 17-28 பாராக்களை கேள்வி பதில் மூலம் கலந்தாலோசித்தல். “மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்” பகுதியை மறுபார்வை செய்யுங்கள். நேரம் அனுமதிக்கிறபடி, ஜூலை 1995 ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையிலிருந்து எடுக்கப்பட்ட பொருத்தமான குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள்.
பாட்டு 162 (89), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 25-ல் துவங்கும் வாரம்
பாட்டு 177 (94)
10 நிமி:சபை அறிவிப்புகள்.
15 நிமி:“குடும்ப பைபிள் படிப்பு—கிறிஸ்தவர்கள் கொடுக்கவேண்டிய ஓர் முன்னுரிமை.” சபையாருடன் கலந்தாலோசிப்பு. முன்மாதிரியான குடும்பத்தைக் கொண்டிருக்கிற ஒரு மூப்பரால் கையாளப்பட வேண்டும். குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினருடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஓர் ஒழுங்கான படிப்பு அத்தியாவசியம் என்பதை வலியுறுத்திக் கூறுங்கள். மே 15, 1994 காவற்கோபுரம், பக்கம் 14, பாரா 18-ல் உள்ள குறிப்புகளை வாசித்து எடுத்துரையுங்கள்.
20 நிமி:“மற்றவர்கள் பயன்பெற அக்கறை காண்பித்த அனைவரையும் மீண்டும் சந்தியுங்கள்.” மறுசந்திப்புகளுக்காக ஆலோசனையாக கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்களை மறுபார்வை செய்யுங்கள். இந்தப் பாகத்தைக் கையாளுகிற சகோதரர், இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகள் சொல்லப்போவதை அவர்களுடன் கலந்தாலோசித்து, பின்பு அவர்களுடைய பிரசங்கங்களை நடித்துக் காண்பிக்கும்படி அவர்களைக் கேட்டுக்கொள்கிறார்.
பாட்டு 193 (103), முடிவு ஜெபம்.