நினைவு ஆசரிப்பு நினைப்பூட்டுதல்கள்
ஏப்ரல் 2, செவ்வாய்க்கிழமை அன்று நினைவு ஆசரிப்பை அனுசரிப்பதற்கு முன் பின்வரும் காரியங்களுக்குக் கவனம் செலுத்த வேண்டும்:
◼ ஆசரிப்பின் சரியான நேரத்தையும் இடத்தையும் பேச்சாளர் உட்பட அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும்.
◼ உரிய அப்பம் மற்றும் திராட்சரசத்தின் வகையைத் தருவித்து, தயாராக வைக்கவேண்டும்.—காவற்கோபுரம் மார்ச் 1, 1985, பக்கம் 13-ஐ பார்க்கவும்.
◼ பொருத்தமான மேசை, ஒரு மேசை விரிப்பு, தட்டுகள், கோப்பைகள் ஆகியவற்றை முன்னதாகவே மன்றத்திற்கு கொண்டுவந்து, அதனதன் இடத்தில் ஒழுங்கமைக்க வேண்டும்.
◼ ராஜ்ய மன்றத்தையோ கூட்டம் நடத்தவிருக்கும் வேறு இடத்தையோ முன்கூட்டியே முழுமையாகச் சுத்தம் செய்யவேண்டும்.
◼ அட்டன்டண்டுகளையும் பரிமாறுபவர்களையும் தேர்ந்தெடுத்து, சரியான செயல்முறை மற்றும் அவர்களுடைய பொறுப்புகளைப் பற்றி முன்னதாகவே அறிவுறுத்த வேண்டும்.
◼ அபிஷேகம் செய்யப்பட்டவரில் எவரேனும் முதுமையின் காரணமாகப் பலவீனமாக இருப்பதனால், வரமுடியாமல் இருந்தால் அவர்களுக்குப் பரிமாறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும்.
◼ ஒரே ராஜ்ய மன்றத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆசரிப்புகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்தால், முகப்பு அறையிலும், நுழைவாயிலிலும், மன்றத்தின் வெளியே நடைபாதையிலும், வாகனம் நிறுத்தும் இடத்திலும் தேவையற்ற நெரிசலை தவிர்ப்பதற்காகச் சபைகளுக்கிடையே நல்ல ஒத்துழைப்பு இருத்தல் அவசியம்.