தயாரிப்பு—வெற்றிக்குத் திறவுகோல்
1 வெளி ஊழியத்தில் பங்கேற்பதைப் பற்றி ஒருவேளை ஒருவர் உணரும் எந்தவொரு தயக்கத்தையும் மேற்கொள்ள ஊழியத்திற்கான முன்தயாரிப்பு உதவும். கதவண்டைக்கு நீங்கள் செல்லும்போதே, வீட்டுக்காரர்களிடத்தில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பதை அறிந்திருப்பீர்கள். ஒருவேளை எதிர்ப்பட நேரும் கடினமான சூழ்நிலைகளைப் பற்றி திகில் அடையவேண்டிய அவசியமில்லை. ஊழியம் செய்து வீடு திரும்பும்போது, ஊழியத்தில் நல்ல முயற்சியை நீங்கள் எடுத்தீர்கள் என்ற மனநிறைவுடன், உற்சாகம் அளிக்கப்பட்டவராய் உணருவீர்கள். ஆம், முழுமையான தயாரிப்பே நமது பிரசங்கிக்கும் மற்றும் போதிக்கும் திறமைகளை முன்னேற்றுவிக்கும் திறவுகோலாக இருக்கிறது.
2 ‘சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாய்’ இருக்கும்படி பவுல் துரிதப்படுத்துவதன் மூலம் ஆயத்தநிலையை வலியுறுத்தினார். (எபே. 6:15) இது, நம் மனதையும் இருதயத்தையும் தயார் செய்வதையும் கூடவே நம்பிக்கையான நோக்குநிலையை மற்றும் ஆர்வமான மனப்பான்மையைப் பெறுவதையும் உட்படுத்துகிறது. மற்றவர்களுடன் சத்தியத்தைப் பகிர்ந்துகொள்ள தயாராக நாம் இருக்கையில், நம் உழைப்பிற்காக ராஜ்ய பலனை பரிசாகப் பெறுவோம், அது நம்மை மகிழ்விக்கும்.—அப். 20:35.
3 பிரசங்க வேலைக்காகத் தயாரிப்பது எப்படி: நாம் இதமாக உணரக்கூடிய சம்பாஷணையைத் தெரிவுசெய்ய வேண்டும், ஒருவேளை நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலோ நம் ராஜ்ய ஊழியத்தின் கடைசி பக்கத்திலோ கொடுக்கப்பட்டிருக்கும் ஆலோசனைகளிலிருந்து தெரிவுசெய்யலாம். நீங்கள் உபயோகிக்க நினைத்திருக்கும் வசனத்தின் பேரிலும், முக்கிய கருத்தை சிறப்பித்துக் காண்பிக்க என்ன சொற்களை அல்லது சொற்றொடர்களை வலியுறுத்தப்போகிறீர்கள் என்று தீர்மானிப்பதன் பேரிலும் கவனமான சிந்தனையைச் செலுத்துங்கள். சம்பாஷணையை மனப்பாடம் செய்யவேண்டிய அவசியமில்லை; அதற்கு மாறாக, கருத்தை மனதில் ஏற்பதுதான் மிகவும் சிறந்தது, உங்களுடைய சொந்த வார்த்தைகளில் சொல்லுங்கள், உங்களிடத்தில் கேட்டுக்கொண்டிருப்பவர் ஏற்றுக்கொள்வார் என நீங்கள் நினைக்கும் கருத்தைத் தெரியப்படுத்துங்கள்.
4 நீங்கள் அளிக்கவேண்டும் என்று திட்டமிட்டிருக்கும் பிரசுரத்தை ஆராய்ந்து பார்த்து, அக்கறையைத் தூண்டும் சில பேச்சுக்குறிப்புகளைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் பிராந்தியத்தில் உள்ள மக்களின் அக்கறையை ஈர்க்கும் என்று நீங்கள் நினைக்கும் ஏதேனும் சிலவற்றை தேர்ந்தெடுங்கள். ஆண், பெண், வயதானவர் அல்லது இளைஞர் என பல்வேறு வீட்டுக்காரர்களுக்கு ஏற்றவாறு, எவ்வாறு உங்களுடைய சம்பாஷணையைச் சற்று மாற்றியமைக்கலாம் என்று யோசித்துப் பாருங்கள்.
5 பயிற்சி நேரங்களைக் கொண்டிருக்க நீங்கள் முயற்சி செய்திருக்கிறீர்களா? குடும்ப அங்கத்தினர்களுடன் அல்லது மற்ற பிரஸ்தாபிகளுடன் ஒன்றுகூடி வந்து, என்ன சம்பாஷணைகள் திறம்பட்டவையாக இருக்கின்றன என்று கலந்தாலோசிக்கலாம், அதன்பிறகு, அவற்றைச் சத்தமாக ஒத்திகைப் பார்க்கலாம்; அப்போது அவை அனைவரின் மனதிலும் நன்கு பதியும். பிராந்தியத்தில் எதிர்ப்படவிருக்கும் உண்மையான நிலவரங்களையும் எதிர்ப்புகளையும் பாவனை செய்ய முயலுங்கள். அத்தகைய பயிற்சி, சரளமாகப் பேசுவதில் உங்கள் திறமையை முன்னேற்றுவிக்கும், பிரசங்கிப்பில் உங்கள் திறம்பட்டத்தன்மையை அதிகரிக்கும், உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும்.
6 உங்களுடைய சம்பாஷணையைத் தயாரிப்பது, பயிற்சி செய்வதுடன் கூடவே உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளவும் வேண்டும், ‘நான் அணிந்துசெல்ல நினைத்திருக்கும் உடை ஊழியத்திற்கு ஏற்றதாக இருக்குமா? நான் உபயோகிக்க நினைத்திருக்கும் பிரசுரம் உட்பட, என் பையில் தேவையானவற்றை நான் வைத்திருக்கிறேனா? அவை நல்ல நிலையில் இருக்கின்றனவா? நான் என்னுடைய நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தையும், துண்டுப்பிரதிகளையும், வீட்டுக்கு வீடு பதிவு சீட்டுகளையும் ஒரு பேனாவையும் வைத்திருக்கிறேனா?’ யோசனையுடன் முன்னரே திட்டமிடுதல், ஊழியத்தில் அதிக பலனுள்ள நாளைப் பெற வழிவகைச் செய்யும்.
7 நம்மைத் தயாரிப்பதில் நம்மால் இயன்றவரை சிறப்பாகச் செய்து முடித்தபின், நாம் வெற்றியடைய யெகோவாவின் ஆவிக்காக ஜெபம் செய்ய வேண்டும். (1 யோ. 5:14, 15) தயாரிப்புக்கு எச்சரிக்கையுடன் கவனம் செலுத்துதல், நம் ஊழியத்தில் இன்னும் அதிக மகிழ்ச்சியைக் காண்பதில் விளைவடையும், ஏனெனில் நாம் ‘ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றுவோம்.’—2 தீ. 4:5, NW.