செப்டம்பர் ஊழியக் கூட்டங்கள்
செப்டம்பர் 2-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். “எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் படிப்பது” என்ற ஏப்ரல் 1993 நம் ராஜ்ய ஊழியம் கட்டுரையை மறுபார்வை செய்யும்படி ஒவ்வொருவரையும், விசேஷமாக சபை புத்தகப் படிப்பு நடத்துபவர்களை உற்சாகப்படுத்துங்கள். கட்டுரையின் முக்கிய குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.
15 நிமி: “விசுவாசித்து நடத்தல்.” கேள்விகளும் பதில்களும்.
18 நிமி: “உடன்பாடான மனப்பான்மையுடன் நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்.” பாரா 1-ன் அடிப்படையில், அறிமுக வார்த்தைகளைக் கூறுங்கள். குடும்ப வாழ்க்கை புத்தக அளிப்புக்குப் பதிலாக, என்றும் வாழலாம் அல்லது படைப்பு புத்தகங்களைப் பயன்படுத்தலாம் என்று விளக்குங்கள்; ஆனால் குடும்ப வாழ்க்கை புத்தகங்களைச் சபை வைத்திருக்கும்வரை, இவை முதலாவதாகப் பயன்படுத்தப்பட வேண்டும். பின்னர், கட்டுரையின் 2-5 பாராக்களை மட்டும் கலந்தாராயுங்கள். குடும்ப வாழ்க்கை புத்தகத்தை அளிப்பது, மறுசந்திப்பு செய்வது, அறிவு புத்தகத்தில் ஒரு படிப்பை ஆரம்பிப்பது எப்படி என்பவற்றைக் காண்பிக்கும் நன்கு தயாரிக்கப்பட்ட நடிப்புகளை நடித்துக்காட்டுங்கள்.
பாட்டு 48, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 9-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. “ராஜ்யத்தைப் பிரசங்கிப்பீர்” என்ற பகுதியைக் கலந்துபேசுங்கள்.
18 நிமி: சபையின் 1996-ம் ஆண்டு ஊழிய அறிக்கையை மறுபார்வை செய்யுங்கள். ஊழிய கண்காணியால் கொடுக்கப்படுகிற கட்டியெழுப்பும், உற்சாகமளிக்கும் பேச்சு. (நம் ஊழியம் புத்தகம், பக்கங்கள் 100-2-ஐக் காண்க.) சபையினர் எந்தெந்த அம்சங்களில் நன்றாகச் செய்தனர் என்பதைக் குறிப்பிட்டு பாராட்டுங்கள். உள்ளூரில் ஊழிய நடவடிக்கையை மேம்படுத்த உதவுவதில் ஒழுங்கான மற்றும் துணைப் பயனியர்களின் பங்கு எப்படி அதிகத்தை சாதித்திருக்கிறது என்பதை எடுத்துக்காண்பியுங்கள். கூட்டங்களுக்கு ஆஜரானவர்களின் எண்ணிக்கைகளைக் குறிப்பிட்டு, ஒழுங்காகக் கூட்டத்திற்கு வர வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் காண்பியுங்கள். வருகிற ஆண்டில் அடைவதற்கு சபை முயற்சிசெய்யக்கூடிய நடைமுறையான இலக்குகளைக் குறிப்பிடுங்கள்.
15 நிமி: “உடன்பாடான மனப்பான்மையுடன் நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்.” பாராக்கள் 6-8-ஐ மறுபார்வை மட்டும் செய்து, கடைக்குக் கடை அளிப்புகளில் முதல் சந்திப்பு நடத்துவதையும் மறுசந்திப்பு நடத்துவதையும் நடித்துக்காட்டுங்கள். (வியாபார பிராந்தியத்தில் ஊழியம்செய்வது பற்றி கூடுதலான ஆலோசனைகளை அக்டோபர் 1989, நம் ராஜ்ய ஊழியம் (ஆங்கிலம்), பக்கம் 4-ல் காண்க.) எல்லாரையும் காலந்தாழ்த்தாமல் தங்கள் மறுசந்திப்புகளைச் செய்யும்படி உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 123, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 16-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். கேள்விப் பெட்டியைச் சபையாருடன் கலந்துபேசுங்கள். பள்ளி துணைநூலின் படிப்பு 6-லிருந்து இரண்டொரு குறிப்புகளைச் சுருக்கமாக இணைத்துப் பேசுங்கள்.
15 நிமி: “பேச்சிலும் நடத்தையிலும் ஓர் எடுத்துக்காட்டாக இருங்கள்.” கேள்விகளும் பதில்களும்.
15 நிமி: பள்ளியில் கிறிஸ்தவ நடத்தை. பள்ளிச் சூழலில் உள்ள சீரியஸான படுகுழிகளைக் குறிப்பிட்டுக் காட்டுவதற்காகத் தகப்பன் தன் மகனிடமோ மகளிடமோ பேசுகிறார்; கூட்டுறவில் ஜாக்கிரதையாக இருக்கவும், கேள்விக்குரிய செயல்களைத் தவிர்க்கவும் வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறார். கல்வி (ஆங்கிலம்) சிற்றேட்டில் பக்கம் 24-ல் உள்ள பெட்டியை மறுபார்வை செய்து, ஒரு சாட்சியாக நல்ல முன்மாதிரி வைக்க வேண்டிய தேவையை விளக்குகிறார். போதை மருந்துகளைப் பயன்படுத்துதல், எதிர்பாலார் பழகுவதற்கான சந்திப்பு, தோழமைக் கூட்டங்களில், அல்லது போட்டி விளையாட்டுகளில் பங்கெடுத்தல் போன்றவை சம்பந்தமாக எழக்கூடிய சில தூண்டுதல்களைத் தகப்பனார் குறிப்பிடுகிறார்; பிரச்சினைகளை எவ்வாறு தவிர்ப்பது என்பதை அவர்கள் கலந்துரையாடுகின்றனர். இளைஞன் கஷ்டங்களை எதிர்ப்படுகையில் தன்னிடம் சொல்லிவிடுவதைத் தள்ளிப்போட வேண்டாம்—அவர் கஷ்டங்களை அறிந்துகொள்ளவும், உதவிசெய்யவும் விரும்புகிறார்—என்று தகப்பனார் இளைஞனை உற்சாகப்படுத்துகிறார்.
பாட்டு 32, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 23-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: சபை தேவைகள். அல்லது பிப்ரவரி 15, 1996, காவற்கோபுரம், பக்கங்கள் 27-9-ஐ அடிப்படையாகக் கொண்டு, “நீங்கள் காண்பனவற்றிற்கும் அப்பால் பாருங்கள்!” என்பதன்பேரில் ஒரு பேச்சு.
20 நிமி: “1996 ‘தேவ சமாதான தூதுவர்கள்’ மாவட்ட மாநாடு.” பாராக்கள் 1-16-ன் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாராக்கள் 10-11 மற்றும் 15-ஐப் படியுங்கள்.
பாட்டு 215, முடிவு ஜெபம்.
செப்டம்பர் 30-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
20 நிமி: “1996 ‘தேவ சமாதான தூதுவர்கள்’ மாவட்ட மாநாடு.” பாராக்கள் 17-23-ன் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாராக்கள் 17-18-ஐப் படியுங்கள். “மாவட்ட மாநாட்டு நினைப்பூட்டுதல்கள்” பகுதியை மறுபார்வை செய்யுங்கள்.
15 நிமி: அக்டோபருக்கான பிரசுர அளிப்பை மறுபார்வை செய்யவும். காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்குச் சந்தாக்களை நாம் அளிப்போம். பின்வருவன போன்ற பல்வேறு குறிப்புகளைக் கலந்தாராயுங்கள்: (1) ஆரம்ப பக்கங்களில் விளக்கப்பட்டிருப்பதுபோல பத்திரிகைகள் பிரசுரிக்கப்படுவதற்கான நோக்கம். (2) அவை, உலகமெங்கும் பைபிள் அறிவைக் கிடைக்கக்கூடியதாய் ஆக்குவதற்காக, அநேக மொழிகளில் பிரசுரிக்கப்படுகின்றன. (3) காவற்கோபுரம் தனிப்பட்ட, குடும்ப, தொகுதி படிப்புக்கு ஏற்ப தயாரிக்கப்படுகிறது. (4) பலதரப்பட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் அவற்றைப் படிக்கிறார்கள். (5) அவற்றைப் படிக்க உண்மையில் விரும்பி, ஆனால் ஒரு சந்தாவுக்கு ஒத்துக்கொள்ள முடியாத எவருக்கும் நேரடியாக வந்து புதிய இதழ்களைக் கொடுப்போம். (6) அவை விசேஷமாக அதிக அலுவலாய் இருக்கும் மக்களுக்காகத் தயாரிக்கப்படுகின்றன. (7) காவற்கோபுரம் 1879 முதலும்; விழித்தெழு! 1919 முதலும் பிரசுரிக்கப்படுகின்றன. (8) எங்கள் சேவை, வாலண்டியர் மற்றும் கல்விபுகட்டும் சேவை, வியாபாரமல்ல. ஆகவே இந்தப் பத்திரிகைகளுக்கான நன்கொடை மிகவும் நியாயமான அளவே. ஒரு போற்றுதல் மனப்பான்மையுள்ள வாசகர் ஒருவரின் குறிப்புகளைச் சொல்லி முடியுங்கள்.—ஏப்ரல் 15, 1986, காவற்கோபுரம் (ஆங்கிலம்), பக்கம் 32-ஐக் காண்க.
பாட்டு 3, முடிவு ஜெபம்.