“என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்”
1 காலம் கரைந்தோடுகையில் முக்கிய விஷயங்களின் முக்கியத்துவத்தையும் மக்கள் மெதுமெதுவாய் மறந்துவிடுவார்கள். ‘கர்த்தருடைய இராப்போஜனத்தை’ தொடங்கிவைத்தபோது இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டதற்கு இதுவும் ஒரு காரணம். இயேசு சொன்னபடியே அன்றுமுதல் ஒவ்வொரு வருடமும் அவர் இறந்த நாளன்று கிறிஸ்தவர்கள், ‘கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவித்துவருகிறார்கள்.’—1 கொ. 11:20, 21, 23-26.
2 எண்ணிக்கையில் குறைந்து வரும் ‘சிறுமந்தையை’ இயேசு வெகுவிரைவில் பரலோக வாசஸ்தலத்துக்கு அழைத்துக்கொள்ள போகிறார். (லூக். 12:32; யோவா. 14:2, 3) அபிஷேகம் செய்யப்பட்ட இந்த மீதியானோரும், எண்ணிக்கையில் எந்நாளும் பெருகிவரும் திரள் கூட்டத்தினர் அடங்கிய “வேறே ஆடுகளும்” ஒன்றாகச்சேர்ந்து, இவ்வருடம் ஏப்ரல் 11-ம் தேதி கர்த்தருடைய இராப்போஜனத்தை கொண்டாடும் அரிய வாய்ப்பை கொண்டிருப்பர். (யோவா. 10:16; வெளி. 7:9, 10) யெகோவா தமது ஒரே பேறான குமாரனை மனிதகுலத்திற்காக அனுப்பிவைத்ததில் காட்டிய அளவற்ற அன்பின்மீதுள்ள போற்றுதல் இன்னும் வலுப்படுத்தப்படும். இயேசுவின் முன்மாதிரி, அவரது அன்பு, கிரய பலியை செலுத்த இறக்கும்வரை அவருக்கு இருந்த விசுவாசம், இன்று அரசராக கடவுளுடைய ஸ்தாபிக்கப்பட்ட ராஜ்யத்தில் அவரது ஆட்சி, மனிதகுலத்திற்கு அந்த ராஜ்யம் கொண்டுவரவிருக்கும் ஆசீர்வாதங்கள் என இவற்றின் சிறப்புகள் எடுத்துரைக்கப்படும். கண்டிப்பாக நினைவுகூரவேண்டிய சந்தர்ப்பமே!
3 இப்போதே தயாராகுங்கள்: இந்த நினைவு ஆசரிப்பு காலத்தை நமக்கும் நம்மோடு கூட்டுறவு கொள்வோருக்கும் மகிழ்ச்சிப்பொங்கும் காலமாகவும், நன்றியேறெடுக்கும் காலமாகவும் மாற்றிட அனைவரும் கடினமாக உழைப்போமாக. இயேசு கடைசியாக ஊழியத்தில் செலவிட்ட அந்த ஒருசில நாட்களைப் பற்றிய பதிவுகளையும், அவரது மரணத்திற்கு வழிநடத்திய சம்பவங்களையும் மறுபடியும் பைபிளில் வாசித்து நாம் நம் மனதை தயார்செய்து கொள்ளலாம். நினைவுகூரும் தினம் வருவதற்கு பல வாரங்களுக்கு முன்பே, மிகப் பெரிய மனிதர் புத்தகத்திலிருந்து 112-16 அதிகாரங்களை நம்முடைய குடும்பப் படிப்பில் கலந்தாலோசிக்க நேரத்தை ஒதுக்கலாம்.
4 நினைவு ஆசரிப்புக்கு வரும்படி, நீங்கள் கொஞ்சம் வலியச்சென்று ஊக்கம் தந்து, இந்நிகழ்ச்சியை மதித்துணரும்படி செய்து, அழைப்பு கொடுத்து, வரவேற்று மதிப்பாக நடத்தினால் எத்தனை பேர் வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்? இவ்வாறு வரக்கூடியவர்களின் பெயர்களைப் பட்டியலிடுங்கள்; அவர்கள் வந்துசேர உங்களால் என்னென்ன உதவிகள் செய்ய முடியுமோ அவற்றை செய்யுங்கள். அதன்பிறகு, அவர்களை கூட்டங்களுக்கு தவறாமல் வரும்படி ஊக்கம் தந்து, தொடர்ந்து ஆன்மீக ரீதியில் வளர்ச்சியடைய உதவுங்கள்.
5 நம் ஒவ்வொருவருக்கும் பிரசங்கிக்கும் வாய்ப்புகள் நிறைய கிடைக்கும் வண்ணம் நினைவு ஆசரிப்பு காலத்தில் விசேஷ ஊழிய ஏற்பாடுகள் செய்யப்படும். ஒரு நல்ல பொருத்தமான அட்டவணையை வைத்துக்கொண்டு ஏப்ரலில் உங்களால் துணைப் பயனியர் செய்ய முடியுமா? மே மாதத்தில்? இயேசுவின் பலியை நாம் எவ்வளவு நன்றியோடு நினைக்கிறோம் என்பதை வெளிக்காட்டிட ஒரு சிறந்த வழி: நம் தேவன் யெகோவாவைப் பற்றியும், அவரது குமாரன் ஆளுகை செய்யும் அந்த ராஜ்யம் கொண்டுவரவிருக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றியும் பேசுவதாகும்.—சங். 79:13; 147:1. (தொடர்ச்சி பக்கம் 6, பத்தி 1-ல்) (தொடர்ச்சி)