நினைவு ஆசரிப்பு நினைப்பூட்டுதல்கள்
நினைவு ஆசரிப்பு ஏப்ரல் 11-ம் தேதி, சனிக்கிழமை அன்று வருகிறது. பின்வரும் விஷயங்களை மூப்பர்கள் கவனிக்க வேண்டும்:
◼ கூட்டத்திற்கான நேரத்தை திட்டமிடுகையில், சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக அடையாளச் சின்னங்கள் வலம்வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
◼ ஆசரிப்பு நடைபெறும் சரியான நேரத்தையும் இடத்தையும், பேச்சாளர் உட்பட, அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.
◼ தகுந்த அப்பத்தையும் திராட்சரசத்தையும் கொண்டுவந்து, தயாராக வைத்திருக்க வேண்டும்.—மார்ச் 1, 1985, காவற்கோபுரம், பக்கம் 22-ஐக் காண்க.
◼ பிளேட்டுகள், கிளாஸ்கள், சரியான மேஜை, மேஜை விரிப்பு ஆகியவற்றை மன்றத்திற்கு கொண்டுவந்து, முன்னதாகவே அவற்றிற்குரிய இடத்தில் வைக்க வேண்டும்.
◼ ராஜ்ய மன்றத்தை அல்லது கூட்டம் நடைபெறும் வேறு இடத்தை முன்னதாகவே நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
◼ அட்டண்டன்ட்களையும் பரிமாறுபவர்களையும் தெரிவுசெய்து, அவர்கள் செய்யவேண்டிய சரியான முறைகளைப் பற்றியும், பொறுப்புகளைப் பற்றியும் முன்னதாகவே ஆலோசனை கொடுக்க வேண்டும்.
◼ வியாதியாயிருக்கிற அல்லது ஆஜராக முடியாத அபிஷேகம் செய்யப்பட்ட நபர் யாராவது இருந்தால் அவருக்கும் பரிமாறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
◼ ஒரே ராஜ்ய மன்றத்தை ஒன்றுக்கு மேற்பட்ட சபைகள் உபயோகிக்க திட்டமிட்டிருந்தால் சபைகளிடையே நல்ல ஒழுங்கமைப்பு இருக்க வேண்டும். அப்போது, முகப்பறையில், நுழைவாயிலில், நடக்கும் வழிகளில், வாகனங்கள் நிறுத்துமிடங்களில் தேவையில்லாமல் நெருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.