ஜனவரி ஊழியக் கூட்டங்கள்
ஜனவரி 4-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். ஜனவரி 1 முதல் கூட்ட நேரங்களில் மாற்றம் செய்திருந்தால், கூட்டத்தின் புதிய நேரங்களைக் காட்டும் கைப்பிரதிகளை பயன்படுத்துமாறு அனைவரையும் நினைப்பூட்டுங்கள்.
15 நிமி: “பழைய புத்தகங்களை நன்கு பயன்படுத்துவோமாக.” கேள்விகளும் பதில்களும். சபையில் கையிருப்பில் உள்ள பழைய புத்தகங்களைக் குறிப்பிடுங்கள். அவற்றிலுள்ள ஆர்வமூட்டும் அம்சங்களைச் சுட்டிக் காட்டுங்கள். அவற்றை மற்றவர்களுக்கு எவ்வாறு அளிக்கலாம் என்பதை விளக்குங்கள். ஜனவரியில் வெளி ஊழியம் செய்கையிலும், சந்தர்ப்ப சாட்சி கொடுக்கையிலும் இந்தப் புத்தகங்களை அளிக்கும்படி அனைவரையும் உற்சாகமூட்டுங்கள். சுருக்கமான, எளிய அளிப்பை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: உடல்நலத்தைப் பேணுவதற்கு இரத்தமில்லா சிகிச்சையை சட்டப்படி தெரிவு செய்தல் (அப். 15:28, 29). மருத்துவ முன் கோரிக்கை/விடுவிப்பு அட்டையின் (Advance Medical Directive/Release card) முக்கியத்துவத்தைக் குறித்து தகுதிவாய்ந்த மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, முழுக்காட்டுதல் பெற்ற சாட்சிகளுக்கு புதிய அட்டையும், முழுக்காட்டப்படாத மைனர் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் ஓர் அடையாள அட்டையும் (Identity Card) வழங்கப்படும். இந்த அட்டைகளை இன்று இரவே பூர்த்தி செய்யக் கூடாது. வீட்டில் அவற்றை கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும், ஆனால் கையெழுத்திடக் கூடாது. எல்லா அட்டைகளிலும் கையெழுத்திடுவதும், சாட்சி கையெழுத்திடுவதும், தேதியிடுவதும் புத்தகப் படிப்பு நடத்துபவரின் மேற்பார்வையில் அடுத்த சபை புத்தகப் படிப்புக்குப் பின்பு செய்யப்பட வேண்டும். கையெழுத்திடுவதற்கு முன்பு, அட்டைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அட்டையை வைத்திருப்பவர் ஆவணத்தில் கையெழுத்திடுவதை சாட்சிகளாக கையெழுத்திடுகிறவர்கள் நேரில் காண வேண்டும். முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகள், தங்களுடைய சூழ்நிலைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு ஏற்ப, இந்த அட்டையின் மொழிநடையைப் பின்பற்றி தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் சொந்த மருத்துவ கோரிக்கை அட்டையை எழுதி வைத்துக் கொள்ளலாம். புத்தகப் படிப்பு நடத்துனர்கள் தங்கள் தொகுதிகளில் உள்ள அனைவரும் மருத்துவ முன் கோரிக்கை/விடுவிப்பு அட்டையை பூர்த்தி செய்து விட்டார்களா என்பதை செக்லிஸ்ட் வைத்து உறுதி செய்துகொள்ள வேண்டும். அதற்கு தேவையான உதவியையும் அளிக்க வேண்டும்.
பாட்டு 61, முடிவு ஜெபம்.
ஜனவரி 11-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
20 நிமி: “யெகோவா காட்டும் ஜீவ வழியை பின்பற்றுதல்—அதுவே நம் திடதீர்மானம்.” பேச்சு. சபையின் ஐந்து கூட்டங்களுக்கும் தவறாமல் வரும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “பொறுமையாயிருங்கள்.” குடும்ப அங்கத்தினர்கள் கலந்துரையாடுகிறார்கள். ஊழியத்தில் அதிக பொறுமையைக் காண்பிப்பதற்கான வழிகளை விமர்சிக்கிறார்கள். ஜூன் 15, 1995 காவற்கோபுரம் பக்கம் 12-ல் உள்ள பொருத்தமான குறிப்புகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
பாட்டு 135, முடிவு ஜெபம்.
ஜனவரி 18-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
10 நிமி: சபைத் தேவைகள்.
15 நிமி: “முன்நின்று வழிநடத்தும் கண்காணிகள்—சபை புத்தகப் படிப்பு நடத்துனர்கள்.” முன்மாதிரியுள்ள புத்தகப் படிப்பு நடத்துனரால் கொடுக்கப்படும் பேச்சு. அவர் தன் பொறுப்புகளைப் பற்றி பேசுகிறார். இத்தகைய வேலை சபையின் முன்னேற்றத்துக்கும் ஆவிக்குரிய நலத்திற்கும் எவ்வாறு உதவுகிறது என்பதைக் விளக்குகிறார். நம் ஊழியத்தை நிறைவேற்ற ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கங்கள் 43-5, 74-6-ல் உள்ள முக்கிய குறிப்புகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
15 நிமி: முக்கியமானதற்கே முதலிடம்! மூப்பர் கொடுக்கும் பேச்சு, சபையாரோடு கலந்துரையாடுகிறார். இதற்கான தகவல் செப்டம்பர் 1, 1998 காவற்கோபுரம் பக்கங்கள் 19-21-ல் உள்ள கட்டுரையில் உள்ளது.
பாட்டு 197, முடிவு ஜெபம்.
ஜனவரி 25-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: “பயனியர்களுக்கான மணிநேரங்களில் மாற்றம்.” மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு. சபையிலுள்ள பயனியர்களைப் பாராட்டுங்கள். இன்னும் அதிகமான பிரஸ்தாபிகள் துணை பயனியர், ஒழுங்கான பயனியராக சேவிப்பதற்கு முயற்சி எடுக்கும்படி ஊக்கம் கொடுங்கள். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் அதிகமான சேவை செய்யலாம் என்பதை நினைவில் வைக்கும்படி கூறுங்கள். பிப்ரவரி 1997 மற்றும் ஜூலை 1998 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையில் உள்ள தகவலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
20 நிமி: வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்க்கிறீர்களா? பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். வேதவாக்கியங்களை ஆராய்தல் என்ற சிறு புத்தகத்தை சங்கம் ஒவ்வொரு வருடமும் வெளியிடுகிறது. இந்தப் புத்தகத்தை நீங்கள் தனிப்பட்ட விதமாகவும் குடும்பமாகவும் நன்கு பயன்படுத்துகிறீர்களா? தினந்தோறும் வேத வசனங்களை கலந்தாராய்வதால் கிடைக்கும் பலன்களைக் குறிப்பிடுங்கள். தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல்—1999, பக்கங்கள் 3-4-ன் முகவுரையில் உள்ள குறிப்புகளை கலந்தாலோசியுங்கள். தனிப்பட்டவர்களாகவும் குடும்பமாகவும் தின வசனத்தையும் அதன் குறிப்புகளையும் ஒழுங்காக சிந்திப்பதற்கு விசேஷ முயற்சி எடுக்கிற பிரஸ்தாபிகளை அதைப் பற்றி சொல்லச் சொல்லுங்கள்.
பாட்டு 225, முடிவு ஜெபம்.