ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஜூலை 10-ல் துவங்கும் வாரம்
12 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். ஏப்ரல் மாதத்திற்கான சபையின் வெளி ஊழிய அறிக்கையை குறிப்பிடுங்கள். எல்லா பாராவையும் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களையும் வாசியுங்கள். அதில் உட்பட்டிருக்கும் நியமங்களை வலியுறுத்துங்கள். “பின்பக்கத்தை பாருங்கள்” என்ற பெட்டிக்கு கவனத்தை திருப்பி, அதில் கொடுக்கப்பட்டுள்ள அளிப்புகளில் உள்ளூர் பிராந்தியத்திற்கு பொருத்தமான ஒன்றை நடித்துக்காட்டுங்கள்.
15 நிமி:‘பேசாமலிருக்க முடியாது.’ முகவுரையை ஒரு நிமிடத்திற்குள்ளாக முடித்துக்கொண்டு, கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள். பிரசங்க வேலையை நாம் ஏன் மிக முக்கியமானதாக கருதுகிறோம் என்பதற்கான காரணங்களை வலியுறுத்துங்கள். ஜனவரி 15, 1997, காவற்கோபுரத்தில் பக்கங்கள் 23-4-ல் உள்ள குறிப்புகளில் பொருத்தமானவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
18 நிமி:“சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது.” இரண்டு மூப்பர்கள் இந்த பகுதியை சிந்திக்கிறார்கள். வியாபார சம்பந்தமான காரியங்களைக் கையாளுவதிலோ அல்லது முதலீடு செய்வதிலோ எச்சரிக்கையாய் இருக்க வேண்டியதன் அவசியத்தை அறிவுறுத்துகிறார்கள். மார்ச் 15, 1997, காவற்கோபுரம், பக்கங்கள் 18-19, 22-ல் உள்ள ஆலோசனையையும் மறுபார்வை செய்யுங்கள்.
பாட்டு 15, முடிவு ஜெபம்.
ஜூலை 17-ல் துவங்கும் வாரம்
12 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. கடவுளுடைய தனிப்பட்ட பெயரை தெரிந்துகொள்வதும் அதைப் பயன்படுத்துவதும் ஏன் முக்கியம் என்பதை சத்தியத்திற்கு ஆர்வம் காட்டும் நபருக்கு விளக்க கடவுளுடைய பெயர் சிற்றேட்டை எப்படி உபயோகிக்கலாம் என்பதை சுருக்கமாக விளக்குங்கள்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 196-7-ஐ பார்க்கவும்.
15 நிமி:“அள்ளி வழங்க ஆயத்தமாக இருங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. நவம்பர் 1, 1996, காவற்கோபுரம், பக்கங்கள் 29-30-ல், “நாம் ஏன் கொடுக்கிறோம்” என்பதற்காக சொல்லப்பட்டிருக்கும் நான்கு காரணங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
18 நிமி:யார் உங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்? ஒன்று அல்லது இரண்டு டீனேஜ் பிள்ளைகளோடு ஒரு தகப்பன் குடும்ப படிப்பு நடத்துகிறார். விளையாட்டு வீரர்கள், சினிமா ஹீரோக்கள், டிவியில் பிரபலமானவர்கள், இசைக் கலைஞர்கள் என இவர்களைப் பற்றியே பிள்ளைகள் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பதை தகப்பன் கவனித்திருக்கிறார். இப்படிப்பட்ட விஷயங்களில் லயிப்பது உலகத்தாரின் மனநிலையை வெளிக்காட்டும் ஒரு செயல் என்பதால் தகப்பன் தன் கவலையை தெரிவிக்கிறார். எல்லாருமாக சேர்ந்து மே 22, 1998, விழித்தெழு! பிரதியில் பக்கங்கள் 12-14-ஐ கலந்தாலோசிக்கின்றனர். உலகத்தில் பிரபலமாக இருப்பவர்களை கடவுளைப்போல் போற்றுவது ஆபத்தானது என்பதையும் உலகில் பிரபலமாக இருப்பது கிறிஸ்தவர்களுக்கு நன்மையான எதையும் தருவதில்லை என்பதையும் அந்த இளைஞர் புரிந்துகொள்கின்றனர். பெற்றோரை, மூப்பர்களை, சபையில் சிறந்து விளங்குபவர்களை, மிக முக்கியமாக இயேசு கிறிஸ்துவை தங்கள் முன்மாதிரியாக வைப்பதன் நன்மைகளை அவர்கள் கலந்துபேசுகின்றனர்.
பாட்டு 34, முடிவு ஜெபம்.
ஜூலை 24-ல் துவங்கும் வாரம்
5 நிமி:சபை அறிவிப்புகள்.
15 நிமி:கடவுளின் ஊழியர்களாக தகுதிபெறுதல். டிசம்பர் 15, 1998, காவற்கோபுரம், பக்கங்கள் 19-20-ல் உள்ள பைபிள் அறிவுரையை உதவி ஊழியர்கள் இருவர் கலந்தாலோசிக்கின்றனர். உதவி ஊழியர்களாக தங்கள் பொறுப்புகளை மதித்து, சிறந்த வகையில் செய்ய வேண்டிய அவசியத்தை சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற தனிப்பட்ட விதத்தில் என்ன செய்யலாம் என்பதையும் கலந்து பேசுகின்றனர். ஊழியத்தில் நல்ல முன்மாதிரி வைப்பதன் அவசியத்தையும் குறிப்பிடுகின்றனர். சபையில் மற்றவர்களுக்கு உதவ மூப்பர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு தாங்களும் என்னென்ன வழிகளில் ஒத்துழைக்கலாம் என சிந்திக்கின்றனர். சபையினர் காலத்தின் அவசரத்தை மதிக்கவும் ஆவிக்குரிய விதமாக செழித்து வளரவும் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய இருவரும் முடிவெடுக்கின்றனர்.
10 நிமி:நேரில் சென்று சந்திக்க முடியாதவர்களுக்கு கடிதம் எழுதுதல். பேச்சும் சபையாரோடு கலந்தாலோசிப்பும். வீடுகளில் மக்களை சந்திப்பது இன்று அபூர்வமாக இருக்கிறது. எனவே, அப்படிப்பட்டவர்களுக்கு கடிதங்கள் எழுதுவதன் மூலம் பிரஸ்தாபிகளில் சிலர் நல்ல பலன்களை கண்டிருக்கின்றனர். இந்த சந்தர்ப்பங்களில் பின்பற்ற வேண்டிய குறிப்புகளை சிந்தியுங்கள். கடிதங்கள் சுருக்கமாகவும், பைபிள் வசனங்களை குறிப்பிட்டும், மரியாதைக்குரிய விதத்திலும் எழுதப்பட வேண்டும். அநாமதேய கடிதங்களை அனுப்பாதீர்கள். கையில் எழுதுவதென்றால் தெளிவாக புரியும்படி எழுதுங்கள் அல்லது டைப் செய்யுங்கள். கூட்டங்களுக்கு வரும்படி அழைத்து, ராஜ்ய மன்றத்தின் விலாசத்தையும் சபைக் கூட்டங்களின் நேரத்தையும் எழுதுங்கள். அனுப்புனர் விலாசத்தில் சங்கத்தின் விலாசத்தை எழுதாதீர்கள். பள்ளி துணை நூல், பக்கங்கள் 87-8-லும் நவம்பர் 1996, நம் ராஜ்ய ஊழியம் கேள்விப் பெட்டியிலும் உள்ள ஆலோசனைகளை மறுபடியும் சிந்தியுங்கள்.
15 நிமி:ஆர்வத்தைத் தூண்டும் அறிமுகங்களை பயன்படுத்துதல். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கங்கள் 9-15-ல் உள்ளவற்றில் இரண்டு அல்லது மூன்று அறிமுகங்களை தேர்ந்தெடுங்கள். இந்த அறிமுகங்களை உங்கள் பிராந்தியத்தில் எந்தளவுக்கு பயனளிக்கும் விதத்தில் பயன்படுத்தலாம் என்பதை சிந்தியுங்கள். “வீட்டுக்கு வீடு ஊழியத்திலோ அல்லது தெருவில் சந்திக்கும் ஒருவரிடம் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதிலோ என்ன அறிமுகங்களை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்?” என சபையாரைக் கேளுங்கள். நேரம் இருந்தால், ஒன்று அல்லது இரண்டு அறிமுகங்களை நடித்துக்காட்டுங்கள்.
பாட்டு 54, முடிவு ஜெபம்.
ஜூலை 31-ல் துவங்கும் வாரம்
15 நிமி:சபை அறிவிப்புகள். ஜூலை மாத ஊழிய அறிக்கையை போடும்படி அனைவருக்கும் ஞாபகப்படுத்துங்கள். இந்த மாதம் சிற்றேடுகளை கொடுக்கையில் கிடைத்த அனுபவங்களை சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள்.
12 நிமி:சபை தேவைகள்.
18 நிமி:“யெகோவாவின் பொறுமையை மதிக்கிறீர்களா?” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. யெகோவாவின் நீடிய பொறுமையைப் பற்றி பொருத்தமான குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.—உட்பார்வை (ஆங்கிலம்), தொகுப்பு 2, பக்கங்கள் 263-4-ஐ பார்க்கவும்.
பாட்டு 75, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 7-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள்.
17 நிமி:“நீங்கள் கூச்ச சுபாவம் உடையவரா?” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. 1997 வருடாந்தர புத்தகம் (ஆங்கிலம்), பக்கங்கள் 43-4-லிருந்து உற்சாகம் தரும் அனுபவங்களை சொல்லுங்கள்.
18 நிமி:உங்கள் எதிர்காலத்தை ஞானமாக திட்டமிடுங்கள். மூப்பர் கொடுக்கும் பேச்சு. தாங்கள் நேசிக்கும் ஆட்களோடு சந்தோஷமான எதிர்காலத்தை அனுபவிக்க வேண்டுமென்றே இளைஞர் ஆசைப்படுகின்றனர். இது இயல்பே. இருந்தாலும், இதில் வெற்றி அடைய வேண்டுமானால், கடவுளுடைய புத்திமதிகளை அவர்கள் பின்பற்ற வேண்டும். (நீதி. 19:20) வாலிப பிராயத்தில் எதிர்பாலாரிடம் மோகம் அதிகமாக இருக்கும். இந்த உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவில்லையென்றால், விளைவுகள் பயங்கரமாயிருக்கும். அநேக சந்தர்ப்பங்களில், டீனேஜர்களில் பலர் எதிர்பாலாரிடம் கவர்ந்திழுக்கப்பட்டு, காதல் உறவுகளில் ஈடுபடுகின்றனர். இது நாளடைவில் காதல் சந்திப்புகளில் முடிவடைகின்றன. இந்த விஷயத்தில் இளைஞர்கள் எப்படி ஞானமாக நடந்துகொள்ளலாம் என்பதைப் பற்றி அநேக கேள்விகள் எழுகின்றன. இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம், பக்கங்கள் 231-5-ல் உள்ள புத்திமதிகளை மறுபடியும் சிந்தியுங்கள். கடவுளிடமாக தங்கள் கடமைகளை இளைஞர் நிறைவேற்றுவதன் அவசியத்தை பற்றி நவம்பர் 15, 1999, காவற்கோபுரம், பக்கங்கள் 18-23-ல் உள்ள முக்கிய குறிப்புகளை சொல்லுங்கள். இந்தப் புத்திமதியை ஆழ்ந்து யோசிக்கும்படி இளைஞரை உற்சாகப்படுத்துங்கள். இதில் ஏதும் கேள்விகள் இருந்தால், அதை அவர்களுடைய பெற்றோரிடம் கலந்து பேசும்படி சொல்லுங்கள்.
பாட்டு 101, முடிவு ஜெபம்.