அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஏப்ரல், மே: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள். மறுசந்திப்பின்போது ஆர்வம் காட்டினால் சந்தாவை அளிக்கலாம். எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் அல்லது என்னுடைய பைபிள் கதை புத்தகத்தை அளிக்கலாம். ஜூன்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? அல்லது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. வீட்டு பைபிள் படிப்புகளைத் துவங்குவதில் கவனம் செலுத்துங்கள். ஜூலை: பின்வரும் 32 பக்க சிற்றேட்டில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? கடவுளுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில். பொருத்தமான சமயங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) போன்ற சிற்றேடுகளை அளிக்கலாம்.
◼ “2001 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை”யில் பேச்சு நியமிப்பு எண் 3, 4-ற்கான பகுதி நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பக்கங்களிலிருந்தும் பாராக்களிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன. புத்தகத்திலுள்ள பாராக்களை எண்ணுகையில் இடைவெளிவிட்டு பாராக்களாக தொடங்கப்பட்டுள்ளவற்றை மட்டுமே எண்ண வேண்டும்.
◼ அனைத்து நடத்தும் கண்காணிகள் மற்றும் செயலர்களுடைய சமீபத்திய விலாசங்களும் டெலிபோன் நம்பர்களும் சொஸைட்டிக்குத் தேவை. இவற்றில் மாற்றம் ஏற்படுகையில், நடத்தும் கண்காணி/செயலர் விலாச மாற்ற படிவத்தை (S-29) முழுமையாக பூர்த்தி செய்து சொஸைட்டிக்கு உடனடியாக செயலர் அனுப்பி வைக்க வேண்டும். STD கோட் நம்பரில் மாற்றம் இருந்தாலும் இப்படிவத்தை அனுப்ப வேண்டும்.
◼ ஒழுங்கான பயனியர் சேவைக்கான விண்ணப்பம் (S-205-TL) துணைப் பயனியர் சேவைக்கான விண்ணப்பம் (S-205b-TL) ஆகிய படிவங்களை சபை செயலர்கள் போதுமானளவு வைத்திருக்க வேண்டும். பிரசுர ரிக்வெஸ்ட் படிவத்தில் (S-14) இவற்றை ஆர்டர் செய்யலாம். குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு தேவையானவற்றை இருப்பில் வைத்திருக்க வேண்டும். ஒழுங்கான பயனியர் விண்ணப்ப படிவங்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விண்ணப்பிப்பவர்களுக்கு தங்களுடைய முழுக்காட்டுதல் தேதி சரிவர நினைவில்லை என்றால் அவர்கள் உத்தேசமாக ஒரு தேதியை எழுதுவதோடு அதை குறித்து வைத்துக்கொள்ளவும் வேண்டும்.
◼ நீங்கள் வேறொரு நாட்டிற்கு தனிப்பட்ட விதமாக பயணம் செய்கையில், அங்கு நடைபெறும் சபை கூட்டங்களுக்கு, வட்டார மாநாட்டிற்கு, அல்லது மாவட்ட மாநாட்டிற்கு செல்லும் திட்டமிருந்தால் சம்பந்தப்பட்ட தேதிகளையும், நேரத்தையும், இடங்களையும் பற்றிய விவரங்களை அந்நாட்டில் உள்ள கிளை அலுவலகத்திற்கு எழுதி பெற வேண்டும். கிளை அலுவலக விலாசங்களுக்கு சமீபத்திய இயர்புக்கின் கடைசி பக்கத்தைப் பாருங்கள்.
◼ சபைகள் ரிக்வெஸ்ட் செய்யும் பிரசுரங்கள் தற்காலிகமாக கையிருப்பில் இல்லாதிருந்தால் அவை பேக்கிங் லிஸ்ட்டில் “பெண்டிங்” என குறிப்பிடப்பட்டிருக்கும். பெண்டிங் ஐட்டங்கள் மீண்டும் கிடைக்கையில் அவை அனைத்தும் ஆர்டர் செய்யாமலேயே அனுப்பி வைக்கப்படும். எனவே பெண்டிங் என குறிப்பிடப்பட்டிருக்கும் ஐட்டங்களை, மீண்டும் ஆர்டர் செய்யாதீர்கள். அந்த ஐட்டம் உண்மையிலேயே இன்னும் அதிகமாக தேவைப்பட்டால், அதுவும் விசேஷ ஆர்டரின் பேரில் அனுப்பப்படும் ஐட்டமாக இருந்தால், ஏற்கெனவே ஆர்டர் செய்யப்பட்டு, தற்போது பெண்டிங் லிஸ்ட்டில் உள்ளவற்றுடன் இவற்றையும் சேர்த்து அனுப்ப சொல்லும் சுருக்கமான குறிப்பையும் பிரசுர ரிக்வெஸ்ட் படிவத்துடன் (S-14) அனுப்புங்கள். அத்தகைய விளக்கமின்றி வரும் ஆர்டர்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டா.
◼ ஒரே ராஜ்ய மன்றத்தைப் பயன்படுத்தும் பல சபைகள் தங்கள் பிரசுர ஆர்டர்களை ஒருங்கிணைக்கும் சபை மூலமாக மட்டுமே பெற வேண்டும்.
◼ பிரசுரம் மற்றும்/அல்லது பத்திரிகை அனுப்பி வைக்கும் விலாசத்தில் மாற்றம் செய்யும்படி உங்கள் சபை கேட்டிருந்தால் புதிய விலாச மாற்றம் அமலுக்கு வரும்வரை அவற்றை பழைய விலாசத்தில் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த மாற்றத்தை டெலிபோன் மூலமோ ஃபாக்ஸ் மூலமோ சொஸைட்டிக்குத் தெரிவித்திருந்தாலும் அதைப் பின்பற்றுவது அவசியம்.
◼ புதிய உலக மொழிபெயர்ப்பு டீலக்ஸ் பதிப்புகள், பிற மொழி பைபிள்கள், காவற்கோபுரம், விழித்தெழு! பவுண்டு வால்யூம்கள், வீடியோ கேசட்டுகள் ஆகியவற்றிற்கு மீண்டும் அறிவிக்கப்படும் வரை தயவுசெய்து ஆர்டர் செய்ய வேண்டாம். தயவுசெய்து உங்கள் பத்திரிகைகளின் தனிப்பட்ட பிரதிகளை சேர்த்து வைத்து வால்யூம்களாக பைண்டிங் செய்து உங்களுக்கும் சபை லைப்ரரிகளுக்கும் வைத்துக்கொள்ளுங்கள். சபை லைப்ரரிகளிலுள்ள வீடியோ கேசட்டுகளை எப்போது வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். வெளியிலிருந்து பிற மொழி பைபிள்களை வாங்கிக் கொள்ளும்படி பிரஸ்தாபிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
பைபிளின் மூல போதகங்கள் —பஞ்சாபி