தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஜனவரி 1 முதல் ஏப்ரல் 23, 2001 வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: எழுத்துமுறை மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுர மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் சரியா தவறா என்று விடையளியுங்கள்:
1. பெரும் குற்றங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட நம் உணர்ச்சிகள் இடம் கொடுப்பதில்லை; ஆனாலும், நமக்கு எதிராக குற்றமிழைத்தவர் மனந்திரும்புதலைக் காட்டுகையில் கருணையுடன் மன்னிப்பதில் யோசேப்புவின் முன்மாதிரியை நாம் பின்பற்றலாம். (ஆதி. 42:21; 45:4, 5) [w-TL99 1/1 பக். 31 பாரா. 2-3]
2. வம்சாவளி பட்டியலைத் தவிர, 1 நாளாகமத்தில் எழுதப்பட்டுள்ள விஷயங்கள் அனைத்துமே சாமுவேல் புத்தகங்களிலும் இராஜாக்கள் புத்தகங்களிலும் உள்ளவைதான். [si-TL பக். 75, பாரா 1]
3. எதிர்காலத்தில் எப்போதோ வரவிருக்கும் ஒரேவொரு ‘அந்திக்கிறிஸ்துவைப்’ பற்றி மட்டுமே பைபிள் குறிப்பிடுகிறது. [rs-TL பக். 32]
4. தேவதூதர்களைக் காட்டிலும் சிறியவராக, ஓர் எளிய மனிதராக பரலோகத்திலிருந்து பூமிக்கு வரும் விசேஷித்த பொறுப்பை ஏற்பதன் மூலம் இயேசு மனத்தாழ்மையைக் காட்டினார். (பிலி. 2:5-8; எபி. 2:7) [w-TL99 2/1 பக். 6 பாரா 3]
5. சீஷாக் யூதாவின்மீது படையெடுத்து, “கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களையும்” கொள்ளையடித்துச் சென்றதை தொல்பொருள் ஆராய்ச்சி ஊர்ஜிதப்படுத்துகிறது. (2 நா. 12:9) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL89 3/1 பக். 31 பாரா 4-ஐக் காண்க.]
6. குழந்தைகளுக்கு பாப்டிஸம் கொடுப்பதை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் பின்பற்றவில்லை. [rs-TL பக். 55]
7. கடவுளை சேவிக்கும் ஒருவர் எந்தப் பலனையுமே எதிர்பார்க்கக் கூடாது. [w-TL99 4/15 பக். 16 பாரா 1]
8. சங்கீதம் 103:2-லுள்ள யெகோவாவின் “உபகாரங்களை” பற்றி குறிப்பிடுகையில், யெகோவாவின் படைப்புகளே தாவீதின் மனதில் இருந்திருக்க வேண்டும். [w-TL99 5/15 பக். 21 பாரா. 5-6]
9. சாலொமோன், செருபாபேல், ஏரோது ஆகியோர் கட்டிய ஆலயங்களும் மோசே ஏற்படுத்திய ஆசரிப்புக்கூடாரமும் ஒரே காரியத்தை அடையாளப்படுத்துகின்றன. [si-TL பக். 87 பாரா. 16]
10. 1 நாளாகம புத்தகத்தில் காணப்படும் வம்சாவளி பட்டியல், ஆரம்ப கால கிறிஸ்தவ சபைக்கு பெருமளவு பயனளிக்கவில்லை. [si-TL பக். 78 பாரா 23]
பின்வரும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்:
11. ஆகாபின் வீட்டாரை யெகோவா ஏன் கடுமையாய் நியாயந்தீர்த்தார்? (1 இரா. 16:31; 2 இரா. 9:7, 26) [si-TL பக். 74 பாரா 34]
12. மத்தேயு 24:45-51-ன்படி, விசுவாச துரோகிகளாக மாறுகிறவர்களை எப்படி அடையாளம் கண்டுகொள்ளலாம்? [rs-TL பக். 35]
13. யூதேய அரசனாகிய உசியாவின் விஷயத்திலிருந்து பலம் சம்பந்தமாக சிந்திக்க வைக்கும் என்ன பாடத்தை கற்றுக்கொள்ளலாம்? (2 நா. 26:15-21) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL99 12/1 பக். 26 பாரா. 1-2-ஐக் காண்க.]
14. தம்முடைய சீஷர்களின் பாதங்களைக் கழுவுவதன் மூலம் ஏதோ சம்பிரதாயத்தை தொடங்கி வைப்பதற்கு மாறாக எத்தகைய சிறந்த பாடத்தை இயேசு நமக்கு கற்பித்தார்? (யோவா. 13:4, 5) [w-TL99 3/1 பக். 31 பாரா 1]
15. 1 நாளாகமம் 14:8-17-லுள்ள பதிவு ஏசாயாவின் நாட்களில் ஏன் கவனத்திற்குரியதாய் இருந்தது, இன்று கிறிஸ்தவமண்டலத்தாருக்கு அது ஏன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? (ஏசா. 28:21) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w91 6/1 பக். 21 பாரா. 2-3-ஐக் காண்க.]
16. பாகால் வணக்கத்திலிருந்த என்ன அம்சங்கள் அநேக இஸ்ரவேலரை கவர்ந்திழுத்தன? [w-TL99 4/1 பக். 29 பாரா. 3-6]
17. எருசலேமிலிருந்த தண்ணீரை பாதுகாக்கவும் அதிகரிக்கவும் எசேக்கியா எடுத்த முயற்சியிலிருந்து என்ன பயனுள்ள பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்? (2 நா. 32:3, 4) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL96 8/15 பக். 6 பாரா. 1-2-ஐக் காண்க.]
18. கடவுளை சேவிக்கவும் பொய் வணக்கத்திற்கு எதிராக உறுதியாய் நிலைநிற்கை எடுக்கவும் யோசியாவின் உதாரணம் எப்படி இன்றைய இளைஞர்களை ஊக்குவிக்கலாம்? (2 நா. 34:3, 8, 33) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL91 9/1 பக். 5 பாரா 2-ஐக் காண்க.]
19. பாபிலோனில் தங்கிவிட்ட யூதர்கள் அனைவருமே விசுவாசமில்லாதவர்களா, இதிலிருந்து என்ன பயனுள்ள பாடத்தை நாம் கற்றுக்கொள்ளலாம்? (எஸ்றா 1:3-6) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w86 1/15 பக். 8 பாரா. 4-7-ஐக் காண்க.]
20. 2 நாளாகமம் 5:13, 14-ன்படி தம்முடைய ஜனத்தாரின் இனிமையான துதிக்கு யெகோவா செவிசாய்த்தார், அதனால் மகிழ்ச்சியடைந்தார் என்பதற்கு அத்தாட்சி என்ன? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL94 5/1 பக். 10 பாரா 7-ஐக் காண்க.]
பின்வரும் வாக்கியங்கள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் சொல் (சொற்கள்) அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
21. உடன் கிறிஸ்தவர்களுக்குப் புத்திமதி கொடுக்கையில் அதைக் கடவுளுடைய _________________________ அடிப்படையில் கொடுக்க வேண்டும்; மனித _________________________, _________________________ அடிப்படையில் அல்ல. (கொலோ. 2:8) [w-TL99 1/15 பக். 22 பாரா 1]
22. _________________________ யுத்தத்தில் _________________________ வகிக்க முடியாது. (மத். 12:30; 2 தெ. 1:7, 8) [rs-TL பக். 48]
23. விதைகள் முளைத்து முதிர்வதை முட்கள் தடுப்பதைப் போலவே கட்டுப்பாடில்லாமல் ஆட்டிப்படைக்கும் _________________________, _________________________ மாயையும் ஒருவர் ஆன்மீகத்தில் வளருவதை தடுக்கலாம். (மத். 13:19, 22) [w-TL99 3/15 பக். 22 பாரா 5]
24. “மரித்தோராயிருக்கும் நோக்கத்துக்காக முழுக்காட்டப்படுகிறவர்கள்” என 1 கொரிந்தியர் 15:29-ல் (NW) பவுல் குறிப்பிட்டது, கிறிஸ்துவைப்போல் _________________________ வாழ்க்கைப்போக்குக்கு முழுக்கப்பட்டு, பின்பு அவரைப் போலவே ஆவி வாழ்க்கைக்கு _________________________ அர்த்தப்படுத்துகிறது. [rs-TL பக். 57]
25. சாலொமோனைப் போல், வணக்கத்தில் _________________________ அல்லது _________________________ சேவிப்பதை விட்டுவிட்டு, ‘தேவனாகிய யெகோவாவிடத்தில் முழு இருதயத்தோடு அன்புகூரும்படி’ _________________________ சொன்ன வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்தால் மட்டுமே உண்மை கிறிஸ்தவர் வெற்றியடைய முடியும். (மத். 22:37, NW; 1 நா. 28:9) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL87 8/1 பக். 12-13 பாரா. 17-18-ஐக் காண்க.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:
26. பைபிளில் 2 இராஜாக்கள் 17:5, 6-லுள்ள பதிவு, இஸ்ரவேலின் பத்துக் கோத்திர வட ராஜ்யத்தின்மேல் (திகிலாத்-பிலேசர்; ஐந்தாம் சல்மனாசார்; ஈசார்-ஹாடன்) படையெடுத்து வந்ததையும், சமாரியாவை மூன்று ஆண்டுகள் முற்றுகையிட்ட பின்பு இறுதியில் அசீரியாவிடம் பொ.ச.மு. (740; 607; 537)-ல் வீழ்ச்சியடைந்ததையும் விளக்குகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL89 8/1 பக். 29 பாரா 1-ஐக் காண்க.]
27. பாபிலோனின் சிறையிருப்பு ஆரம்பித்த பின்பு எருசலேமில் நிகழ்ந்த சம்பவங்களை விளக்குவதன் மூலம் 2 இராஜாக்கள் 25-ம் அதிகாரம், அந்தப் புத்தகத்தின் எழுத்தாளர் (தானியேல்; எசேக்கியேல்; எரேமியா) எனவும் சுமார் பொ.ச.மு. (580; 537; 455)-ல் அது எழுதி முடிக்கப்பட்டது எனவும் மறைமுகமாக குறிப்பிடுகிறது. (2 இரா. 25:27) [வாராந்தர பைபிள் வாசிப்பு; si-TL பக். 64 பாரா 3-ஐக் காண்க.]
28. யாத்திராகமம் 4:11-ன்படி, யெகோவா தேவன் ‘ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும்’ படைத்தது, (ஜனங்களுக்கு இருக்கும் ஊனங்களுக்கு காரணர்; ஊழிய சிலாக்கியங்களை பலருக்குக் கொடுப்பவர்; ஜனங்களில் பல்வேறு உடல் குறைபாடுகளை அனுமதிப்பவர்) என்பதை அர்த்தப்படுத்துகிறது. [w-TL99 5/1 பக். 28 பாரா 2]
29. 2 நாளாகமம் 36:17-23-ல் குறிப்பிடப்பட்டுள்ள 70 வருட காலப்பகுதி பொ.ச.மு. (537; 607; 677)-ல் முடிவடைந்தது. [si-TL பக். 84 பாரா 35]
30. பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றி பைபிளிலுள்ள இரண்டு சம்பவங்கள், (அவற்றை ஆதரிக்கின்றன; அவற்றை ஆதரிக்கவில்லை; அவற்றைப் பற்றி ஒன்றும் சொல்வதில்லை). (ஆதி. 40:20-22; மத். 14:6-10) [rs-TL பக். 68]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்:
யாத். 21:22, 23; நீதி. 25:11; ரோ. 12:2; 2 பே. 3:15, 16; வெளி. 16:13, 14
31. நம்முடைய சிந்தனையை மாற்றிக்கொள்ளவும் மனதை கடவுளுடைய சத்தியத்தால் நிரப்பவும் மனமார்ந்த முயற்சி தேவை. [w-TL99 4/1 பக். 22 பாரா 2]
32. அறிவுரை கொடுக்கையில், பொருத்தமான வார்த்தைகளை தெரிந்தெடுத்து உபயோகிப்பது முக்கியம். [w-TL99 1/15 பக். 23 பாரா 1]
33. பிறவாத குழந்தைக்கு தீங்கு செய்தாலும் ஒருவன் கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டுமென்று யெகோவா குறிப்பிட்டிருக்கிறார். [rs-TL பக். 25]
34. தேசங்களை தூண்டுவதன் மூலம் கடவுளுக்கு எதிரான யுத்தத்திற்கு வழிநடத்தும் சூழ்நிலையை பிசாசாகிய சாத்தான் உருவாக்குகிறான். [rs-TL பக். 48]
35. நம்முடைய கருத்துக்களுக்கு இசைய வேதவசனங்களைப் புரட்டுவது நிரந்தர தீங்கை விளைவிக்கும். [rs-TL பக். 65]