உங்கள் ஊழியத்தில் ‘அதிக ஆர்வத்தோடு ஈடுபடுங்கள்’
1 கொரிந்துவில் அப்போஸ்தலன் பவுல் கூடார தொழிலில் ஈடுபட்டிருந்ததைப் பற்றி வாசிக்கையில், பிரசங்கிக்க அவருக்கு போதுமான வாய்ப்பு இருந்திருக்காது என நாம் நினைக்கலாம். ஆனால், “வார்த்தையை அறிவிப்பதில் பவுல் அதிக ஆர்வத்துடன் ஈடுபட்டு, இயேசுவே கிறிஸ்து என யூதர்களுக்கு நிரூபிக்க சாட்சி பகர்ந்து வந்தார்” என அப்போஸ்தலர் 18:5 (NW) சொல்கிறது. பிரசங்க ஊழியத்தில் பவுல் ஏன் இந்தளவுக்கு ஈடுபட்டார்? கொரிந்துவில் ஏற்கெனவே பலர் விசுவாசிகளாக மாறியிருந்தபோதிலும் அந்தப் பட்டணத்தில் இன்னும் பலரை சீஷர்களாக்க வேண்டும் என்பதை கர்த்தர் உறுதிப்படுத்தினார். (அப். 18:8-11) அதேபோல் நாமும் ஊழியத்தில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவதற்கு காரணம் உள்ளதா? ஆம், உள்ளது. நாம் இன்னும் அநேகரை கண்டுபிடித்து, சத்தியத்தை அவர்களுக்குக் கற்பிக்கலாம்.
2 ஏப்ரல் மாதத்தில் அதிக நேரத்தை ஊழியத்தில் செலவிடுங்கள்: ஒவ்வொரு மாதமும் சுறுசுறுப்பாக நற்செய்தியைப் பிரசங்கிப்பது உங்கள் இலக்காக இருக்கலாம். ஆனால் சில மாதங்கள் ஊழியத்தில் ‘அதிக ஆர்வத்துடன் ஈடுபட’ நமக்கு அதிக வசதியாக அமைந்துவிடுகின்றன. முக்கியமாய் நினைவு ஆசரிப்பு காலப் பகுதியாகிய ஏப்ரல் மாதம் மிக பொருத்தமான மாதம். இந்தக் கோடை காலத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்கு அல்லது அதிகமாய் ஊழியம் செய்வதற்கு உங்கள் சூழ்நிலை அனுமதித்துள்ளதா? இவ்வாறு செய்கிற அநேக பிரஸ்தாபிகள் உண்மையிலேயே அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள். (2 கொ. 9:6) உங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறீர்களென்றால், முழு மனதோடு செய்யும் உங்கள் ஊழியத்தைக் கண்டு யெகோவாவின் உள்ளம் குளிரும் என்பதை நினைவில் வையுங்கள். (லூக். 21:2-4) உங்கள் சூழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் ஏப்ரல் மாதத்தில் ஊழியத்தில் ‘அதிக ஆர்வத்துடன் ஈடுபட’ தீர்மானமாய் இருங்கள். மாத இறுதியில் உங்கள் ஊழியத்தை அறிக்கை செய்யவும் தவறாதீர்கள். அப்போதுதான் யெகோவாவின் மக்களுடைய ஊழிய அறிக்கையை மொத்தமாய் கணக்கிடுகையில் உங்கள் ஊழியமும் சேர்க்கப்படும்.
3 நினைவு ஆசரிப்பிற்கு வந்த புதியவர்களை மீண்டும் சந்தியுங்கள்: இந்தியாவில் கடந்த வருடம் நினைவு ஆசரிப்பிற்கு 49,120 பேர் வந்திருந்தனர். இந்த வருடம் மொத்தம் எத்தனை பேர் வந்திருந்தார்கள் என்பது இனிமேல்தான் தெரியும். எனினும் மாபெரும் ‘அறுவடைக்கு’ சிறந்த வாய்ப்பு இருப்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன. (மத். 9:37, 38) எனவே நினைவு ஆசரிப்பிற்கு வந்திருந்த ஆர்வமுள்ளவர்களுக்கு ஆவிக்குரிய விதத்தில் உதவ சீக்கிரத்திலேயே அவர்களை மீண்டும் சந்தியுங்கள். அப்படி சந்திப்பதை தள்ளிப்போடும்போது, ‘பொல்லாங்கன் வந்து, அவர்கள் இருதயத்தில் விதைக்கப்பட்ட ராஜ்யத்தின் வசனத்தைப் பறித்துக்கொள்ளுகிறான்.’ (மத். 13:19) அவர்களை நீங்கள் உடனடியாக சென்று சந்திப்பது உண்மையிலேயே நீங்கள் ஊழியத்தில் ‘அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவதை’ சுட்டிக்காட்டும்.
4 செயலற்றவர்களுக்குத் தொடர்ந்து உதவுங்கள்: செயலற்றவர்களுக்கு உதவும் விசேஷ முயற்சி பிப்ரவரி மாதத்தில் தொடங்கியது. இதுவரை மேய்ப்பு சந்திப்பு செய்யப்படாதவர்கள் யாரேனும் இருந்தால் ஏப்ரல் மாதத்திற்குள் எப்படியாவது அவர்களை சென்று சந்திக்க மூப்பர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒருவருடைய பிரச்சினைக்கு அடிப்படை காரணத்தை கண்டறியவும் மீண்டும் அவர் யெகோவாவை சுறுசுறுப்புடன் சேவிப்பதற்கு சிறந்த உதவியளிக்கவும் மூப்பர்கள் முயற்சி எடுப்பார்கள். ‘தேவனுடைய மந்தையை’ மேய்க்கும் தங்கள் பொறுப்பை மூப்பர்கள் முக்கியமானதாக கருதுவதை இந்த அன்பான உதவி சுட்டிக்காட்டுகிறது. (1 பே. 5:2; அப். 20:28) 1993, செப்டம்பர் 15 தேதியிட்ட காவற்கோபுரத்தில் பக்கங்கள் 22-3-ல் கலந்தாலோசிக்கப்படுகிற ஐந்து விதமான பிரச்சினைகளில் ஏதேனும் செயலற்றவர்களை பாதிப்பதாக இருந்தால் அதிலுள்ள அருமையான ஆலோசனைகளை மூப்பர்கள் பின்பற்றலாம். இதனால் சிலர் ஏப்ரல் மாதத்தில் மீண்டும் ஊழியத்தில் ஈடுபடுவதற்கு இப்போதும் தூண்டப்படலாம்.
5 அநேகர் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாவதற்கு உதவுங்கள்: நற்செய்தியைப் பிரசங்கிக்கும் புதிய பிரஸ்தாபிகளாகும் அளவுக்கு உங்கள் பிள்ளைகள் தகுதி பெற்றிருக்கிறார்களா? ஏற்கெனவே உங்களோடு பைபிளைப் படித்து வருபவர்கள் அந்தளவுக்கு முன்னேறியிருக்கிறார்களா? மூப்பர்கள் ஒப்புதல் அளித்தால் அவர்கள் ஊழியத்தில் ஈடுபடுவதற்கு ஏப்ரல் மாதம் பொருத்தமான சமயமாக இருக்குமல்லவா? தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் அறிவு புத்தகத்தையும் படித்து ஒருவர் முன்னேறி வருகிறார் என்றால் கடவுளுடைய வார்த்தை (ஆங்கிலம்), உண்மை சமாதானம், அல்லது வணக்கத்தில் ஒன்றுபடுதல் போன்ற ஏதேனும் ஒரு புத்தகத்தை இரண்டாவதாக படிக்கலாம். சத்தியத்தை இன்னும் நன்கு புரிந்துகொள்ளவும், முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக தகுதிபெறவும், பின்னர் யெகோவாவுக்கு தன்னை ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டப்பட்ட சாட்சியாக ஆகவும் மாணாக்கருக்கு உதவுவதே உங்கள் இலக்கு.—எபே. 3:17-19; 1 தீ. 1:12; 1 பே. 3:21.
6 பைபிள் மாணாக்கர்கள் மீது உண்மையான அக்கறையை நீங்கள் தொடர்ந்து காட்டுவது இறுதியில் அவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொள்ள உதவும். பைபிள் படிப்புக்கு சந்தோஷத்தோடு ஒப்புக்கொண்ட வயதான தம்பதியினரை ஒரு சகோதரர் சந்தித்தார். ஆனால் அவர்கள் அடுத்தடுத்து மூன்று வாரங்களுக்குப் படிப்பை தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தனர். ஒருவழியாக படிப்பு ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் பெரும்பாலும் ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி ஒருவாரம் விட்டு ஒருவாரம் அந்தத் தம்பதியினர் படிக்காதிருந்தனர். கடைசியில் துணைவியார் முழுக்காட்டுதல் பெறும் அளவுக்கு முன்னேறினார்கள். “முழுக்காட்டுதல் எடுத்த பிறகு சந்தோஷத்தால் அவர்கள் கண்கள் குளமாயின. அதைப் பார்த்த எனக்கும் என் மனைவிக்கும் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது” என அந்த நாளை ஞாபகப்படுத்தி அந்த சகோதரர் சொல்கிறார். நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் ‘அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவது’ சந்தோஷத்தை அள்ளித் தருவது உண்மையே!
7 முடிவு காலத்தின் இறுதிகட்டத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை பைபிள் தீர்க்கதரிசனமும் உலக நிலைமைகளும் சுட்டிக்காட்டுகின்றன. கடவுளுடைய ஜனங்கள் அனைவரும் மற்றவர்களுக்கு நற்செய்தியை அறிவிப்பதில் ‘அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவதற்கு’ இதுவே காலம். ‘ஆண்டவருக்காக’ நீங்கள் உழைப்பது நிச்சயமாய் ‘வீண் போகாது’ என அப்போஸ்தலன் பவுல் உறுதியளிக்கிறார்.—1 கொ. 15:58, பொ.மொ.