பைபிள்—உங்கள் வாழ்க்கையில் அதன் சக்தி வீடியோ மனதில் பதிய செய்தவை
பின்வரும் கேள்விகளுக்கு இந்த வீடியோ உங்கள் மனதில் பதியச் செய்த கருத்துக்களை மனந்திறந்து சொல்லுங்கள். (1அ) லட்சக்கணக்கானோர் தங்கள் வாழ்க்கையை சிறந்த விதத்தில் மாற்றியமைக்க எது சக்தியளித்திருக்கிறது? (எபி. 4:12) (1ஆ) இந்தச் சக்தியைப் பெறவும் அதை வாழ்க்கையில் பின்பற்றவும் ஒருவருக்கு எது தேவை? (2) தம்பதியினர் (அ) தங்கள் உரையாடலில் முன்னேற்றம் செய்யவும், (ஆ) கோபத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும் எந்த பைபிள் வசனங்கள் காட்டப்பட்டன? (3) திருமணத்தைப் பற்றிய கிறிஸ்தவ நோக்குநிலை குடும்ப வாழ்க்கையில் முன்னேற்றம் செய்ய எப்படி உதவியிருக்கிறது? (எபே. 5:28, 29) (4) பிள்ளைகள் விரும்புவதும் அவர்களுக்குத் தேவைப்படுவதுமான என்ன மூன்று காரியங்களை அளிப்பதில் யெகோவா சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார், இன்று அதை பெற்றோர் எப்படி பின்பற்றலாம்? (மாற். 1:9-11) (5) பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு ஏன் தனிப்பட்ட வகையில் பைபிளை போதிக்க வேண்டும், அதைத் தவறாமல் செய்வதன் அவசியத்தை எது சுட்டிக்காட்டுகிறது? (உபா. 6:6, 7) (6) பெற்றோர் எவ்வாறு குடும்ப படிப்பை சுவாரஸியமாக்கலாம்? (7) பைபிள் படிப்போடு வேறு எதையும் பிள்ளைகளுக்கு அளிக்கும்படி கடவுளுடைய வார்த்தை பெற்றோரை ஊக்குவிக்கிறது? (8) பொருளாதார நிலைமையை சமாளிப்பதற்கு பைபிள் புத்திமதி குடும்பங்களுக்கு எப்படி உதவலாம்? (9) எந்த பைபிள் நியமங்களைப் பின்பற்றுவது உடல்நல பிரச்சினைகளைக் குறைப்பதற்கு உதவுகிறது? (10) கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் நியமங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன? (11) ஊழியத்தில் சந்திக்கும் ஒருவரை வீட்டு பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொள்ளும்படி ஏன் இந்த வீடியோ தூண்டலாம்?