உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/01 பக். 8
  • எளிமையே இனிமை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எளிமையே இனிமை
  • நம் ராஜ்ய ஊழியம்—2001
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  •  4 இவ்வாறு சொல்லி உங்கள் சம்பாஷணை ஆரம்பிக்கலாம்:
  • எளிமையான, பலன்தரும் பிரசங்கங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1993
  • அது பலனளித்தால், அதைப் பயன்படுத்துங்கள்!
    நம் ராஜ்ய ஊழியம்—1998
  • மாதிரி பிரசங்கங்களைப் பயன்படுத்தும் விதம்
    நம் ராஜ்ய ஊழியம்—2005
  • தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்—நன்கு தயாரித்துச் செல்வதன் மூலம்
    நம் ராஜ்ய ஊழியம்—2006
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2001
km 4/01 பக். 8

எளிமையே இனிமை

1 இளம் பிரஸ்தாபிகள் எப்போதும் ராஜ்ய செய்தியைக் கேட்பவர்களின் கவனத்தை கவருவது ஏன்? அவர்கள் எளிய வார்த்தைகளை உபயோகிப்பதே அதற்கு ஒரு காரணம். பலன் தரும் விதத்தில் சாட்சி கொடுக்க சொல்நயமிக்க திறம்பட்ட பிரசங்கம் தேவை என சில பிரஸ்தாபிகள் நினைக்கலாம். எனினும் எளிய, தெளிவான பிரசங்கங்களே சிறந்தவை என்பது அனுபவம் சொல்லும் பாடம்.

2 கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி எளிய முறையில், புரிந்துகொள்ளும் விதத்தில் இயேசு பிரசங்கித்தார்; அப்படி பிரசங்கிப்பதற்கே தம் சீஷர்களுக்கும் பயிற்சி அளித்தார். (மத். 4:17; 10:5-7; லூக். 10:1, 9) தமக்குச் செவிசாய்ப்பவர்களின் கவனத்தைக் கவரவும் அவர்களுடைய இருதயத்தை எட்டவும் அவர் எளிய அறிமுகங்களை, கேள்விகளை, உவமைகளைப் பயன்படுத்தினார். (யோவா. 4:7-14) அவருடைய முன்மாதிரியை பின்பற்றி எளிதில் புரிந்துகொள்ளத்தக்க பிரசங்கங்களை உபயோகிப்பது நமக்குப் பயனுள்ளதாய் இருக்கும்.

3 “ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி”தான் நாம் பிரசங்கிக்க வேண்டிய செய்தி. (மத். 24:14, NW) ராஜ்யத்தை மையமாக வைப்பது எளிய பிரசங்கத்தை அளிக்க உங்களுக்கு உதவும். வீட்டுக்காரரின் ஆர்வத்தைத் தூண்டும் விஷயங்களைப் பேசுங்கள். அரசியலைவிட குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி பேசினால் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள். வேலையையும் குடும்ப பாதுகாப்பையும் பற்றி குடும்பத் தலைவரிடம் பேசினால் உடனடியாக ஆர்வத்துடன் கேட்பார். இளைய தலைமுறையினரிடம் எதிர்காலத்தைப் பற்றியும் வயதானவர்களிடம் நல்ல ஆரோக்கியம், பாதுகாப்பு பற்றியும் பேசினால் காதுகொடுத்துக் கேட்பார்கள். உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சம்பவங்களைவிட அக்கம்பக்கத்தில் நடக்கும் சம்பவங்களிடம் பொதுவாக மக்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அக்கறைக்குரிய பொது விஷயங்களைப் பற்றி பேசிய பின்பு கடவுளுடைய ராஜ்யத்தில் கீழ்ப்படிதலுள்ளவர்கள் அனுபவிக்க இருக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி சொல்லுங்கள். செவிசாய்ப்பவரின் ஆர்வத்தைத் தூண்டுவதற்கு எளிய, ‘நச்’சென மனதில் பதியும் வார்த்தைகளை ஒரு வசனத்துடன் சேர்த்து பேசுவதே போதுமானது.

 4 இவ்வாறு சொல்லி உங்கள் சம்பாஷணை ஆரம்பிக்கலாம்:

◼ “குணமாக்க முடியாத வியாதிகளால் இன்று மனிதகுலம் அல்லல்படுவது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் எல்லா விதமான நோய்களையும், ஏன் மரணத்தையும்கூட கடவுள் சீக்கிரத்தில் நீக்கப் போவதாக வாக்குறுதி அளித்திருப்பது உங்களுக்குத் தெரியுமா?” பதில் சொல்ல வாய்ப்பு கொடுத்த பின்னர் வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ வாசியுங்கள்.

5 தெளிவான, எளிய பிரசங்கங்கள் உங்கள் பிராந்தியத்திலுள்ள அநேகரது மனதையும் இதயத்தையும் சென்றெட்டலாம். யெகோவாவையும் நித்திய ஜீவனை அனுபவித்து மகிழும் எதிர்பார்ப்பையும் பற்றி கற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவலாம்.​—⁠யோவா. 17:⁠3.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்