ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
அக்டோபர் 8-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். ஊழிய கூட்டத்தில் அக்டோபர் 22-ல் துவங்கும் வாரத்தில் கலந்தாலோசிப்புக்காக தயாரிக்கும் வகையில், தெய்வீக போதனையால் ஒன்றுபட்டிருத்தல் (ஆங்கிலம்) வீடியோவை அனைவரும் பார்த்துவரும்படி உற்சாகப்படுத்துங்கள். பக்கம் 1-ல் உள்ள ஆலோசனைகளின் அடிப்படையில், அக்டோபர் 8, விழித்தெழு! பத்திரிகையைப் பயன்படுத்தி ஒன்றும், அக்டோபர் 15, காவற்கோபுரம் பத்திரிகையைப் பயன்படுத்தி மற்றொன்றுமாக இரண்டு சுருக்கமான பத்திரிகை அளிப்புகளை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
35 நிமி:“பண்டிகை காலத்தை யெகோவாவை கனப்படுத்த பயன்படுத்துங்கள்.”a சுருக்கமாக ஓரிரு நடிப்புகளுக்கும் ஏற்பாடு செய்யுங்கள்; ஒன்று பாரா 4-ன் அடிப்படையிலும், மற்றவை பாராக்கள் 5, 6-ல் உள்ள முக்கிய குறிப்புகளின் அடிப்படையிலும் இருக்கட்டும்.
பாட்டு 151, முடிவு ஜெபம்.
அக்டோபர் 15-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
15 நிமி:“கீழ்ப்படிதலுள்ள இருதயத்தை” உடையோராக நீங்கள் இருக்கிறீர்களா? (1 இரா. 3:9, NW) ஜூலை 15, 1998, காவற்கோபுரம், பக்கங்கள் 29-31-ன் அடிப்படையில் ஒரு மூப்பரால் கொடுக்கப்படும் பேச்சு. சபையோடு சேர்ந்து வேலை செய்கையில் எந்தெந்த வழிகளிலெல்லாம் கீழ்ப்படிதலைக் காட்டலாம் என கலந்தாலோசியுங்கள்.
20 நிமி:நம் பத்திரிகைகளை திறம்பட பயன்படுத்துங்கள். உள்ளூரில் பத்திரிகை விநியோகிப்பதைக் குறித்து ஊழிய கண்காணியும் பத்திரிகை ஊழியரும் கரிசனையுடன் கலந்தாலோசிக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் எத்தனை பத்திரிகைகளை சபை பெறுகிறது, எத்தனை பத்திரிகைகளை விநியோகித்திருந்ததாக அறிக்கை செய்யப்பட்டது என்பதை ஒப்பிட்டு அந்த எண்ணிக்கையை தெரிவிக்கின்றனர். கிடைத்துள்ள தகவலின்படி, பத்திரிகைகளில் அநேகம் பயன்படுத்தப்படாமல் வெறுமனே சேர்த்து வைக்கப்படுகின்றன, அல்லது வீணாக்கப்படுகின்றன. நம் பத்திரிகைகளை பிரஸ்தாபிகள் எவ்வாறு இன்னும் நன்றாக பயன்படுத்தலாம்? ஊழிய கூட்டத்தில் அக்டோபர் 4, 1999-ல் துவங்கும் வாரத்தில் “பத்திரிகைகளைக் குறித்து உணர்வுள்ளவர்களாய் இருங்கள்!” என்ற பகுதியில் கலந்தாலோசிக்கப்பட்ட ஏழு குறிப்புகளை சகோதரர்கள் கலந்து பேசுகின்றனர். பிப்ரவரி 15, 1998, காவற்கோபுரம், பக்கங்கள் 28-9-ல் உள்ள அனுபவத்தை மறுபார்வை செய்கின்றனர்; இந்த ஆலோசனைகளை தங்கள் சபை பிராந்தியத்திற்குப் பொருத்த முடிந்த சில வழிகளை கலந்தாலோசிக்கின்றனர். நம் ராஜ்ய ஊழியம் இதழில் ஒவ்வொரு மாதமும் முக்கியமாக கொடுக்கப்பட்டுள்ள மாதிரி பிரசங்கங்களை பின்பற்ற முயலும்படி அனைவரும் உற்சாகப்படுத்தப்படுகின்றனர்.
பாட்டு 156, முடிவு ஜெபம்.
அக்டோபர் 22-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். பக்கம் 1-ல் உள்ள ஆலோசனைகளின் அடிப்படையில், அக்டோபர் 8, விழித்தெழு! பத்திரிகையைப் பயன்படுத்தி ஒன்றும், நவம்பர் 1, காவற்கோபுரம் பத்திரிகையைப் பயன்படுத்தி மற்றொன்றுமாக இரண்டு சுருக்கமான பத்திரிகை அளிப்புகளை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி:நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்? நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில், பக்கங்கள் 204-5-ஐ சுருக்கமாக குறிப்பிட்டுக் காட்டுங்கள்; அதில் “யெகோவாவின் சாட்சிகள் பைபிளைப்பற்றிய தங்கள் விளக்கத்தை எவ்வாறு அடைகின்றனர்” என்ற கேள்விக்கு தெளிவான பதில் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மறுசந்திப்பில் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் விதத்தையும், அதைத் தொடர்ந்து சபை கூட்டங்களுக்கு வரும்படி கனிவுடன் அழைப்பு விடுப்பதையும் காட்டும் வகையில் நன்கு தயாரிக்கப்பட்ட ஒரு நடிப்பை செய்து காட்டுங்கள்.
25 நிமி:“தெய்வீக போதனையால் ஒன்றுபட்டிருத்தல்—உண்மையான சகோதர ஒற்றுமையின் காட்சி.” சபையார் கலந்தாலோசிப்பு. முதல் மற்றும் கடைசி பாராக்களை அறிமுகத்திலும் முடிவுரையிலும் பயன்படுத்துங்கள். வீடியோவைப் பற்றி விறுவிறுப்பாக கலந்தாலோசிக்க உதவும் வகையில், கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கேள்வியையும் கேளுங்கள். சபையில் உள்ள எவராவது வேறு நாடுகளில் நடத்தப்பட்ட மாநாடுகளுக்குச் சென்றிருந்தால் நம் அமைப்பின் உலகளாவிய செயல்பாட்டையும் ஐக்கியத்தையும் கண்ணாரக் கண்டபோது தாங்கள் எப்படி உணர்ந்தார்கள் என்பதை சொல்லச் சொல்லுங்கள். இல்லாவிடில், 1994 வருடாந்தர புத்தகம் (ஆங்கிலம்), பக்கங்கள் 7-9-லும், 1995 வருடாந்தர புத்தகம் (ஆங்கிலம்), பக்கங்கள் 8-11-லும் கொடுக்கப்பட்டுள்ள இதயத்தைத் தொடும் அனுபவங்களை சொல்லச் சொல்லுங்கள். டிசம்பரில் பூமியின் கடைகோடிகளுக்கு (ஆங்கிலம்) என்ற வீடியோவை பற்றி நாம் கலந்தாலோசிப்போம்.
பாட்டு 47, முடிவு ஜெபம்.
அக்டோபர் 29-ல் துவங்கும் வாரம்
12 நிமி:சபை அறிவிப்புகள். அக்டோபர் மாதத்திற்கான வெளி ஊழிய அறிக்கையை கொடுக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். நவம்பர் மாதத்திற்கான பிரசுர அளிப்பு, தேவைப்படுத்துகிறார் சிற்றேடு அல்லது அறிவு புத்தகம். பின்வரும் சுருக்கமான அளிப்பை நடித்துக் காட்டுங்கள்: “பொருளாதார கஷ்டம் நிறைந்த இக்காலங்களில், தங்கள் வயிற்றுப்பாட்டிற்கே மக்கள் திண்டாடுகின்றனர். ஓரவஞ்சகமின்றி, எல்லாருக்கும் பயன்தரும் வகையில் இந்தப் பிரச்சினையை மனித அரசாங்கங்கள் தீர்க்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] பைபிளிலுள்ள இந்த வாக்குறுதி எனக்கு மிகவும் ஆறுதலைத் தருகிறது.” சங்கீதம் 72:12-14-ஐ வாசியுங்கள். பிறகு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டிலோ அறிவு புத்தகத்திலோ காணப்படும் பொருத்தமான குறிப்பையும் எடுத்துச் சொல்லி, அதை அளியுங்கள்.
15 நிமி:சபையின் தேவைகள்.
18 நிமி:“ஆன்மீக உணவை எவ்வளவு நன்றாக சாப்பிடுகிறீர்கள்?”b ஆன்மீக ரீதியில் நல்ல உணவு பழக்கங்களை காத்து வருவதற்காக நாம் கடின முயற்சி எடுக்கவேண்டியது ஏன் என்றும் எப்படி என்றும் விளக்குவதற்காக ஏப்ரல் 15, 1997, காவற்கோபுரம், பக்கங்கள் 28-31-ல் உள்ள குறிப்புகளையும் சொல்லுமாறு சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 181, முடிவு ஜெபம்.
நவம்பர் 5-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள்.
18 நிமி:கூட்டங்களுக்கு குடும்பமாக தயாரித்தல். கூட்டங்களில் நன்றாக பங்கு பெறுமாறு அனைவரும் தயாரிப்பது எப்படி என்பதை தகப்பன் தன் குடும்பத்தினரோடு கலந்து பேசுகிறார். ஜூலை 1, 1999, காவற்கோபுரம், பக்கங்கள் 19-20, பாரா 9-ல் உள்ள வழிகாட்டுக் குறிப்புகளைப் பயன்படுத்தி அந்த வார காவற்கோபுர படிப்பில் குறிப்புகள் சொல்ல அவர்கள் தயாரிக்கின்றனர். (1) ஒவ்வொருவரும் குறிப்புகளை சொல்வதற்காக ஒன்றிரண்டு கேள்விகளை தெரிந்தெடுக்கின்றனர். (2) அந்தந்த பாராக்களை மறுபடியும் வாசித்துவிட்டு, தங்கள் சொந்த வார்த்தைகளில் குறிப்புகளை சொல்லிப் பார்க்கின்றனர். (3) மேற்கோளாக கொடுக்கப்படாத முக்கியமான வசனங்களை தெரிந்தெடுக்கின்றனர்; அவை ஒவ்வொன்றும் பொருளுடன் எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளது என்று கலந்தாலோசிக்கின்றனர்; அந்தப் படிப்பிற்கு பொருத்தி கூட்டத்தின்போது எவ்வாறு குறிப்பு சொல்வது என்று திட்டமிடுகின்றனர். கூட்டத்தில் பங்குபெற அனைவரும் ஆவலாய் இருக்கின்றனர்.
17 நிமி:“குறிக்கோள் என்ன?”c சபை கூட்டங்களுக்குச் செல்வதன் மதிப்பை உணர மாணவர்களுக்கு உதவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துங்கள். இதை எப்படி செய்வது என்பதை, அறிவு புத்தகத்தில் 17-ம் அதிகாரம், 6-8 பாராக்களைப் பயன்படுத்தி நன்கு தயாரித்த நடிப்பின் மூலம் காட்டுங்கள்.
பாட்டு 186, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.