ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
மார்ச் 11-ல் துவங்கும் வாரம்
13 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி, மார்ச் 8, விழித்தெழு! பத்திரிகையையும் மார்ச் 15, காவற்கோபுரம் பத்திரிகையையும் அளிக்கும் விதத்தை தனித்தனியாக இரண்டு நடிப்புகளில் செய்து காட்டுங்கள். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ‘எனக்கு அதில் அக்கறையில்லை’ என்று சொல்பவரை வெவ்வேறு விதமாக சமாளிப்பதை காட்டுங்கள்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கம் 16-ஐக் காண்க.
12 நிமி: கோடையில் என்ன செய்யப் போகிறீர்கள்? கோடை மாதங்களில் என்னென்ன செய்ய திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதை ஒரு மூப்பர் அல்லது ஓர் உதவி ஊழியர் அவருடைய குடும்பத்தாருடன் கலந்துரையாடுகிறார். குடும்பமாக துணைப் பயனியர் ஊழியம் செய்வதைப் பற்றி அவர்கள் பேசுகின்றனர்; விடுமுறை எடுத்து கொஞ்சம் பொழுது போக்கிற்காக செலவிடவும் திட்டமிடுகின்றனர். வேறு ஊருக்கு செல்ல திட்டமிட்டாலும், சபை கூட்டங்கள், வெளி ஊழியம், குடும்ப பைபிள் படிப்பு போன்ற தேவராஜ்ய நடவடிக்கைகளை புறக்கணிக்க தங்களுக்கு விருப்பமில்லை என்பதை எல்லாரும் ஒத்துக்கொள்கின்றனர். வீட்டில் இருந்தாலும் சரி வேறு ஊர்களுக்குச் சென்றாலும் சரி, தங்கள் வெளி ஊழிய அறிக்கை சரியான சமயத்தில் செயலரின் கையில் கிடைக்கும்படி செய்வதை உறுதி செய்துகொள்வர்.
20 நிமி: “‘நற்கிரியைகளில் ஐசுவரியவான்’ ஆகுங்கள்.”a ஊழிய கண்காணி கையாளுவார். நினைவு ஆசரிப்பை மார்ச் 28 அன்று அனுசரிக்க தயாராகும் வகையில் ஊழியத்தில் முழுமையாக பங்கெடுக்க அனைவருக்கும் அறிவுறுத்துங்கள். அதற்கான அழைப்பிதழ்களை மிகச் சிறந்த விதத்தில் எப்படி பயன்படுத்தலாம் என கலந்தாலோசியுங்கள். தங்கள் அழைப்பை ஏற்று உறவினர்கள், அக்கம்பக்கத்தார், பைபிள் மாணாக்கர்கள், ஆர்வம் காட்டும் மற்றவர்கள் ஆகியோர் கடந்த வருடம் நினைவு ஆசரிப்பில் எவ்வாறு கலந்துகொண்டார்கள் என்பதையும், அதனால் பெற்ற சந்தோஷத்தையும் பற்றி சொல்லும்படி பிரஸ்தாபிகளிடம் கேளுங்கள். முடிந்தவர்களெல்லாம் ஏப்ரலில் துணைப் பயனியர் ஊழியம் செய்யவும், கூட்டத்திற்குப் பிறகு விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொள்ளவும் உற்சாகமூட்டுங்கள்.
பாட்டு 82, முடிவு ஜெபம்.
மார்ச் 18-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. “நினைவு ஆசரிப்பு நினைப்பூட்டுதல்கள்” பகுதியை கலந்தாலோசியுங்கள். தினந்தோறும் வேதவசனங்களை ஆராய்தல்—2002-ல் கொடுக்கப்பட்டுள்ள, மார்ச் 23-28 தேதிகளில் வாசிக்க வேண்டிய நினைவு ஆசரிப்பு பைபிள் வாசிப்பு பகுதியைப் படிக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “யெகோவாவுடனும் அவரது குமாரனுடனும் சந்தோஷமாக ஒன்றுபட்டிருத்தல்.” வேதப்பூர்வமாக உந்துவிக்கும் விதத்தில் மூப்பர் பேசுகிறார். நினைவு ஆசரிப்பில் நம்முடன் கலந்துகொள்வதற்காக இப்பொழுது முதல் மார்ச் 28 வரை நம்மால் அழைக்க முடிந்த அத்தனை பேரையும் சந்திக்க கூடுதலான முயற்சி செய்யுமாறு ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: இயர்புக் உங்களுக்குத் தரும் நன்மை யாது? பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். முதலில், இந்த இதழில் பக்கம் 6-ல் கொடுக்கப்பட்டுள்ள “ஆளும் குழுவின் கடிதம்” பகுதியிலுள்ள முக்கிய குறிப்புகளை கூறுங்கள். பின்பு, இயர்புக்-கில் சபையாருக்கு உற்சாகமூட்டிய, விசுவாசத்தைப் பலப்படுத்திய முக்கிய அனுபவங்களையும் பற்றி குறிப்புகள் சொல்லும்படி அவர்களைக் கேளுங்கள். இயர்புக்கை வாசித்து முடிக்கும்படியும், பைபிள் படிப்பு நடத்தும் மாணாக்கர்களும் யெகோவாவின் அமைப்பைப் பற்றி தெரிந்துகொள்ள அவர்களிடம் அதைப் பற்றி பேசும்படியும் அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 45, முடிவு ஜெபம்.
மார்ச் 25-ல் துவங்கும் வாரம்
14 நிமி: சபை அறிவிப்புகள். ஏப்ரலில் துணைப் பயனியர் ஊழியம் செய்வதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்னும் நாட்கள் இருப்பதை தெரிவியுங்கள். பக்கம் 8-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி, மார்ச் 8, விழித்தெழு! பத்திரிகையை அளிக்கும் விதத்தை ஓர் இளைஞரும், ஏப்ரல் 1, காவற்கோபுரம் பத்திரிகையை அளிக்கும் விதத்தை ஒரு மூப்பரும் நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். ஒவ்வொரு நடிப்பிற்குப் பிறகும் அந்தப் பிரசங்கத்தில் காணப்பட்ட நல்ல அம்சங்கள் சிலவற்றை எடுத்துக்கூறுங்கள்.
15 நிமி: சபை தேவைகள்.
16 நிமி: ஊக்கமூட்ட நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை பயன்படுத்துங்கள். சபையார் கலந்தாலோசிப்பு. எல்லாருக்குமே அவ்வப்போது அன்பான ஊக்கமூட்டுதல் தேவைப்படுகிறது. ஆகவே, ஊழியத்தில் நாம் சந்திக்கும் திடனற்றவர்கள் உட்பட மற்றவர்களை ‘தேற்றும்’ விதத்தில் பேசுவதன் அவசியத்தை நாமனைவரும் உணர வேண்டும். (1 தெ. 5:14) நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தைப் பயன்படுத்தி, பக்கங்கள் 117-21-ல் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவதொரு பிரச்சினையில் கஷ்டப்படும் ஒருவரை வேதப்பூர்வமாக எவ்வாறு ஊக்கமூட்டலாம் என சபையாரிடம் கேளுங்கள். தேவை ஏற்படும் போதெல்லாம் யாரையாவது ஊக்கமூட்ட ஒவ்வொருவருமே முயலும்படி கூறுங்கள்.—கலா. 6:10.
பாட்டு 131, முடிவு ஜெபம்.
ஏப்ரல் 1-ல் துவங்கும் வாரம்
7 நிமி: சபை அறிவிப்புகள். மார்ச் மாதத்திற்கான வெளி ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்க பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள்.
18 நிமி: “‘மனிதரில் வரங்கள்’ ஆவலுடன் கடவுளின் மந்தையை மேய்க்கின்றனர்.” ஒரு மூப்பர் கொடுக்கும் பேச்சு. பைபிள் வசனம் குறிப்பிடப்பட்டிருந்தால் அதை வாசித்து கலந்தாலோசியுங்கள். செயலற்றவர்களை சந்தித்து உற்சாகப்படுத்துவதாலும், இயலாமல் போனவர்களை ஊழியத்திற்கு ஊக்கமூட்டுவதாலும் என்னென்ன அனுபவங்கள் கிடைக்கலாம், கிடைக்கின்றன என்பதைக் காட்டுங்கள். யெகோவாவின் சேவையில் மும்முரமாக ஈடுபட சபையார் இருதயப்பூர்வமாக செய்யும் எல்லா முயற்சிகளையும் அன்பான மேய்ப்பர்கள் போற்றுகிறார்கள்.
20 நிமி: “பிரசங்கிப்பதில் இன்னும் சந்தோஷம் காணுங்கள்.”b பாரா 5-ஐ கலந்தாலோசிக்கையில், உள்ளூர் பிராந்தியத்தில் மிகத் திறம்பட்ட விதத்தில் ஊழியம் செய்வதற்காக ஏதாவது நடைமுறையான ஆலோசனைகள் இருந்தால் சொல்லும்படி கேளுங்கள். எவரையாவது அணுகி சுருக்கமான சாட்சி கொடுக்க எவ்வாறு முன்முயற்சி எடுக்கலாம் என்பதற்கு ஓரிரு உதாரணங்களை நடித்துக் காட்டுங்கள். இந்த வாரம் சாட்சி கொடுப்பதற்கான வாய்ப்பை உருவாக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 15, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.