ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஜூலை 8-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 4-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி ஜூலை 8 தேதியிட்ட விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் முதலாவது.) ஜூலை 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் அளிப்பதைக் காட்டும் இரண்டு நடிப்புகளை ஏற்பாடு செய்யுங்கள். ஒவ்வொரு நடிப்பிலும் ‘நாங்கள் ஏற்கெனவே கிறிஸ்தவர்கள்’ என சொல்லி உரையாடலை நிறுத்துவோருக்கு வெவ்வேறு விதங்களில் பதிலளிப்பதைக் காட்டுங்கள்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கம் 19-ஐக் காண்க.
15 நிமி: “மழை காலத்தில் ‘வார்த்தையைப் பிரசங்கியுங்கள்.’”a ஊழியக் கண்காணி நடத்துவார். மழை கால ஊழியத்துக்காக எந்தெந்த பிராந்தியங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை விளக்கவும். மழை கால மாதங்களில் முடிந்த மட்டும் ஊழியத்தில் பங்குகொள்ள நடைமுறையான அட்டவணையைப் போடும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்தவும்.
15 நிமி: முறைப்படி சாட்சி கொடுக்க ஒழுங்குபடுத்தப்படுதல். நம் ஊழியம் புத்தகத்தில் பக்கங்கள் 93-4-ஐ சபையாருடன் கலந்தாலோசித்தல். 2002, ஜனவரி நம் ராஜ்ய ஊழியம் பிரதியில் உட்சேர்க்கையின் முன்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி, முன்பின் அறியாதவரிடம், அயலகத்தாரிடம், உறவினரிடம் அல்லது பரிச்சயமானவரிடம் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதை இரண்டு அல்லது மூன்று விதங்களில் சுருக்கமாக நடித்துக் காட்டுங்கள்.
பாட்டு 139, முடிவு ஜெபம்.
ஜூலை 15-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: பைபிளை நம்முடைய ஊழியத்தில் உபயோகிக்க நியாயமான காரணங்கள். பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். இயேசு வேதவசனங்களை அறிந்திருந்தார், போதிக்கையில் அடிக்கடி அவற்றைப் பயன்படுத்தினார். (லூக். 24:27, 44-47) அவர் எதையும் சொந்தமாக போதிக்கவில்லை. (யோவா. 7:16-18) நாமும் கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துவது முக்கியம். நாம் சொந்தமாக சொல்லும் எதைக் காட்டிலும் இதற்கு அதிக சக்தி உண்டு. (யோவா. 12:49, 50; எபி. 4:12) வேதவசனங்கள் தரும் ஆறுதலாலும் நம்பிக்கையாலும் உண்மை மனமுள்ளோர் கவரப்பட்டிருக்கிறார்கள். உங்களுடைய அளிப்புகளில் குறைந்தது ஒரு பைபிள் வசனத்தையாவது உபயோகிப்பதை இலக்காக வையுங்கள். இந்த மாதம் ஆலோசனையாக கொடுக்கப்பட்டுள்ள பத்திரிகை அளிப்புகளில் வசனங்கள் இருப்பதை சுட்டிக்காட்டுங்கள். ஊழியத்தில் பைபிளை எப்படி உபயோகித்து வருகிறார்கள் என சொல்லும்படி சபையார் சிலரிடம் கேளுங்கள்; அது தங்களிடத்திலும் தாங்கள் பிரசங்கிப்பவர்களிடத்திலும் என்ன பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் சொல்லும்படி கேளுங்கள்.
பாட்டு 215, முடிவு ஜெபம்.
ஜூலை 22-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஒன்றாக ஊழியம் செய்யும் ஒரு பெற்றோரும் பிள்ளையும் பக்கம் 4-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி ஜூலை 8 (பத்திரிகை அளிப்பு பகுதியில் மூன்றாவது.) மற்றும் ஆகஸ்ட் 1 தேதியிட்ட பத்திரிகைகளை அளிப்பதை நடித்துக் காட்டுகிறார்கள். ஒருவர் விழித்தெழு!-வுக்கான அளிப்பையும் மற்றொருவர் காவற்கோபுரத்திற்கான அளிப்பையும் செய்து காட்டுகிறார். ஊழியத்தில் தங்கள் பிள்ளைகள் படிப்படியாக முன்னேறுவதற்கு பயிற்சி அளிக்கும்படி பெற்றோரை உற்சாகப்படுத்துங்கள்.
17 நிமி: இஸ்லாமிய மதத்தைப் பற்றி கேட்கும் நபரிடம் நீங்கள் என்ன சொல்வீர்கள்? பேச்சும் நடிப்பும். கடவுளைத் தேடி ஆங்கில புத்தகத்தில் அதிகாரம் 12, (பக்கம் 285-ல் உள்ள பெட்டியைக் காண்க) அல்லது இறைவன் வழி—இன்பவனம் செல்லும் இனிய வழி சிற்றேட்டில் பக்கம் 30, பாரா 7-ஐப் பயன்படுத்தி பரிசுத்த வேதவாக்கியங்களைக் குறித்து குர்ஆன் என்ன சொல்கிறதென சுருக்கமாக விளக்குங்கள். மேலும், சுவனத்திற்கு செல்லும் பாதையை கண்டடைவது எப்படி என்ற துண்டுப்பிரதியைப் பயன்படுத்தி, பரதீஸைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை புதிதாக ஆர்வம் காட்டும் நபருக்கு விளக்கும் விதத்தை நடித்துக்காட்டவும்.
18 நிமி: இன்டர்நெட் அபாயத்தை நான் எவ்வாறு தவிர்ப்பது? 2000, ஜனவரி 22, விழித்தெழு!, பக்கங்கள் 19-21-ன் அடிப்படையில் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். கட்டுப்பாடில்லாமல் இன்டர்நெட் உபயோகிப்பதன் ஆபத்துகளை சுட்டிக்காட்டி, அதன் பிடியில் சிக்காமல் தப்பிக்கும் வழியை விளக்கவும். இந்தப் புத்திமதியைப் பின்பற்றுவதால் எப்படி பயனடைகிறார்கள் என சொல்லும்படி சபையாரிடம் கேட்கவும்.
பாட்டு 61, முடிவு ஜெபம்.
ஜூலை 29-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஜூலை மாதத்திற்கான வெளி ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டவும்.
10 நிமி: கேள்விப் பெட்டி. தகவலை சபைக்குப் பொருத்திக் காட்டும் மூப்பரின் பேச்சு.
25 நிமி: “ஒத்திசைவாக ஒன்றுபட்டிருங்கள்.”b பாரா 3-ஐக் கலந்தாலோசிக்கையில் 2000, ஏப்ரல் 22, விழித்தெழு!-வில் பக்கங்கள் 9-11-லுள்ள குறிப்புகளை சேர்த்துக்கொள்ளவும். பாரா 4-ஐக் கலந்தாலோசிக்கையில், 1995, ஏப்ரல் 1, காவற்கோபுரத்தில் பக்கங்கள் 16-17, பாராக்கள் 4-6-லுள்ள குறிப்புகளைச் சேர்த்துக்கொள்ளவும்.
பாட்டு 81, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 5-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
20 நிமி: “எல்லா மொழியினரிலிருந்தும் ஆட்களை கூட்டிச் சேர்த்தல்.”c 2002, ஏப்ரல் 1, காவற்கோபுரம், பக்கம் 24-லுள்ள குறிப்புகளைச் சேர்த்துக்கொள்ளவும். பொருத்தமானால், பிராந்தியத்தில் பிற மொழி பேசுபவர்களுக்கு உதவ செய்யப்பட்டுள்ள ஏற்பாட்டை சுருக்கமாக விளக்குங்கள், வேறொரு மொழியில் எளிய அளிப்பை நடித்துக்காட்ட செய்யுங்கள்.
15 நிமி: சபையாரின் அனுபவங்கள். மாநாட்டின்போது, துணைப் பயனியர் செய்தபோது, அல்லது கோடை காலத்தில் மற்ற ஆவிக்குரிய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது பெற்ற உற்சாகமளிக்கும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 184, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.