அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றுமாக நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில். பொருத்தமான சமயங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) ஆகிய சிற்றேடுகளை அளிக்கலாம். செப்டம்பர்: உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? இதற்கு பதிலாக எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் அல்லது இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகத்தை உபயோகிக்கலாம். அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள். ஆர்வம் காட்டுவோருக்கு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளித்து பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷித்த முயற்சி எடுங்கள்.
◼ 2002, செப்டம்பர் 16-ல் துவங்கும் வாரம் முதற்கொண்டு ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு II புத்தகத்தை சபை புத்தகப் படிப்புகளில் நாம் படிப்போம். இந்தப் புத்தகம் அஸ்ஸாமீஸ், குஜராத்தி, நேப்பாளி, மராத்தி, வங்காளி ஆகிய மொழிகளில் இல்லாததால் இம்மொழிகளைப் பேசும் பிரஸ்தாபிகள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் உள்ள புத்தகத்தைப் பயன்படுத்தலாம்.
◼ செப்டம்பர் முதற்கொண்டு வட்டாரக் கண்காணிகள் “உங்கள் கிறிஸ்தவ அடையாளத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!” என்ற தலைப்பில் பொதுப் பேச்சுகளைக் கொடுப்பார்கள்.
◼ சில சபைகள் அதிகப்படியான எண்ணிக்கையில் வருடாந்தர ஐட்டங்களையும் ஊழியப் பள்ளி புத்தகத்தையும் ஆர்டர் செய்துள்ளன. நினைவு ஆசரிப்பு அழைப்பிதழ்கள் தவிர வேதவாக்கியங்களை ஆராய்தல், காலண்டர்கள், மாவட்ட மாநாட்டு பேட்ஜ் கார்டுகள், ஊழியப் பள்ளி புத்தகங்கள் போன்ற ஸ்பெஷல் ரிக்வெஸ்ட் படிவத்தில் பட்டியலிடப்பட்டுள்ள மற்ற ஐட்டங்கள் சபையுடன் கூட்டுறவு கொள்பவர்களுக்கு மட்டுமே உரியவை, வெளி ஊழியத்தில் விநியோகிப்பதற்கு உரியவை அல்ல என்பதை தயவுசெய்து கவனத்தில் வையுங்கள். எனவே, சபைகளிலிருந்து பெற்ற ஆர்டர்களை பிரஸ்தாபிகளின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு நாங்கள் குறைத்திருக்கிறோம். பேக்கிங் லிஸ்டில் பட்டியலிடப்பட்டுள்ள வருடாந்தர ஐட்டங்களின் “பெண்டிங்” லிஸ்ட்டை சரிபார்க்கும்படி செயலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்னும் அதிகமான பிரசுரங்கள் தேவைப்பட்டால் அதற்கான காரணத்தை விளக்கும் கடிதத்துடன் தயவுசெய்து உடனடியாக மீண்டும் ஆர்டர் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.