ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஜூலை 12-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 4-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி ஜூலை 8 தேதியிட்ட விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் முதலாவது) ஜூலை 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் அளிப்பதைக் காட்டும் நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் மொழியை சரளமாக பேசத் தெரியாத ஒரு நபரிடம் தெருவில் சந்தித்து பத்திரிகை அளிப்பது போல் ஒரு நடிப்பு இருக்கட்டும்.
18 நிமி: “யெகோவாவின் நீதி நியாயத்தைப் பின்பற்றுங்கள்.”a நேரம் அனுமதித்தால் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களின் பேரில் குறிப்புகள் சொல்லுமாறு சபையாரை கேளுங்கள்.
15 நிமி: பைபிள்—எதிர்காலத்தை முன்னறிவிக்கிற நம்பகமான ஒரு புத்தகம். எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் என்ற சிற்றேட்டில், பக்கங்கள் 27-9-ன் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். எதிர்காலத்தை தெரிந்துகொள்ள ஆர்வமுடைய மக்களை நம்முடைய ஊழியத்தில் அடிக்கடி சந்திக்கிறோம். கீழ்ப்படிதலுள்ள மனிதகுலத்திற்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறதென்ற நம்பகமான தகவலை பைபிள் அளிக்கிறது. எதிர்காலத்தைப் பற்றி பைபிள் முன்னறிவிக்கிற விஷயங்கள் மீது நம்முடைய நம்பிக்கையை பலப்படுத்தும் சில பைபிள் தீர்க்கதரிசனங்களை சிந்தியுங்கள். பைபிள் சம்பவங்களை பயன்படுத்தி எப்படி ஆர்வம் காட்டும் நபரின் நம்பிக்கையை பலப்படுத்தலாம் என்பதை பிரஸ்தாபி ஒருவர் சுருக்கமாக நடித்துக் காட்டும்படி செய்யுங்கள்.
பாட்டு 16, முடிவு ஜெபம்.
ஜூலை 19-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். விடுமுறைகளில் செல்வது போன்ற மற்ற காரியங்களால் நம்முடைய அன்றாட திட்டத்தில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டாலும், தினந்தோறும் தவறாமல் பைபிளை வாசிப்பதன் முக்கியத்துவத்தை கலந்தாராயுங்கள். ஆகஸ்ட் 15, 2000, காவற்கோபுரம், பக்கம் 32-ல் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
15 நிமி: கேள்விப் பெட்டி. மூப்பரால் கையாளப்பட வேண்டும். முழு கட்டுரையையும் வாசித்து கலந்தாராயுங்கள். வீட்டுக்காரர் நன்கொடை அளிக்கிறாரா இல்லையா என்பதன் பேரில் அல்ல, ஆனால் அவர்கள் உண்மையில் அக்கறை காட்டுகிறார்களா இல்லையா என்பதன் பேரிலேயே பிரசுரங்கள் அல்லது பத்திரிகைகளை அளிக்க வேண்டுமென வலியுறுத்துங்கள். உலகளாவிய வேலைக்கான மாதாந்தர நன்கொடை குறைவாக இருக்கிறது என்பதற்காக விசேஷ அளிப்பு பிரசுரங்களை மூப்பர்கள் குறைவாக ஆர்டர் செய்ய வேண்டும் என்பதில்லை. பயனியர்கள் மற்றும் பிரஸ்தாபிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு சபையில் போதிய பத்திரிகைகள் கையிருப்பில் இருக்க வேண்டும். மனமுவந்து நன்கொடைகள் அளிக்கும் வாய்ப்பு இருப்பதைப் பற்றி வீட்டுக்காரரிடம் எப்படி விளக்கலாம் என்பதற்கு சுருக்கமான ஒரு நடிப்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
20 நிமி: “முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்—பகுதி 1.” ஊழிய கண்காணி கொடுக்க வேண்டிய பேச்சு. நவீன நாட்களில் பைபிள் படிப்பு நடத்தியதில் ஏற்பட்ட வளர்ச்சியைப் பற்றி அறிவிப்பாளர்கள் (ஆங்கிலம்) புத்தகத்தில், பக்கங்கள் 572-4-வரையிலுள்ள கட்டுரையிலிருந்து சபையாரை குறிப்பு சொல்ல அனுமதியுங்கள். இனிவரும் தொடர் கட்டுரைகளுக்கான ஆவலை தூண்டுங்கள். படிப்பு நடத்த எப்படி முன்கூட்டியே தயாரிப்பது, படிப்பிற்காக தயாரிக்க மாணாக்கருக்கு எப்படி உதவுவது, எவ்வளவு பாடங்களை எடுப்பது, வேத வசனங்களை எப்படி திறம்பட பயன்படுத்துவது, மாணாக்கரால் எழுப்பப்படும் கேள்விகளை எப்படி கையாளுவது, ஜெபத்தை எப்படி அறிமுகப்படுத்துவது, மாணாக்கரை எப்படி அமைப்பிடம் வழிநடத்துவது போன்ற சில தலைப்புகளை இத்தொடர் கட்டுரையில் நாம் சிந்திப்போம். கொடுக்கப்படும் எல்லா ஆலோசனைகளையும் பின்பற்ற உற்சாகப்படுத்துங்கள், அதோடு, தேவைப்படும் போதெல்லாம் அவற்றை எடுத்துப் பார்க்க இக்கட்டுரைகளை பத்திரமாக வைத்திருக்கும்படியும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 10, முடிவு ஜெபம்.
ஜூலை 26-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. ஜூலை மாதத்திற்கான ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரஸ்தாபிகளை ஞாபகப்படுத்துங்கள். பக்கம் 4-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி ஜூலை 8 தேதியிட்ட விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் மூன்றாவது) ஆகஸ்ட் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். ஒவ்வொரு நடிப்பிலும் “நீங்கள் ஏன் அவ்வளவு அடிக்கடி வருகிறீர்கள்?” என உரையாடலை தடுத்து நிறுத்துவோரிடம் எப்படி வெவ்வேறு விதங்களில் பதிலளிக்கலாம் என்பதை காட்டுங்கள்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கம் 20-ஐக் காண்க.
8 நிமி: சபை தேவைகள்.
25 நிமி: “வியாபார பிராந்தியங்களில் எவ்வாறு பிரசங்கிப்பது.”b வியாபார பிராந்தியத்திற்கான ஊழிய ஏற்பாட்டைப் பற்றி குறிப்பிடுங்கள். பாராக்கள் 4-5-ல் கொடுக்கப்பட்டிருக்கும் இரண்டு அணுகுமுறைகளையோ அல்லது உங்கள் பிராந்தியத்தில் பலன்தரும் வேறு ஏதாவதொரு அணுகுமுறையையோ சுருக்கமாக நடித்துக் காட்டுங்கள். நேரம் அனுமதித்தால், வியாபார பிராந்தியத்தில் கிடைத்த உற்சாகமூட்டும் அனுபவங்களை சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 173, முடிவு ஜெபம்.
ஆகஸ்ட் 2-ல் துவங்கும் வாரம்
8 நிமி: சபை அறிவிப்புகள்.
22 நிமி: நியாயங்காட்டிப் பேசுகிறீர்களா? ஊழியப் பள்ளி புத்தகம், பக்கம் 254, பாராக்கள் 1-2-ன் அடிப்படையில் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். ஊழியத்திலும் மேடையிலிருந்து பேச்சுக் கொடுக்கையிலும் நாம் வசனங்களை வாசித்து பொருத்திக் காட்டும்போது, ‘வசனத்தில் இப்படி இருக்கிறது’ என்று வெறுமனே சொல்வதைவிட, அந்த வசனத்தை நியாயங்காட்டி விளக்கினால் நம்முடைய போதனை அதிக வலுவூட்டுவதாக இருக்கும். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் அல்லது உங்கள் பிராந்தியத்திற்கு பொருந்தும் மற்ற புத்தகங்களில் உள்ள உதாரணங்களை பயன்படுத்தி, (1) வசனத்திலுள்ள முக்கிய வார்த்தைகளை தேர்ந்தெடுத்து எப்படி விளக்குவது, (2) பேசும் பொருளுக்கான ஆதாரத்தை வசனத்தின் சூழமைவிலிருந்து அல்லது மற்ற வசனங்களிலிருந்து எப்படி எடுத்துக் காட்டுவது, (3) நாம் சொன்ன விஷயம் நியாயமானது என்பதை காட்ட உதாரணங்களை எப்படி பயன்படுத்துவது, (4) நாம் சொல்லும் விளக்கங்களை கேட்போர் புரிந்துகொள்ள கேள்விகளை எப்படி பயன்படுத்துவது என காண்பியுங்கள். நியாயங்காட்டிப் பேசும் முறையை கையாளுவதால் வரும் பயன்களை சிறப்பித்துக் காட்டுங்கள்.
15 நிமி: உள்ளூர் அனுபவங்கள். கடந்த மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டபோது, துணைப் பயனியர் ஊழியம் செய்தபோது அல்லது மற்ற ஆவிக்குரிய காரியங்களில் ஈடுபட்டபோது சமீபத்தில் கிடைத்த உற்சாகமூட்டும் அனுபவங்களை சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 32, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.