ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
நவம்பர் 8-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
15 நிமி: “திருப்தியான வாழ்க்கைக்கு வழி—சிற்றேட்டை அளித்தல்.” இந்தச் சிற்றேட்டில் தங்களுக்குப் பிடித்த குறிப்புகளைச் சொல்லுமாறு சபையாரிடம் கேளுங்கள். கொடுக்கப்பட்டுள்ள பிரசங்கங்களை மீண்டும் சிந்தியுங்கள். இந்தச் சிற்றேட்டை அளிக்கும் விதத்தைச் சுருக்கமாக நடித்துக் காட்டுங்கள். உங்கள் பிராந்தியத்தைப் பொறுத்தமட்டில் வேறு விதங்களில் இன்னும் திறம்பட பேச முடிந்தால், அதையும் கலந்தாலோசித்து நடித்துக் காட்டலாம்.
20 நிமி: “எப்போதும் அவசர உணர்வுடன் இருங்கள்!”a ஜனவரி 15, 2000 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கங்கள் 12-13-ல் உள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 19, முடிவு ஜெபம்.
நவம்பர் 15-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். உங்கள் பிராந்தியத்துக்குப் பொருத்தமாயிருந்தால், பக்கம் 4-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி நவம்பர் 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் முதலாவது) நவம்பர் 15 காவற்கோபுரத்தையும் அளிப்பதற்கு இரண்டு நடிப்புகளை ஏற்பாடு செய்யுங்கள். இவையன்றி வேறு விதங்களில் நடைமுறைக்குப் பொருத்தமாக பேச முடிந்தாலும் அதை நடித்துக் காட்டலாம்.
15 நிமி: கொடுப்பதால் கிடைக்கும் சந்தோஷத்தை ருசித்திருக்கிறீர்களா? நவம்பர் 1, 2004 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கங்கள் 19-23-ன் அடிப்படையில் அமைந்த பேச்சு.
20 நிமி: தனிப்பட்ட மற்றும் குடும்பப் படிப்பில் இன்டெக்ஸ்-ஐப் பயன்படுத்துதல். சபையாரையும் கலந்தாலோசிப்பில் உட்படுத்தி மூப்பர் கொடுக்கும் பேச்சு. யெகோவா தம் வார்த்தை மற்றும் அமைப்பின் மூலமாக மதிப்பு வாய்ந்த வழிகாட்டுதலையும், உற்சாகத்தையும் ஏராளமாக அளித்திருக்கிறார். அவற்றைக் காண உதவும் முக்கிய கருவி உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ் ஆகும். பிள்ளைகள் முதல் தாத்தா பாட்டிமார் வரை, புதிதாக முழுக்காட்டுதல் பெற்றவர் முதல் மூப்பர்கள் வரை அனைவருமே தங்களுக்கு பலனளிக்கும் தகவல்களைக் கண்டுபிடிக்க முடியும். (1 தீ. 3:15) ஒரு மூப்பரும் உதவி ஊழியரும் மேய்ப்பு சந்திப்புக்காக தயாரிப்பதற்கு இன்டெக்ஸ்-ஐப் பயன்படுத்தும் விதத்தை நடித்துக் காட்டுங்கள். பிரஸ்தாபிகள் தீர்மானம் செய்வதற்கும், பேச்சு தயாரிப்பதற்கும், வாராந்தர பைபிள் வாசிப்புக்கான கூடுதல் குறிப்புகளைக் காண்பதற்கும் இன்டெக்ஸ்-ஐப் பயன்படுத்தும் விதத்தைக் கலந்தாலோசியுங்கள். சமீபத்தில் ஆராய்ச்சிக்கான பிரசுரங்களை சபையார் பெற்றிருப்பார்கள்; இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 66, முடிவு ஜெபம்.
நவம்பர் 22-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
10 நிமி: சபை தேவைகள்.
25 நிமி: “முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்—பகுதி 3.”b கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளைப் பயன்படுத்துங்கள். பாரா 3-ஐச் சிந்தித்த பின்பு, தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் 5-வது பாடம், 1-வது பாராவை பைபிள் படிப்பில் கலந்தாலோசிப்பது போல் சுருக்கமாக நடித்துக் காட்டுங்கள். அந்தப் பாராவை ஏற்கெனவே வாசித்துவிட்டதாகவும் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டதாகவும் சபையார் கற்பனை செய்து கொள்ளட்டும். படிப்பு நடத்துபவரும் மாணாக்கரும் ஏசாயா 45:18-ஐயும் பிரசங்கி 1:4-ஐயும் வாசித்து கலந்தாலோசிக்கின்றனர். இந்த வசனங்கள், சிந்திக்கப்படும் குறிப்புடன் எப்படி சம்பந்தப்பட்டுள்ளன என்பதை மாணாக்கர் விளக்கிச் சொல்லட்டும்; அதற்காக அவரைத் தூண்டும் விதத்தில் நடத்துபவர் எளிய கேள்விகளைக் கேட்கிறார்.
பாட்டு 58, முடிவு ஜெபம்.
நவம்பர் 29-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நவம்பர் மாத ஊழிய அறிக்கைகளை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைவுபடுத்துங்கள். நவம்பர் 8, விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் மூன்றாவது) டிசம்பர் 1, காவற்கோபுரத்தையும் அளிப்பதை நடித்துக் காட்டுங்கள்.
15 நிமி: கேள்விப் பெட்டி. மூப்பர் கொடுக்கும் பேச்சு.
20 நிமி: திருப்தியான வாழ்க்கை சிற்றேட்டைப் பயன்படுத்தி சத்தியத்தின் மீது ஆர்வமூட்டுங்கள். ஊழியக் கண்காணி கொடுக்கும் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். இந்தச் சிற்றேட்டை அளித்தபோது கிடைத்த சுவாரஸ்யமான ஓரிரு அனுபவங்களைச் சொல்லுமாறு முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள். பக்கம் 2-ல் உள்ள தகவலைப் பயன்படுத்தி, இச்சிற்றேட்டில் காணப்படும் பொருளடக்கத்திலுள்ள விஷயங்களைச் சுருக்கமாக தெரிவியுங்கள்; மறுசந்திப்பில் பயன்படுத்துவதற்கு ஏற்ற பகுதிகளை எடுத்துக்காட்டுங்கள். மறுசந்திப்பு ஒன்றைச் செய்வதுபோல் நடித்துக் காட்டுங்கள். சிற்றேட்டில் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களில் ஓரிரண்டை வாசித்து விளக்குமாறு சொல்லுங்கள். மறுசந்திப்புகள் சிலவற்றைச் செய்த பிறகு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அல்லது அறிவு புத்தகத்தை அளிக்கலாம்.
பாட்டு 178, முடிவு ஜெபம்.
டிசம்பர் 6-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். டிசம்பர் மாதத்திற்கான பிரசுர அளிப்பைக் குறிப்பிடுங்கள். மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை எப்படி அளிக்கலாம் என்பதைக் காட்டுவதற்கு ஓரிரு நடிப்பை ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: “உங்களால் உதவிக்கரம் நீட்ட முடியுமா?”c சபையிலுள்ளவர்கள் அளித்த உதவிக்கோ உற்சாகத்திற்கோ நன்றி தெரிவித்த ஓரிரு பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள்.
15 நிமி: ஊழியக் கூட்டத்திலிருந்து முழுமையாக பயனடையுங்கள். நம் ஊழியம் புத்தகத்தில் பக்கங்கள் 71-2-ன் அடிப்படையில் சபையாருடன் கலந்துரையாடல். என்ன ஐந்து வழிகளில் கிறிஸ்தவ ஊழியர்களாக நாம் முன்னேற ஊழியக் கூட்டம் உதவுகிறது? கடந்த மாத ஊழியக் கூட்டப் பகுதியிலிருந்து உதாரணங்களைக் குறிப்பிடுங்கள். முன்கூட்டியே தயாரிப்பதன் பலன்கள் என்ன? ஏன் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்? இந்தக் கூட்டம் முற்காலத்தில் நடத்தப்பட்டதற்கு பைபிளில் இருந்து உதாரணம் கொடுங்கள்.
பாட்டு 101, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.