ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஜனவரி 10-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாயிருந்தால்) ஜனவரி 15 காவற்கோபுரத்தையும், ஜனவரி 8 விழித்தெழு!-வையும் அளிக்கும் நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். மற்ற நடைமுறையான அறிமுகங்களையும் பயன்படுத்தலாம். ஒரு நடிப்பில், யெகோவாவின் சாட்சியாக இல்லாத உறவினர் ஒருவரிடம் பத்திரிகைகளை அளிப்பதுபோல் காட்டுங்கள்.
15 நிமி: ‘விசுவாசத்திற்குரிய வார்த்தைகளால் ஊட்டம் பெற்றிருத்தல்.’a நேரம் இருந்தால், கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வாசித்து கலந்தாலோசியுங்கள்.
20 நிமி: “சந்தர்ப்பத்திற்கேற்ப அணுகிப் பாருங்களேன்.” உட்சேர்க்கையில் பக்கம் 6-ல் உள்ள விஷயத்தைச் சபையாருடன் கலந்தாலோசித்தல். இந்த மாதத்திற்கான பிரசுரத்தை அளிக்கையில் இந்த அணுகுமுறையில் இரண்டு உதாரணங்களை நடித்துக் காட்டுங்கள். ஒவ்வொரு நடிப்பிலும், வீட்டுக்காரர் கவலை தெரிவித்த விஷயத்திற்கு அருமருந்தாயிருக்கும் ஒரு வசனத்தை வாசிக்கும்படி பிரஸ்தாபியிடம் சொல்லுங்கள்.
பாட்டு 143, முடிவு ஜெபம்.
ஜனவரி 17-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: இளைஞர்களே—ஆன்மீகத்தில் முன்னேறி வருகிறீர்களா? ஏப்ரல் 1, 2003 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கங்கள் 8-10-ன் அடிப்படையில் பேச்சு. இதை ஒரு மூப்பர் கொடுக்கிறார். எதார்த்தமான, எட்டக்கூடிய இலக்குகள் சிலவற்றைக் குறிப்பிடுங்கள். தங்களுக்கென திட்டவட்டமான ஆன்மீக இலக்குகளை வைக்கும்படி இளைஞர்களை உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்—பகுதி 5.”b பாராக்கள் 4-5-ல் குறிப்பிடப்பட்டிருக்கும் குறைபாடுகளைத் தவிர்க்கும் விதத்தைக் குறித்து பைபிள் படிப்பு நடத்துவதில் அனுபவம் வாய்ந்த பிரஸ்தாபி ஒரு புதிய பிரஸ்தாபியிடம் பேசுவது போன்ற நடிப்பு ஒன்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 78, முடிவு ஜெபம்.
ஜனவரி 24-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. “விசிடி-யில் வீடியோ நிகழ்ச்சிகள்” என்ற பெட்டியிலுள்ள விஷயத்தைச் சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள்.
10 நிமி: கேள்விப் பெட்டி. பேச்சு.
25 நிமி: “மாதிரி பிரசங்கங்களைப் பயன்படுத்தும் விதம்.”c கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளைப் பயன்படுத்துங்கள். இந்த மாத உட்சேர்க்கையில் பக்கங்கள் 3-5-ல் பிரசுர அளிப்புகள் சம்பந்தமாகத் தரப்பட்டுள்ள ஆலோசனைகளைக் குறிப்பிடுங்கள். இந்த வருடம் முழுவதிலும் பயன்படுத்துவதற்காக இந்த உட்சேர்க்கையைப் பாதுகாத்திடுங்கள். இந்தக் கட்டுரையைக் கலந்தாலோசித்த பிறகு, பிப்ரவரி மாதத்தில் யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தை அளிக்கும் விதத்தைக் கலந்தாலோசியுங்கள். இரண்டு பிரசங்கங்களை நடித்துக் காட்டுங்கள். அவை பக்கம் 3-ல் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி அளிப்புகளின் அடிப்படையில் இருக்கலாம் அல்லது பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு விதங்களிலும் இருக்கலாம்.
பாட்டு 200, முடிவு ஜெபம்.
ஜனவரி 31-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஜனவரி மாத ஊழிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு ஞாபகமூட்டுங்கள். பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாயிருந்தால்) பிப்ரவரி 1 காவற்கோபுரத்தை அல்லது பிப்ரவரி 8 விழித்தெழு!-வை அளிக்கும் நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். மற்ற நடைமுறையான அறிமுகங்களையும் பயன்படுத்தலாம்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்கிறீர்களா? தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல்—2005-ன் முகவுரையிலிருந்து பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். எல்லாருமே தினவசனத்தையும் குறிப்புகளையும் சிந்திப்பதற்கு ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தைக் கலந்தாலோசியுங்கள். தினவசனத்தை வழக்கமாக சிந்திக்கும் விதத்தைப் பற்றியும் அதனால் அடைந்த நன்மைகளைப் பற்றியும் குறிப்புகள் சொல்லுமாறு ஓரிரு பிரஸ்தாபிகளிடம் முன்னதாகவே ஏற்பாடு செய்யுங்கள். 2005-ம் ஆண்டிற்கான வருடாந்தர வசனத்தைச் சுருக்கமாகக் கலந்தாலோசித்து பேச்சை நிறைவு செய்யுங்கள்.
பாட்டு 184, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 7-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: புதியவர்கள் கடவுளையும் அயலாரையும் நேசிக்கக் கற்றுக்கொள்ள உதவுங்கள். ஜூலை 1, 2004 தேதியிட்ட காவற்கோபுரம், பக்கம் 16-ல் பாராக்கள் 7-9-லிருந்து கொடுக்கப்படும் பேச்சு. புதியவர்கள் கிறிஸ்துவின் சீஷர்களாவதற்கு சபையின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் ஒரு பங்கிருக்கிறது என்பதைச் சிறப்பித்துக் காட்டுங்கள்.
20 நிமி: யெகோவா நன்மையை வழங்காதிரார். (சங். 84:11) சோதனைகளின் மத்தியில் உண்மை தவறாமல் நிலைத்திருக்கும் சகோதர சகோதரிகளில் சிலரைப் பேட்டி காணுங்கள். அவர்கள் என்ன கஷ்டங்களை எதிர்ப்பட்டிருக்கிறார்கள்? அவற்றைச் சமாளிக்க எது அவர்களுக்கு உதவியிருக்கிறது? இதனால் என்னென்ன சந்தோஷங்களையும் பலன்களையும் பெற்றிருக்கிறார்கள்?
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.