ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஜூன் 13-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளை (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருந்தால்) பயன்படுத்தி, ஜூன் 15 காவற்கோபுரத்தையும் ஜூன் 8 விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். நடைமுறைக்கு உதவும் வேறு பிரசங்கங்கள் இருந்தால் அவற்றையும் பயன்படுத்தலாம். சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும் ஒரு சூழலில் பத்திரிகைகளை அளிப்பதுபோல் ஒரு நடிப்பு இருக்கட்டும்.
15 நிமி: முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாக ஆவதற்கு மற்றவர்களுக்கு உதவுங்கள். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கங்கள் 79-81-ன் அடிப்படையில் ஒரு மூப்பரின் பேச்சும் கலந்தாலோசிப்பும். சபையாருடன் சேர்ந்து வெளி ஊழியத்தில் கலந்துகொள்ள பைபிள் மாணாக்கர் வேதப்பூர்வ தகுதி பெற்றிருக்கிறாரா என்பதைத் தீர்மானிப்பதற்கான ஏற்பாட்டை விளக்குங்கள். முழுக்காட்டப்படாத பிரஸ்தாபி ஆவதற்கு தகுதி பெற்ற பைபிள் மாணாக்கர்கள், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கலந்துகொள்வதற்கு நாம் எப்படிப் பயிற்சி அளிக்கலாம் என்பதை அடுத்த வாரம் சிந்திப்போம்.
20 நிமி: “பிரசங்கிப்பது சகித்திருக்க நமக்கு உதவுகிறது.”a நேரம் அனுமதிப்பதைப் பொறுத்து கொடுக்கப்பட்டுள்ள வசனங்களின் பேரில் குறிப்பு சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 149, முடிவு ஜெபம்.
ஜூன் 20-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஜூலை 2003 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 8-லுள்ள முக்கிய குறிப்புகளை மீண்டும் கலந்தாலோசியுங்கள். பிறமொழி பிரசுரங்களைப் பிரஸ்தாபிகள் எப்படிப் பெற்றுக்கொள்ளலாம் என்பதை விளக்குங்கள். சபை பிராந்தியத்திற்கு இத்தகவல் எப்படிப் பொருந்துகிறது என்பதையும் விளக்குங்கள். பிறமொழி பிரசுரங்களை, அது ஒரேவொரு பிரசுரமாக இருந்தாலும்கூட பிரசுர ஊழியர் மூலமாகவே ஆர்டர் செய்ய வேண்டும்; இது தாமதிக்காமல் தேவைப்படும் பிரசுரங்களை பெறுவதற்கு உதவும்.
15 நிமி: மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பெற்ற வெளி ஊழிய அனுபவங்களைச் சொல்லுங்கள் அல்லது நிஜ சம்பவ நடிப்பாக நடித்துக் காட்டுங்கள். நினைவுநாள் ஆசரிப்பு காலத்தின்போது ஊழியத்தில் அதிகளவு பங்குகொள்ள என்னென்ன முயற்சிகளை எடுத்தார்கள் என்றும் அதனால் என்னென்ன ஆசீர்வாதங்களைப் பெற்றார்கள் என்றும் சொல்வதற்கு ஓரிருவரை முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள். விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டை அளித்து, மறுசந்திப்பு செய்தபோது கிடைத்த அனுபவங்களைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். சிறந்த அனுபவங்களை நிஜ சம்பவ நடிப்புகளாக நடித்துக் காட்ட முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள். விசேஷ வினியோகிப்பில் கலந்துகொண்டு ஆதரவளித்ததற்கு எல்லாரையும் பாராட்டுங்கள்.
20 நிமி: “முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்—பகுதி 10.”b பேசிப் பழகிப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற ஒரு நடிப்பை சேர்த்துக்கொள்ளுங்கள். மாணாக்கர் ஒரு பிரசங்கத்தைப் பழகிப் பார்க்கும்போது படிப்பு நடத்துபவர் வீட்டுக்காரரைப் போல் பாவனை செய்கிறார், பிராந்தியத்தில் பொதுவாகக் காணப்படும் எதிர்ப்பையே அவரும் தெரிவிக்கிறார், என்ன சொல்வதென தெரியாமல் மாணாக்கர் திண்டாடும்போது அதை எப்படிச் சமாளித்திருக்கலாம் என்பதை அவர் விளக்குகிறார். மேலும், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் கலந்துகொள்ள ஆரம்பித்த சமயத்தில் எத்தகைய பயிற்சியைப் பெற்றார்களென சொல்வதற்கு ஓரிருவரை முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 208, முடிவு ஜெபம்.
ஜூன் 27-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஜூன் மாத வெளி ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளை (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருந்தால்) பயன்படுத்தி, ஜூலை 1 காவற்கோபுரத்தையும் ஜூலை 8 விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். நடைமுறைக்கு உதவும் வேறு பிரசங்கங்கள் இருந்தால் அவற்றையும் பயன்படுத்தலாம். நடிப்புக்குப் பிறகு வீட்டுக்காரரின் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட அறிமுக வாக்கியங்களை மீண்டும் குறிப்பிடுங்கள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சிற்றேடுகளை அளித்தல். உட்சேர்க்கையின் அடிப்படையில் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். உட்சேர்க்கையை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைச் சுருக்கமாக விளக்கிவிட்டு, பக்கம் 3-லுள்ள பெட்டியையும், ஜனவரி 2005 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 8-லுள்ள முக்கிய குறிப்புகளையும் சிறப்பித்துக் காட்டுங்கள். முதல் சந்திப்பிலேயே சிற்றேடுகளை அளிப்பதற்கு சபை பிராந்தியத்திற்குப் பொருத்தமான பிரசங்கங்களைக் கலந்தாலோசியுங்கள். இரண்டு, மூன்று பிரசங்கங்களை நடித்துக் காட்ட செய்யுங்கள். ஒரு நடிப்பிலாவது இளம் பிரஸ்தாபியைப் பயன்படுத்துங்கள்.
பாட்டு 196, முடிவு ஜெபம்.
ஜூலை 4-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: குடும்ப அட்டவணையிலிருந்து நீங்கள் பயனடைந்திருக்கிறீர்களா? மே 2005 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையிலுள்ள ஆலோசனைகளை மீண்டும் கலந்தாலோசியுங்கள்; அதிலுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றுவதற்கு எடுத்த முயற்சிகளையும் அதனால் பெற்ற பயன்களையும் பற்றி சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
20 நிமி: “பலன் தரும் விதத்தில் பொது இடங்களில் சாட்சிகொடுத்தல்.”c உள்ளூர் பிராந்தியத்திற்குப் பொருத்திக் காட்டுங்கள். தேவைப்படும்போது, ப்ளீஸ் ஃபாலோ அப் (S-43) படிவத்தைப் பயன்படுத்த பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள்.—பிப்ரவரி 2005 நம் ராஜ்ய ஊழியம், பக். 6-ஐக் காண்க.
பாட்டு 120, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.